Showing posts with label Pirates of caribbean. Show all posts
Showing posts with label Pirates of caribbean. Show all posts

Friday, March 18, 2011

கல்லறை தீவு - பாகம் 2 :திரை விமர்சனம்.

கல்லறை தீவு - பாகம் 2 :திரை விமர்சனம்.
Pirates of the Caribbean: Dead Man's Chest : movie review

இந்த படம் பார்க்கும் முன் கண்டிப்பாக முதல் பாகம் பார்க்கவும்.அப்போது தான் எல்லா கதாபாத்திரங்கள் தொடர்ச்சி கிடைக்கும்.இந்த படம் போன படத்தின் முடிவில் இறுதி ஆரம்பிகிறது.முதல் பாகத்தில் ஜாக் ஸ்பர்ரோவ் எலிசபெத் தையும் வில் லையும் சேர்த்து வைத்து விட்டு போர்ட் ராயல் லில் இறுதி தப்பி செல்வதோடு முதல் பாகம் முடிகிறது.

இந்த பாகத்தில் அறிமுகமாகும் 2 பேர் ஆளுனர் பக்கெட் மற்றும் டேவிட் ஜோன்ஸ் .

ஆளுனர் பக்கெட் : இவர் போர்ட் ராயல் லை ஆள வந்திருப்பவன் . புத்திசாலி , ஜாக் கின் திசை மானியை பற்றிய ரகசியம் அறிந்தவன் .

டேவிட் ஜோன்ஸ்: கடலில் மட்டுமே வாழும் சபிக்க பட்டவன்.இவனால் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நிலத்திற்கு வர முடியும்.



போர்ட் ராயல் லுக்கு ஆளுநராக வரும் பக்கெட் ,எலிசபெத் மற்றும் வில் டர்னர் ரை கைது செய்கிறான். இதனால் அவர்கள் திருமணம் தடை படுகிறது.ஜாக் தப்பி செல்ல அவர்கள் உதவியதால் கைது செய்ததாக கூறுகிறான்.(முதல் பாகத்தில் )

இங்கு ஜாக் எதையோ தேடி சென்று ஒரு வரைபடத்துடன் வருகிறான்.அந்த வரை படத்தில் உள்ள சாவியை தேடி கண்டு பிடிக்க வேண்டும் என்று சொல்கிறான்.ப்ளக் பியர்ல் லில் அவர்கள் பயணம் செய்கிறார்கள்.அப்போது ஜாக் வில் லின் தந்தையை தான் கப்பலில் பார்க்கிறான்.அவர் டேவிட் ஜோன்ஸ் சிடம் அடிமையை உள்ளார்.ஜாக் கிற்கும் ஜோன்ஸ் சிறகும் ஒரு உடன்படிக்கை இருப்பதால் ஜாக் கும் ஜோன்ஸ் சிடம் அடிமையாய் இருக்க வேண்டும் என்றும் தவறினால் ஜோன்ஸ் சின் கடல் மிருகம் அவனை கொன்று விடும் என்று சொல்லி செல்கிறார்.இதனால் பயம் அடையும் ஜாக் கடலிற்கு வராமல் மறந்து வாழ்கிறான்.அவளுக்கு டால்மா என்ற ஒரு பெண் உதவுகிறாள்.



இங்கு பக்கெட் வில் லிடம் பேரம் பேசுகிறான். ஜாக் கிடம் உள்ள திசை மணியை தன்னிடம் தந்தால் அவனையும் எலிசபெத்தையும் விட்டு விடுவதாய் சொல்கிறான்.இதனால் வில் ஜாக் கை தேடி புறப்படுகிறான். எலிசபெத் தின் தந்தை அவளை சிறையில் இருந்து தப்பிக்க வைக்கிறார்.எலிசபெத் வில் லை தேடி செல்கிறாள்.



ஜாக்கை சந்திக்கும் வில் அவனது திசை மணியை கேட்கிறான்.ஆனால் ஜாக் அவனிடம் டேவிட் ஜோன்ஸ் சிடம் உள்ள ஒரு சாவியை திருடி தருமாறு சொல்கிறான்.ஆனால் வில் லை ஜாக் வேறு திட்டம் போடு ஜோன்ஸ் சிடம் அனுப்புகிறான்.அங்கு வில் தனது தந்தையை சந்திக்கிறான்.அவர் தான் மகனுக்கு உதவுகிறார்.



டேவிட் ஜோன்ஸ் சின் இதயம் ஒரு பெட்டியில் அடைக்கப்பட்டு ஒரு தீவில் புதைக்கப்பட்டு இருக்கிறது.அதை கண்டு பிடித்து அழித்தால் தான் அவனை கொள்ள முடியும்.அந்த பேட்டியின் சாவி எப்போதும் ஜோன்ஸ் சிடம் தான் இருக்கும்.ஜாக் அந்த இதயத்தை வைத்து ஜோன்ஸ் சிடம் பேரம் பேசி தனது அடிமை கணக்கை தீர்க்க நினைக்கிறான்.அந்த சாவியின் வரை படத்தை கொடுத்து வில் டர்னர் ரை அங்கு அனுப்பி அதை திருட சொல்கிறான்.அப்படி அவன் அதை கொண்டுவந்தால் வில் லிற்கு அவன் கேட்ட திசை மானியை தருவதாக சொல்கிறான்.



ஜாக் தனது அடிமை கணக்கை எப்படி தீர்த்தான்.?
டேவிட் ஜோன்ஸ் சின் இதயம் என்ன ஆனது.?
வில் தனது காதலி எலிசபெத் உடன் சேர்ந்தனா?
பக்கட் நினைத்தது அவனுக்கு கிடைத்ததா?
தளபதி நரிங்க்டன் என்ன ஆனார்.?
வில் தனது தந்தையை மீட்டானா ? ஜாக் என்ன ஆனான்?

என்பதை தெரிந்து கொள்ள படம் பார்க்கவும்.கண்டிப்பாக இந்த படமும் சிறந்த பொழுதுபோக்கு படம்.சில லாஜிக் மீறல்களை தரவிது பார்த்தால் சிறந்த படம். இந்த படத்தில் வரும் கடல்மிருகம் அருமையான கிராபிக்ஸ் கலக்கல்.மிக பிரம்மாண்டமாக அமைத்திருப்பார்கள்.இந்த பாகத்திலும் ஜாக் கின் காமெடி அட்டகாசங்கள் மற்றும் சேட்டைகள் அருமையாக இருக்கும்.இந்த படத்தின் முடிவு கொஞ்சம் சோகமாக இருந்தாலும் அருமையாக இருக்கும்.

இந்த படத்தின் முதல் பாகம் விமர்சனம் இங்கே.

இந்த படத்தின் ட்ரைலர் இங்கே.

Wednesday, February 2, 2011

Pirates of Caribbean:The Curse of the Black Pearl (கல்லறை தீவு :சாபத்தின் பிடியில் ..)

My All time Favorite Movie...




நான் பார்த்த ஆங்கில படங்களிலேயே என்னை மிகவும் கவர்ந்த ,பிடித்த படம். இந்த வரிசையில் வந்த படங்களை நான் ஒரு 30முறையாவது பார்த்து இருப்பேன். johny deep - இன் நடிப்பு என்னை அவரின் அடிமை ஆக்கியது.


ஜாக் ஸ்பாற்ரா -வும் பார்போசா - வும் நண்பர்கள் மற்றும் கடல் கொளையர் தலைவர்கள். Black Pearl கப்பலை சொந்தம் கொண்டாடுபவர்கள். பல பொக்கிஷங்கள் புதைத்து கிடக்கும் கல்லறை தீவை நோக்கி செல்கிறார்கள். பொக்கிஷத்தில் தனக்கு பாதி வேண்டும் என்று ஜாக் கேட்க அதை மற்ற மாலுமிகளும் பர்போசவும் எதிர்கிறார்கள். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் Jack-கை ஒரு ஆளிலாத தீவில் தனியாக விட்டு செல்கிறார்கள்.ஜாக்கிடம் ஒரு துப்பாக்கி மற்றும் ஒரு தோட்டா அவனுக்கு கொடுகிறார்கள்.பிறகு சென்று கல்லறை தீவில் கொள்ளை அடிகிறார்கள்.ஆனால் அங்குள்ள சபிக்க பட்ட தங்கத்தால் பாதிக்கபடுகிறார்கள்.




அப்போது ஜாக் கிற்கு சாதகமாக பேசிய Bootstap Turner லை கடலில் தூக்கி வீசி விடுகிறார்கள். டர்னர் சாகும் முன் தனது தங்கத்தை தன் மகன் வில் டர்னர் -கு அனுப்பி வைக்கிறார். இதனால் பார்போசாவும் அவனது மாலுமிகளும் சாபம் தீராமல் அதை தேடி அழைத்து கொண்டிருகிறார்கள்.



சிறு வயதில் கடலில் அடித்து வரப்பட வில் டர்னர் ஐ பிரிட்டிஷ் படை வீரர்கள் காப்பாற்ற அவன் போர்ட் ராயல் லில் வளர்கிறான்.




அந்த தனி தீவில் இருந்து தப்பித்த Jack தனது ப்ளக் பியர்ல் கப்பலை பார்போசா விடம் இருந்து மீட்க போர்ட் ராயல் வருகிறான்.வில் ட்டனர் போர்ட் ராயல் லில் ஒரு சம்பட்டி செய்யும் வேலை செய்கிறான்.அங்கு ஆட்சி செய்யும் பிரிட்டிஷ் பிரபு வின் மகள் எலிசபெத்.எலிசபெத் தை பிரிட்டிஷ் தளபதி நாரிங்க்டன் னுக்கு திருமணம் செய்ய முடிவு எடுக்கிறார் பிரபு. வில்லின் சபிக்க பட்ட தங்கம் அவளுக்கு கிடைக்க அதை தேடி அலையும் பார்போசா வும் அவனது மாலுமி களும் போர்ட் ராயல் வந்து எலிசபெத் தை கடத்தி செல்கிறார்கள்.


எலிசபெத் மேல் ஆசை கொண்ட வில் டர்னர் அவளை காப்பாற்ற அங்கு கைதியாய் இருக்கும் ஜாக் உதவியை நாடுகிறான். வில் லின் பிறப்பை அறிந்த ஜாக் ஒரு உடன்பாட்டோடு அவனுக்கு உதவி செய்கிறான். இருவரும் பிரிட்டிஷ் கப்பலை திருடி தப்பிகிறார்கள். பின் டோர்டுகா தீவுக்கு சென்று ஜாக் , நண்பன் கிப்ஸ் சுடன் சேர்ந்து சில மாலுமிகளுடன் சேர்ந்து ப்ளக் பியர்ல் ளையும் எலிசபெத்தையும் மீட்க செல்கிறார்கள்.




அவர்கள் ப்ளக் பியர்ல் ளையும் எலிசபெத் தையும் காப்பாற்றினார்களா ? , எலிசபெத் யாரை திருமணம் செய்ய விரும்பினாள் ? , பார்போசா மற்றும் அவனது மாலுமிகளின் சாபம் தீர்ந்ததா ?,ஜாக் பார்போசா வை பழி வாங்கின்னா?என்பதே கதை.


இது எல்லோரும் ரசிக்கும் படியான படம். நிலவொளியில் சபிக்க பட்ட மாலுமிகள் அருமையான கிராபிக்ஸ் கலக்கல். கிளைமாக்ஸ் அதற்கும் மேல். படத்தில் லாஜிக் மீறல்கள் இருத்தலும் அதுவும் ரசிக்கும் படி இருக்கும்.முக்கியமாக ஜாக் கின் காமெடி.கிறுக்குத்தனமாக இருந்து கொண்டு புத்திசாலி தனமாக ஏமாற்றுவது, ப்ளக் பியர்ல் லை மீட்க எதையும் செய்வது , லூசுத்தனமான செய்கை அனைத்தும் ரசிக்கும் படி இருக்கும்.




படத்தில் முக்கியமான 2 பொருட்கள் : ப்ளக் பியர்ல் கப்பல் - கடலில் அதிவேகமாக செல்ல கூடியது.

ஜாக் கின் திசை மானி : இது அதிசயமானது . நாம் மனதில் என்ன நினைகிறோமோ அதை மட்டுமே காட்டும். வடக்கு திசையை காட்டாது.ஆனால் இது பல பேருக்கு தெரியாது.


கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு அருமையான entertainer .