Showing posts with label india team. Show all posts
Showing posts with label india team. Show all posts

Thursday, June 6, 2013

இந்திய அணியின் வாய்ப்பு: சாம்பியன்ஸ் டிராபி



இந்திய அணியின் வாய்ப்பு: சாம்பியன்ஸ் டிராபி

ஒரு  வழியாக IPL கிரிக்கெட் முடித்து இன்று இந்திய அணி சாம்பியன் கோப்பையில் ஆடுகிறது.அது பற்றி ஒரு அலசல்.



ஐபிஎல். சூதாட்ட விவகாரம், தோனியின் வணிக நலன்கள் குறித்த சர்ச்சை, ஸ்ரீனிவாசன் விவகாரம் என்று சர்ச்சைச் சுழலில் சிக்கித் தவிக்கும் இந்திய அணிக்கு சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் சற்றே கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

2011 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி இல்லை இது. ஆனாலும் மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் இந்தத் தொடரில் இந்தியா தன் புதுமுகங்களுடன் நிரூபிக்க வேண்டியுள்ளது. 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை அணிக்கான பரிசோதனை அணியே இது. ரெய்னா, ரோகித் சர்மா, விஜய், தவான், கார்த்திக் ஆகியோருக்கு இந்திய அணியில் நிரந்தர இடம்பெற அருமையான வாய்ப்பு.

நாளை பலமான தென் ஆப்பிரிக்க அணியை இந்தியா எதிர்கொள்கிறது. பயிற்சி ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக 330 ரன்களுக்கும் மேற்பட்ட இலக்கை கோலியும், தினேஷ் கார்த்திக்கும் ஒன்றுமில்லாமல் செய்தனர். அந்த போட்டியில் இந்திய பந்து வீச்சு மிகவும் பலவீனமகா இருந்தது.


ஆனால் நேற்று ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் உமேஷ் யாதவ் அதிவேகத்தில் வீச, இஷாந்தும் விக்கெட்டுகளைக் கைப்பற்ற இந்திய பந்து வீச்சு மீது புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.

இந்திய டாப் ஆர்டர் பேட்டிங்கில் அனுபவமின்மை சற்றே உள்ளது. ஷிகர் தவானை பொறுத்திருந்து பார்க்கவேண்டும். முரளி விஜய் எப்படி ஆடுவார் என்பதற்கான ஆதாரங்கள் இதுவரை இல்லை. ஆனால் தினேஷ் கார்த்திக், கோலி அபாரமாக ஆடி வருகின்றனர்.

மற்றபடி ரெய்னா தனது ஷாட் பிட்ச் பந்து குறித்த பயத்தை விட்டொழிக்கவேண்டும். நேற்றும் அவர் ஷாட் பிட்ச் பந்தை எதிர்பார்த்து சாதாரண நேர் பந்தில் பவுல்டு ஆனார். ரோகித் சர்மாவுக்கு எந்த பந்தை ஆடாமல் விடுவது என்பதில் சிக்கல் உள்ளது.

இந்த சாம்பையன்ஸ் டிராபியில் இந்தியா சவாலான தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடன் சேர்க்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா அன்று பாகிஸ்தானுக்கு எதிராக படு மோசமாக மண்ணைக் கவ்வியது.

 

பாகிஸ்தானின் பந்து வீச்சு புதிய பைர்மாணத்தில் அபாரமாக விளங்குகிறது.

இப்போதைய இங்கிலாந்து நிலைமைகள் ஸ்விங்கிற்கு பெருமளவு ஆதரவாக இருக்காது. ஏற்கனவே பிட்ச்கள் ரன்களை வழங்கும் பிட்சாக இருப்பதையே கண்டிருக்கிறோம். முதலில் பேட் செய்யும் அணி முதல் 20 ஓவர்களை ஜாக்கிரதையாக ஆட வேண்டியுள்ளது. துரத்தல் சுலபமாக உள்ளதை பயிற்சி ஆட்டங்களில் கண்டு வருகிறோம்.

எனவே டாஸ் ஒரு முக்கிய திருப்பமாக அமையும். சரியான அணிச் சேர்க்கைதான் தோனியின் கவலை. குறிப்பாக இர்பான் பத்தானை சேர்ப்பதா அல்லது ரவீந்திர ஜடேஜாவா என்பது பெரிய குழப்பம்தான்.

பந்து வீச்சில் எப்படியும் புவனேஷ், உமேக் யாதவ் இடம்பெற்றேயாகவேண்டும். இஷாந்தையும் ஒதுக்கி விட முடியாது. அஷ்வினுக்கு இங்கிலாந்து பிட்ச்களில் சுழல் வாய்ப்புகள் குறைவே. அவர் தனது பரிசோதனைப் பந்துகளை வீசி அது எடுபடாமல் போனால் அடி வாங்குவார்.

எனவே ஜடேஜாவை அஷ்வினுக்குப் பதிலாக அணியில் வைத்துக் கொண்டு இர்பானை அணியில் எடுப்பது நல்லது.

ஷிகார் தவான், ரோகித் சர்மா துவக்க, கோலி, கார்த்திக், ரெய்னா, தோனி, இர்பான் பத்தான், ரவீந்தர் ஜடேஜா, உமேஷ் யாதவ், புவனேஷ் குமார், அஷ்வின் அல்லது இஷாந்த் என்று அணிச் சேர்க்கை இருப்பது சிறந்தது.

சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியா 2000ஆம் ஆண்டு கென்யாவில் இறுதிவரை வந்து நியூசீ.யிடம் தோல்வி தழுவியது. பிறகு இலங்கையில் 2002ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை இலங்கையுடன் பகிர்ந்து கொண்டது. அதன் பிறகு இந்தியாவின் சாம்பியன்ஸ் டிராபி ஆட்டங்கள் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.


சேவாக், கம்பீர், சச்சின், ஜாகீர் கான், யுவ்ராஜ் என்று எந்தத் தலைகளும் இல்லாத புதிய அணி இந்திய அணி. தோனியின் திறமையை நம்பி களமிறங்குகிறது.

டேல் ஸ்டெய்ன் நாளை ஆடுவது சந்தேகமாகியுள்ளது. இந்தியாவுக்கு இது ஒரு பெரிய ரிலீஃப்.

மற்ற அணிகளில் பாகிஸ்தான், நியூசீலாந்து பலமாக உள்ளது.

எப்படியும் அரையிறுதி வரை இந்தியா நுழைய வாய்ப்பிருப்பதாகவே படுகிறது.

கோப்பையை வெல்ல இந்திய அணியை ஆதரிப்போம். பெஸ்ட் ஆஃப் லக் இந்தியா! 

Tuesday, January 31, 2012

‌கி‌ரி‌க்கெ‌ட்: மூத்த வீரர்கள் என்ன செய்ய போகிறார்கள்.?

கி‌ரி‌க்கெ‌ட்: மூத்த வீரர்கள் என்ன செய்ய போகிறார்கள்.?



ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக, பேப்பரில் பலம் வாய்ந்த இந்திய அணி பாதாளத் தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில் மூத்த வீரர்களான சச்சின், டிராவிட், லஷ்மண் போன்றோர் தங்களது ஆட்டத்தின் மீது உண்மையான சந்தேகம் கொண்டு விலகிக் கொண்டு இளைஞர்களுக்கு வழிவிடுவதை பரிசீலிக்கவேண்டும்.இவர்களைக் கொண்டு 8 டெஸ்ட் போட்டிகளைத் தொடர்ச்சியாக அயல்நாட்டு மண்ணில் மண்ணைக் கவ்வியது இந்திய அணி. இவர்கள் இல்லாமல் இன்னும் ஓரிரு தொடர்களை இழக்கட்டும்! பரவாயில்லை. குறைந்தது இந்த அளவுக்கு தேறும் இளம் வீரர்கள் யார் என்பதையாவது நாம் பார்த்து விடலாம்.

சீரியசாக சில விஷயங்களை யோசிப்பதை விடுத்து வீரர்கள் தங்கள் பழம்பெருமைகளைப் பேசி வருவதும், நாங்களும் இங்கே 2- 0 என்று ஜெயித்தோம் என்று பிதற்றி வருவதும் முன்னேற்றத்திற்கு வழி வகை செய்யாது.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் 'ஒன்றுமே நடந்து விடவில்லை" இதே வீரர்கள்தான் நம்மை பெருமைக்கு இட்டுச்சென்றனர் என்றெல்லாம் கொம்பு சீவி விடுவதும் உறுதியாக இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டை படுகுழியில் தள்ளும் முயற்சி.




சச்சின் 100, 100 என்று கனவு கண்டு இரண்டு மூன்று தொடர்களாக இந்திய அணியைச் சரியச் செய்துள்ளார். சேவாக் உடல் சமநிலை இல்லை. ஷாட் ஆடுவதற்கு முன்பும், பின்பும் அவரது பேலன்ஸ் சரியில்லை. ஹூக் , புல் ஷாட்களை ஆடாமல் நீண்ட நாட்களுக்கு ஓட்ட முடியாது, எனவே அவர் பின்னால் களமிறங்கவேண்டும், லஷ்மன் கிரீஸில் நின்ற படியே குப்பை கொட்டுகிறார். கம்பீரை அழைத்து ஒழுங்காக ஷாட் பிட்ச் பந்துகளை விளையாடும் வரை அணியில் இடமில்லை என்று கூறிவிடவேண்டும். தோனியை அழைத்து ஓய்வு பெற்ற மூத்த கேப்டன்கள் அவரது தவறுகளைச் சுட்டிக் காட்டவேண்டும். மேலும் கேப்டன் பேட்டிங் செய்வதும் அவசியம் என்பதையும் அவருக்கு அறிவுறுத்தவேண்டும்.




கோலி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்தார். ஆனால் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் இந்த தரத்திற்கு தான் தயார் என்பதை நிரூபித்துவிட்டார். அது போலத்தான் பிறரும், ஓரிரு டெஸ்ட் போட்டிகள் திணறல் இருக்கும் அதன் பிறகு அவர்கள் உருப்படியான வீரர்களாக மாறுவார்கள். அவர்களின் வழியை செங்கல் பெயர்ந்து விழுந்த குட்டிச் சுவர்களும், மகான் வீரர்களும் மறித்து வருவது நியாயமல்ல.

கிரிக்கெட் என்பது வெறும் பேட்டிங் மட்டுமல்ல. 40 வயது வரை ஒருவர் ரன் எடுக்கலாம் என்று வைத்துக் கொண்டாலும் ஃபீல்டிங் என்று ஒன்று இருந்து வருகிறதே! அதற்கு நியாயம் செய்யுமா வயது? லஷ்மண் அடிலெய்ட் டெஸ்ட் போட்டிகள் மட்டுமல்லாது தொடர் முழுதும் முக்கியத் தருணங்களில் கேட்ச்களைக் கோட்டை விட்டு இஷாந்த், அஷ்வின் வயிற்றெரிச்ச்லைப் பெற்றார். டிராவிடின் கேட்சிங் திறமையும் போய்விட்டது. சச்சின் பாதுகாப்பாக டீப் திசையில் பீல்ட் செய்து வருகிறார். எனவே இவர்கள் தீவிரமாக வேறு பாதையை பற்றி யோசிப்பது நல்லது.



முதலில் இந்தத் தொடரில் என்ன நடந்தது என்பதைப் பற்றிய ஒரு நேர்மையான விசாரணையும், அந்த விசாரணையின் முடிவை வெளிப்படையாக அறிவிப்பதும் நேர்மையாக அதற்கான திருத்தங்களைக் கொண்டு வருவதுமே தீர்வாக இருக்க முடியும்.இதனை விடுத்து அடுத்த 2 ஆண்டுகளுக்கு அயல்நாட்டுத் தொடர் இல்லை அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப்போடுவதும், அடுத்த வெற்றி பெற்றால் ரசிகர்கள் இந்தத் தோல்விகளை மறந்து விடுவார்கள் என்ற மனோநிலையையும் நிர்வாகமும் வீரர்களும் கொண்டிருந்தால் அது இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு மூடுவிழாவாக அமையும் என்பதில் ஐயமில்லை.

உங்கள் கருத்துக்களை பகிரவும்... நன்றி.. :)

Monday, September 5, 2011

கிரிக்கெட் : இந்தியா படுதோல்வி ஏன்?

கிரிக்கெட் : இந்தியா படுதோல்வி ஏன்?



இங்கிலாந்தில் இந்திய கிரிக்கெட் அணி பெற்று வரும் படு மோசமான தோல்விகளுக்கு மூத்த வீரர்கள் முதல் ஊடகங்கள் தொடங்கி சாதாரண கிரிக்கெட் ரசிகர்கள் வரை காரணங்களைத் தேடுகின்றனர். இதில் பெரும்பாலோனோர் கருத்து அதிக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதால் களைப்படைந்த அணியாக இது உள்ளது என்பதே.இந்த வாதத்தில் முற்றிலும் உண்மை இல்லை என்றாலும் இந்த வாதத்தை வேறொரு கோணத்தில் அணுகினால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பணவெறி, வீரர்களின், குறிப்பாக புகழ் பெற்ற வீரர்களின், விளம்பர ஒப்பந்தங்கள், இந்திய அணி ஒரு நாட்டில் விளையாடுகிறது என்றால் சுமார் 70- 80 நாடுகளின் நேரடி ஒளிபரப்பு உரிமை அதற்கான விளம்பர வருவாய் இன்ன பிற... இன்ன பிற... விடயங்கள் வெளிச்சத்திற்கு வரும்.

மேற்கிந்திய தொடரில் ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு, ஆனால் இங்கிலாந்தில் அதே களைப்படைந்த மூத்த வீரர்கள் அணியில் நுழைகின்றனர். அவர்கள் உண்மையில் உடற்தகுதியுடன் இருக்கிறார்களா என்பதை நிரூபிக்க உள்நாட்டு கிரிக்கெட்டில் அவர்கள் விளையாடுவதில்லை. நேரடியாகத் தேர்வு செய்யப்படுகின்றனர். இது இந்தியாவில் மட்டும்தான் நடக்கிறது.



இதற்குக் காரணம் என்ன? ஏன் இந்தியா அதிகப் போட்டிகளில் விளையாடுகிறது? ஏன் இந்திய அணியை அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் விரும்புகின்றன? இந்தக் கேள்விக்கான விடை நட்சத்திர பிராண்டுகளை விளம்பரப்படுத்தும் நட்சத்திர வீரர்களாக நம் வீரர்கள் இருப்பதே காரணம், எனவேதான் இந்திய அணி நம்பர் 1 அணியல்ல நம்பர் 1 பிராண்ட் என்று கூறுகிறோம். பி.சி.சி.ஐ. இந்த நம்பர் 1 பிராண்டை விற்பனை செய்யும் வர்த்தக நிறுவனம்.


மேற்கிந்திய தொடருக்குச் சென்றால் அது கவர்ச்சியற்ற அணி எனவே விளம்பர வருவாய் என்று பெரிதாக எதையும் பார்த்து விட முடியாது. அதனால் அதற்கு இளம் வீரர்கள் அல்லது அனுபவமற்ற வீரர்கள் கொண்ட அணியை அனுப்புவது. ஆனால் இங்கிலாந்து, ஆஸ்ட்ரேலியா, தென் ஆப்பிரிக்கா என்றால் அது பெரிய விளம்பர வருவாயைத் தருவது. இந்திய வாரியத்திற்கு மட்டுமல்ல, மேற்கூறிய அனைத்து வாரியங்களுக்கும்தான். எனவே, இதற்கு உடற்தகுதி இல்லாவிட்டாலும் நட்சத்திர பிராண்ட் வீரர்களை அனுப்புவது. அவர்களின் கிரிக்கெட் ஆட்டம் அப்போது எந்த நிலையில் உள்ளது என்பதை உறுதி செய்து கொள்ளாத வெறும் பிராண்ட் தேர்வு மட்டுமே நடைபெறுகிறது.

எந்த ஒரு வாரியமும் இந்தியாவுடன் தொடரை ஒப்பந்தம் செய்யும் போது 4 டெஸ்ட் போட்டிகள், 7 ஒருநாள் 2 இருபதுக்கு 20 போட்டிகள் என்று ஒப்பந்தம் செய்து கொள்கின்றன.



ஆஸ்ட்ரேலியாவில் கடைசியாக நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா வென்றது. அத்துடன் முத்தரப்பு ஒருநாள் தொடரே வேண்டாம் என்று ஆஸ்ட்ரேலியா முடிவு கட்டியது, காரணம் ஆஸ்ட்ரேலியா அல்லாத அணிகள் விளையாடும்போது ஸ்பான்சரகள் வருவதில்லை, வருவாய் பாதிப்பு என்று காரணம் கூறியது.

ஆனால் தற்போது இந்தியா அங்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறது. இதில் இந்தியா, இலங்கை, ஆஸ்ட்ரேலியா முத்தரப்பு தொடர் மீண்டும் விளையாடப்படுகிறது. ஏன் இலங்கையை அழைக்க வேண்டும், ஏன் நியூசீலாந்து இல்லை அல்லது மேற்கிந்திய தீவுகள் இல்லை, ஏன் பிற அணிகள் இல்லை என்று யாரும் கேட்டுவிடக்கூடாது. இந்தியா விளையாடினால் ஒளிபரப்பு உரிமைகள் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான டாலர்கள் தொகையை குறிவைத்து மீண்டும் முத்தரப்பு தொடரை ஆஸ்ட்ரேலியா நடத்துகிறது.

ஐ.சி.சி.யின் எதிர்கால கிரிக்கெட் பயணத் திட்டத்தில் இந்தியா, ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இதில் தலையாய ஆதிக்கம் இந்தியாவினுடையது என்ற குற்றச்சாற்றுக்கள் தற்போது பரவலாக எழுந்துள்ளன.

எனவே நம்பர் 1 பிராண்ட் ஆன இந்திய அணி அதிகம் கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடுகிறது என்பது இந்த அணியின் கிரிக்கெட் ஆட்டத் திறன்களுக்காக அல்ல மாறாக பிராண்ட் இமேஜ்.

வருடம் முழுதும் எங்காவது விளையாடிக் கொண்டிருப்பது கிரிக்கெட் ஆட்டத்தில் மட்டும்தான் நடைபெறுகிறது. இந்த நிலையில் வீரர்கள் எளிதாக களைப்பைக் காரணமாகக் கூறுவது அபத்தம்தான். ஏனெனில் வீரர்களின் புகழ், அவர்கள் பிரதிநித்துவம் செய்யும் வணிகப்பொருட்கள், அந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் மறைமுக நிர்பந்தங்கள் ஆகியவையே இவர்கள் அதிக நேரம் சர்வதேச கிரிக்கெட்டில் மைதானங்களில் விளையாட வேண்டிய 'வணிக' கட்டாயத்தை ஏற்படுத்துகிறது. இதுதான் உண்மை. இதனால் களைப்பு, அதிக தொடர்கள் என்று தோனி கூறினால் அதில் அவரது பங்கும் இருக்கிறது என்றே பொருள்.



ஆனால் இவ்வளவு தூரம் களைப்பைப் பற்றி பேசும் நம் மூத்த வீரர்களாகட்டும், அவர்களது கருத்துக்களை எதிரொலிக்கும் ஊடகங்களாகட்டும் ஐ.பி.எல். கிரிக்கெட்டை குறை கூற முன்வருவதில்லை. இது ஒரு பெரிய மர்மம்தான். கவாஸ்கரும், சாஸ்த்ரியும் நடப்பு இங்கிலாந்து தொடரிலும் கூட பி.சி.சி.ஐ.யின் ஒலிபெருக்கி போல் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் புகழ்பாடி வருகின்றனர்!

பி.சி.சி.ஐ.யில் இருக்கும் வர்த்தக நிர்வாகிகளுக்கு புத்தி கூர்மை போதாது. என்னதான் இந்தியா சிமெண்ட்ஸ் ஸ்ரீனிவாசன் போன்றோர் இருந்தாலும் அவர்களால் ஒரு அம்பானி போலவோ, டாடா போலவோ, ஒரு மல்லையா போலவோ செயல் பட முடியாது. எனவே ஒரு சீரிய வர்த்த நிறுவனமாகவும் பி.சி.சி.ஐ. செயல்படவில்லை. கிரிக்கெட்டை நடத்தும் விளையாட்டின் காப்பாளர்களாகவும் செயல்படவில்லை. ஒன்று பிராண்டைக் காப்பற்றட்டும் அல்லது கிரிக்கெட்டைக் காப்பாற்றட்டும்.



பிராண்டா? கிரிக்கெட்டா? இதில் எதற்கு முக்கியத்துவம் தருவது என்பதை முடிவு செய்ய முதல்படியாக கிரிக்கெட் வாரியத்திலிருந்து தொழிலதிபர்களையும் அரசியல்வாதிகளையும் தூக்கி எறிந்து விட்டு கிரிக்கெட்டை அதன் அனைத்து அம்சங்களுடன் விளையாடிய, கிரிக்கெட் ஆட்டத்தை நேசிக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களையே நியமிக்கவேண்டிய கட்டாயம் உள்ளது.

இங்கிலாந்தில் வாங்கிய தோல்வி போதாது என்று அடுத்ததாக ஆஸ்ட்ரேலியாவுக்கு நாங்கள் தயார் என்று தோனி உள்ளிட்டவர்கள் 'பாச்சா' காட்டுவது ஒரு பெரிய தமாஷ் என்பது ஒருபுறமிருக்க, இந்தத் தோல்விகளினால் பிராண்ட் இந்தியாவை மட்டமாக எடைபோட்டு விளம்பரதாரர்கள் பின்வாங்கவேண்டாம், என்று வர்த்தக நிறுவனங்களுக்கும் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு உரிமையாளரகளுக்கும் தோனி உள்ளிட்டவர்கள் விடுக்கும் அறிவிப்பு இது என்பதையும் நாம் மறந்து விடவேண்டாம்.

உங்கள் கருத்துக்களை பகிரவும்... நன்றி.. :)

Saturday, March 19, 2011

கிரிக்கெட்: தான் தவறை திருத்துமா இந்தியா ?

கிரிக்கெட்: தான் தவறை திருத்துமா இந்தியா



சென்னை சேப்பாக்கத்தில் நாளை இந்தியா, மேற்கிந்திய தீவுகளைச் சந்திக்கிறது. நாளைய வெற்றி/தோல்வி இந்தியாவின் காலிறுதியை எதுவும் செய்யாது. மேலும் இதுவரை கோப்பையை வெல்லும் அணி என்ற பெயருக்கேற்ப இந்திய அணி விளையாடவில்லை. நாளை அந்த ஆதிக்க வழிக்குத் திரும்புமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

பந்து வீச்சு, ஃபீல்டிங் இந்திய அணியின் கவலையாக இருக்கும் வேளையில் பேட்டிங்கும் திடீர் சரிவுக்கு ஆளாகும் நிலைமை அயர்லாந்து, ஹாலந்து, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிராக நிகழ்ந்தது. நாளை அது திருத்திக் கொள்ளப்படும் என்று நம்பலாம்.

சச்சின் டெண்டுல்கர் நாளை சதம் எடுத்தால் சர்வதேஸ கிர்க்கெட்டில் 100 சதங்களை எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார். ஆனால் பாவம் சச்சின் சதம் எடுக்கும் ஆட்டம் நம் இந்தியா அணி தோற்றுவிடுகிறது.அணியில் யூசுப் பத்தானுக்குப் பதில் ரெய்னாவும், நெஹ்ராவுக்குப் பதில் அஷ்வினும் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது.



சமீபத்தில் தோனிக்கும் ஸ்ரீகாந்துக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக செய்திகள் கிளம்பின. அதனை பி.சி.சி.ஐ. மறுத்துள்ளது. சாவ்லாவை அணியில் எடுத்து அஷ்வினை புறக்கணிக்கும் போக்கு ஏன் என்ற விவகாரம் தொடர்பாக தோனிக்கும், ஸ்ரீகாந்துக்கும் கருத்து வெறுபாடு ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

மேற்கிந்திய அணியைப் பொறுத்தவரை எதுவும் கூறுவதற்கில்லை. அன்று இங்கிலாந்துடன் 222/6 என்ற நிலையில் வெற்றி பெற 21 ரன்கள் இருக்கும்போது 4 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோற்றுள்ளது.



துவக்கத்தில் கிறிஸ் கெய்ல் இருக்கிறார். இந்தியப் பந்து வீச்சைப் பார்க்கும்போது நாளை கிறிஸ் கெய்ல் ஒரு கை பார்க்கத்துவங்கினால், அது இந்தியாவுக்குப் பெரிய தலைவலியாகப் போய் முடியும். டேரன் பிராவோ ஒரு திறமையான வீரர். பின் களத்தில் பயங்கர அதிரடி மன்னன் கெய்ரன் போலார்ட், இவர்கள் அனைவரும் இந்திய ஆடுகளங்களில் ஐ .பி.எல் விளையாடி பழக்கம் உள்ளது.மேலும் ரஸல் என்ற ஆல்ரவுண்டர், நடுவில் சர்வாண் கேப்டன் சம்மி போன்றவர்கள் உள்ள போது பேட்டிங் திறமை உள்ளது. ஆனால் எப்போது என்ன நடக்கும் என்று தெரியாது. நாளை நிச்சயம் ஒரு ஸ்பின் களமாகவே இது இருக்கும்.

ஆனாலும் அபாயகரமான அணி அது. கேமர் ரோச் இதுவரை சிறப்பாக வீசி வருகிறார். இடது கை சுழற்பந்து வீச்சாளர் சுலைமான் பென் நன்றாக வீசுகிறார். புது முக சுழற்பந்து வீச்சாளர் பிஷூ நாளை இருப்பாரா என்று சந்தேகமே. ஏனெனில் இந்திய அணி சுழற்பந்து வீச்சை திறம்பட சமாளிக்கும் என்று மேற்கிந்திய அணிக்கு நன்றாகவே தெரியும்.



இதுவரை பலவீனமான அணிகளை ஆதிக்கத்துடன் வென்றுள்ள மேற்கிந்திய அணி தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகியவற்றுடன் தோல்விகளைத் தழுவியுள்ளது.

இந்திய அணியும் பலமான அணியான இங்கிலாந்திடம் டை செய்து, தென் ஆப்பிரிக்காவுடன் தோல்வி தழுவியுள்ளது. எனவே நாளை ஒரு பரபரப்பான போட்டி காத்திருக்கிறது என்று கூறலாம்.



இந்தியா நாளைய போட்டியில் தனது தவறுகளை திருத்த வேண்டும் . இல்லை என்றால் நாக் அவுட் விளையாட்டில் எந்த புது முயற்சியும் எடுக்க முடியாது.டோனி பொறுப்புடன் அணியை தேர்வு செய்ய வேண்டும்.மீதும் சாவ்லா அல்லது நெஹ்ரா வை ஒதுக்கி அஸ்வின் நிற்கு வாய்பளிக்க வேண்டும்.
இந்தியா வென்றால் கால் இறுதியில் ஆஸ்திரேலியா வோடு மோதும். தோற்றால் ஸ்ரீலங்கா விடம் மோதும். எனவே எதிர் அணியை மனதில் வைத்து அணியை தேர்வு செய்ய வேண்டும்.
இந்தியா வென்றால் சந்தோசமே..

Sunday, March 13, 2011

டோனி :சிறந்த கேப்டன் ? பயந்த கேப்டன்?

டோனி : சிறந்த கேப்டன் ? பயந்த கேப்டன்?

நேற்று நடந்த இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா போட்டி இந்தியா தோல்வி அடைந்ததற்கு டோனியின் அனுபவமில்லாத தலைமையே காரணம்.இந்த போக்கு இந்தியா கோப்பையை வெல்லுமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.



நேற்றைய தோல்விக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தோனி, பேட்ஸ்மென்கள் சிலர் ரசிகர்களுக்காக விளையாடுகின்றனர். அது கூடாது, நாட்டுக்காக விளையாடவேண்டும் என்று கோபாவேசம் காட்டியுள்ளார். இப்படி பேசும் அவர் முதலில் ஒழுங்காக ஆடி இருக்க வேண்டும்.

267/1 என்ற நிலையிலிருந்து 29 ரன்களுக்கு கடைசி 9 விக்கெட்டுகளை இழந்ததைப் பற்றி தோனி இவ்வாறு கூறியுள்ளார்.

"மிகப்பெரிய ஷாட்களை அடிக்க வேண்டும் என்று நீங்கள் ஆடினாலே நாட்டிற்காக விளையாடுகிறோம் என்ற உணர்வு போய்விடும். 20 ரன்களை கூடுதலாக அடிக்க வேண்டும் என்ற முயற்சியில் 40 ரன்கள் குறைவாக அடிப்பதில் போய் முடிந்தது. சிலர் காலரியில் உள்ள ரசிகர்களுக்காக விளையாடினார், நாட்டை மறந்து விட்டனர்.

சில வேளைகளில் கண்ணில் தெரியம் பந்தை எல்லாம் வெளியே அடிக்கவேண்டும் என்ற உந்துதல் இருக்கும், ஆனால் 50 ஓவர்களை விளையாடுவது முக்கியம், அப்படி விளையாடியிருந்தால் 325 - 330 ரன்கள் எடுத்திருக்க முடியும். நான் பேட்டிங் ஆர்டரை மாற்றினேன் அது இன்று வேலை செய்யவில்லை.

யூசுப் பத்தான் 2 அல்லது 3 ஓவர்கள் தாக்குப் பிடித்திருந்தால் அவர் பெரிய இன்னிங்ஸை விளையாடக்கூடியவர்தான்.



ஆஷிஷ் நெஹ்ரா கடைசி ஓவர்களை அதிகம் வீசியுள்ளார். பெரும்பாலும் பவர் பிளேயில் வீசுவார், நேற்று அது பலனளிக்கவில்லை." இவ்வாறு கூறினார் தோனி.முதலில் முழு உடல் தகுதி இல்லாத நெஹ்ரா வை டீம் மில எடுத்தே தப்பு.இதில் வியாக்யானம் வேறு .நெஹ்ரா இப்போது நல்லா பார்மில் இல்லை.அவரிடம் ஆட்டத்தை நிர்ணயிக்கும் ஓவர் ரை கொடுத்தது தப்பு.

நேற்று மடமட வென விக்கெட் கள் சரியும் போது எல்லா batsman அவுட் ஆனா பிறகு டோனி அவர் strike பண்ணாமல் பௌலர் களை ஆடவிட்டார்.styen னுக்கு இது ரொம்ப சுலபமகிட்டது.

ஸ்ட்யீன் ஓடி வருவைதை பாத்தாலே நேஹ்ராவுகும் படேல் லும் பாது அவுட் ஆகி விட்டார்கள்.ஓவர் நிற்க வேண்டும் என்று சொல்லும் டோனி அவர் strike செய்து களத்தில் நின்றிருக்க வேண்டும்.அதை விட்டு மற்றவர்கள் ஆடவில்லை என்று சொல்லகூடாது.

தென் ஆப்ரிக்கா அணி பாஸ்ட் பௌலிங் இல் பெயர் பெற்றது.ஆஸ்திரேலியா வை விட சிறந்து விளங்கும் அணி. மோர்கல் ,ஸ்ட்யீன் போன்ற பௌவ்லேர் களால் பயிற்சி எடுத்த அவர்களுக்கு நெஹ்ரா போன்ற தகுதி இல்லாத பௌவ்லேர் ஒரு பிரச்னை இல்லை. ஹர்பஜன் னை நம்பி இருக்கலாம். அவர்கள் அடிக்கும் போது கேட்ச் ட்ரை செய்திருக்கலாம்.பவர் பிளே இலாத போது அவர்கள் இறங்கி ஆடவும் தூக்கி ஆடவும் பயதிருப்பர்கள்.



முதலில் அவசர பட்டு அங்கு யூசுப் பதான் னை இறக்கியது.சென்ற ஆட்டத்தில் அவரை ஒன் டவன் இறக்கி அவர் சரியாக ஆட வில்லை. எனவே யுவராஜ் ஐ இறக்கி இருக்கவேண்டும்.

மேலும் மத்த அணி களுடன் ஒப்பிடும் போது நமது இந்தியா பில்டிங் கில் மெகா மோசம்.எதோ லீக் ஆட்டம் என்பதால் தெரியவில்லை.ஆனால் இது நாக் அவுட் முறை யில் இந்தியா மெகா மோசமாக தோல்வி அடையும்.உலக தரம் வாய்ந்த பட்டிங் வரிசை என்று சொன்னாலும் அது எப்போது வேண்டுமாலும் சொதப்பும்.



டோனி யின் வியுகம் சரி இல்லை. மற்ற அணி வீரர்களை போல் அவர்களை விக்கெட் எடுக்காமல் சுலபமாக ரன் எடுக்க விடுகிறார்.இதனால் அவர்கள் சுலபமாக நின்று ஆடுகிறார்கள்.அவர்களாக அவுட் ஆனால் தான் ஆச்சு .நாம் விக்கெட் துக்கு முயற்சி செய்வது இல்லை. இது பெரிய தவறு.சாவ்லா விற்கு இவ்வளவு முறை வாய்பளிக்க தேவை இல்லை. அஷ்வின் னை முயற்சிக்கலாம்.
அவருக்கு லீக் இல் வாய்ப்பளிக்காமல் இருப்பது கவலை அளிக்கிறது. நேராக அவரை நாக் அவுட் ஆடவிட்டால் அது ஆபத்தாக கூட அமையும்.அவர் அனுபமிள்ளதவர். டோனி விரைவில் தனது தவறுகளை திருத்த வேண்டும். இல்லை என்றால் மற்றவர்கள் விளையாடுவதை நாம் வேடிக்கை தான் பார்க்க வேண்டும்.

தொடரும் ...


உங்கள் கருத்துக்களை சொல்லவும் .

Saturday, February 26, 2011

உலககோப்பை : இந்தியா பலம் - பலவீனம் .

இந்தியா - இங்கிலாந்து




நாளை
பெங்களூருவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் பி-பிரிவு ஆட்டத்தில் பலமான இந்திய அணி தன் பலத்தை நிரூபிக்க ஒரு வாய்ப்பாக இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இங்கிலாந்து அணிக்கும் ஹாலந்துக்கு எதிரான ஆட்டத்திற்குப் பிறகு கடும் நெருக்கடியும் அழுத்தங்களும் ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணியை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா 3 முறை வென்று 3 முறை தோற்றுள்ளது. எனவே இரு அணிகளுக்கும் அந்த விதத்தில் பிரச்சனை இல்லை.இங்கிலாந்து அணி நெதர்லாந்த் எதிரான ஆட்டத்தில் பந்து வீச்சில் பிராட், ஆண்டர்சன் அன்று 20 ஓவர்களில் 137 ரன்களை விட்டுக் கொடுத்தனர். அது போன்று நாளை வீசினால் இந்தியா மீண்டும் மிகப்பெரிய ஸ்கோரை எட்டும்.



இந்திய அணியைப்பொறுத்தவரை இப்போது பிரச்சனை அணிச்சேர்க்கை மற்றும் பௌலிங் தான் .இந்திய அணி கபில்தேவுக்குப் பிறகு பெரிய அளவில் திறமையான வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்கவில்லை. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு, குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பலவீனமாகவே உள்ளது.

தற்போதைய அணியில் ஜாகீர் கான் மட்டுமே சீரான முறையில் வீசி நம்பிக்கை அளித்து வருகிறார். முனாஃப் படேலின் திசை மற்றும் அளவு சீராக இருந்ததற்குக் காரணம் அவர் அதிகம் வேகம் காட்டாமல் நேராக வீசுவதுதான். ஆனாலும் 370 ரன்கள் அல்லது 350 ரன்கள் அடிக்கும் போது அவர் பாதுகாப்பான வீச்சாளராக இருக்கலாம்.



நாளையே இந்தியா 250 ரன்கள்தான் எடுக்க முடிகிறது என்றபோது முனாஃப் படேல், ஆஷிஷ் நெஹ்ரா, ஸ்ரீசாந்த் கூட்டணி பயன்படாது என்பது தற்போது தெரிகிறது.

நெஹ்ரா சரியாக வீசவில்லை என்று கேப்டன் உணர்ந்தால் உடனடியாக அவரை விட வேகம் அதிகம் வீசி, சாதுரியத்தையும் பயன்படுத்தும் ஆர்.பி.சிங் போன்றவர்களை அழைத்திருக்கவேண்டும், அல்லது குறைந்தது இஷாந்த் ஷர்மாவையாவது தயார் படுத்தியிருக்கவேண்டும்.இது இந்திய அணி தேர்வாளர்கள் செய்த தவறு. குறைந்தது இர்பான் பதனை யாவது தயார் செய்திருக்க வேண்டும். தைரியமாக இன்னொரு பௌலாரை இணைக்கலாம்.



இப்போது ஸ்ரீசாந்தை அடுத்த போட்டியில் உட்கார வைத்துவிட்டு நெஹ்ராவை அணியில் எடுப்பது என்பது வலது கை ஸ்ரீசாந்திற்குப் பதில் இடது கை ஸ்ரீசாந்தை எடுப்பது போல்தான். எப்போது பிரவீண் குமார் விளையாட முடியவில்லை என்று தெரிந்ததோ அப்போதே மாற்று வீச்சாளர்களை அணியில் தேர்வு செய்யப்போவது பற்றி தெளிவான முடிவுகளை வைத்திருக்கவேண்டும்.

எனவே ஸ்ரீசாந்த் மேம்பாடு அடைகிறாரா என்பதை வலையில் உறுதி செய்தபிறகே அவரை அணியில் தேர்வு செய்ய வேண்டும், இல்லையெனில் பியூஷ் சாவ்லா, அல்லது அஷ்வினை அணியில் தேர்வு செய்வது பாதுகாப்பானது.இந்திய ஆட்டக்களங்களில் துவக்கத்திலேயே சுழற்பந்து வீச்சை ஒருமுனையில் வைத்துக் கொள்ளலாம். அது எதிரணியினரின் எதிர்பார்ப்பை நிலைகுலையச் செய்யும்.



ஜாகீர், முனாஃப் படேலுக்கு ஒரு ஆட்டம் மிகவும் சாதாரணமாக அமைந்து விட்டால் அது காலிறுதியாக இருக்குமானால் இந்திய அணிக்கு ஆபத்து உள்ளது.
இப்போது பிரச்சனையென்னவெனில் இந்திய பேட்டிங் தோல்வி அடையும்போது 4 பந்து வீச்சாளர்களை வைத்திருந்தால் அது தோல்வியில் கொண்டு போய் விடும் அபாயம் இருக்கிறது.

எனவே தோனிக்கு மிகப்பெரிய கஷ்டம் என்னவெனில் ஸ்ரீசாந்த், நெஹ்ரா கட்டாயம் ஃபார்முக்கு வர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இல்லையெனில் பேட்ஸ்மெனில் ஒருவரை தியாகம் செய்யவேண்டி வரும் அப்போது யூசுப் பத்தானின் இடம் பற்போகும், இதனால் இந்திய அணிக்கு பின் களத்தில் உள்ள ஒரு பெரிய அதிரடி வாய்ப்பு பற்போகும்.

ஒரு போட்டியில் மோசமாக வீசினார் ஸ்ரீசாந்த் என்பதற்காக அவரை அணியிலிருந்து நீக்கவேண்டிய அவசியமில்லை. நாளை இங்கிலாந்து அணியில் ஸ்ட்ராஸ், பீட்டர்சன் துவக்கத்தில் களமிறங்குவதால் இவரது ஆக்ரோஷம் பயன்தரலாம்.தோனிக்குப் தற்போது சாவ்லாவை அணியில் சேர்த்து 5 பந்து வீச்சாளருடன் இறங்குவதா அல்லது போன போட்டியில் வைத்திருந்த அதே அணியை இதிலும் களமிறக்கலாமா என்ற பிரச்சனை இருக்கிறது.



யுவ்ராஜ் சிங், யூசுப் பத்தான் வங்கதேச அணிக்கு எதிராக 370 ரன்கள் இருந்ததால் நன்றாக வீசியது போல் தெரிந்தது. ரன்கள் குறைவாக இருக்கும்போது உண்மையான ஒரு பந்து வீச்சாளரின் உதவியே தேவைப்படும். தோனி எப்படி யோசிக்கிறார் என்று தெரியவில்லை. ஸ்ரீசாந்தை நீக்கி விட்டு பியூஷ் சாவ்லாவை அணியில் எடுத்தால், துவக்கத்தில் ஜாகீருடன் ஹர்பஜன் சிங்கை பந்து வீச அழைத்து தோனி இங்கிலாந்துக்கு அதிர்ச்சியளிக்கலாம்.

பெங்களூர் ஆட்டக்களம் நிச்சயம் பேட்டிங்கிற்கு சாதகமான விளாசல் களமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். பயிற்சி போட்டியில் எடுத்தது போல் ஸ்பின் எடுத்தால் இந்தியாவுக்குச் சாதகம். இங்கிலாந்து அணியில் ஸ்வான் மட்டுமே ஒரு அச்சுறுத்தும் பந்து வீச்சாளர்.



நெருக்கடியும், அழுத்தமும் இங்கிலாந்து பக்கம் உள்ளது, எனவே அதனை இந்தியா தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம். இந்தியா வெற்றி பெற்றால் அனைவருக்கும் மகிழ்ச்சி.

Saturday, February 19, 2011

உலகக்கோப்பை 2011:இந்தியா (World Cup team INDIA)

2011 உலகக் கோப்பையில் இந்தியா:




இந்த முறை தோனி தனது அணிச்சேர்க்கையை கவனமாகக் கையாள்வதில் உள்ளது வெற்றி தோல்விகள். சச்சின், சேவாக், கம்பீர், யுவ்ராஜ், தோனி, யூசுப் பத்தான், ரெய்னா,ஹர்பஜன், ஜாகீர், ஸ்ரீசாந்த் முனாஃப் படேல் என்று இருந்தால் பலமாக இருக்கும். யுவ்ராஜ் சிங் ஒரு போட்டியில் சொதப்பினாலும் உடனே தூக்கி விட்டு விராட் கோலியை அணியில் சேர்க்கவேண்டும். எந்த முடிவெடுத்தாலும் தைரியமாக விரைவாக தோனி
எடுக்கவேண்டும்.

ரெய்னா சரியாக விளையாடா‌விட்டாலும் இவர் இந்த முடிவை எடுக்கவேண்டும்.முதலிலிருந்து அனைத்துப் போட்டிகளையும் வெல்லும் தயாரிப்புடனும், மனோதிடத்துடனும் களமிறங்கவேண்டும், முதல் சுற்றில் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றால்தான் காலிறுதியில் உடனடியாக தோற்று வெளியேறும் நிலை ஏற்படாது.
எதிரணியினருக்கு கிலி பிடித்துக் கொள்ளும்.



நெஹ்ராவை அணியில் எடுப்பதை ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்யவேண்டும் ஏனெனில் நெருக்கமான அதிக ஸ்கோர் போட்டிகளில் இவர் நமக்கு தோல்வியைப் பெற்றுதந்து விடுவார் என்ற ரீதியில்தான் உள்ளது இவரது பந்து வீச்சு.தோனியைப் பொறுத்தவரை உள்ள மிகப்பெரியக் குற்றச்சாட்டு என்னவெனில் நடு ஓவர்களில் எதிரணி பேட்ஸ்மென்கள் செட்டில் ஆகும்போது அவர்களை வீழ்த்த எந்த வித முயற்சியும் மேற்கொள்ளாமல் மரத்தை வைத்தவன் தண்ணி ஊற்றுவான் என்பது போல் இருக்கிறார்.அந்தப் போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும். யுவ்ராஜ் சிங், உள்ளிட்ட பகுதி நேர பந்து வீச்சாளர்களை அதிகம் பயன்படுத்த முனையக்கூடாது. ஜாகீர், ஸ்ரீசாந்த், முனாஃப், ஹர்பஜன் என்று பந்து வீச்சு வரிசை இருந்தால், இன்னும் ஓரிரு பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தலாம் அதுவும் அனுபவமான சேவாக், போன்றவர்களுக்கு 5 ஓவர்களையோ, புது வீரரான விக்கெட் எடுக்கும் யூசுப் பத்தானுக்கோ கொடுக்கலாம்.

காரணமில்லாமல் யுவ்ராஜ், யூசுப், ரெய்னா, சேவாக், சச்சின் என்று அனைவரையும் பயன்படுத்தி ரன்களை வாரி வழங்கும் நிலைக்குச் செல்லக்கூடாது. எதிரணியினர், அது எந்த அணியாக இருந்தாலும் 300 ரன்களை எட்டிவிடாமல் கட்டுப்படுத்துவது அவசியமாகும் ஏனெனில் எல்லாப்போட்டிகளிலும் 300 ரன்களை நாம் வெற்றிகர்மாகத் துரத்துவது இயலாது.டாஸ் வென்றால் 300 ரன்களுக்கும் மேல் குவிப்பதுதான் பாதுகாப்பானது. இந்த பலமான பேட்டிங் வரிசையில் சேவாக், சச்சின் துவக்கம் அபாரமாக அமைந்தால் 350 ரன்களும் சாத்தியம்தான்.



யூசுப் பத்தானைக் கண்டு எதிரணியினருக்கு ஒரு புதிய நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தோனி சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இந்த பேட்டிங் வரிசையில் சேவாக், சச்சின், யுவ்ராஜ், ரெய்னா, தோனி, யூசுப் ஆகியோரது அதிரடியைக் கண்டு நிச்சயம் மற்ற அணிகள் அஞ்சித்தான் ஆகவேண்டும். வேறு வழியில்லை. எதிரணியினர்தான்
நெருக்கடியில் உள்ளனர். இதனை நன்றாக நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். வங்கதேசம், அயர்லாந்து, ஹாலந்து என்று பலவீனமான அணியாக இருந்தாலும் முழு பலம் கொண்ட அணியையஏ களமிறக்கவேண்டும். அதில் தவறுகள் செய்ய வாய்ப்பேயில்லை.

உலகக் கோப்பை போட்டிகள், தோல்வியடைய முடியாது என்ற பயத்தில் பரிசோதனை முயற்சிகளைக் கைவிட்டு விடக்கூடாது. நெருக்கடி தருணங்களில் வழக்கத்திற்கு மாறான உத்திகளைக் கையாள்வதில் தோனி தயக்கம் காட்டக்கூடாது. பேட்டிங்கில் தோனி தனது பழைய அதிரடி முறையைக் கையாள்வது உசிதம், கிரெக் சாப்பலின் ஒரேயொரு உத்தி அருமையான ஒன்றாகும், துவக்கவ் வீரர்களுக்கு அடுத்த
டவுனில் யார் இறங்குவார்கள் என்பதை மற்றி கொண்டேயிருந்தால் நிச்சயம். எதிரணியினரின் திட்டங்களை அது பாழாக்கும்.

இந்த உலகக் கோப்பையில் யு.டி.ஆர்.எஸ். முறை உண்டு. எனவே
எல்.பி.டபிள்யூ.முடிவுகளும் 3-வது நடுவரிடம் முறையீடு செய்ய வாய்ப்புள்ளதால் இந்திய பேட்ஸ்மென்கள் எச்சரிக்கையுடன் விளையாடுவது நல்லது. பேட்டிங் பவர் பிளேயை எப்போது எடுப்பது என்பதிலும், எதிரணியினரின் பேட்டிங் பவர் பிளேயின் போது எந்த பந்து வீச்சாளர்களை வீச அழைக்கவேண்டும் என்பதிலும் தீவிரத் தயாரிப்புகளும் முன் கூட்டிய திட்டமிடுதலும் மிக முக்கியமானது.



இந்த பேட்டிங் பவர் பிளே என்ற புதிய முறை இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பெரிய திருப்பங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம். இதுவரை தோனி இந்த பவர் பிளே விஷயங்களில் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார்.சச்சின் டெண்டுல்கர் நிச்சயம் இந்த உலகக் கோப்பையை வெல்வதில் அதிக முனைப்பு காட்டுவார் இந்த அழுத்தம் அவரது பேட்டிங்கில் தாக்கம் செலுத்தாமல் அவர்தான் காத்துக் கொள்ளவேண்டும்.

சேவாகின் அதிரடித் துவக்கம், ரெய்னா, தோனி, யூசுப்பின் இறுதி வேட்டு, ஜாகீர் கான், ஹர்பஜன் ஆகியோரது பந்து வீச்சு, தோனியின் தலைமை உத்திகள், மைதானத்தில் எடுக்கும் உடனடி புத்திசாலி முடிவுகள், சச்சின் டெண்டுல்கரின் பலம் இவையெல்லாம் இந்திய அணிக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்புகளை இந்த உலகக் கோப்பையில் வழங்கியுள்ளது.

இருப்பினும் காலிறுதியிலிருந்து நாக்-அவுட் முறை என்பதால் காலிறுதியிலிருந்து ஒவ்வொரு போட்டியும் தங்களது போக்கையும், நிறத்தையும் எடுத்துக் கொள்ள்ம் என்பதால் எதையும் கணிப்பது கடினம்.

அரையிறுதி வரை இந்தியா வந்து விட்டால் கோப்பையை வெல்ல வாய்ப்பிருப்பதாகவே நாம் கருதலாம்.கனவு நனவாகுமா? பிப்ரவரி 19ஆம் தேதி முதல் நாம் கனவு காணத்தொடங்குவோம். முடிவு எப்படியிருந்தாலும் ரசிகர்கள் அதனை கிரிக்கெட் ஆட்டத்தின்அடிப்படையில் புரிந்த கொண்டு வினையாற்றுவதே இந்திய கிரிக்கெட்டிற்குச்சிறந்தது.

Sunday, June 27, 2010

Cricket Fun