Showing posts with label World Cup 2011. Show all posts
Showing posts with label World Cup 2011. Show all posts

Monday, March 28, 2011

இலங்கை - நியூசிலாந்து : உலககோப்பை இறுதி போட்டிக்கு செல்வது யார்?

இலங்கை - நியூசிலாந்து :
உலககோப்பை இறுதி போட்டிக்கு செல்வது யார்?




நாளை கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் முதல் அரையிறுதியில் இலங்கை அணி, நியூஸீலாந்தை எதிர்கொள்கிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு நேர்ந்த கதியை இலங்கைக்கும் ஏற்படுத்துமா நியூஸீலாந்து என்பதே அனைவரது எதிர்பார்ப்புமாக இருந்து வருகிறது.

ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே தோன்றுகிறது. காரணம்
1. இலங்கை தன் சொந்த மண்ணில் விளையாடுகிறது.
2. லீக் சுற்றில் நியூஸீலாந்து இலங்கையிடம் தோல்விதழுவியுள்ளது.
3. இலங்கையின் துவக்க வீரர்கள் அபாயகரமாக ஆடி வருகிறார்கள்.
4. நியூஸீலாந்தின் பேட்டிங் வரிசை பலவீனமாக்வும் நம்பத்தகுந்த விதத்திலும் விளையாடவில்லை.
5. நியூஸீலாந்து அணியின் சுழற்பந்து வீச்சிற்கு எதிரான கடுமையான பலவீனம்.

இந்த 5 காரணங்களும் இலங்கைக்குச் சாதகமாக வெற்றி வாய்ப்பைத் திருப்பும் என்று எதிர்பார்க்கலாம்.

ஆனால் நியூஸீலாந்திடம் ஒரு எக்ஸ்-காரணி உண்டு. அதுதான் அந்த அணியின் ஃபீல்டிங். அன்று காலிறுதியில் ஜாக் காலிஸிற்கு ஜேகப் ஓரம் பிடித்த கேட்சும் டிவிலியர்ஸ் ரன் அவுட் செய்யப்பட்ட விதமும் தென் ஆப்பிரிக்காவை தோல்விக்கு இட்டுச் சென்றது. எனவே ஃபீல்டிங் மூலம் போட்டியை மாற்றும் திறன் நியூஸீ.யிடம் உள்ளது.

2007ஆம் ஆண்டும் இந்த இரண்டு அணிகளே அரையிறுதியில் மோதின. முதலில் இலங்கை பேட் செய்ய தரங்காவின் 73 ரன்களாலும், ஜெயவர்தனேயின் சதத்தினாலும் 5 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது.. நியூஸீலாந்து 208 ரன்களுக்குச் சுருண்டு சரணடைந்தது.

அது போன்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். தில்ஷானும், தரங்காவும் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 757 ரன்களை ஜோடி சேர்ந்து எடுத்துள்ளனர். சங்கக்காராவும் ஜெயவதனேயும் இது வரை 563 ரன்களையும் 2 சதங்களையும் சேர்ந்து எடுத்துள்ளனர். எனவே இந்த நால்வரையும் சொற்ப ரன்களுக்கு வீழ்த்தினால் நியூஸீலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். ஆனால் இதனைச் செய்யும் பந்து வீச்சு சேர்க்கை நியூஸீலாந்துக்கு உள்ளதா என்று தெரியவில்லை.



நாளை நியூசீலாந்து வெற்றி பெற பிரெண்டன் மெக்கல்லம் அதிரடி சதம் எடுக்கவேண்டும், ராஸ் டெய்லர் 70- 80 ரன்களை எடுப்பதும் அவசியம். மொத்தத்தில் 300 ரன்களுக்கும் மேல் நியூஸீலாந்து குவித்து விட்டால் ஓரளவுக்கு இலங்கையை நெருக்கடிக்குட் படுத்தலாம்.

நியூஸீலாந்து இலக்கைத் துரத்தும் போது இலங்கையை 280 ரன்களுக்கு மட்டுப்படுத்தி பிறகு இலக்கைத் துரத்தும் போது பதட்டமடையாமல் ரன் விகிதம் பற்றி கவலையில்லாமல் 50-வது ஓவர் வரை ஆட்டத்தை இழுத்தாலே போதும் இலங்கைக்கு அழுத்தம் ஏற்படும். தில்ஷான் போன்றவர்கள் பந்து வீச்சை பிரிக்கவேண்டும், விக்கெட்டுகளைக் கொடுக்கக்கூடாது.

டேனியல் வெட்டோரியின் பந்து வீச்சு நாளைய நியூஸீலாந்து வெற்றிக்கு மிக அவசியம்.

நாளை கொழும்புவில் நடைபெறும் நியூஸீலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதி கிரிக்கெட் போட்டியில் இலங்கையின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.

அவருக்கு இரண்டு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரது உடல்நிலை குறித்து தீவிர பரிசீலனைக்குப் பிறகே முடிவெடுக்கப்படும் என்று இலங்கை கிரிக்கெட் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கேப்டன் குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார்.

இன்று வலையில் குறிப்பிடத்தகுந்த நேரம் பந்து வீசிய முரளிதரன் முழு உடல் தகுதியுடன் இருப்பதான அடையாளத்தில் வீசவில்லை.

முரளிதரன் விளையாட முடியாமல் போனால் அவரது இடத்தில் வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகரா விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்ப்டுகிறது.

நியூசீலாந்து அணி அதிர்ச்சியளிக்கக்கூடியதுதான் என்றாலும் ஒரு அணியாகப் பார்க்கும்போது இலங்கைக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.இருப்பினும் கிரிக்கெட் என்பது நிச்சயமின்மைகளின் ஆட்டம் என்பதால் பொறுத்திருந்து பார்ப்போம்.

Sunday, March 13, 2011

டோனி :சிறந்த கேப்டன் ? பயந்த கேப்டன்?

டோனி : சிறந்த கேப்டன் ? பயந்த கேப்டன்?

நேற்று நடந்த இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா போட்டி இந்தியா தோல்வி அடைந்ததற்கு டோனியின் அனுபவமில்லாத தலைமையே காரணம்.இந்த போக்கு இந்தியா கோப்பையை வெல்லுமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.



நேற்றைய தோல்விக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தோனி, பேட்ஸ்மென்கள் சிலர் ரசிகர்களுக்காக விளையாடுகின்றனர். அது கூடாது, நாட்டுக்காக விளையாடவேண்டும் என்று கோபாவேசம் காட்டியுள்ளார். இப்படி பேசும் அவர் முதலில் ஒழுங்காக ஆடி இருக்க வேண்டும்.

267/1 என்ற நிலையிலிருந்து 29 ரன்களுக்கு கடைசி 9 விக்கெட்டுகளை இழந்ததைப் பற்றி தோனி இவ்வாறு கூறியுள்ளார்.

"மிகப்பெரிய ஷாட்களை அடிக்க வேண்டும் என்று நீங்கள் ஆடினாலே நாட்டிற்காக விளையாடுகிறோம் என்ற உணர்வு போய்விடும். 20 ரன்களை கூடுதலாக அடிக்க வேண்டும் என்ற முயற்சியில் 40 ரன்கள் குறைவாக அடிப்பதில் போய் முடிந்தது. சிலர் காலரியில் உள்ள ரசிகர்களுக்காக விளையாடினார், நாட்டை மறந்து விட்டனர்.

சில வேளைகளில் கண்ணில் தெரியம் பந்தை எல்லாம் வெளியே அடிக்கவேண்டும் என்ற உந்துதல் இருக்கும், ஆனால் 50 ஓவர்களை விளையாடுவது முக்கியம், அப்படி விளையாடியிருந்தால் 325 - 330 ரன்கள் எடுத்திருக்க முடியும். நான் பேட்டிங் ஆர்டரை மாற்றினேன் அது இன்று வேலை செய்யவில்லை.

யூசுப் பத்தான் 2 அல்லது 3 ஓவர்கள் தாக்குப் பிடித்திருந்தால் அவர் பெரிய இன்னிங்ஸை விளையாடக்கூடியவர்தான்.



ஆஷிஷ் நெஹ்ரா கடைசி ஓவர்களை அதிகம் வீசியுள்ளார். பெரும்பாலும் பவர் பிளேயில் வீசுவார், நேற்று அது பலனளிக்கவில்லை." இவ்வாறு கூறினார் தோனி.முதலில் முழு உடல் தகுதி இல்லாத நெஹ்ரா வை டீம் மில எடுத்தே தப்பு.இதில் வியாக்யானம் வேறு .நெஹ்ரா இப்போது நல்லா பார்மில் இல்லை.அவரிடம் ஆட்டத்தை நிர்ணயிக்கும் ஓவர் ரை கொடுத்தது தப்பு.

நேற்று மடமட வென விக்கெட் கள் சரியும் போது எல்லா batsman அவுட் ஆனா பிறகு டோனி அவர் strike பண்ணாமல் பௌலர் களை ஆடவிட்டார்.styen னுக்கு இது ரொம்ப சுலபமகிட்டது.

ஸ்ட்யீன் ஓடி வருவைதை பாத்தாலே நேஹ்ராவுகும் படேல் லும் பாது அவுட் ஆகி விட்டார்கள்.ஓவர் நிற்க வேண்டும் என்று சொல்லும் டோனி அவர் strike செய்து களத்தில் நின்றிருக்க வேண்டும்.அதை விட்டு மற்றவர்கள் ஆடவில்லை என்று சொல்லகூடாது.

தென் ஆப்ரிக்கா அணி பாஸ்ட் பௌலிங் இல் பெயர் பெற்றது.ஆஸ்திரேலியா வை விட சிறந்து விளங்கும் அணி. மோர்கல் ,ஸ்ட்யீன் போன்ற பௌவ்லேர் களால் பயிற்சி எடுத்த அவர்களுக்கு நெஹ்ரா போன்ற தகுதி இல்லாத பௌவ்லேர் ஒரு பிரச்னை இல்லை. ஹர்பஜன் னை நம்பி இருக்கலாம். அவர்கள் அடிக்கும் போது கேட்ச் ட்ரை செய்திருக்கலாம்.பவர் பிளே இலாத போது அவர்கள் இறங்கி ஆடவும் தூக்கி ஆடவும் பயதிருப்பர்கள்.



முதலில் அவசர பட்டு அங்கு யூசுப் பதான் னை இறக்கியது.சென்ற ஆட்டத்தில் அவரை ஒன் டவன் இறக்கி அவர் சரியாக ஆட வில்லை. எனவே யுவராஜ் ஐ இறக்கி இருக்கவேண்டும்.

மேலும் மத்த அணி களுடன் ஒப்பிடும் போது நமது இந்தியா பில்டிங் கில் மெகா மோசம்.எதோ லீக் ஆட்டம் என்பதால் தெரியவில்லை.ஆனால் இது நாக் அவுட் முறை யில் இந்தியா மெகா மோசமாக தோல்வி அடையும்.உலக தரம் வாய்ந்த பட்டிங் வரிசை என்று சொன்னாலும் அது எப்போது வேண்டுமாலும் சொதப்பும்.



டோனி யின் வியுகம் சரி இல்லை. மற்ற அணி வீரர்களை போல் அவர்களை விக்கெட் எடுக்காமல் சுலபமாக ரன் எடுக்க விடுகிறார்.இதனால் அவர்கள் சுலபமாக நின்று ஆடுகிறார்கள்.அவர்களாக அவுட் ஆனால் தான் ஆச்சு .நாம் விக்கெட் துக்கு முயற்சி செய்வது இல்லை. இது பெரிய தவறு.சாவ்லா விற்கு இவ்வளவு முறை வாய்பளிக்க தேவை இல்லை. அஷ்வின் னை முயற்சிக்கலாம்.
அவருக்கு லீக் இல் வாய்ப்பளிக்காமல் இருப்பது கவலை அளிக்கிறது. நேராக அவரை நாக் அவுட் ஆடவிட்டால் அது ஆபத்தாக கூட அமையும்.அவர் அனுபமிள்ளதவர். டோனி விரைவில் தனது தவறுகளை திருத்த வேண்டும். இல்லை என்றால் மற்றவர்கள் விளையாடுவதை நாம் வேடிக்கை தான் பார்க்க வேண்டும்.

தொடரும் ...


உங்கள் கருத்துக்களை சொல்லவும் .

Saturday, February 19, 2011

Edit View உலகக்கோப்பை 2011: நியூசிலாந்து (World Cup 2011- Team NEWZEALAND)

2011 உலகக் கோப்பையில் நியூசிலாந்து.



இந்த உலகக் கோப்பையில் ஸ்டைரிஸ் உள்ளார் ஆனால் அவ்வளவாக ஃபார்மில் இல்லை. ஓரம் உள்ளார் காயமடைந்த நிலையில் களமிறங்குகிறார். வெட்டோரியின் தலைமையில் தாக்கம் இல்லாமல் போய்விட்டது. மெக்மில்லன் இல்லை, பாண்ட் இல்லை. ஒட்டுமொத்தமாக இது வரை 62 உலகக் கோப்பை போட்டிகளில் 35-இல் வென்று 26-இல் தோல்வி தழுவியுள்ளது நியூஸீலாந்து.

2010/11 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற 27 ஒருநாள் போட்டிகளில் 8-இல் மட்டுமே வென்று 17 போட்டிகளில் தோல்வி தழுவியுள்ளது. இதில் கடைசியாக பாகிஸ்தானுடன் பெற்ற 2 வெற்றிகளும் அடங்கும். வங்கதேசத்தில் தொடரை முழுதும் இழந்தது, இந்தியாவுக்கு எதிராக தொடரை முழுதும் இழந்தது. இந்திய, வங்கதேசம், இலங்கையில் இந்த உலகக் கோப்பை போட்டிகள் நடப்பதை வைத்துப் பார்க்கும்போது இந்தத் தோல்விகள் நியூஸீலாந்து அணிக்கு இந்த உலகக் கோப்பையில் வாய்ப்புகள் ஏறக்குறைய இல்லை என்றே கூற வைக்கிறது.



ஆசியாவில் விளையாடிய 146 ஒரு நாள் போட்டிகளில் நியூசீலாந்து 43-இல் மட்டுமே வெற்றி பெற்று 96 போட்டிகளில் தோல்வி தழுவியுள்ளது. இந்தப்பகுதி ஆட்டக்களங்களில் இந்த அணி தர்ம அடி வாங்கியுள்ளதை இது எடுத்துரைக்கிறது.

டேனியல் வெட்டோரி தலைமையில் இதுவரை 76 போட்டிகளை விளையாடியுள்ள நியூசீலாந்து 37-இல் வென்று 31-இல் தோற்றுள்ளது.



இந்த முறை அந்த அணி இந்திய ஆட்டக்களங்களில் அதிரடி மன்னன் பிரெண்டன் மெக்கல்லம்மை துவக்கத்தில் களமிறக்கினால் ஏதாவது பிரேக் த்ரூ செய்ய வாய்ப்புள்ளது. ஏனெனில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆடிய இவரும், ராஸ் டெய்லரும் அணியின் இப்போதைய பலங்கள். வெட்டோரியின் சுழற்பந்து ஒரு பலம் அவ்வளவே.

உலகக்கோப்பை 2011: வெஸ்ட் இண்டீஸ் (World Cup 2011- Team Westindies)

2011 உலக கோப்பை : வெஸ்ட் இண்டீஸ்.



2000ஆம் ஆண்டு முதல் 2011 தற்போது வரை மேற்கிந்திய அணி 252 போட்டிகளில் 100 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 135போட்டிகளில் தோல்வி தழுவியுள்ளது. 2010/11 ஆம் ஆண்டில் 20 போட்டிகளில் 6-இல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது 12 தோல்விகளைச் சந்தித்துள்ளது.

எனவே புள்ளிவிவரங்கள் அந்த அணிக்குச் சாதகமாக இல்லை. ஆனால் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய அணியின் கிறிஸ் கெய்ல் என்ற ஒருவர் நினைத்தால் எது வேண்டுமானாலும் நடக்கலாம். உலகக் கோப்பை போட்டிகளில் இதுவரை 15 ஆட்டங்களில் 434 ரன்களையே அவர் எடுத்துள்ளார். ஒரு சதம் 2 அரைசதம்தான் எடுத்துள்ளார். ஆனால் 223 ஒருநாள் போட்டிகளில் 19 சதம் 42 அரை சதங்களுடன் 7917 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 39. ஸ்ட்ரைக் ரேட் 83.74. இவரது கூடுதல் பலம் ஜெயசூரியா போல் ஆஃப் ஸ்பின் பந்து வீச்சை சிக்கனமாக வீசுவதோடு முக்கிய விக்கெட்டுகளையும் சில சமயங்களில் வீழ்த்தி விடுவார்.



இவரை விட அனுபவசாலியான சந்தர்பால் அணியில் உள்ளார். ஆனால் அவரது ஃபார்ம் அவ்வளவாக சரியில்லை. சர்வாணின் அனுபவமும் கைகொடுக்கும் ஆனால் இவரெல்லாம் மேட்ச் வின்னர்கள் இல்லை. நடுக்கள வரிசையில் டேரன் பிராவோ என்ற புதிய இடது கை அதிரடி வீரரின் வருகை பலம் சேர்க்கும் ஆனால் உலகக் கோப்பை அழுத்தம் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா அளிக்கும் நெருக்கடி என்று இவரைப்பற்றி எளிதில் ஊகிக்க முடியவில்லை. துவக்கத்தில் அட்ரியன் பரத் நம்பிக்கை அளிக்கிறார்.

புதிய அதிரடி மன்னன் கெய்ரன் போலார்ட் இருபது ஓவர் ஆட்டங்கள் அளவுக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை பெரிதாக அச்சுறுத்தவில்லை. ஆனால் இவர்களையெல்லாம் நம்ப முடியாது. திடீரென ஆட்டம் பிடித்து விட்டால் 10 ஓவர்கள் 100 ரன்கள் எல்லாம் சர்வ சாதாரணமாகிவிடும். டெவன் ஸ்மித் என்றஹிட்டரும், ஆல்ரவுண்டரும் உள்ளார்.



பந்து வீச்சில் கேமர் ரோச், மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் சுலைமான் பென் தவிர மற்ற வீச்சாளர்கள் அதிகம் அறிமுகமில்லாதவர்கள் இந்த இடமும் மிடில் ஆர்டரும் மேற்கிந்திய அணியின் பலவீனங்கள்.

வங்கதேசத்திடமும் தோல்வி தழுவும் வாய்ப்புகளுடன்தான் இந்த அணி களமிறங்குகிறது. எப்படியும் காலிறுதிக்குள் நுழைந்து விட்டாலும் அதில் முதல் போட்டியிலேயே கிறிஸ் கெய்லுக்கு ஆட்டம் பிடித்துக் கொண்டால் இந்த அணி அரையிறுதிக்கு முன்னேறிவிடும். எனவே எதுவும் கூறவியலாது. ஆனால் வங்கதேசம், அயர்லாந்து அணிகளும் இந்த அணிக்கு சவால் ஏற்படுத்தினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

காலிறுதியில் ஏதாவது ஒரு பெரிய அணியை வெளியேற்றி அரையிறுதியில் மோசமாகத் தோல்வியைக்கூட இந்த அணி தழுவலாம். இதனால்தான் இந்த அணியை நாம் குறைத்தும் மதிப்பிட முடியாது, வெற்றி பெறும் என்று உறுதியாகவும் கூறிவிடமுடியாது.



இந்த அணியை பி-பிரிவில் ஒரு எக்ஸ்-ஃபேக்டர் என்று கருத இடமுண்டு. ஆனால் ஏகப்பட்ட எக்ஸ்-ஃபேக்டர்கள் உள்ளது, வங்கதேசமும், அயர்லாந்தும் எக்ஸ்-ஃபாக்டர்கள்தான். மேற்கிந்திய அணியை ஒப்புநோக்கும்போது வங்கதேச அணி சற்றே ஒருங்கிணைப்பு பெற்றுள்ள அணி என்று கூறலாம். எனவே இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு பிற 3 அணிகள் அச்சுறுத்தல் என்றால் மேற்கிந்திய அணிக்கு ஹாலந்து தவிர அனைத்து அணிகளும் அச்சுறுத்தல்தான்.இந்த நிலையில்தான் இந்த அணி களமிறங்குகிறது.

உலகக்கோப்பை 2011:பாகிஸ்தான் (World Cup 2011- Team PAKISTAN)

பாகிஸ்தான் 2011 உலகக் கோப்பை வாய்ப்புகள்:



இந்த முறை எந்த உலக கோப்பையைக் காட்டிலும் கணிக்க முடியாத அணி என்ற நிலவரத்தில் உச்சத்தை எட்டியுள்ளது பாகிஸ்தான்.ஏனெனில் நினைத்துப்பார்க்க முடியாத இடத்திலிருந்து வெற்றி பெறுவதும் அதேபோல் தோல்வியே இனி சாத்தியமில்லை என்ற நிலையிலிருந்து தோல்வி தழுவுவதும் பாகிஸ்தான் அணிக்கு சகஜமாகிவிட்டது என்பதாலேயே கணிப்பு கடினமாகி விடுகிறது.

ஹஃபீஸ் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஷேஜாத் ஒரு புதுமுகம், யூனிஸ் கான் மட்டுமே அனுபவ வீரர். உமர் அக்மல் ஒரு கறுப்புக் குதிரை அவர் மட்டும் மனது வைத்தால் தனி ஆளாகவே வெற்றி பெற வைக்க முடியும். ஆனால் சமீபமாக அவரது ஆட்டம் திறமைக்கேற்ப இல்லை.



அஃப்ரீடி ஆட்டம் சூடு பிடித்தால் எந்த ஒரு பந்துவீச்சும் அன்று சுண்ணாம்புதான். அதே போல் அப்துல் ரசாக். இவர் போட்டியை எந்த சரிவிலிருந்தும் வெற்றியாக மற்றக்கூடிய திறமை படைத்த அதிரடிப் புலி. இவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சமீபமாக துபாயில் அடித்த அதிரடி 10 சிக்சர்கள் கொண்ட சதம் ஸ்மித்தின் துர்கனவாக இன்றும் இருக்கும் என்று நம்பலாம்.அனைத்தையும் மீறி இந்த வீரர்கள் ஒருநாளில் படு மோசமாக சோடை போகலாம், மறு நாளில் பயங்கரமாக எழுச்சியுறலாம். ஒருவரும் கணிக்க முடியாது.

எழுச்சியுறும் ஆட்டம் காலிறுதியாக இருந்தால் அன்று வெளியேறும் அணி துரதிர்ஷ்டம் வாய்க்கபெற்றது என்று கூறுவது தவிர வேறு வழியில்லை.

நியூஸீலாந்தை இந்த அணி வீழ்த்த வாய்ப்புகள் அதிகம் ஆனால் ஆஸ்ட்ரேலியா, இலங்கையுடன் போராட வேண்டி வரும். இவர்கள் பிரிவில் ஜிம்பாப்வே வேறு உள்ளது. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.



இவையெல்லாவற்றையும் மீறி, பி.சி.சி.ஐ. பாகிஸ்தான் கிரிக்கெட்டை மறைமுகமாக அழிக்கச் செய்து வரும் சூழ்ச்சிகளும், ஐ.சி.சி. அதற்கு துணை போவதும் நடைபெற்று வரும் சூழ்நிலையில் இந்த பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தாலே அது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முகத்தில் கரியை பூசுவதாக அமையும்.

சூதாட்டம் மற்றும் சூழ்ச்சிகளுக்கு எதிராக பதிலடி கொடுக்குமா பாகிஸ்தான் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். எந்த அணியை விடவும் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாட வேன்டிய கடும் தேவையும் நெருக்கடியும் உள்ள அணி பாகிஸ்தான் என்றால் அது மிகையாகாது.

உலகக்கோப்பை 2011: இங்கிலாந்து (World Cup 2011- Team ENGLAND)


உலகக்கோப்பை 2011 அணி நிலை :



1971ஆம் ஆண்டு முதல் 2011 தற்போது வரை 548 ஒரு நாள் போட்டிகளில் 264இல் வெற்றி பெற்று 261-இல் தோல்வி தழுவியுள்ளது.இதன் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் எடுத்துப் பார்த்தால் இந்தியாவுடன் 70 போட்டிகளில் 30-இல் மட்டுமே வென்றுள்ளது 38 போட்டிகளில் தோல்வி தழுவியுள்ளது. தென் ஆப்பிரிக்காவுடன் 44 போட்டிகளில் 23-இல் தோல்வி தழுவி 18-இல் வென்றுள்ளது. வெஸ்ட் இண்டீசுடன் 82 போட்டிகளில் 37-இல் வென்று 41-இல் தோல்வி தழுவியுள்ளது. எனவே பி-பிரிவில் உள்ள முக்கிய அணிகளுக்கு எதிராக தோல்விகளே அதிகம் பெற்றுள்ளது இங்கிலாந்து.

இந்தியாவில் விளையாடிய 45 போட்டிகளில் 19-இல் வென்று 26-இல் தோல்வி தழுவியுள்ளது. இலங்கையில் விளையாடிய 15 போட்டிகளில் 5-இல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக 68 போட்டிகளில் 38-இல் வென்று 28-இல் தோல்வி தழுவியுள்ளது. பாகிஸ்தானில் விளையாடிய 25 போட்டிகளில் 13இல் வென்று 12-இல் தோற்றுள்ளது.



எனவே புள்ளிவிவரங்கள் இங்கிலாந்துக்கு சாதகமாக இல்லை. எனினும்...

ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் 2006ஆம் ஆண்டு முதல் (இடையில் இல்லாமல்) 2011ஆம் ஆண்டு வரை 54 போட்டிகளில் தலைமை வகித்ததில் 24இல் வெற்றி பெற்று 29-இல் தோல்வி தழுவியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் நாசர் ஹுசைன், மைக்கேல் வான் ஆகியோர்களே இங்கிலாந்தை அதிக போட்டிகளில் வெற்றிக்கு இட்டுச் சென்றுள்ளனர்.

இந்த அணியின் வித்தியாசம் என்னவெனில் ஸ்ட்ராஸின் தலைமையில் ஒரு அணியாகத் திரண்டு எழுந்து ஆஸ்ட்ரேலியாவை ஒரு-நாள் தொடர் ஒன்றில் வீழ்த்தியதோடு, பாகிஸ்தானையும் வீழ்த்தியது. தற்போது ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான தோல்விகளை விட்டு விடுவோம். ஏனெனில் இந்தியாவின் ஆட்டக்களங்கள் வேறு, ஆஸ்ட்ரேலியாவின் ஆட்டக்களங்கள் வேறு.இந்த முறை ஸ்ட்ராஸுக்குத் தக்க துவக்க வீரரை தேர்வு செய்யாமல் போனது இங்கிலாந்தின் பெரிய தவறாகும். விக்கெட் கீப்பர் பிரையரை துவக்கத்தில் களமிறக்குவது சரியல்ல.



மற்றபடி ஜொனாதன் டிராட்டின் சமீபத்திய ஃபார்ம், கெவின் பீட்டர்சனின் மிகப்பெரிய வரம்பு மீறிய ஆட்டம், ஸ்ட்ராஸின் அதிரடித் துவக்கம், இயன் பெல், காலிங்வுட் ஆகியோரது பேட்டிங், இயான் மோர்கன் என்ற நடுக்கள அதிரடி வீரர் என்று இங்கிலாந்து பேட்டிங் பலமகாவே உள்ளது. ஆல்ரவுண்டர் இடத்திற்கு டிம் பிரெஸ்னன், ஸ்டூவர்ட் பிராட் உள்ளனர்.

பந்து வீச்சில் கிரேம் ஸ்வானின் ஆஃப் ஸ்பின் இந்த முறை இந்திய ஆட்டக்களங்களில் பெரிய அளவுக்கு இங்கிலாந்துக்குக் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். இவர் தவிர ஜேம்ஸ் ஆண்டர்சன் சோபிப்பது கடினம். டிம் பிரெஸ்னன், ஸ்டூவர்ட் பிராட், யார்டியின் இடது கை சுழற்பந்து லுக் ரைட்டின் ஆல்-ரவுண்ட் திறமை ஆகியவற்றினால் ஒரு சிறந்த அணியாக இங்கிலாந்து விளங்குகிறது.

ஸ்ட்ராஸ், இயன் பெல் துவக்கத்தில் களமிறங்க, டிராட், பீட்டர்சன், இயான் மோர்கன், காலிங்வுட், பிரெஸ்னன், பிராட், ஸ்வான், யார்டி, என்ற அணியைக் களமிறக்கினால் பலம் நிறைந்த அணியாக இங்கிலாந்து இருக்கும். யார் விக்கெட் கீப்பர் என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? டிராட் விக்கெட் கீப்பிங் செய்வார். இல்லையென்றால் மேட் பிரையரை அணியில் சேர்த்தால் ஜேம்ஸ் ஆண்டர்சனை அணியிலிருந்து நீக்கி விட வேண்டும். பேட்டிங் வரிசையை தொந்தரவு செய்யக் கூடாது.

இந்திய ஆட்டக்களங்களில் 2 ஸ்பின்னர்கள் நிச்சயம் கைகொடுக்கும். பிராட், பிரெஸ்னன் ஆகியோர் வேகப்பந்திற்கு உள்ளனர். இதில் யாராவது சோடை போகும்போது பீட்டர்சனையும், காலிங்வுட்டையும் பந்து வீச அழைத்து ஒரு மாற்றைக் காண்பிக்கலாம்.



ஆனால் இந்தப் பிரிவில் இங்கிலாந்து அணிக்கு இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஏன் மேற்கிந்திய அணியே சவாலாக இருக்கும். காலிறுதியில் இலங்கையை எதிர்கொண்டால் கடினம். ஆஸ்ட்ரேலியா, அல்லது பாகிஸ்தான் என்றால் இங்கிலாந்துக்கு சற்றே வாய்ப்புகள் கூடும். ஏனெனில் ஆஸ்ட்ரேலியாவுடன் அதிகம் விளையாடியுள்ளதால் இந்திய தட்பவெப்பத்தில் கிரேம் ஸ்வானை வைத்து வென்று விடலாம்.

எனவே காலிறுதி முட்டுக் கட்டையைக் கடந்து விடும் திறமையான அணிதான் இங்கிலாந்து, அப்படி காலிறுதியில் வெற்றி பெற்று விடும் எனில் ஏன் இங்கிலாந்து முதன் முறையாக உலகக் கோப்பையை வெல்ல முடியாது? பொறுத்திருந்து பார்ப்போம்.

உலகக்கோப்பை 2011:இந்தியா (World Cup team INDIA)

2011 உலகக் கோப்பையில் இந்தியா:




இந்த முறை தோனி தனது அணிச்சேர்க்கையை கவனமாகக் கையாள்வதில் உள்ளது வெற்றி தோல்விகள். சச்சின், சேவாக், கம்பீர், யுவ்ராஜ், தோனி, யூசுப் பத்தான், ரெய்னா,ஹர்பஜன், ஜாகீர், ஸ்ரீசாந்த் முனாஃப் படேல் என்று இருந்தால் பலமாக இருக்கும். யுவ்ராஜ் சிங் ஒரு போட்டியில் சொதப்பினாலும் உடனே தூக்கி விட்டு விராட் கோலியை அணியில் சேர்க்கவேண்டும். எந்த முடிவெடுத்தாலும் தைரியமாக விரைவாக தோனி
எடுக்கவேண்டும்.

ரெய்னா சரியாக விளையாடா‌விட்டாலும் இவர் இந்த முடிவை எடுக்கவேண்டும்.முதலிலிருந்து அனைத்துப் போட்டிகளையும் வெல்லும் தயாரிப்புடனும், மனோதிடத்துடனும் களமிறங்கவேண்டும், முதல் சுற்றில் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றால்தான் காலிறுதியில் உடனடியாக தோற்று வெளியேறும் நிலை ஏற்படாது.
எதிரணியினருக்கு கிலி பிடித்துக் கொள்ளும்.



நெஹ்ராவை அணியில் எடுப்பதை ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்யவேண்டும் ஏனெனில் நெருக்கமான அதிக ஸ்கோர் போட்டிகளில் இவர் நமக்கு தோல்வியைப் பெற்றுதந்து விடுவார் என்ற ரீதியில்தான் உள்ளது இவரது பந்து வீச்சு.தோனியைப் பொறுத்தவரை உள்ள மிகப்பெரியக் குற்றச்சாட்டு என்னவெனில் நடு ஓவர்களில் எதிரணி பேட்ஸ்மென்கள் செட்டில் ஆகும்போது அவர்களை வீழ்த்த எந்த வித முயற்சியும் மேற்கொள்ளாமல் மரத்தை வைத்தவன் தண்ணி ஊற்றுவான் என்பது போல் இருக்கிறார்.அந்தப் போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும். யுவ்ராஜ் சிங், உள்ளிட்ட பகுதி நேர பந்து வீச்சாளர்களை அதிகம் பயன்படுத்த முனையக்கூடாது. ஜாகீர், ஸ்ரீசாந்த், முனாஃப், ஹர்பஜன் என்று பந்து வீச்சு வரிசை இருந்தால், இன்னும் ஓரிரு பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தலாம் அதுவும் அனுபவமான சேவாக், போன்றவர்களுக்கு 5 ஓவர்களையோ, புது வீரரான விக்கெட் எடுக்கும் யூசுப் பத்தானுக்கோ கொடுக்கலாம்.

காரணமில்லாமல் யுவ்ராஜ், யூசுப், ரெய்னா, சேவாக், சச்சின் என்று அனைவரையும் பயன்படுத்தி ரன்களை வாரி வழங்கும் நிலைக்குச் செல்லக்கூடாது. எதிரணியினர், அது எந்த அணியாக இருந்தாலும் 300 ரன்களை எட்டிவிடாமல் கட்டுப்படுத்துவது அவசியமாகும் ஏனெனில் எல்லாப்போட்டிகளிலும் 300 ரன்களை நாம் வெற்றிகர்மாகத் துரத்துவது இயலாது.டாஸ் வென்றால் 300 ரன்களுக்கும் மேல் குவிப்பதுதான் பாதுகாப்பானது. இந்த பலமான பேட்டிங் வரிசையில் சேவாக், சச்சின் துவக்கம் அபாரமாக அமைந்தால் 350 ரன்களும் சாத்தியம்தான்.



யூசுப் பத்தானைக் கண்டு எதிரணியினருக்கு ஒரு புதிய நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தோனி சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இந்த பேட்டிங் வரிசையில் சேவாக், சச்சின், யுவ்ராஜ், ரெய்னா, தோனி, யூசுப் ஆகியோரது அதிரடியைக் கண்டு நிச்சயம் மற்ற அணிகள் அஞ்சித்தான் ஆகவேண்டும். வேறு வழியில்லை. எதிரணியினர்தான்
நெருக்கடியில் உள்ளனர். இதனை நன்றாக நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். வங்கதேசம், அயர்லாந்து, ஹாலந்து என்று பலவீனமான அணியாக இருந்தாலும் முழு பலம் கொண்ட அணியையஏ களமிறக்கவேண்டும். அதில் தவறுகள் செய்ய வாய்ப்பேயில்லை.

உலகக் கோப்பை போட்டிகள், தோல்வியடைய முடியாது என்ற பயத்தில் பரிசோதனை முயற்சிகளைக் கைவிட்டு விடக்கூடாது. நெருக்கடி தருணங்களில் வழக்கத்திற்கு மாறான உத்திகளைக் கையாள்வதில் தோனி தயக்கம் காட்டக்கூடாது. பேட்டிங்கில் தோனி தனது பழைய அதிரடி முறையைக் கையாள்வது உசிதம், கிரெக் சாப்பலின் ஒரேயொரு உத்தி அருமையான ஒன்றாகும், துவக்கவ் வீரர்களுக்கு அடுத்த
டவுனில் யார் இறங்குவார்கள் என்பதை மற்றி கொண்டேயிருந்தால் நிச்சயம். எதிரணியினரின் திட்டங்களை அது பாழாக்கும்.

இந்த உலகக் கோப்பையில் யு.டி.ஆர்.எஸ். முறை உண்டு. எனவே
எல்.பி.டபிள்யூ.முடிவுகளும் 3-வது நடுவரிடம் முறையீடு செய்ய வாய்ப்புள்ளதால் இந்திய பேட்ஸ்மென்கள் எச்சரிக்கையுடன் விளையாடுவது நல்லது. பேட்டிங் பவர் பிளேயை எப்போது எடுப்பது என்பதிலும், எதிரணியினரின் பேட்டிங் பவர் பிளேயின் போது எந்த பந்து வீச்சாளர்களை வீச அழைக்கவேண்டும் என்பதிலும் தீவிரத் தயாரிப்புகளும் முன் கூட்டிய திட்டமிடுதலும் மிக முக்கியமானது.



இந்த பேட்டிங் பவர் பிளே என்ற புதிய முறை இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பெரிய திருப்பங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம். இதுவரை தோனி இந்த பவர் பிளே விஷயங்களில் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார்.சச்சின் டெண்டுல்கர் நிச்சயம் இந்த உலகக் கோப்பையை வெல்வதில் அதிக முனைப்பு காட்டுவார் இந்த அழுத்தம் அவரது பேட்டிங்கில் தாக்கம் செலுத்தாமல் அவர்தான் காத்துக் கொள்ளவேண்டும்.

சேவாகின் அதிரடித் துவக்கம், ரெய்னா, தோனி, யூசுப்பின் இறுதி வேட்டு, ஜாகீர் கான், ஹர்பஜன் ஆகியோரது பந்து வீச்சு, தோனியின் தலைமை உத்திகள், மைதானத்தில் எடுக்கும் உடனடி புத்திசாலி முடிவுகள், சச்சின் டெண்டுல்கரின் பலம் இவையெல்லாம் இந்திய அணிக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்புகளை இந்த உலகக் கோப்பையில் வழங்கியுள்ளது.

இருப்பினும் காலிறுதியிலிருந்து நாக்-அவுட் முறை என்பதால் காலிறுதியிலிருந்து ஒவ்வொரு போட்டியும் தங்களது போக்கையும், நிறத்தையும் எடுத்துக் கொள்ள்ம் என்பதால் எதையும் கணிப்பது கடினம்.

அரையிறுதி வரை இந்தியா வந்து விட்டால் கோப்பையை வெல்ல வாய்ப்பிருப்பதாகவே நாம் கருதலாம்.கனவு நனவாகுமா? பிப்ரவரி 19ஆம் தேதி முதல் நாம் கனவு காணத்தொடங்குவோம். முடிவு எப்படியிருந்தாலும் ரசிகர்கள் அதனை கிரிக்கெட் ஆட்டத்தின்அடிப்படையில் புரிந்த கொண்டு வினையாற்றுவதே இந்திய கிரிக்கெட்டிற்குச்சிறந்தது.

உலகக்கோப்பை 2011:ஆஸ்திரேலியா (World Cup 2011- Team Australia)



இதோ இன்றோடு உலகக்கோப்பை காய்ச்சல் ஆரம்பிகிறது.எனவே அதற்குமுன் நான் ஒவ்வொரு அணி பலம் ,பலவீனம் பற்றி இங்கு காண்போம்.

ஆஸ்திரேலியா :

கடந்த 3 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் வென்று ஹேட்ரிக் சாம்பியன்களான ஆஸ்ட்ரேலியா இந்த முறை அதே பலத்துடன் களமிறங்குகிறது என்று கூற இயலாது.2007ஆம் ஆண்டு உலகக் கோப்பை அணியில் இருந்த வீரர்களில் தற்போது ரிக்கி பாண்டிங், ஷேன் வாட்சன், கிளார்க், மைக் ஹஸ்ஸி, பிரெட் லீ, ஷான் டெய்ட் ஆகியோர்கள் அணியில் உள்ளனர்.சமீப காலங்களாக ஆஸ்ட்ரேலிய அணி தனது பழைய ஆக்ரோஷத்தையும், வெற்றியத் தவிர வேறு சிந்தனையில்லை என்ற அணுகுமுறையையும் இழந்து வருகிறது.2003, 2007ஆம் ஆண்டுகளில் தோல்வியே தழுவாமல் 11 போட்டிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது ஆஸ்ட்ரேலியா. இந்த முறை அது போன்று முழு ஆதிக்கம் சாத்தியமில்லை என்றாலும், அந்த அணியில் ஒரு சில தனிநபர்கள் அணியை வெற்றிக்கு இட்டுச் செல்வதில் திறமை கொண்டவர்கள்.



குறிப்பாக பந்து வீச்சில் பிரெட் லீ, ஷான் டெய்ட், ஜான்சன், போலிஞ்சர் ஆகியோர் வேகத்துறையிலும் நேதன் ஹாரிட்ஸ் ஸ்பின் துறையிலும் நிபுணத்துவம் பெற்றவர்கள்.ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஷேன் வாட்சன், டேவிட் ஹஸ்சி, ஓரளவுக்கு கேமரூன் ஒயிட் ஆகியோர் உள்ளனர். ஸ்டீவன் ஸ்மித் என்ற புதுமுகம் அதிரடி பேட்டிங் திறமை உள்ளவர், ஓரளவுக்கு சுமாரான லெக்-ஸ்பின்னும் வீசக்கூடியவர்.பாண்டிங்கை வீழ்த்தினால் எதிரணிக்கு வெற்றி உறுதி என்ற நிலையில் தற்போது ஷேன் வாட்சனையும் வீழ்த்த வேண்டும் என்ற கூடுதல் பலம் இந்த அணிக்கு உருவாகியுள்ளது.மைக்கேல் கிளார்க் ஃபார்ம் பற்றி உறுதியாக ஒன்றும் கூற முடியவில்லை. டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்ட்ரேலியா சரிந்து வரும் அதே வேளையில் ஒரு நாள் போட்டிகளில் சரிவு அவ்வளவு உறுதியாக நடைபெறவில்லை.ஆனால் சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக அடைந்த தோல்வி மேலும் இலங்கைக்கு எதிராக தங்கள் உள்நாட்டில் அடைந்த தொடர் தோல்வி ஆகியவை தவிர அந்த அணிக்கு பெரிய சரிவு ஒன்றும் ஏற்பட்டுவிடவில்லை.இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் தொடரிலும் கூட முதல் 3 போட்டிகளில் எளிதாகவே வென்றது ஆஸ்ட்ரேலியா. இதிலும் வாட்சன், மைக் ஹஸ்ஸி ஃபார்ம் முக்கியப் பங்கு வகித்துள்ளது.



உலகக் கோப்பை போட்டிகளில் மட்டும் ஆஸ்ட்ரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் 39 ஆட்டங்களில் 48 என்ற சராசரியுடன் 1,537 ரன்கள் எடுத்துள்ளார். இவர் உலகக் கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடக் கூடியவர் என்பது தெரிகிறது. எனவே ஆஸ்ட்ரேலிய வெற்றியில் இவரது ஆட்டம் முக்கியப் பங்கு வகிக்கும். ஆனால் இவரும் சமீப காலங்களில் பேட்டிங்கில் சொதப்பி வருவது ஆஸ்ட்ரேலியாவுக்கு கவலை தரும் ஒரு அம்சமாகும்.ரிக்கி பாண்டிங்கிடம் இன்னொரு சாதகமான அம்சம் அவரது ஃபீல்டிங், அது இன்னமும் கூர்மையாகவே உள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக ஒரு போட்டியில் சமீபத்தில் 3 ரன் அவுட்களை செய்து போட்டியை வெற்றிபெறச்செய்தார்.உலகக் கோப்பை போட்டிகளில் 39 ஆட்டங்களில் பாண்டிங் 25 கேட்ச்களை பிடித்து அதிக கேட்ச்கள் பிடித்த வீரர்கள் வரிசையில் முதலிடம் வகிக்கிறார்.அதே போல் ஷேன் வாட்சன் 2007 உலகக் கோப்பைக்குப் பிறகு ஒரு சிறந்த ஆல்-ரவுண்டராக உருவாகியுள்ளதையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். 2007ற்குப் பிறகு 1000 ரன்கள் 50 விக்கெட்டுகள் என்ற இரட்டையை சாதித்துள்ளார் ஷேன் வாட்சன்.குறிப்பாக இந்திய, இலங்கை ஆட்டக்களங்களுக்குத் தேவையான ஒரு திறமையையும் ஷேன் வாட்சன் பெற்றுள்ளார். அதாவது மே 1, 2007ஆம் ஆண்டுக்குப் பிறகு ஷேன் வாட்சன் ஆஸ்ட்ரேலியா இலக்கைத் துரத்தும்போது 22 போட்டிகளில் 1,119 ரன்களை 62.16 என்ற சராசரியுடன் வைத்துளார். இவருக்கு அடுத்தபடியாக விரட் கோலி உள்ளார்.எனவே வாட்சன், பாண்டிங், மைக் ஹஸ்ஸி, ஓரளவுக்கு பிராட் ஹேடின், பின்னால் அதிரடிக்கு கேமரூன் ஒயிட், டேவிட் ஹஸ்ஸி என்று ஆஸ்ட்ரேலியாவின் பேட்டிங்கையும் குறை கூறுவதற்கில்லை.குறிப்பாக இந்தியா, இலங்கை, வங்கதேசம் போன்ற பேட்டிங் ஆதரவு களங்களில் ஆஸ்ட்ரேலியாவின் வெற்றி வாய்ப்பை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.மேலும் பிரெட் லீ, ஷான் டெய்ட் இருவருமே 150 கிமீ வேகத்தில் பந்து வீசக்கூடியவர்கள். இவர்கள் பந்துகளை பவர் பிளேயிலோ அல்லது முடிவு ஓவர்களிலோ அடிப்பது கடினம் என்பதை விட துவக்கத்தில் இவர்களது பந்துவீச்சு வேகம் சில எதிரணி விக்கெட்டுகளைச் சாய்த்தால் ஆஸ்ட்ரேலிய வெற்றி உறுதியாகிவிடும். எனவே இந்த உலகக் கோப்பை போட்டிகளில் பிரெட் லீ, ஷான் டெய்ட் இணையை நாம் கூர்ந்து கவனிக்கவேண்டும்.ஆஸ்ட்ரேலிய அணியின் பிரிவில் பாகிஸ்தான், நியூஸீலாந்து, இலங்கை ஆகிய அணிகளே சரியான சவாலகத் திகழ வாய்ப்புள்ளது. இதில் இலங்கை மட்டுமே ஆஸ்ட்ரேலியாவுக்கு அச்சுறுத்தல். பாகிஸ்தான் பற்றி ஒன்றும் கூறுவதற்கில்லை. அந்த அணி எதையும் ஊகிக்க முடியாத ஒரு அணியாகும். நியூஸீலாந்து உலகக்கோப்பை போட்டிகளில் இதுவரை சிறப்பாக செயல்பட்டிருந்தாலும்ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக அந்த அணி ஒன்றும் செய்ய முடியாமல் போனபோட்டிகளே அதிகம். எனவே நியூஸீலாந்து ஆஸ்ட்ரேலியாவுக்கு பெரியஅச்சுறுத்தல் இல்லை என்றே கூறலாம்.எனவே இந்தப் பிரிவில் ஆஸ்ட்ரேலியா முதலிடம் பிடித்தால் காலிறுதியில் பி-பிரிவில் கடைசியாக வரும் அணியுடந்தான் மோத வேண்டி வரும்.



அது வெஸ்ட் இண்டீஸாகவோ, இங்கிலாந்தாகவோ, தென் ஆப்பிரிக்காவாகவோ ஏன் இந்தியாவாகவோ இருக்கலாம்.அந்த நிலையில் ஆஸ்ட்ரேலியாவுக்கு இந்தியா மட்டுமே அச்சுறுத்தலாக இருக்க முடியும். தென் ஆப்பிரிக்கா எப்போதும் சவாலான போட்டிகளில் ஆஸ்ட்ரேலியாவிடம் தோல்வி தழுவி வெளியேறியதை நாம் கண்டிருக்கிறோம்.காலிறுதியில் ஆஸ்ட்ரேலியா வெற்றி பெற்றுவிட்டால், கோப்பையை வெல்ல நிச்சயம் அது கடுமையாக போராடும். மேலும் இதில் வெற்றி பெற்றால் 4-வது உலகக் கோப்பை வெற்றியாகும். எனவே இந்தக் கனவை தனது இளம் அணியுடன் நிறைவேற்றி பாண்டிங் தனது ஆஷஸ் தோல்விக்கு ஒரு பதிலீடாக வைப்பார் என்று எதிர்பார்க்கலாம்.எப்படியும் இந்த அணி மோசமாக தோற்று வெளியேற வாய்ப்பில்லை என்று இப்போதைக்குக் கூற முடியும்.