Showing posts with label hollywood vimarsanam. Show all posts
Showing posts with label hollywood vimarsanam. Show all posts

Friday, September 16, 2011

Enter the Dragon - எண்டர் தி டிராகன் : A BRUCE LEE movie

Enter the Dragon - எண்டர் தி டிராகன் : A BRUCE LEE movie



புரூஸ் லீ- அன்று முதல் இன்று வரை ஆக்சன் பிரியர்களுக்கு பிடித்த ஒரு நடிகர். இன்று வரும் எத்தனையோ ஆக்சன் படங்களின் முன்னோடி. இதில் என்னை மிகவும் கவரத படம் "Enter the Dragon - எண்டர் தி டிராகன்". இந்தப்படம் 1976ஆம் ஆண்டில் இந்தியாவில் இப்படம் திரையிடப்பட்டது.நான் இந்த படத்தை விஜய் டிவி இல் பார்த்தேன்.இப்போது உள்ள எந்த நடிகராலும் இவரை போல ஆக்சன் செய்ய முடியாது.இவர் நுஞ்சக் சுற்றும் ஸ்டைல்லே தனி தான்...

"You offended my family and offended the shaolin temple”

என்று வில்லனை நோக்கி நிலைகுத்திய கூர்பார்வையுடன் கூறிவிட்டு, அவனோடு மோதுவதற்கு தயாராக, தனக்கே உரித்தான சண்டைத் துவக்க பாணியில் புரூஸ் லீ காலை விரித்துவைத்து, தனது கைகளை உயர்த்தி சண்டை செய்யும் போது பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல தோன்றும்.இன்று எவ்ளவோ அதிநவீன கேமெராக்கள் வத்தலும் இவரின் வேகம் போல வேறு எந்த ஆக்சன் ஹீரோ இல்லை.

கதை:

இது ஒரு சாதாரணக் கதைதான் (ஒரு விதத்தில் பழி வாங்கும் கதையும் கூட) எண்டர் த டிராகன். ஹாங்காங்கிற்கு அருகில் உள்ள ஹான்ஸ் தீவை சொந்தமாக வைத்துக்கொண்டு போதைப்பொருள் தயாரித்து அதனை உலகளாவிய அளவில் கடத்தி விற்றுவந்தவனை ஆதாரப்பூர்வமாக பிடிக்க முயன்ற ஹாங்காங் காவல்துறை பல உளவாளிகளை அனுப்புகிறது. அவர்களில் பலர் பெண்கள். ஓரளவிற்கு உண்மை தெரிகிறது. உண்மையை அறிந்து வெளியே செல்ல முயன்றவர்கள் கொல்லப்படுகின்றனர். இந்த நிலையில் - தற்காப்புக் கலையில் கைதேர்ந்த - அவனை முடிக்க தற்காப்புக் கலையில் சிறந்து விளங்கும் வீரனை தேர்ந்தெடுத்து அனுப்புகிறது ஹாங்காங் காவல் துறை. அவர்தான் புரூஸ் லீ.

ஹான்ஸ் தீவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தற்காப்பு கலைப் போட்டியில் பங்கேற்க புரூஸ் லீ அனுப்பப்படுகிறார். உலக அளவில் சிறந்த விளங்கிய கராத்தே, பாக்சிங் உள்ளிட்ட பல கலைகளில் சிறந்த வீரர்களும் கலந்துகொள்ள வருகின்றனர்.



போட்டியின் முதல் சுற்றிலேயே, தனது தங்கையை கற்பழித்துக் கொன்றவனும், வில்லனின் மெய்க்காப்பாளனுமாகிய கராத்தே வீரனை (பாப் வால்) தோற்கடிக்கிறார் (கண்ணிமைக்கும் நேரத்தில் குத்துகள் விழுகின்றன) புரூஸ் லீ. தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாத அவன் புரூஸ் லீயைக் கொல்ல பாட்டில்களை உடைத்துக்கொண்டு குத்துவதற்குப் பாய, அவனுடைய கழுத்தில் வெட்டு உதை கொடுத்து கொன்றுவிடுகிறார் புரூஸ் லீ. அவனைக் கொன்ற நிலையில், குரூர முகத்துடன் வில்லனை ஒரு பார்வையும் பார்த்துவிட்டுச் செல்வார்.

வில்லனின் போதை சாம்ராஜ்யத்தின் ரகசியங்களை அறிந்துகொள்ள ஒவ்வொரு இரவும் புரூஸ் லீ ரகசிய உளவில் ஈடுபடுவதும், ஒரு நாள் கண்டுபிடிக்கப்பட்டவுடன் அங்கிருந்த வில்லனின் காவலாளிகளைப் பந்தாடுவதும், ஏராளமானவர்களை தன்னைச் சூழ்ந்துவிட்ட நிலையில், தான் மறைத்து வைத்திருந்த நன் சாக்கு ஆயுதத்தை எடுத்து கையிலெடுத்து கண்ணில் பிடிபடாத வேகத்தில் சுழற்றுவதும், பிறகு அவர்களை அடித்து வீழ்த்திவிட்டு வில்லனிடம் சிறைபடுவதும் அபாரமான காட்சிகள்.




இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்த கராத்தே வீரர் (ஜிம் கெல்லி) அருமையாக சண்டையிட்டு வெற்றி பெற்ற பிறகு வில்லனால் அடித்துக் கொல்லப்படுவதும், அதனைக் கண்டு மற்றொரு போட்டியாளர் (ஜான் சாக்சன்) மிரள்வதும் ரசிகர்களை அச்சுறுத்திய காட்சிகள்.

பிறகுதான் உச்சக் கட்டம். புரூஸ் லீயும், ஹான்ஸ் (இவர் புரூஸ் லீயின் மாமன்தான்) மோதல் காட்சி. துண்டிக்கப்பட்ட கையில் எஃகு ஆயுதங்களைத் தரித்து ஹான்ஸ் சண்டையிட, அதில் சிக்காமல் லாவகமாக விலகி அவரை புரூஸ் லீ அடித்து வீழத்த ஒன்றரை மணி நேரத்தில் படம் முடிந்துவிடுகிறது.



இப்படத்தில் லேலோ ஸ்கீஃபனின் இசை மிக அற்புதமானது. குறிப்பாக, போட்டியாளர்கள் ஹாங்காங் துறைமுகத்தில் படகு பிடித்து தூரத்தில் நிற்கும் பாய்மரக் கப்பலிற்கு செல்லும் காட்சியில் அவருடைய இசையமைப்பு மிக அழகானது.

தமிழ் திரைப்பட ரசிகர்களிடையே இத்திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆக்ஷன் படங்களை விரும்பிப்பார்க்கும் ரசிகர்களை புரூஸ் லீயின் அதிரடி மிகவும் ஈர்த்தது.

தற்காப்புக் கலைஞன் ஒருவனின் திறமையில் நம்பிக்கை வைத்து எடுக்கப்பட்ட இப்படம் பின்னாளில் ஏராளமான சண்டைப்படங்களை தயாரிக்க வைத்தது. ஒரு கால் நூற்றாண்டுக் காலத்திற்கு ஹாங்காங்கில் பல சண்டைத் திரைப்படங்கள் எடுக்கப்பட்டன.

எல்லாவற்றிற்கும் வித்திட்டது எண்டர் த டிராகன். புரூஸ் லீ!

உங்கள் கருத்துக்களை பகிரவும்... நன்றி.. :)

Friday, March 18, 2011

கல்லறை தீவு - பாகம் 2 :திரை விமர்சனம்.

கல்லறை தீவு - பாகம் 2 :திரை விமர்சனம்.
Pirates of the Caribbean: Dead Man's Chest : movie review

இந்த படம் பார்க்கும் முன் கண்டிப்பாக முதல் பாகம் பார்க்கவும்.அப்போது தான் எல்லா கதாபாத்திரங்கள் தொடர்ச்சி கிடைக்கும்.இந்த படம் போன படத்தின் முடிவில் இறுதி ஆரம்பிகிறது.முதல் பாகத்தில் ஜாக் ஸ்பர்ரோவ் எலிசபெத் தையும் வில் லையும் சேர்த்து வைத்து விட்டு போர்ட் ராயல் லில் இறுதி தப்பி செல்வதோடு முதல் பாகம் முடிகிறது.

இந்த பாகத்தில் அறிமுகமாகும் 2 பேர் ஆளுனர் பக்கெட் மற்றும் டேவிட் ஜோன்ஸ் .

ஆளுனர் பக்கெட் : இவர் போர்ட் ராயல் லை ஆள வந்திருப்பவன் . புத்திசாலி , ஜாக் கின் திசை மானியை பற்றிய ரகசியம் அறிந்தவன் .

டேவிட் ஜோன்ஸ்: கடலில் மட்டுமே வாழும் சபிக்க பட்டவன்.இவனால் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நிலத்திற்கு வர முடியும்.



போர்ட் ராயல் லுக்கு ஆளுநராக வரும் பக்கெட் ,எலிசபெத் மற்றும் வில் டர்னர் ரை கைது செய்கிறான். இதனால் அவர்கள் திருமணம் தடை படுகிறது.ஜாக் தப்பி செல்ல அவர்கள் உதவியதால் கைது செய்ததாக கூறுகிறான்.(முதல் பாகத்தில் )

இங்கு ஜாக் எதையோ தேடி சென்று ஒரு வரைபடத்துடன் வருகிறான்.அந்த வரை படத்தில் உள்ள சாவியை தேடி கண்டு பிடிக்க வேண்டும் என்று சொல்கிறான்.ப்ளக் பியர்ல் லில் அவர்கள் பயணம் செய்கிறார்கள்.அப்போது ஜாக் வில் லின் தந்தையை தான் கப்பலில் பார்க்கிறான்.அவர் டேவிட் ஜோன்ஸ் சிடம் அடிமையை உள்ளார்.ஜாக் கிற்கும் ஜோன்ஸ் சிறகும் ஒரு உடன்படிக்கை இருப்பதால் ஜாக் கும் ஜோன்ஸ் சிடம் அடிமையாய் இருக்க வேண்டும் என்றும் தவறினால் ஜோன்ஸ் சின் கடல் மிருகம் அவனை கொன்று விடும் என்று சொல்லி செல்கிறார்.இதனால் பயம் அடையும் ஜாக் கடலிற்கு வராமல் மறந்து வாழ்கிறான்.அவளுக்கு டால்மா என்ற ஒரு பெண் உதவுகிறாள்.



இங்கு பக்கெட் வில் லிடம் பேரம் பேசுகிறான். ஜாக் கிடம் உள்ள திசை மணியை தன்னிடம் தந்தால் அவனையும் எலிசபெத்தையும் விட்டு விடுவதாய் சொல்கிறான்.இதனால் வில் ஜாக் கை தேடி புறப்படுகிறான். எலிசபெத் தின் தந்தை அவளை சிறையில் இருந்து தப்பிக்க வைக்கிறார்.எலிசபெத் வில் லை தேடி செல்கிறாள்.



ஜாக்கை சந்திக்கும் வில் அவனது திசை மணியை கேட்கிறான்.ஆனால் ஜாக் அவனிடம் டேவிட் ஜோன்ஸ் சிடம் உள்ள ஒரு சாவியை திருடி தருமாறு சொல்கிறான்.ஆனால் வில் லை ஜாக் வேறு திட்டம் போடு ஜோன்ஸ் சிடம் அனுப்புகிறான்.அங்கு வில் தனது தந்தையை சந்திக்கிறான்.அவர் தான் மகனுக்கு உதவுகிறார்.



டேவிட் ஜோன்ஸ் சின் இதயம் ஒரு பெட்டியில் அடைக்கப்பட்டு ஒரு தீவில் புதைக்கப்பட்டு இருக்கிறது.அதை கண்டு பிடித்து அழித்தால் தான் அவனை கொள்ள முடியும்.அந்த பேட்டியின் சாவி எப்போதும் ஜோன்ஸ் சிடம் தான் இருக்கும்.ஜாக் அந்த இதயத்தை வைத்து ஜோன்ஸ் சிடம் பேரம் பேசி தனது அடிமை கணக்கை தீர்க்க நினைக்கிறான்.அந்த சாவியின் வரை படத்தை கொடுத்து வில் டர்னர் ரை அங்கு அனுப்பி அதை திருட சொல்கிறான்.அப்படி அவன் அதை கொண்டுவந்தால் வில் லிற்கு அவன் கேட்ட திசை மானியை தருவதாக சொல்கிறான்.



ஜாக் தனது அடிமை கணக்கை எப்படி தீர்த்தான்.?
டேவிட் ஜோன்ஸ் சின் இதயம் என்ன ஆனது.?
வில் தனது காதலி எலிசபெத் உடன் சேர்ந்தனா?
பக்கட் நினைத்தது அவனுக்கு கிடைத்ததா?
தளபதி நரிங்க்டன் என்ன ஆனார்.?
வில் தனது தந்தையை மீட்டானா ? ஜாக் என்ன ஆனான்?

என்பதை தெரிந்து கொள்ள படம் பார்க்கவும்.கண்டிப்பாக இந்த படமும் சிறந்த பொழுதுபோக்கு படம்.சில லாஜிக் மீறல்களை தரவிது பார்த்தால் சிறந்த படம். இந்த படத்தில் வரும் கடல்மிருகம் அருமையான கிராபிக்ஸ் கலக்கல்.மிக பிரம்மாண்டமாக அமைத்திருப்பார்கள்.இந்த பாகத்திலும் ஜாக் கின் காமெடி அட்டகாசங்கள் மற்றும் சேட்டைகள் அருமையாக இருக்கும்.இந்த படத்தின் முடிவு கொஞ்சம் சோகமாக இருந்தாலும் அருமையாக இருக்கும்.

இந்த படத்தின் முதல் பாகம் விமர்சனம் இங்கே.

இந்த படத்தின் ட்ரைலர் இங்கே.

Saturday, January 29, 2011

பைண்டிங் நீமோ : விமர்சனம் ( Finding nemo)



Finding Nemo - உலக புகழ் பெற்ற Animation படம். Oscar award மற்றும் 34 விருதுகள் ,35 nomination வாங்கிய படம்.Pixar - இன் படைப்பு .

இந்த படத்தின் கதை என்னவென்றால் நீமோ (A clown fish)முட்டையாக இருக்கும் பொழுதே அவனுடைய அம்மாவையும் அவனுடைய பிற முட்டை சகோதரர் சகோதரிகளையும் ஒரு சுறாமீன் கொன்று விடுகிறது.

"உடனே நீமோ வளர்ந்து அந்த சுறா மீனை பழி வாங்குகிறான். ஹலோ இப்படி எல்லாம் நினைச்சீங்கன்னா நிறைய விஜயகாந்த் படம் பார்க்கறீங்கன்னு அர்த்தம். அதை எல்லாம் மறந்துடுங்க. :) lol இது தமிழ் படமோ விஜயகாந்த் படமோ அல்ல "

இதனால் தன்னுடைய ஒரே உறவான நீமோவை அவனுடைய தந்தை ரொம்ப பாதுகாப்பு உணர்வுடன் வளர்க்கிறார். நீமோவின் ஒரு செதில் வேறு சிறியதாக போய் விடுவதால் அது வேறு நீமோவின் தந்தைக்கு கவலையாகி விடுகிறது.



பாதுகாப்பு உணர்வு அதிகமாகி நீமோவை வெளியிலேயே விடாமல் அவனை பிறரின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக்குகிறார்.

நீமோவின் பிடிவாதத்தால் அவனைப் பள்ளியில் சேர்க்கிறார் அவன் தந்தை. பள்ளியில் கேலிக்கு ஆளாகும் நீமோ தன்னை நிரூபிப்பதற்காக சென்று ஒருவரின் வலையில் சிக்கி கொள்கிறான். அவர் அந்த மீனை தன் தொட்டியில் வளர்ப்பதற்காக எடுத்துச் சென்று விடுகிறார்.

அங்கு நீமோவின் பள்ளி செயல்களை ஒளிந்து இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் நீமோவின் தந்தை அந்த படகை பின்பற்றி செல்லத் தொடங்குகிறார் ஆனால் படகு வேகமாக சென்று விடுகிறது.

அப்பொழுது அந்தப் பக்கம் வந்த டோரியை ஒரு படகைக் கண்டாயா என்று நீமோவின் தந்தை கேட்க ஆம் இந்தப் பக்கம் சென்றது என்னைப் பின் தொடர் என்று சொல்லி வேகமாக செல்லத் தொடங்கும் டோரி சிறிது தூரம் சென்று மெதுவாக செல்லத் தொடங்குகிறது. நீமோவின் தந்தை ஏன் மெதுவாக செல்கிறாய் என்று கேட்க நீ யார்? என்று கேட்பதில் இருந்து காமெடித் திருவிழா ஆரம்பிக்கிறது.



அப்பொழுது தான் தெரிகிறது டோரிக்கு short term memory loss என்று. கஜினியில் சூர்யாவுக்கு இருந்ததே அதே வியாதிதான். ஆனால் நம்ம சூர்யா மாதிரி சிரியஸான ஆசாமி இல்லை ஜாலியான optimistic மீன்.

அப்பொழுது டோரிக்கு அந்த படகு விட்டுச் சென்ற அடையாளப் பலகையில் இருந்த முகவரியைப் படித்து நீமோவின் தந்தைக்கு சொல்கிறது. அதை விட ஆச்சரியம் அளிக்கும் வகையில் அந்த முகவரி டோரிக்கு ரொம்ப நேரம் ஞாபகம் இருக்கிறது.

அதனால் டோரி நீமோவின் தந்தை அருகில் இருந்தால் தன்னுடைய நிலைக்கு உதவியாக இருக்கும் என்று எண்ணி நீமோவின் தந்தைக்கு உதவி செய்வதற்காக அவருடனே அந்த முகவரி குறிப்பிட்ட சிட்னிக்கு செல்ல ஆரம்பிக்கிறது.

முதலில் டோரியின் கூட வர விரும்பாத நீமோவின் தந்தை வேறு வழி இல்லாமல் சம்மதிக்கிறார். அங்கிருந்து நீமோவைக் கண்டுபிடிக்க செய்யும் பயணம் தான் கதை.



நடுவில் சைவமாக விரும்பும் சுறாக்கள், super cool ஆமைகள் என்று அவர்களின் பயணம் 11/2 மணி நேரம் ஒரு மாஜிக் பயணத்தில் நம்மை அழைத்துச் செல்லும்.


கள்ளம் கபடமில்லாததால் டோரி அதன் குழந்தைத்தனம், எல்லாமே நல்லது என்று எடுத்துக் கொள்ளும் அதனுடைய பாத்திரம், மனிதன் குழந்தைப் பருவத்தை ஏன் விரும்புகிறான் ஏன் குழந்தைத்தனம் என்பது முக்கியம் என்பதை எல்லாம் நமக்கு சொல்லும் விதமாக அமைந்திருக்கிறது.

உதாரணமாக ஒரு திமிங்கலத்திடம் தொடர்பு கொள்ள முடியும் என்று நம்பும் டோரி அதனுடன் திமிங்கல பாஷையில் பேசுவதாக சொல்லி சிட்னி செல்வது எப்படி என்று கேட்கிறது.

அந்தத் திமிங்கலம் டோரியையும், நீமோவின் தந்தையையும் விழுங்கி விடுகிறது. நீமோவின் தந்தை டோரியை கடிந்து கொண்டு உனக்கு திமிங்கல பாஷை எல்லாம் தெரியாது என்று திட்டிக் கொண்டிருக்கும் சமயம் அந்தத் திமிங்கலம் அவர்களை சிட்னியில் இறக்கி விடுகிறது.

இது போல டோரியின் பல காட்சிகள் கள்ளம் கபடமற்ற வாழ்க்கையைப் பற்றி ஏங்க வைத்து விடுகிறது.



கடைசியாக இந்தப் படத்தை எடுத்த பிக்ஸர் நிறுவனம் பற்றி சொல்லவில்லை என்றால் இந்தப் பதிவு நிறைவு பெறாது.

Toy story, Bugs life, Monstors Inc, Incredibles, Cars இதுதான் இந்த நிறுவனம் தயாரித்துள்ள படங்கள் இவைகளைப் பார்த்திருந்தால் நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியமே இல்லை.

இதுவரை ஒரு படம் கூட பிளாப் ஆகாமல் சூப்பர் ஹிட் படங்களை மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கும் நிறுவனம். உங்களுக்கு கார்ட்டூன் பிடிக்கும் என்றால் மேலே உள்ள எல்லாப் படங்களையும் கட்டாயாம் பார்த்தே ஆக வேண்டும்.

டிஸ்னி நிறுவனம் பிக்ஸாரின் ஷேர்களை ரெக்கார்ட் விலையில் வாங்கி உள்ளது. இது பிக்ஸாரை எந்த விதத்திலும் பாதிக்காமல் அதே தரத்துடன் படங்கள் வர வேண்டும் என்பது என் போன்ற சினிமா ரசிகனின் ஆசை.குடும்பத்துடன் இணைத்து குழந்தையாய் ரசிக எற்ற படம்.

இது ஒரு மறுபதிவு நன்றி : http://rasithathu.blogspot.com

Friday, January 28, 2011

கார்ஸ் : விமர்சனம் (Cars)



கார்ஸ் :Pixar studio -வின் மற்றும் ஒரு அனிமேஷன் படம். முழுக்க முழுக்க அமெரிக்காவில் நிறைந்திருக்கும் கார்கள் பற்றிய கார்டூன் படம்.கார்கள் பேசுகின்றன, பாடுகின்றன, ஆடுகின்றன, காதல் செய்கின்றன, கோபப்படுகின்றன, குதிக்கின்றன, அழுகின்றன. ஏன், ரோடு போடுகின்றன, கண்ணாமூச்சி விளையாடுகின்றன… இன்னும் எத்தனையோ..

வண்டுகள், பூச்சிகள் கூடச் சின்னச் சின்ன கார்கள் தான்..

அமெரிக்காவின் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் வாகனமான கார்கள், அமெரிக்க மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிப் போன இந்த ஊர் தேசிய நெடுஞ்சாலைகளைப் பற்றித் தான் கதையே..



பிஸ்டன் கப் என்னும் பெருமைக்குரிய கோப்பையைப் பெறுவதை வாழ்க்கை லட்சியமாக வைத்திருக்கும் ரேஸ்கார் தான் கதை நாயகன் Mc Queen. இந்தக் கோப்பைக்கான போட்டிகள் நாட்டின் கீழ்க்கோடியில் நடக்கிறது. அதிசயமாக இந்த முறை போட்டியில் மூன்று கார்கள் முன்னணியில் வந்துவிட யாருக்குக் கோப்பை என்னும் வழக்கைத் தீர்க்க ஐந்து நாட்களுக்குள் மீண்டும் ஒரு போட்டி நாட்டின் மேல்கோடியில் இருக்கும் எல்லே(Elle) என்னும் ஊரில் வைப்பதாக முடிவு.

இந்த ஐந்து நாட்களுக்குள் தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கும், தானே தன் வெற்றிகளுக்கெல்லாம் காரணம் என்று இறுமாந்திருக்கும் நாயக “கார”ன் எப்படி ஒரு சின்னஞ்சிறிய ஊரின் மக்களைப்(கார்களைப்) பார்த்து, புகழ் பணம் அதிகமில்லாத அவர்களின் அன்பைப் புரிந்து திருந்துகிறான் என்பதே கதை.



தமிழில் எத்தனையோ படங்கள் இது மாதிரி பார்த்திருக்கிறோம் என்றாலும் பழகிய கதையைப் புதிய பாத்திரங்கள், புதிய மொழியில் ஏற்றிப் பார்ப்பது இன்னோரு புது அனுபவம்.

ரேஸ் காரின் ஹாலிவுட் ஆக்டிங் காராக ஆவது போன்ற கற்பனைக் கோட்டைகள்; வயலில் தூங்கும் டிராக்டர்களை இந்தக் கார்கள் போய் குறும்புத்தனமாகக் குரலெழுப்பி, எழுப்பிவிடுவது; அந்த டிராக்டர்களுக்குப் பாதுகாவலனான ரோட்ரோலரைக் கண்டு பயந்து ஓடி வருவது; நெடுஞ்சாலையில் இருக்கும் மோட்டல்களைப் போன்ற கார்களுக்கான தங்குமிடங்கள்; முக்கியமாக, கதை நாயகியாக(Sally) வரும் கார் ஒரு நீர்வீழ்ச்சியின் அருகே மெல்ல மிதந்தபடி திரும்பும் போது, ஒரு காரின் முகத்தில் அந்தக் கண நேரக் காதலைக் காட்டியிருந்த விதம்; அதற்கு நம் நாயகன் அசட்டுச் சிரிப்பு ஒன்று சிரித்ததையும் அழகாகக் காட்டியிருந்தது.. என்று வெறும் கார்களை வைத்து விளையாடி இருக்கிறார்கள்



படம் பார்த்துவிட்டு வந்தால் பார்க்கும் ஒவ்வொரு காருக்கும் “ஏன் கண், வாய் இல்லை?” என்று யோசிக்கத் தோன்றும். கார்கள், ட்ரக்குகள் எதுவுமே பேசாமல் இருப்பது ரொம்ப அசாதாரணமானது என்னும் உணர்வு நமக்கும் வரும்.

இது ஒரு மறுபதிவு நன்றி :http://pookri.com

Thursday, January 27, 2011

வால் - ஈ : விமர்சனம் (wall - E)


போர் அடிக்கும் போது இந்த படம் பார்த்தேன்.இந்த படம் என்னை ரொம்ப impress பண்ணி விட்டது.இதோ இதன் விமர்சனம்,கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.Don't miss it.

நம் உலகம் மற்றும் அதன் அழிவு தரும் அச்சம் அனைவருக்குமே பொதுவானவை . இன்றைய சுற்றுசூழலின் நிலை அனைவரும் அறிந்த ஒன்று , நாம் சுவாசிக்கும் காற்றாகட்டும் , அல்லது குடிக்கும் நீராகட்டும் , ஏன் ஓஸோன் மண்டலத்தில் விழுந்து வரும் துளையால் நம் மேல் விழுகின்ற சூரிய ஒளி கூட நமக்கு ஆபத்தை விளைவிப்பதாய் மாறி வருகிறது . இந்நிலை என்றுமே குறையாது , அது ஒவ்வொரு நாளும் அதிகரித்த வண்ணமேயுள்ளது . இந்நிலை இன்னும் சில வருடங்களில் அதிகமாகி நம்மை இவ்வுலகத்தில் வாழ இயலாத ஒரு நிலைக்கு கொண்டு செல்லும் . எங்கும் சுவாசிக்க இயலாத விஷவாயுவால் சூழப்பட்டு ஒரு உயிர் இப்பூவலகில் வாழ இயலாத ஒரு நிலை .

அப்படி ஒரு சூழலில்தான் இப்படம் துவங்குகிறது , உலகத்தில் இருக்கும் மனிதர்கள் தங்களது அயராத உழைப்பால் நம் உலகத்தை ரசாயன கழிவுகளின் குப்பையாக்கி அதன் பலனாய் தானே அழிந்து போன நம் உலகம் , அங்கே எல்லாம் இரும்பு கழிவுகள் அக்கழிவுகளை அகற்றும் பணிக்கு வால்-இ எனப்படும் ரோபோக்கள் . மனித அழிவிற்கு பிறகு பல நூறு ஆண்டுகள் கடந்த பின் உலகில் உயிரினங்கள் அற்ற சூழலில் சூரியசக்தியில் இயங்கும் இந்த வால்-இ ரோபோக்களும் அழிந்து அவ்வகையில் ஒன்று மட்டும் தனித்து தனது அன்றாட வேலையான குப்பை அகற்றுதலை செய்துகொண்டிருக்கிறது .



அந்த வேலைகளுக்கு நடுவே புதிதாக வித்யாசமான பொருட்கள் தென்பட்டால் அதையும் தன்து சிறிய குடோனில் அடைத்து வைத்துக்கொண்டு , ஒரு கரப்பானின் துணையோடு வாழ்கிறது ! . தனது உதிரிபாகங்களையும் கூட பாதுகாத்து வைத்துக்கொண்டு ஒரு மிகப்பழைய அமெரிக்க திரைப்படத்தின் பாடல்காட்சி அடங்கிய ஒரு வீடியோ டேப்பை வைத்துக்கொண்டு தினமும் பணி முடிந்து வீட்டிற்கு வந்ததும் அந்த படத்தை பார்க்கிறது , அதில் காதலர்கள் கைகோர்த்து தங்கள் அன்பை வெளிப்படுத்தும் காட்சியில் இதுவும் தனது இயந்திரகைகளை கோர்த்தபடி தனக்கு அது போல ஒரு துணையில்லையே என வருந்துகிறது.

பின் அங்கு வரும் ஒரு வேற்றுகிரக ரோபோவும் , அதனுடனான வால்-இ யின் காதலும் அதனைதொடர்ந்து வரும் காட்சிகளும் இறுதியில் வால்-ஈ யிம் அந்த பெண் ரோபோவும் இணைந்தனரா , அவர்களது இரும்புகைகள் இணைந்ததா என்பது கிளைமாக்ஸ் .
படத்தின் முதல் 30 நிமிடங்கள் எந்த வித வசனங்களும் இன்றி வெறும் காட்சிகளிலேயே படத்தை கொண்டு சென்றிருப்பது படத்தின் முக்கிய விடயம் . ரஜினிகாந்த் படத்தைக்கூட வசனமில்லாமல் முதல் அரைமணிநேரம் நம்மால் பார்க்க இயலுமா என தெரியவில்லை ஆனால் முதல் அரை மணி நேரமும் ,அதில் இடம் பெரும் காட்சிகளையும் சார்லி சாப்ளினின் அக்கால பேசாப்படங்களோடு ஒப்பிடலாம் . அத்தனை நேர்த்தி அவ்வளவு அழகு , முதல் அரை மணிநேரமும் படத்தில் வசனங்களே இல்லை என்பதை நாம் உணர்வதற்குள் காட்சிகள் வேகமாய் ஒரு மணிநேரத்தை தாண்டிவிட்டிருக்கின்றன.



சார்லி சாப்ளின் படங்களில்(சிட்டிலைட்ஸ் ) காணவல்ல நகைச்சுவையுடன் கூடிய ஒரு சோகமான காதலை இப்படத்தில் பயன்படுத்தியிருப்பது அருமை.

படத்தில் இரண்டு இயந்திரங்களையும் அதன் பாலினத்தையும் அதன் உணர்வுகளையும் முக அசைவுகளையும் உடலசைவு மொழிகளையும் மிக அருமையாகவும் துல்லியமாகவும் வடிவமைத்திருக்கின்றனர் . நிச்சயம் இவ்வகை முகமற்ற ரோபோக்களில் பாலினம் அறிவது மிக கடினமான விடயம் .

இத்திரைப்படம் முழுவதும் விரவியிருக்கும் சுற்றுசூழல் மீதான அக்கறை வியக்கவைக்கிறது , குழந்தைகளுக்கான ஒரு அனிமேஷன் திரைப்படத்தில் இப்படி ஒரு முயற்சி நமக்கு விந்தையாக இருந்தாலும் , நாம் வெட்டி விட்டு போன மரத்தின் நிழலை தேடும் நாளைய சமுதாயம் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு பிரச்சனை இது .இப்படம் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது பெரியோர்களுக்கும் ஏற்ற வகையில் ஆக்சன் , ரொமான்ஸ் , சென்டிமென்ட் என கலந்து கட்டி அடித்திருப்பது , நமது மசாலா வகை ரசிகர்களுக்கும் பிடிக்கும் .

படத்தின் நாயகன் வால்-ஈ யின் தனிமையையும் அது தரும் ஒரு வெறுமையான ஒரு சூழலையும் முதல் இரண்டு காட்சிகளிலேயே புரியவைத்து விடுகின்றனர் .

உலகை நாசமாக்கும் இயந்திர வாழ்க்கையையும் அது தரும் சுகத்தால் நாம் அழித்து வரும் இவ்வுலகம் குறித்தும் இப்படி ஒரு சூழலில் அழியவிருக்கும் மனித குலத்தை ஒரு இயந்திரம் காப்பாற்றுவது போலவும் திரைக்கதை அமைத்தமைக்கு படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
படத்தினூடே இழையோடும் இசை ஒரு அனிமேஷன் படத்திற்கு இத்துணை சிரத்தையா என வியக்கவைக்கிறது .



படம் பற்பல கருத்துக்களை கூறினால் எந்த இடத்திலும் அலுப்பின்றி ஒரு அனிமேஷன் திரைப்படம் பார்க்கிறோம் என்கிற ஒரு உணர்வின்றி நம்மை ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் அடுத்து என்ன என்னும் ஒரு சஸ்பென்ஸோடு கதை நகர்வது அருமை .

ஒரு முழுமையான அறிவியல் புனைக்கதையை சார்ந்த இந்த அனிமேசன் திரைப்படம் குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களையும் கவரும் .

இது ஒரு மறு பதிவு - நன்றி www.athishaonline.com