Wednesday, April 13, 2011

சிலந்தி தாக்குதல் : Spider's Attack

சிலந்தி தாக்குதல் : Spider's Attack



சமீபத்தில் பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தால் உயிரை காத்துக்கொள்ள கோடிகணக்கான சிலந்திகள் மரங்களில் சேர்ந்தன...ஆனால் வெள்ளம் வற்றிய பிறகும் சிலந்திகள் மரங்களை ஆக்கிரமித்து கூடுகட்ட தொடங்கின... இப்போது அதை பார்க்கவே வித்தியாசமா இருக்கிறது.எதோ பஞ்சு மிட்டாய் போல...இதோ சில படங்கள் உங்களுக்காக...






















Monday, April 11, 2011

கரணம் தப்பினால் மரணம்: walk in car cables

கரணம் தப்பினால் மரணம்: walk in car cables



பிரெட்டி நாக் என்னும் இவர் சர்கஸில் வேலை செய்பவர்.அங்கு கம்பி மேல் நடத்து போர் அடித்தால் இந்த சாதனை செய்ய வந்திருக்கிறார். இரண்டு மலைகளுக்கு நடுவில் போடப்படும் கார் கேபிளில் நடந்து சாதனை படைத்தது இருக்குறார். மோசமான வானிலையால் இவரால் இதை முதல் முறையே செய்ய முடியவில்லை. மீண்டும் முயன்று இதை செய்து இருக்கிறார். இவர் நடந்த தூரம் 3300 மீட்டர்கள் .












உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் ... நன்றி... :)

Sunday, April 10, 2011

ஏ.ஆர்.ரஹ்மான் : ஒரு கனவின் இசை! பகுதி - 4

.ஆர்.ரஹ்மான் வாழ்க்கை வரலாறு.




ஏ .ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே .சேகர், மலையாள பட இசையுலகில் எத்தனையோ அற்புதமான காலத்தை வெல்ல கூடிய பாடல்களை தந்திருக்கிறார் .இப்போது கம்ப்யூட்டர் ரில் இதை எழுதிக்கொண்டு இருக்கும் போது கூட அதில் அவருடைய 1976 உம் பாடலான "சோபான சங்கீத ராத்திரி " இனிமையாக ஒலித்து கொண்டுதான் இருக்கிறது.சேகரின் பாடல்களை கேட்பவர்களுக்கு ,தந்தைக்கும் மகனுக்கும் இடையே தொடர்து வந்திருக்கும் சங்கிலிப் பிணைப்பு போன்ற நுண்ணியமான இசைதொடர்பை புரிந்து கொள்ள முடியும்.

முந்திய சோவியத் ரஷ்யாவில் ஒரு இளம் வயலும் மேதை இருந்தான் .எட்டு வயதிலேயே மேடைக்கச்சேரி செய்யும் அளவுக்கு புகழ் பெற்று இருந்தான்.அவனுடைய அப்பா ஒரு கால்பந்தாட்ட காரர்.அம்மா, வரலாற்று ஆசிரியர்.இப்படி இருக்கையில் ,இந்த சிறுவனிடம் எப்படி வந்தது இந்த வயலின் இசை மேதைமை என்று ஆராய்ந்தார்கள் . பரம்பரை விவரங்களை தேடியதில் அவனுடைய தாத்தாவுக்கு தாத்தா ஒரு வயலினிஸ்ட் என்பது தெரிய வந்தது.ரஹ்மான் என்னும் இசை மேதை யின் வேர்களை இது போல வேறெங்கும் தேடவேண்டியதில்லை.அது, அவருடைய அப்பா விடமே நிறைத்திருந்தது.

ஆர்.கே.சேகர் பற்றி பார்பதற்கு முன்னால் ஒரு சின்ன பிளாஷ்பாக் ...



அது 1964- ம் ஆண்டு.
வீட்டின் சுவரில் கதா காலட்சேபம் செய்யும் ஒரு பெரியவரின் பழைய புகைப்படம் மாட்டப்பட்டு இருக்கிறது. அதில் " கீழானூர் ராஜகோபால் பாகவதர் " என்று மங்கிய எழுத்துக்கள்.அதன் கீழ் பாயில் அமர்ந்து ,மெய்மறந்து ஒரு டோனை ஹர்மொநியத்தில் வாசித்துக்கொண்டு இருக்கிறார் ஆர்.கே.சேகர்.ஆர்.கே.சேகர் என்பதன் விரிவாக்கம் ராஜகோபால குலசேகர் என்பதே. புகைபடத்தில் காணும் கீழானூர் ராஜகோபால் பாகவதர், அவருடைய தந்தை.அதாவது ரஹ்மானின் தாத்தா.அந்தக் காலங்களில் மயிலாப்பூரில் கோவில்களில் ஹரிகதை பாகவதம் சொல்லியவர்.

சேகர் தன ஹார்மோநியத்தில் அப்போது மலையாளத்தில் அவருடைய இசைஅமைப்பில் வெளியாகி ஹிட் ஆனா "பழசிராஜா " (இப்பொது ரீ - மேக்கில் வந்த படம் ) படத்தின் சூப்பர் ஹிட் பாடலான "சொட்ட முதல் சுடல வாறே." என்கிற படலை வசித்துக் கொண்டிருக்கிறார். அடுத்த சில வருடங்களில் ரஹ்மானை பெற்றெடுக்க போகும் அவர்டைய மனைவி கஸ்தூரி (இப்போது கரீமா ), அவர் வாசிப்பதை ஆனந்தத்துடன் கேட்டுக்கொண்டு இருக்கிறார். அவர் கண்கள் சந்தோஷத்தில் கலங்கு கின்றன.அதை காணும் சேகர், தன பாட்டை நிறுத்திவிட்டு "கஸ்தூரி ஏன் அழுற ?என்னாச்சு?" என்கிறார்.

கஸ்தூரி கண்களை துடைத்துக் கொண்டு "இதுக்காக தானேங்க இதனை நாள் கஷ்டப்பட்டோம்.இப்போ உங்க பாட்டு தான் கேரளாவுல படி தொட்டி எல்லாம் கேளுதுன்னு சொல்றாங்க.." என்கிறார் ."

சேகர் ஒரு வறண்ட புன்னகையுடன் பதில் சொல்கிறார்."ரொம்ப சந்தோஷ படாத மா! பாட்டெல்லாம் பெரிய ஹிட் தான்.ஆனா,அடுத்த படத்துக்கு ஒப்பந்தம் பண்ணதன் யாரும் ஆள் வரல ".

அவர் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே ராமநாதன் என்பவர் வீட்டினுள் நுழைகிறார்.சேகரிடம் கை குளிக்கிவிட்டு ,"உங்க பழசி ராஜா பாட்டெல்லாம் சூப்பர் ஹிட் சார்! அடுத்த 'ஆயிசா ' ன்னு ஒரு படம் பண்றோம் .நீங்க தான் மியூசிக் போடணும் .அட்வான்ஸ் கொடுக்க வந்தேன்..'" .என்று ஒரு தொகையை அவரிடம் கொடுக்க வருகிறார்.வீடெங்கும் இறைத்து கிடக்கும் இசைப்பதிவு இயந்திரங்களை ,இசை கருவிகளை அவர் ஆச்சரியமாக பார்க்கிறார்.



எல்லாமே இறக்கு மதி எஃஉஇப்மெந்த்ஸ (equipments) போல இருக்கே சார்.! உங்கள மாத்ரி யாரு இப்பெல்லாம் புதுமை செய்யறாங்க? எல்லாம் பழைய தேஞ்ச போன ரெக்கார்டு களைதான் தேய்க்கரங்க. பழசி ராஜாவுல பாட்டு மட்டும்மல்ல . அந்தப் பாட்டுக்களை நீங்க ஒலிபதிவு பண்ணி இருக்கற துல்லியம் பாருங்க ..யாரும் கிட்ட நெருங்க முடியாது.சவுண்டே ரொம்ப வித்தியாசமா இருக்கு .." என்று பாராட்டிப் பேசும் ராமநாதன் தான் குரலைக் சற்று தாழ்த்தி.."சேகர் சார், பால்டிக்க்ஸ் பேசறேன்னு தப்ப நினைக்க கூடாது."

என்னடா , தமிழ் நாட்டுல இருந்து ஒருத்தன் வந்து மியூசிக் ல என்னென்னமோ புதுமை பண்றானே ன்னு இங்க சில ஜாம்பவான்கள் பொருமிகிட்டு இருக்காங்க. தமிழ் ஆளுங்க னாலே இவங்களுக்கு கொஞ்சம் அலர்ஜி ! எதுக்கும் ஜாக்கரதைய இருந்துக்கோங்க." என்கிறார்.

அதில் சற்றும் கலவரப்படாத சேகர், "வளர வேண்டியவங்க வளருவாங்க ராமநாதன் சார்.யாரும் யாரையும் எதுவும் செய்ய முடியாது.அவங்க அவங்களுக்கு போக வேண்டிய அரிசில அவங்க பேரு எழுதி இருக்கும்! ", என்று சொல்லிக் கை கூப்பி விடை அளிக்கிறார்.

தொடரும் ...
உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்... நன்றி.

Friday, April 8, 2011

இந்தியா உலகக்கோப்பை:மேட்ச் பிக்ஸ் செய்யப்பட்டதா ?

இந்தியா உலகக்கோப்பை:மேட்ச் பிக்ஸ் செய்யப்பட்டதா ? is India's worldcup a FIXED MATCH..?

28 ஆண்டுகளுக்கு பின் இந்தியா உலக கோப்பையை வென்றுள்ளது.டோனி தலைமையில் இந்தியா பல சாதனைகளை செய்துள்ளது.இதோ இன்று ஐ . பி . எல் தொடங்குகிறது. இந்தியா உலகக்கோப்பை வென்றது எனக்கும் மகிழ்ச்சி .ஆனால் எனக்கு இந்தியா வென்றது முதல் இது ஒரு மேட்ச் பிக்சிங் இருக்குமோ என்ன சந்தேகம்.இந்தியா விளையாடியதை பார்க்கும் போது அது முளுதிர்மையுடன் விளையாடியதை தெரியவில்லை.ஏன் என்ன்றால் இந்தியா ஒரு 100% அணி கிடையாது என்பது என் கருத்து.


இந்தியா அணி கேப்டன் டோனி யும் கேப்டன் என்று சொல்ல முடியாது.லக்கி கேப்டன் என்று வேண்டுமானால் சொல்லலாம்.அது அவர் பேச்சில் இருந்தே தெரிகிறது. அரை இறுதியில் அஸ்வின் பதிலாக நெஹ்ரா வை எடுத்து பின் அதற்கு விளக்கம் வேறு கொடுத்தார்.தான் தவறான முடிவு எடுத்ததாகவும் ஆனால் நெஹ்ரா நன்றாக தான் பந்து வீசினர் என்று சொன்னார். இதே தவறை தான் இறுதி போட்டியிலும் செயதார்.ஸ்ரீசாந்த் ,பங்களாதேஷ் சுடன் ஆடும் போதே அவர் லைக்கு இல்லாதவர் என்று முடிவானது.அப்படி இருத்தும் கோப்பையை முடிவு செய்யும் போட்டியில் அவரை எடுத்தார்.அஸ்வின் இரண்டு போட்டியில் நன்றாக வீசியும் அவரை தவிர்த்து ஸ்ரீசாந்த் தை எடுத்தது ஏன் என்று தெரியவில்லை.ஒரு வேளை ஸ்ரீசாந்த் அந்த போட்டியில் நன்றாக பந்து வீசி இருந்தாலும் பரவா இல்லை.இது எனக்கு சந்தேகம் வந்தது.


இந்தியா வென்றது மேட்ச் பிக்சிங் என்று நான் சொல்ல காரணங்கள்:


1) கேவலமான இலங்கை அணியின் பில்டிங். இவளவு மோசமாக நான் இலங்கை அணி பில்டிங் செய்து பார்த்தது கிடையாது.அதுவும் உலகக்கோப்பை போன்ற ஒரு முக்கியமான மேட்ச் சில் ... (என்னை திட்ட நினைபவர்கள் சென்ற உலகக்கோப்பை இறுதியில் ஆஸ்திரேலியா வுடன் இலங்கை அணியின் பில்டிங் கை பார்க்கவும்.)


2) முரளிதரன் இவ்வளவு மோசமாக பந்து வீசி நான் பார்த்தது இல்லை. அதுவும் அவருடைய கடைசி போட்டியில்.சச்சின் விளையாடி இருந்தால் பரவா இல்லை.கம்பீர் ,க்ஹோலி யை அவுட் செய்ய இவரால் முடியாதா?


3) கம்பீர் ரின் ரன் அவுட் மிஸ்ஸனது.கம்பீர் ரை சுலபமாக அவுட் ஆக்கும் வைப்பை சங்ககாரா அசால்ட் தக விடுவார்.அவருடைய அனுபவத்திற்கு இது பெரிய தவறு.அதுவும் உலகக்கோப்பை யில் இப்படி விடுவது என்னால் நண்பா முடியவில்லை.


4) டோனி கண்டிப்பாக ஒரு திறமையான கேப்டன் கிடையாது.அதிஷ்ட கேப்டன் மட்டுமே.அதுவும் இந்த போட்டியில் அது அதிஸ்டமா இல்ல பணமா என்று தெரியவில்லை.எனக்கு அவர் 2007 உலகக்கோப்பை வென்ற போது ரொம்பவும் பிடித்தது.ஆனால் இப்போது இல்லை.


5) டோனி இறுதி போட்டியில் விளையாண்டது என்னால் நம்ப முடிய வில்லை.அவர் அந்த அளவு பார்ம் மில் இல்லை.இப்போது எல்லாம் விக்கெட் விட கூடாது என்று ஆடும் அவர் அன்று மட்டும் யாரும் விக்கெட் எடுக்க மாட்டார்கள் என்பது போல் ஆடினார்.


6) ஆட்ட நாயகன் விருது டோனி கு கொடுத்தது.ஒரு வேளை இது ஒரு நியாயமான மேட்ச் என்றல் எல்லோருக்கும் தெரியும் வெற்றியை தந்தது கம்பீர் என்று... ஆனால் டோனி க்கு கொடுத்தது.எதோ பிளான் பணியது போல இருந்தது.


7) டோனி பேசும் போது "ஒரு வேளை தோற்று இருந்தால் என்னிடம் பல கேள்வி கேட்டிருப்பார்கள் .. ஏன் அஸ்வின் இல்லை ஸ்ரீசாந்த் என்று?ஏன் யுவராஜ் இல்லை நீ பேட் செய்ய வந்தாய் என்று.. அதற்காக தான் அடி வென்றோம் "என்று. அப்படி என்றால் யாரை போட்டு விளையாண்டலும் வெற்றி பெறுவோம் என்று அவருக்கு முன்னாடியே தெரியுமோ ?


இன்னொரு முக்கியமான காரணம் : ஐ.பி.எல்.


ஐ சி எல் லை தடை செய்த கிரிக்கெட் வாரியம் ஐ.பி.எல். கு அனுமதி அளித்தது ஏன்..? இந்தியா அப்போது தான் 20-20 உலகக்கோப்பை வென்றது.எனவே ஐ.பி.எல். நடத்தினால் அதை வைத்து மிகுந்த லாபம் பார்க்கலாம் என்று. அது தான் நடந்தது.முதல் ஐ.பி.எல். மாபெரும் வெற்றி.ஆனால் அடுத்த இரண்டும் மோசம் ஆனது.இரண்டாவது இந்தியாவில் நடத்த முடியாமல் தென் ஆப்பிரிக்காவில் நடத்தினர். மூன்றாவது இந்தியாவில் நடந்தாலும் சுவாரஸ்யமானதாக இல்லை. ஏன் ???



காரணம் இந்தியா வின் 20-20 உலகக்கோப்பை போட்டியில் படு தோல்வி."ஆமா இவங்க ஐ.பி.எல். ல காசு கொடுத்தா ஆடரங்க ஆனா நாட்டுக்காக ஆட மாட்டாங்க" என்று எல்லோரும் சொல்ல ஆரம்பித்தார்கள். டோனி தலைமையில் சாம்பியன் கோப்பை வென்றும் நாம் உலகக்கோப்பையில் கேவலமா தோற்றோம். இந்த ஐ.பி.எல். மேலும் இரண்டு அணியை சேர்ந்துள்ளது. இந்த புதிய அணி இரண்டும் 1500 கோடி ரூபாய்க்கு மேல் வாங்கி உள்ளனர்.


ஒரு வேளை இந்தியா உலகக்கோப்பையில் தோல்வி அடைந்து இருந்தால் கண்டிப்பாக இந்த ஐ.பி.எல். மாபெரும் தோல்வி அடைத்து இருக்கும். இதை யாராலும் மறுக்க முடியாது. அது மட்டும் இல்லாமல் ஐ.பி.எல். இருக்கும் போது மேட்ச் பிக்சிங் இன்னும் சுலபமாக இருக்கிறது.


நான் இங்கு சொன்னது என் கருத்தக்கள் மட்டுமே.இது யாரையும் புண்படுத்த அல்ல... நீங்கள் கிரிக்கெட் வெறியர் ராய் இல்லாமல் ஒரு சாதாரண ரசிகனை இருந்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை என்னோடு பகிரவும்.. உங்கள் கமெண்ட்ஸ் பொருத்து நான் அடுத்த பதிவில் இன்னும் நிறைய சொல்கிறேன்... நன்றி.

Thursday, April 7, 2011

போலீஸ் சீஸ் செய்த தங்க கார்.

போலீஸ் சீஸ் செய்த தங்க கார் - Police ceased Gold Car.

இந்த தங்க கார் ரை சீனா வில் உள்ள ஒரு நகை கடை விளம்பரத்திற்காக ரோட்டில் நிறுத்தி இருந்தனர். இது ஒரு ஸ்போர்ட்ஸ் கார் மாடல் அதனால் இதை சீனா போலீஸ் சீஸ் செய்து சென்றனர். பின் இதை ஷோ ரூம் மில் இப்போது நிறுத்தி உள்ளனர். இந்த கார் முழுக்க முழுக்க தங்கத்தால் ஆனது.



















நம்மால இதை வாங்க தான் முடியாது. ஆச தீர பாக்கலாம்.
உங்கள் கருத்துக்களை பகிரவும்... நன்றி.. :)