Showing posts with label ஆர்.கே.சேகர். Show all posts
Showing posts with label ஆர்.கே.சேகர். Show all posts

Tuesday, March 6, 2012

ஏ.ஆர்.ரஹ்மான் : ஒரு கனவின் இசை! பகுதி - 11

ஏ.ஆர்.ரஹ்மான் : ஒரு கனவின் இசை! பகுதி - 11



ரஹ்மான ஒரு ப்ளூ பேபி யாகத்தான் பிறந்தார். குழந்தை பிழைக்குமா என்பதே பெரிய கேள்வியா இருந்தது. அப்பா ரொம்ப டென்ஷன் நா இருந்தார். எப்படியோ குழந்தை உயிர் பிழைத்தது. அப்பா முகத்துல பெரிய நிம்மதி. குழந்தை வளர வளர அதுகிட்ட பெரிய இசைத்திறமை இருந்தததை பார்த்தவர், மிகுந்த உற்சாகம் ஆனார். தம்பிக்கிட்ட எப்பவும் ஒரு ஸ்பெஷல் அக்கறை காட்டுவார். தன்னோடு ரெகார்டிங் ஸ்டுடியோ எல்லாம் கூட்டிட்டு போய் இசை உலகத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். ஆனா எந்த பாரபட்சமும் கட்டாமல் என்னையும் ரகுமானையும் ஒரே நேரத்தில் பியானோ, கிடார் வகுப்புகள் ல பைலட் எட்வின் , தன்ராஜ் மாஸ்டரிடம் சேர்த்துவிட்டார். நாங்க வாசிப்பதையும் பாடுவதையும் ரொம்ப ரசிச்சு கேட்பார். அப்பெல்லாம் பாட்டும் கூத்துமாஎங்க குடும்பமே ரொம்ப ஜாலியாக இருப்போம். எங்க எல்லாருக்குமே அப்பான்னாரொம்பப் பிடிக்கும். அவர் தந்தது தானே எல்லாமே.

"அற்புதமான வாழ்க்கை அப்பா திடீர்னு இறந்து போனதும் ஸ்தம்பித்து போய்ட்டோம்." என்று அந்த நினைவலைகளில் ஆள்கிறார் ரைஹனா.

அதற்கு பிறகு என்ன ஆனது.?




ஆர்.கே.சேகரின் சமகால மலையாள இசையமைப்பாளர் அர்ஜுனன் மாஸ்டர் இப்போது கேரளாவின் கோட்டயத்தில் தன 73 ஆம் வயதிலும் சுறுசுறுப்பாக திரைப்பட இசை வேளைகளில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார். குரல் லேசாக தடுமாறினாலும் பழைய நிகழ்வுகளை அவர் தன இதயத்திலேயே வைத்திருக்கிறார்.

உண்மையிலேயே ரஹ்மானுடைய அம்மாவை ஒரு தீர்க்க தரிசினு தான் சொல்லணும். சேகர் இறந்த பொது திலீப் ரொம்பச் சின்ன பையன். ஆனா, அப்பவே என்னைப் போன்ற மியூசிக் டைரக்டர் களை எல்லாம் சந்திச்சு, என் மகனுக்கு இசை வாய்ப்பு கொடுங்க. அவன் கிட்ட பெரிய திறமை இருக்குன்னு சொல்லுவாங்க. "எங்க சேகர் பையனாச்சே மா .. நீங்க இவ்வளவு தூரம் சொல்லனுமா..? உடனே திலீப் பை வரச் சொல்லுங்கமா நு நாங்களும் சொல்லுவோம். அற்புதமா கி போர்டு வாசிப்பான். மியூசிக் இன்ச்ற்றுமென்ட் ல வர ரிப்பேர் எல்லாம் திலீப் ரொம்ப ஈஸி யாச் சரிபண்ணிடுவான். அவனை கி போர்டு வாசிக்க வைகலாமேன்னு தோனுச்சு. ஆனா ரொம்ப சின்னப் பையனா இருக்கானேன்னு யோச்சிசோம். வாய்ப்பு கொடுத்த பொது பொளந்து கட்டினான். அப்ப தான் அவன் ஒரு மியூசிக் கல் மேதை என்பது எங்களுக்கு புரிஞ்சது. எங்களுக்கு முன்னாடியே அந்த உண்மை, அவன் அம்மாவுக்குப் புரிஞ்சதுதான் அற்புதமான விஷயம். அப்ப நாங்க திலீப் கொடுத்தது ரொம்பச் சொற்பமான சம்பளம். எதுவுமே சொல்லாம புன்னகையோடு அந்தத் தொகையை வாங்கிட்டுப் போகும் அந்தப் பையன். அந்த அமைதியும் மசியுரிட்டி தான் ரஹ்மான்னை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கு.


தொடரும்..
உங்கள்கருத்துக்களைபகிரவும் ... நன்றி...

Tuesday, October 25, 2011

ஏ.ஆர்.ரஹ்மான் : ஒரு கனவின் இசை! பகுதி - 10

ஏ.ஆர்.ரஹ்மான் : ஒரு கனவின் இசை! பகுதி - 10




அப்பா மூலமாக தான் திலீப் என்ற ரஹ்மானுக்கு மிகச் சிறுவதிலேயே இசையிலும் இசைபதிவு நுட்பத்திலும் தணியாத ஆர்வம் ஏற்பட்டது.வெட்டில் எப்போதும் இசையைக் கேட்டபடி வளர்ந்த திலீப்புக்கு ,திடீரென்று அப்பாவை நோய் தாக்கியதையும் கிட்ட தட்ட மூன்று ஆண்டுகள் அந்த நோயின் கடுமையான தாக்குதலால் அவர் துடிதடையும் நேரில் கண்ட போது அச்சமாக இருந்தது.சகோதரிகளும் மனம் நொந்தார்கள்.அர்கே போன்ற பிரச்சனை மீண்டும் மீண்டும் தன் குடும்பத்தை தாக்கினால் என்ன செய்வது ,எப்படி சமாளிப்பது என்கிற இனம் புரியாத பயம் அந்த இளம் பிஞ்சுகளை அப்போது ஆட்கொண்டோது.

அந்த மறக்க முடியாத நாட்களை நினைவு கூர்கிறார் ரஹ்மானின் தாய் கரீமா." புள்ளைங்க எல்லாம் ஸ்கூல் குப் போயிடு இருக்குதுங்க ,திடீர்னு அவங்க அப்பா படுத்த படுக்கை ஆகிவிட்டார்.எனக்கு உலகமே இருந்துடுச்சு.அவரை கவனிப்பேனா? பிள்ளைகளை கவனிப்பேனா? மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் அலைவேன் காரணமே புரியாம.ரொம்ப நாள் மருத்துவமனை ல இருதவரு ஒரு நாள் இறந்தே போய்ட்டாரு.நாங்க இடுஞ்சு போய்டோம்.எந்த நேரமும் ஹர்மொநியனும் கையுமா இருத்த ரஹ்மானுக்கு அப்பா இறந்ததுல ரொம்பவே பதிப்பு.ஸ்கூல் படிப்பை கூட அதல சரியாய் படிக்க முடியல.சின்னப் பிள்ளையை ஸ்டுடியோ வேளைக்கு அனுப்பியே ஆகணும்னு கட்டாயம்.ஆனா அதுக்கெல்லாம் ஒரு விடுவுக் காலம் வரும் ன்னு நான் மனசார நம்பினேன்."



நோயின் தீவிரம் கடுமையான காலகட்டத்தில் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் ஆர்.கே.சேகர் அனுமதிக்கப் பட்ட போது ,திலீப்பும் சகோதரிகளும் அடிக்கடி சென்று பார்ப்பார்கள். உடல்நலம் வாட்டிய போதும் குழந்தைகளிடம் அதை மறைத்துக்கொண்டு அப்பா புன்னகைப்பார்."நாளைப் படிக்கணும்.ஸ்கூலுக்கு லீவு போடக்கூடாது.அம்மா சொல்றபடி நடந்துக்கணும்." என்றெல்லாம் அறிவுரைகள் சொல்வார்.மகன் திலீபிடம் பேசும்போது மட்டும் அவருக்குத் தனியாக ஒரு பாசம் பொங்கி வரும்.அவனை அள்ளி அணைத்து உச்சிமுகர்வர்.அதற்கு ஒரு தனிப்பட்ட காரணமும் இருந்தது.

ரஹ்மானின் மூத்த சகூதரியான இசையமைப்பாளர் ரைஹானா சொல்கிறார்.. " கல்யாணமான புதுசுல எங்கப்பாகிட்ட யாரோ ஒருத்தர் ' உங்களுக்கு ஒரு மகன் பிறப்பான்.அவன் பெரிய புகழ் அடைவான்' ன்னு சொல்லி இருக்காரு.அப்பாவும் அதை எதிர்பார்த்து ரொம்ப ஆவலா கத்திருந்தார்.ஆனா ,முதல்ல நான் பிறந்தேன்.என்கிட்டே அவர் ரொம்ப பாசமா இருந்தாலும் ,அவர் மனசுக்குள்ள அந்தக் குறை இருந்துகிட்டே இருந்தது.அடுத்ததா திலீப் பிறந்ததும் ,அவரால சந்தோசத்தை தங்க முடியல.."



வாழ்வில் அற்புதங்கள் நிகழும்,அது கடவுள் மூலமாக நடக்கும் என்கிற நம்பிக்கை ரஹ்மானின் குடும்பத்தில் ஒவோருவரிடமும் இருக்கிறது.ஓய்வொரு கட்டத்திலும் யாரோ ஒருவர் வந்து,சில எதிர்கால செய்திகளை சொல்லி வாழ்த்திவிட்டு போனதாக சொல்கிறார்கள்.சேகர் இறந்துபோன அறை இருந்த இடத்தில இசை பதிவு கூடத்தை கட்ட சொல்லி ஆசீர்வாதம் செய்து விட்டு போனாராம் ஒரு இஸ்லாமிய குரு. அங்கே தான் பஞ்சதன் ஸ்டுடியோ கட்டப்பட்டது.ரோஜா அங்கே தான் மலர்ந்தது.



தொடரும்..
உங்கள் கருத்துக்களை பகிரவும் ... நன்றி...




Friday, August 5, 2011

ஏ.ஆர்.ரஹ்மான் : ஒரு கனவின் இசை! பகுதி - 9

.ஆர்.ரஹ்மான் : ஒரு கனவின் இசை! பகுதி - 9



ஆர்.கே.சேகர் கடைசியாக இசை அமைத்த படம் 1976 -இல் வெளியான "சொட்டாநிகர அம்மா ". அதில் இடம்பெற்ற "மனசு மனசின்றே காதில்" என்கிற பாட்டு இன்றைக்கும் கேரளாவில் "நீங்கள் கேட்டவை " யாக ஒலிக்கும் அற்புதமான பாட்டு.அந்தப் படம் வெளியான அதே நாளில் தான் இந்த உலகைவிட்டு மறைந்தார் ரஹ்மானின் தந்தை சேகர்.அப்போது அவருடைய வயது 42. தீலிப்புகோ வயது 9.

சேகருக்கு யாரோ சூனியம் வைத்தால் தான் இறந்தார் என்கிற வதந்தி அப்போது இசை உலகில் எழுந்து அடங்கியது.சரியாக கவனிக்கப்படாத அல்சர் தான் அவர் உயிரைப் பறித்தது என்கிறார்கள்.அவரை நன்கு அறிந்த சிலர்!



ஏ.ஆர்.ரஹ்மானின் வீட்டில் இன்றைக்கு இந்தியாவின் புகழ் பெற்ற இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அவருடைய நேரத்திற்காக காத்திருகிறார்கள்.எத்தனைப் பணம் கேட்டாலும் கொட்டிக் கொடுக்க தயாரிப்பாளர்கள் ரெடி!இது இன்றைய நிலைமை.ஆனாலும் சரியான வாய்புகள் கிடைத்து ஒரு நட்சத்திரமாக மின்ன முடியாமல் போன இசைமேதை யான தான் அப்பாவைப் பற்றிய பழைய நினைவுகள் ரஹ்மானை அலைகளிதபடியே தான் இருக்கின்றன.

"எனக்கு வாழ்க்கையில் முதன்முதலாக அறிமுகமான இசையே அப்பாவின் இசைதான் .அப்பாவின் விரல்களை பிடித்துகொண்டு நானும் ரெகார்டிங் செல்வேன்.பெரிய பெர்ய இசை அமைப்பாளர்களும் , இயக்குனர்களும் என் அப்பாவிடம் மரியாதையாக நடந்து கொள்வதைப் பார்பேன்.அப்பாவை நினைத்தால் பெருமையாக இருக்கும்.பிற்காலத்தில் நானும் ஒரு இசை கோப்பளராக பணி புரிந்த போதுதான் அவருடைய பணியின் உன்னதம் எனக்குப் புரிந்தது.



ஒரே சமயத்தில் அவர் பல படங்களுக்கு வேலை செய்வர். ஒரு படத்தில் அவர் இசை அமைப்பாளராக இருப்பர்.அதே நேரம் மற்ற படங்களுக்கு கண்டக்டர் ராக வேலை செய்வர்.ஓய்வு இல்லாத கடும் உழைப்பால் தான் அவர் இறந்தார் என்று எண்ணுகிறேன்.அவரால் உதவி பெற்ற எத்தனையோ பேர் இன்றைக்கும் என்னிடம் வந்து நன்றி சொல்லும் போது என்னால் கண்ணீரை அடக்க முடிய வில்லை அவர் எனக்கு ஒரு முன் உதாரணமாக வாழ்ந்து இருக்கிறார். என்கிறார் ரஹ்மான் நெகிழ்ச்சியோடு.

தன் ஹீரோவான தந்தை ஆர்.கே .சேகரின் அதிர்ச்சியான மரணமும் ,அதைத் தொடர்ந்து அவர் வாழ்வில் நிகழ்ந்த எதிபாராத சம்பவங்களும் தான் திலீப்பை அல்லா ரக்கா ரஹ்மானாக மாற்றியது.!

தொடரும்..

உங்கள் கருத்துக்களை பகிரவும்... நன்றி..:)

Saturday, July 2, 2011

ஏ.ஆர்.ரஹ்மான் : ஒரு கனவின் இசை! பகுதி - 8

ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்க்கை வரலாறு.



சேகரின் 31- இம் வயதில் தான் திருப்பதியில் திருமணம் நடந்தது.கஸ்தூரியை
மனைவியாக்கி கொண்டவருக்கு காஞ்சனா ,திலீப்,பாலா,ரேகா என்று அடுத்து அடுத்துக் குழந்தைகள்.அப்போது மலையாளப் பட உலகில் பல புதுமைகளைப் புகுத்தி வந்தார் சேகர்.பாலமுரளி கிருஷ்ணா வையும் ,
எஸ் .பி.பலசுப்ரமணித்தையும் அங்கே அறிமுகப் படுத்தியவர் அவர் தான்.

கே.ஜே.யேசுதாசின் பிரமாண்டமான கோட்டையை ஊடுருவுவது மலையாளத்தில் அப்போது யாராலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத காலகட்டம்.1972 - இல் வெளியான "மிஸ் மேரி " படத்தில் சேகர் இசைஅமைத்த பி.சுசிலாவின் "நீயென்றே வெளிச்சம் " பாடல் இன்றைக்கும் கிறிஸ்துவ மேரி மாதா பக்திப் பாடல்களில் ஒன்றாகக் கேரளத்தில் பாடப்படுகிறது.

ரஹ்மானிடம் இப்போது நாம் காணும் புதிய டெக்னாலஜீ யில் உள்ள ஆர்வம் அப்போதே ஆர்.கே .சேகரிடம் வெளிபட்டிருகிறது.அவர் அடிக்கடி சிங்கப்பூர் சென்று இசைக் கருவிகள் புதிதாக என்னென்ன வந்திருகின்றன ,இசைப் பதிவு டெக்னாலஜீ யில் என்னென்ன மாற்றங்கள் வந்திருகின்றன என்றெல்லாம் அவதானித்த படி இருதிருக்கிறார்.ஒரு சில குரல்களையே மீண்டும் மீண்டும் கேட்டு அலுத்துப்போய் இருத்த நமக்குப் பல புதிய புதிய குரல்களை அறிமுகப் படுத்தி இசை கேட்கும் அனுபவத்தையே மாற்றிக் காட்டியவர் ரஹ்மான்.அதற்கு முன்னோடியாக இருந்திருக்கிறார் அவருடைய தந்தை ஆர்.கே.சேகர்.




அன்றைய காலகட்டத்தில் சினிமாவுக்குப் பாடுவது என்பது சாதரணமான விஷயம் அல்ல.ரெகார்டிங் தியேட்டர் எல்லாம் இரும்புக் கோட்டைகள்.யாரும் அதனை சீக்கிரத்தில் உள்ளே புக முடியாது.ஆர்.கே.சேகர் அந்தக் கோட்டையில் கதவுகளைப் புதிய பாடகர்களுகுத் திறந்துவிட்டார்.பிரும்மானந்தன் ,சதானந்தன் ,சுதா வர்மா ,கோபால கிருஷ்ணன், சோமன் ,போன்குந்தம் ரவி,ஜெயலக்ஷ்மி ,கஸ்தூரி சங்கர்,மனோகரன்,அம்பிலி,ஜெயஸ்ரீ போன்று எந்தனையோ பாடகர்களை அறிமுகம் செய்தார் சேகர்.அந்த "லெகஸி", அவர் மகன் ரஹ்மான் வழியே தொடர்கிறது.

ஆர்.கே.சேகர் மலையாளத்தில் 110 பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். யேசுதாஸ் ,ஜெயச்சந்திரன் ,பி.சுசீலா,வாணி ஜெயராம் போன்ற பாடகர்கள் அவருடைய இசையில் எண்ணற்ற பிரமாதமான பாடல்களைப் பாடியிருகிறார்கள்.இன்றைக்கும் சேகரின் இசை கேரளத்தில் வற்றாத ஜீவா ஊற்றாகத் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது.



Wednesday, May 25, 2011

ஏ.ஆர்.ரஹ்மான் : ஒரு கனவின் இசை! பகுதி - 7

ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்க்கை வரலாறு.




ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே .சேகர் இடைவிடாமல் பணி புரிந்த காலத்தில் உணவைப் பற்றியோ ,ஓய்வைப் பற்றியோ கவலைப்பட்டதே இல்லை.டீயும் ஒரு சில பிஸ்கட்டுகளையும் மட்டுமே சாப்பிட்டு வீட்டு ரெகார்டிங் அறையே கதி எனக் கிடந்தார்.சில சமயம் ,நள்ளிரவு வேலையில் அவருக்கு கடும் வயிற்று வலி ஏற்படும்.வலி போருக்க முடியாமல் தலையனையை வயிற்றிற்கு கொடுத்து குறுகிப் படுத்துக் கிடப்பார்.உயிரைக் கொள்ளும் அந்த வலி கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியதும் மெல்ல கண் அயர்வார்.இமை மூடி ஓரிரு மணி நேரமே ஆகி இருக்கும் ...அதற்குள் விடிய ஆரம்பித்து விடும்.காலை எழு மணிக்கே இசை பணியாளர்கள் காதிருப்பார்களே என்கிற அலாரம் அடித்ததும்,தூக்கம் கலைத்து எழுந்து ஒளிபதிவுக் கூடத்துக்கு ஓடுவர்.வயிற்று வலியைப் பற்றி மருத்துவரிடம் ஆலோசிக்கக் கூட நேரம் இல்லை.அந்த வலியைப் பற்றி அவர் யாரிடமும் சொல்வதுவும் இல்லை.


இதில் மற்றொரு சோகம் என்னவென்றால் ... மகத்தான இசை அமைப்பாளரான அவர், தனக்கான பட வாய்ப்புகள் இன்றி ,பிற இசை அமைப்பாளர்களுக்கே வேலை செய்தது தான். பழசிராஜா படத்தில் , அருமையான 10 பாடல்களைக் கொடுத்தார் சேகர்.அதில் ஏ.எம்.ராஜாவும் ,எஸ்.ஜானகியும் பாடிய "சிரகற்று வீனொரு கொச்சுத் தும்பி ...", பி.சுசீலா படிய பிரபல தாலாட்டுப் பாடலான "முத்தே வாவாவூ " போன்ற பாடல்கள் இண்டைக்கும் கேட்பதற்கு சுகமாக இருக்கும்."சாயிபே .. சாயிபே ..அஸ்ஸலாமு அலைக்கும்" என்கிற பட்டு அங்கே ஒரு trendsetter .அதற்கு அடுத்து அவர் இசைஅமைப்பில் பல வருடங்களுக்குப் பிறகு வெளிவந்த "ஆயிஷா " படத்தில் பி.பி. ஸ்ரீநிவாஸ் பாடிய 'யாத்ராகரா போவுக போவுக ... ' பாட்டு பி.பி.ஸ்ரீனிவாசின் மிகச்சிறந்த பாடல்களில் ஒன்று.ஆனாலும் ஒரு மனிதனால் எவ்வளவு நாட்கள் தான் இசை அமைக்கும் வைப்பு கிடைக்காமல் பொருளாதார ரீதியாக சமாளிக்க முடியும்? நாட்கள் செல்ல செல்ல ,ஆர்.கே.சேகரின் நோய் தான் கொடூர கரங்களால் அவரிச் சுற்றி வளைத்தது.நடமாட முடியாதபடி படுக்கையில் விழுந்தார்.சிறுவனாக இருத்த திலீப் அப்போது மருத்துவமனைக்குத் தினமும் சென்று அப்பாவை பார்த்த நினைவுகள் ,அவரது மனதில் நீங்காத சித்திரங்களாக பதிந்திருகின்றன.



அப்பா மருத்துவ மனையில் படுத்திருக்கிறார்.சுற்றிலும் நிற்கும் அவருடைய உதவியாளர்கள்,அவர் சொல்லும் இசை நோட்டுகளைக் குறிபெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.சில சினிமா இயக்குனர்கள் வந்து ,"இந்த நிலைமையில் இப்படிச் சொல்லக் கஷ்டமா இருக்கு.ஆனா ,நீங்க எழுந்து வந்தால் தான் எங்க பட மியூசிக் எல்லாம் கம்பலீட் ஆகும் ." என்று சங்கடத்துடன் சொல்கிறார்கள்.நோயின் தீவிரத்துக்கு நடுவிலும் டுன் கலைக் கேட்டு அதற்கான அரங்கேமென்ட் நோட்டுகளை எழுதிக் கொடுக்கிறார் சேகர்.பிரபல திரைப்படப் பாடலாசிரியர் ஸ்ரீகுமாரன் தம்பி வந்து சேகரின் கைகளைப் பற்றிக்கொண்டு சீக்கிரமே குணமாகீடுவீங்க , நாம சேர்ந்து சீக்கிரமே மறுபடியும் மியூசிக் செய்யலாம்" என்கிறார்.இருவரும் இணைந்து பல படங்களில் சிறந்த பாடல்களைக் கொடுத்தவர்கள்.ஒரு வறண்ட புன்னகையை அவருக்கு பரிசாக அளிக்கிறார் சேகர்.தான் நோயைப் பற்றிய தீவிரம் அவருக்கு அப்போது தெரிந்தே இருந்தது. சிறுவன் திலீப் இந்தக் காட்சிகளை எல்லாம் ஒரு வித பிரம்மிப்புடன் குழப்பமாக பார்க்கிறான்.



ஒரு தேனீயைப் போல சுறுசுறுப்பாக சுழன்று வேலை பார்த்த அப்பாவுக்குத் தீடிரென்று என்ன ஆனது என்று புரியவில்லை.அப்பா ஒரு சிறந்த இசை அமைப்பாளர் என்பது மட்டும் தான் தெரியும்.வீட்டில் அப்பா சேகரித்து வைத்திருந்த இசைதத் தட்டுகள்,இசைக் கருவிகளும் தான் திலீப்பின் விருப்பமான உலகம்.விரைவில் அப்பாவுக்கு உடம்பு சரியாகிவிடும் , முன்பு போல அவர் உற்சாகமாக இசைப் பணிகளுக்குத் திரும்புவார் என்று திலீப் நம்பினான்.ஆனால் ,அந்த நம்பிக்கை நனவாகவில்லை .அப்பாவின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகியது.

தொடரும் ...

Saturday, May 7, 2011

ஏ.ஆர்.ரஹ்மான் : ஒரு கனவின் இசை! பகுதி - 6

ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்க்கை வரலாறு.



History repeats itself:

அந்த காலங்களில் சேகர் கொடுக்கும் இசை 'நோட்'டுகளை காம்ப்ஹோ ஆர்கனிலும் , கிடரிலும் வாசிப்பவராகப் பணியாற்றி இருக்கிறார் இளையராஜா.பின்னலில் சேகரின் மகன் ரஹ்மான், இளையராஜாவின் கீ போர்டுJustify Full வாசிபவராகப் பணியாற்றியது ஒரு ஆங்கிலப் பழமொழியை நினைவுபடுத்துகிறது. "History Repeats itself".

தமிழக ஆரசுப் பணியில் மின்சாரத் துறையில் பணியாளராகத் தான் வாழ்வைத் துவக்கிய சேகர், ஒரு கட்டத்தில் இசைத் துறைக்கு மாறினார்.ஹார்மோனியக் கருவியில் இயல்பாகவே மிகுந்த திறமையுடன் இருத்த அவர், தட்சிணாமூர்த்தி இடம் கர்நாடக இசை கற்றுத் தேர்ந்தார்.கொஞ்சம் கொஞ்சமாக இசையின் பல்வேறு பரிணாமங்களையும் புரிந்து கொண்ட இசை கோப்பலரகவும், இசை நடத்துனராகவும் மாறினார்.

மலையாளப் பட இசை உலகில் திறமையான இசை அமைப்பாளர்கள் இருந்தனர்.அவர்களில் டியூன் போடுவதில் திறமை பெற்றிருந்த பலர், அதை ஒரு அமைப்பு ரீதியான இசைப்படிவமாக மாற்றக்கூடிய , சரியான இசை நோட் களை எழுதி வாதியக்கரர்களுக்கு கொடுக்க கூடிய திறன் இல்லாமல் இருந்தார்கள்.அவர்களுக்கு எல்லாம் ஒரு வரப்ரசாதமாக இருதார் சேகர்.



" 'பழசிராஜா' படத்தின் மூலம் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து மலையாளப்பட இசை உலகில் புயல் என புகுந்த ஆர். கே .சேகர், தான் அடுத்த பட வாய்ப்புக்காக எட்டு வருடம் காத்திருந்ததையும் , நடுவே பொருளாதார தேவைக்காக இப்படிப்பட்ட இசை நடத்துனர் வாய்ப்புகளை தட்ட முடியாமலும் இருந்ததைப் பற்றிய நிலையை என்ன வென்று சொல்வது.?" என்று பெருமூச்சு விடுகிறார் ஷாஜி.

ஓய்வு ஒழிச்சல் இல்லாத சேகரின் இசைப் பணி ராப்பகலாக நடந்தது. வீட்டை விடு வெளியே செல்லும் சேகர்,வேலை முடிந்து எப்போது வீடு திரும்புவர் என்று அவர் குடும்பத்திற்கே தெரியாது.அந்தப் ஓயாப்பனியும் அலைச்சலும் கடும் உழைப்பும் தான் ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகரை ஒரு கட்டத்தில் படுத்த படுக்கையில் தள்ளியது.


தொடரும்....
உங்கள் கருத்துகளை பகிக்ரவும் நன்றி.. :)

Saturday, April 23, 2011

ஏ.ஆர்.ரஹ்மான் : ஒரு கனவின் இசை! பகுதி - 5

.ஆர்.ரஹ்மான் வாழ்க்கை வரலாறு.


ஆர்
.கே.சேகர்...மலையாளப்பட இசை உலகில் முற்றிலும் புதிய சிந்தனைகளுடன் ஆரவாரம் இல்லாமல் நுழைந்த தமிழர்.ஆனால் அவரை மனதார வரவேற்க ரசிகர்களை தவிர யாரும் இல்லை.ஏனென்றால் ஒரு மரபு ரீதியான கேரளா இசைக்கு மட்டுமே பழக்கப்பட்டு இருந்த மலையாளப்பட இசை உலகம் ,அந்த இசை பாணியை பிடிவாதமாக விரும்பியது.வேறொரு இசையின் புதியன புகுதலில் யாரும் ஆர்வம் இல்லாமல் இருந்த சூழல்.

சலில் சௌதிரி போன்ற ஒரு சில இசை அமைப்பாளர்களே அங்கே தங்கள் தனித்திறமையால் சில மட்ட்ரங்களை ஏற்படுத்தி இருதர்கள்.இசையில் பல புதுமைகள் செய்திட வேண்டும் என்று விரும்பிய ஆர்.கே.சேகருக்கு, அப்போது அங்கே இரத்தின கம்பளம் கிடைக்காததில் ஆச்சரியம் ஏதும் இல்லை.மாபெரும் கலைஞர்கள் பலரை இந்த சமூகம் தான் அறியாமையால் கண்டுகொள்ளாமல் கை விட்டிருப்பது சரித்திரம்.அதைப்பற்றி சேகர் கவலைப் பட்டதே இல்லை.



படத்துக்கு இசை அமைக்கும் வைப்பு தனக்கு வருகிறதா இல்லையா என்பது எல்லாம் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல.இசை வேலைகளில் எப்போதும் ஈடுபட்டுக் கொண்டே இருக்கவேண்டும் என்பது மட்டுமே அவருடைய ஒரே குறிக்கோள்.ஓய்வு ஒழிச்சல் இன்றி உழைத்து, சரியான உணவு உட்கொள்ளும் பழக்கமும் இல்லாமல், ஒரு வோர்கஹளிக் காக பணியாற்றிய விளைவை தான் மிக இளம் வயதிலேயே அவர் கொடுக்க வேண்டி இருந்தது.

இந்தியத் திரை இசையின் முதல் ஒளிப்பதிவான , 1902 -இல் வேயல்யான கோவ்கார் ஜான் முதல் கொண்டு லேட்டஸ்ட் டாக வெளியான ரஹ்மானின் டெல்லி 6 வரை ஏகப்பட்ட இசைத் தொகுப்புகளை தனிப்பட்ட ரசனைக்க ஒரு பொக்கிஷம் போல பாதுகாத்து வந்திருக்கும் இசை விமர்சகர் எழுத்தாளர் ஷாஜி.

இவர், ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகர் இசை அமைத்த பல பாடல்களின் தொகுப்பை செதேக்களில் பதுவு செய்து ரஹ்மானிடம் கொடுத்திருக்கிறார்.ரஹ்மானிடமே அந்த பாடல்கள் இல்லை.தன்னிடம் கைவசம் இல்லாத தன் தந்தையின் அப்போர்வமான பாடல்களைக் கேட்கும் ஒரு மகனின் பரவச மனநிலையை நீங்கள் யுகிதுக்கொல்ள்ளலாம்.



கேரளாவில் மெல்லிசை குழுக்களில் அன்று முதல் இன்று வரை மேடைகளில் தவறாமல் பாடி வரும் ஒரு பாடல் , 'பழசிராஜா ' படத்தில் ஆர்.கே.சேகரின் இசை அமைப்பில் உருவான ஏசுதாஸ் பாடிய "சொட்ட முதல் சுடல வாறே " என்று வரும் பாட்டு.கடந்த 40 வருடங்களாக எவர்க்ரீன் புகழுடன் இருக்கும் அந்த பாடல் ஏசுதாஸ் சின் ஆரம்ப மலையாளப் பாடல்களில் ஒன்று.ஆர்.கே.சேகர் மொத்தம் 22 மலையாளப் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார்.அதில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் இன்றளவும் கேரளா மக்கள் மனதில் பசுமையாக நிலைத்து இருக்கின்றன.

தனிப்பட்ட முறையில் மிகச்சிறந்த கம்போசராக இருந்தாலும் ,அன்றைய காலகட்டத்தில் இசை கோப்பாலராகவும் ,இசை நடத்துனராகவும் பணிபுரிய அவரைப் போன்ற மிகத் திறமையானவர்கள் தேவைப்பட்டார்கள்.எனவே இசைப் பனியின் மீது தணியாத பித்துக் கொண்ட சேகர், அந்தப் பொறுப்புகளை எல்லாம் உவகையுடன் ஏற்று கொண்டார்." என்கிறார் ஷாஜி.

தொடரும்...