Showing posts with label திலீப். Show all posts
Showing posts with label திலீப். Show all posts

Wednesday, March 23, 2011

ஏ.ஆர்.ரஹ்மான் :ஒரு கனவின் இசை! - பகுதி 3

.ஆர்.ரஹ்மான் வாழ்க்கை வரலாறு


ரோஜா மலர்ந்த நேரம்.



1992 ...ரஹ்மான் "பஞ்சதன்" என்கின்ற பெயரில் சொந்தமாக தன் வீட்டிலேயே ஒரு பிரமாதமான ரெகார்டிங் நிலையத்தை அமைத்திருந்தார்.ஆசியாவில் மிகச்சிறந்த ஒளிபதிவுக்கூடம் அது. லியோ காபி,ஆல்வின்,பூஸ்ட்,ப்ரீமியம் பிரஷர் குக்கர்,எம்.ஆர்.எப் டயர்ஸ்,தி ஹிந்து, ஏசியன் பெயிண்ட்ஸ் போன்ற கம்பெனி களுக்கு விளம்பர இசை அமைத்து ஹிட் ஆகி இருந்த காலம்.சாரதா திரிலோக் என்கின்ற விளம்பரப்பட தயாரிப்பாளர், ரஹ்மானின் இசையில் வெளியான லியோ காபி விளம்பரத்திற்காக விருது வாங்கி இருந்தார்.அப்போது மணிரத்னம் தான் அடுத்த படத்துக்காக ஒரு புதிய இசை அமைப்பாளரை தேடிக்கொண்டு இருந்தார்.அவருடைய உறவினரான சாரதா திரிலோக் ரஹ்மானை அவரிடம் அறிமுக படுத்தி வைத்தார்.தன்னுடைய பஞ்சதன் ஸ்டுடியோவில் வந்து சந்திக்குமாறு வரவேற்று விட்டு விடை பெற்றார் ரஹ்மான். பின்பு அந்த சந்திப்பை மறந்து விட்டார் ரஹ்மான்.



ஆறு மாதங்களுக்கு பிறகு ,திடீரென ஒரு நாள் பஞ்சதன் ஸ்டுடியோவுக்கு வருகை தந்தார் மணிரத்னம்.அப்படி ஒரு ஹை டெக் ஸ்டுடியோவை அவர் எதிபார்க்கவில்லை.அதன் தொழில் நுட்ப தரத்தை கண்டு வியந்தார்.ரஹ்மானின் விளம்பர ஜிங்கில்ஸை கேட்டவர் ,அந்த இசையின் மீது உடனடியாக காதல் கொண்டார்." என் அடுத்த படம் ரோஜாவுக்கு நீங்கள் தான் இசை அமைப்பாளர்." என்று அங்கேயே சொல்லி புக் செயதார். அதற்கு பிறகு நடந்தது எல்லாம் சரித்திரம்.

ரோஜா படத்திற்காக ரஹ்மான் பெற்ற சம்பளம் வெறும் 25000 ரூபாய்தான்.அதை அப்போது 3 மணி நேரங்களில் அவர் சம்பாதிப்பார்."பணம் ஒரு பொருட்டல்ல.எனக்கு மணி சாரிடம் வேலை பார்க்க வேண்டும் என்று தோன்றியது.அவர் என்னிடம் ஒரு நண்பராகவும் சகோதரராகவும் நடந்து கொண்டார் .திரை இசையில் பிறருடைய பாணி இல்லாத என் ஸ்டைல் இசையை அவர் மிக திறமையாக தேர்ந்து எடுத்து ரோஜாவில் பயன்படுத்தினார்.அது என்னையே நான் கண்டுகொள்ள உதவியது.திரை இசையின் பாடங்களை மணிரத்தினம் யுனிவெர்சிட்டி யில் தான் படித்தேன் ". என்றார் ரஹ்மான்.

ஹிட் கூட்டணி:



மணிரத்தினம் - ரஹ்மான் கூட்டணி எப்போதுமே சூப்பர் ஹிட் தான்.அதற்கு ஒரு உதாரணம் சொல்லலாம்.1998 - ம் வருடம் பொருளாதார தேக்க நிலை ஹிந்தி சினிமா இசை மார்க்கெட்டையும் பெரிதாக பாதித்திருந்தது.காசெட் விற்பனையில் பலத்த அடி.அப்போதுதான் வெளியானது."தில் சே " .ஒரே வாரத்தில் இரண்டு மில்லியன் கேசட்டுகள் அமோக விற்பனை.அடுத்த ஆறு மாதங்களில் ஆறு மில்லியன் கேசட்டுகள் சூப்பர் சேல்ஸ். இங்கிலாந்து இசை மார்க்கெட்டில் டாப் 10 பாடல்களில் இடம் பிடித்து சாதனை புரிந்தது "தில் சே ". ரஹ்மான் இசையின் உலக பயணம் அப்போது தான் ஆரம்பித்தது.இன்று வரை ரஹ்மானின் இசையில் விற்று இருப்பது 100 மில்லியன் சீடிகள் , 200 மில்லியன் கேசட்டுகள்.உலக அளவில் மிக அதிகமாக இசை பதிவுகளை விற்று இருக்கும் இசை அமைப்பாளர்களில் டாப் 25 வரிசையில் இடம் பிடித்திருக்கிறார் ரஹ்மான்.

தொடரும்...

Wednesday, March 9, 2011

ஏ.ஆர்.ரஹ்மான் : ஒரு கனவின் இசை! - பகுதி - 2

ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்க்கை வரலாறு - 2




இன்னும் ஒரு சில வருடங்களில் எம்.எஸ்.வி, இளையராஜா போன்ற மாபெரும் இசை அமைப்பாளர்களுக்கு கீ - போர்டு பிளேயர்ராகவும், சில சமயங்களில் இசை கோப்பாளராகவும் பணியாற்றப்போகிறான்.அவனுடைய திறமை விக்கு விநாயக்ராம், குன்னக்குடி வைத்தியநாதன், ஜாகிர் ஹுசேன் போன்றவர்களுடன் சேர்த்துவைக்கப்போகிறது. அவர்களுடன் கச்சேரிகளில் பங்கேற்க உலகப் பயணம் செல்வான். அதன் பிறகு, 300-க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களுக்கு இசை அமைப்பான். 'பஞ்சதன்' என்கிற பெயரில் சொந்தமாக ஒரு ஹைடக் ரெகார்டிங் ஸ்டுடியோவைக் கட்டுவான்.அங்கே தான் இயக்குநர் மணிரத்னத்தைச் சந்திப்பான். 'ரோஜா' என்கிற படத்துக்கு இசையைமக்கும் வாய்ப்பு அவனுக்குத் தரப்படும். அந்த இசை அமைப்பு இந்தியத் திரை இசையின் ஸ்டைல்லை மாற்றி அமைக்கும். முதல் படத்திலேயே தேசிய விருது பெறுவான். சொந்த வாழ்க்கையில் நடந்த சில புதிரான நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, அப்போது அவன் பெயரும் மாற்றம் செய்யப்பட்டிருக்கும். திலீப் என்கிற இளைஞன் .ஆர்.ரஹ்மான் என்கிற இசைக் கனவானாக மாறுவார். 'ரோஜா'வில் ஆரம்பிக்கப் போகும் அந்த மகத்தான இசைக் கனவு ஆஸ்கர் விருதையும் கடந்து செல்லும்.



இத்தனையும் ஓர் அற்புதம் போல் கண் முன்னால் நடந்தன. ரஹ்மானின் அம்மா கரீமா பேகம் துக்கு அந்த வாழ்க்கை அனுபவங்கைளப் பற்றி நினைத்துப் பார்க்கும்போதே, உணர்ச்சிவசப்பட்டு மனம் நெகிழ்கிறது. ''என் மகன் சின்ன வயசுல இருந்தே ரொம்ப அடக்கம். எதுக்கும் உணர்ச்சிவசப்படாது.
அப்பாவோட ரெகார்டிங் தியேட்டருக்குப் போயி வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கும். வீட்டுல ஹார்மோனியத்தை அது (அப்படித்தான் மகனைச் செல்லமாக அழைக்கிறார்). பிரமாதமா வாசிக்கிறத அப்பா எல்லார்கிட்டையும் பெருமையா
சொல்லிட்டிருப்பாரு. ஒரு தடவை அேதாட அப்பா சுதர்ஸனம்
மாஸ்டர்கிட்ட கூட்டிப் ேபாயிருந் தாரு. அப்ப அதுக்கு நாலு வயசு.
''என்னடா... என்னவோ ஹார்மோனியத்துல பிரமாதமா வாசிப்பியமே ... வாசிச்சுக் காமி''ன்னு சுதர்ஸனம் மாஸ்டர் கேட்டிருக்கிறாரு . அது கொஞ்சமும் அலட்டிக்காம, ரொம்ப அற்புதமா வாசிச்சிருக்கு. அவரு மிரண்டுபோயிட்டாரு. நம்ப முடியாம ஹார்மோனியக் கட்டைகள் மேல ஒரு வேட்டி யப் போட்டு மூடி ''எங்கே, இப்ப வாசிச்சுக் காட்டு''ன்னு சொல்லியிருக்காரு. ஹார்மோனி யக் கட்டைகள் ஏதும் தெரியாத போதே , அப்ப வும் அதே மாதிரி வாசிச்சிருக்குது. எல்லாரும் அசந்துபோயிட்டாங்க.



அதோட அப்பா ரொம்ப ஆச்சர்யமா, அடிக்கடி என்கிட்டே 'இவன் பெரிய ஆளா வருவான் பாரு'ன்னு சொல்லிக்கிட்டே இருப்பாரு. அவரு அப்போ சொன்னது இப்பவும் என் மனசுல கேட்டுக் கிட்டே இருக்கு. இந்தப் புள்ளகிட்ட என்னவோ அற்புதமான திறமை இருக்குன்னு புரிஞ்சுக்கிட்டு, உடனே பியானோ கிளாஸ்ல சேர்த்துவிட்டோம். அப்ப ஆரம்பிச்சதுதான் எல்லாம். இப்ப ஆஸ்கர் அவார்டு வர வந்திருச்சு அது!'' அவர் குரலில் பெருமிதமும் பரவசமும் சேர்ந்து ஒலிக்கிறது.

இந்திய திரை உலகம் எத்தனையோ இசை மேதைகளை தந்திருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை .யாரும் யாருக்கும் குறைவில்லை.ஆனால் ரஹ்மானை என பல காரணங்களுகாக சொல்லலாம் .ஆஸ்கார் விருது அவருடைய பயணத்தில் தங்க நேர்ந்த ஒரு ஸ்டேஷன்.அதையும் தாண்டி அவர் பயணித்து கொண்டே இருக்கிறார். தன் முதல் படமான ரோஜா வில் "ரகே " என்னும் மேற்கத்திய துள்ளல் இசையை தமிழில் அறிமுகப்படுத்தியவர். அடுத்தடுத்து மேற்கத்திய க்லஸ்ஸிகல் இசை , ஹிந்துஸ்தானி,அரபி சுக்பி ,கவளி,ஜாஸ்,கர்நாடிக் ,கசல், ஹிப் ஹோப்,ராக், ஒபேரா ,ப்ளுஸ், ஆப்ரிக்கன் பீட்ஸ் என்று புதுபுது இசை வடிவங்களை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறார்.இவர் அளவுக்கு உலக இசை கலைனர்களுடன் இணைத்து பணியாற்றிய இந்திய இசை அமைப்பாளர்கள் யாரும் இல்லை. மைகேல் ஜாக்சன், வனசா மீ , டாமைக் மில்லர்,அகான் என்று இவர் கைகோர்த்தவர்கள் ஏராளம்.



பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஸ்ைபக் லீ ரஹ்மானின் 'ைசய ... ைசய...' பாடலை தன் படமான 'இன்ைசட் ேமன்'ல் பயன்படுத்திஇருக்கிறார். 'லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் ' ஆங்கிலப் படத்துக்கும், சீ னப் படமான 'வாரியர்ஸ் ஆஃப் ெஹவன் அண்ட் எர்த்' படத்துக்கும் ரஹ்மான் இசையைமத்திருக்கிறார்.

15 வருடத் திரை இசை வாழ்க்கையில் இவர் பெற்றுள்ள தேசிய விருதுகள் மூன்று,பத்மவிருது, 14 ஃபிலிம்ஃேபர் விருதுகள், 6 தமிழக அரசு விருதுகள், ேகால்டன் குேளாப், பாஃப்டா, கிட்டிக்ஸ் விருது... எல்லாவற்றுக்கும் மேல் சிகரம் போலஆஸ்கர்!



கடும் உழைப்பு, புதிய டெக்னாலஜியில், இசைப்பதிவுக் கருவிகளில் ஆர்வம், புதிய புதிய பாடகர்களை அறிமுகப்படுத்தியது போன்றவை ரஹ்மானின் பிரமாண்ட வெற்றிக்கான சில கார ணங்களாகச் சொல்லப்படுகின் றன. இந்தச் சிறப்புகள், எல்லாம் அவருைடய அப்பா ஆர்.கே .சேகரி டமும் அந்தக் காலத்திலேயே இருந்தது. என்பது ஆச்சர்யமான ஒற்றுமை ! ''என் அப்பாவின் மாபெரும் இசை ஞானத்தின் ஒரு சிறிய பகுதிதான்இறைவனின் அருளால் என்னிடம் வந்திருப் பதாக நான் நினைக்கிறேன் . அவரைப் பற்றி நினைத்தாலே என் நெஞ்சம் கண்ணீரால் நனைகிறது'' என்றார் ரஹ்மான் ஒரு முறை .

மலையாளப் பட இசை உலகில் சத்தமில்லாமல் மாபெரும் சாதனைகள் செய்தவர் இசை அமைப்பாளர் ஆர்.கே .சேகர். அவருைடய சரித்திரம் குடத்திலிட்ட விளக்காக இருக்கிறது''என்கிறார் பிரபல மலையாள எழுத்தாளரும், இசை விமர்சகரும், ரஹ்மானின் நண்பருமான ஷாஜி.


நெகிழவிக்கும் அந்தக் கதை ... அடுத்த பதிவில் ...

தொடரும் ...