Showing posts with label Mohammed Arafath. Show all posts
Showing posts with label Mohammed Arafath. Show all posts

Monday, March 7, 2011

சாப்பாடு - விலையே ஜீரணிக்க முடியல ஐயோ :

Top 10 Most Expensive Foods in the world

சாப்பாடு விலையே கண்ணை கட்டுது.இதுல இவ்ளோ காசு கொடுத்து எப்டி சாப்பிடறது. இன்னிக்கு ஒரு $ விலை 45 ரூபாய். அப்போ கணக்கு போடு பாருங்க..


10. Matsutake Mushrooms - $1000/pound



9. The World's Most Expensive Bagel - $1000



8. The Zillion Dollar Frittata - $1000



7. Wagyu Steak - $2800



6. Samundari Khazana, the World's Most Expensive Curry - $3200



5. Domenico Crolla's "Pizza Royale 007? - $4200



4. Dansuke Watermelon - $6,100



3. Yubari Melons - $22,872



2. Almas Caviar - $25,000



1. Italian White Alba Truffle - $160,406

Thursday, February 17, 2011

Japan Then and Now (ஜப்பான் அப்போ இப்போ )

ஜப்பானின் முன்னேற்றம்.

























































Tuesday, February 15, 2011

Funny kids : சுட்டி குழந்தைகள்

Plug in the wrong place.. (பாட்டு கேக்கலியே...)


Daddy.. I am Sorry!!! (என்னை காப்பாத்துங்க ...)


Wow!! So Expensive haa? (இது எனக்கு விளையாட வேண்டும் ..)



Who make up Cry like this..?
(
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஏன் என்ன அழ வைக்கறீங்க...)


Somebody and somebody's son... (நான் எங்க அப்பா பிள்ளை ...)



mum says need to wash the hand after going toilet...
(அம்மா சொன்னங்க பாத்ரூம் போன கை அலம்பனும் னு...)



So Sleepy... (எனக்கு தூக்கம் தூக்கமா வருது...)



I didn't even Bite u... (கடிக்காத ...)



Save Space..!!! (எங்க வீடு ரொம்ப சின்னது.. )



come lets hold hands...!!! (வாங்க விளையாடலாம்...)



Don't Waste Anything... (எதையும் வேஸ்ட் பண்ண கூடாது...)



Objection... (எங்கள கிண்டல் பண்ணாதீங்க... )



How is my hair Style (ஒழுங்கா தல சீவ தெரியாதமா உனக்கு?)



Why target me... (யாரு அந்த புலிகேசி ...)

Monday, February 14, 2011

Amazing Rocks :அடுக்கு பாறைகள்

Amazing Balancing Rocks






























Saturday, January 29, 2011

பைண்டிங் நீமோ : விமர்சனம் ( Finding nemo)



Finding Nemo - உலக புகழ் பெற்ற Animation படம். Oscar award மற்றும் 34 விருதுகள் ,35 nomination வாங்கிய படம்.Pixar - இன் படைப்பு .

இந்த படத்தின் கதை என்னவென்றால் நீமோ (A clown fish)முட்டையாக இருக்கும் பொழுதே அவனுடைய அம்மாவையும் அவனுடைய பிற முட்டை சகோதரர் சகோதரிகளையும் ஒரு சுறாமீன் கொன்று விடுகிறது.

"உடனே நீமோ வளர்ந்து அந்த சுறா மீனை பழி வாங்குகிறான். ஹலோ இப்படி எல்லாம் நினைச்சீங்கன்னா நிறைய விஜயகாந்த் படம் பார்க்கறீங்கன்னு அர்த்தம். அதை எல்லாம் மறந்துடுங்க. :) lol இது தமிழ் படமோ விஜயகாந்த் படமோ அல்ல "

இதனால் தன்னுடைய ஒரே உறவான நீமோவை அவனுடைய தந்தை ரொம்ப பாதுகாப்பு உணர்வுடன் வளர்க்கிறார். நீமோவின் ஒரு செதில் வேறு சிறியதாக போய் விடுவதால் அது வேறு நீமோவின் தந்தைக்கு கவலையாகி விடுகிறது.



பாதுகாப்பு உணர்வு அதிகமாகி நீமோவை வெளியிலேயே விடாமல் அவனை பிறரின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக்குகிறார்.

நீமோவின் பிடிவாதத்தால் அவனைப் பள்ளியில் சேர்க்கிறார் அவன் தந்தை. பள்ளியில் கேலிக்கு ஆளாகும் நீமோ தன்னை நிரூபிப்பதற்காக சென்று ஒருவரின் வலையில் சிக்கி கொள்கிறான். அவர் அந்த மீனை தன் தொட்டியில் வளர்ப்பதற்காக எடுத்துச் சென்று விடுகிறார்.

அங்கு நீமோவின் பள்ளி செயல்களை ஒளிந்து இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் நீமோவின் தந்தை அந்த படகை பின்பற்றி செல்லத் தொடங்குகிறார் ஆனால் படகு வேகமாக சென்று விடுகிறது.

அப்பொழுது அந்தப் பக்கம் வந்த டோரியை ஒரு படகைக் கண்டாயா என்று நீமோவின் தந்தை கேட்க ஆம் இந்தப் பக்கம் சென்றது என்னைப் பின் தொடர் என்று சொல்லி வேகமாக செல்லத் தொடங்கும் டோரி சிறிது தூரம் சென்று மெதுவாக செல்லத் தொடங்குகிறது. நீமோவின் தந்தை ஏன் மெதுவாக செல்கிறாய் என்று கேட்க நீ யார்? என்று கேட்பதில் இருந்து காமெடித் திருவிழா ஆரம்பிக்கிறது.



அப்பொழுது தான் தெரிகிறது டோரிக்கு short term memory loss என்று. கஜினியில் சூர்யாவுக்கு இருந்ததே அதே வியாதிதான். ஆனால் நம்ம சூர்யா மாதிரி சிரியஸான ஆசாமி இல்லை ஜாலியான optimistic மீன்.

அப்பொழுது டோரிக்கு அந்த படகு விட்டுச் சென்ற அடையாளப் பலகையில் இருந்த முகவரியைப் படித்து நீமோவின் தந்தைக்கு சொல்கிறது. அதை விட ஆச்சரியம் அளிக்கும் வகையில் அந்த முகவரி டோரிக்கு ரொம்ப நேரம் ஞாபகம் இருக்கிறது.

அதனால் டோரி நீமோவின் தந்தை அருகில் இருந்தால் தன்னுடைய நிலைக்கு உதவியாக இருக்கும் என்று எண்ணி நீமோவின் தந்தைக்கு உதவி செய்வதற்காக அவருடனே அந்த முகவரி குறிப்பிட்ட சிட்னிக்கு செல்ல ஆரம்பிக்கிறது.

முதலில் டோரியின் கூட வர விரும்பாத நீமோவின் தந்தை வேறு வழி இல்லாமல் சம்மதிக்கிறார். அங்கிருந்து நீமோவைக் கண்டுபிடிக்க செய்யும் பயணம் தான் கதை.



நடுவில் சைவமாக விரும்பும் சுறாக்கள், super cool ஆமைகள் என்று அவர்களின் பயணம் 11/2 மணி நேரம் ஒரு மாஜிக் பயணத்தில் நம்மை அழைத்துச் செல்லும்.


கள்ளம் கபடமில்லாததால் டோரி அதன் குழந்தைத்தனம், எல்லாமே நல்லது என்று எடுத்துக் கொள்ளும் அதனுடைய பாத்திரம், மனிதன் குழந்தைப் பருவத்தை ஏன் விரும்புகிறான் ஏன் குழந்தைத்தனம் என்பது முக்கியம் என்பதை எல்லாம் நமக்கு சொல்லும் விதமாக அமைந்திருக்கிறது.

உதாரணமாக ஒரு திமிங்கலத்திடம் தொடர்பு கொள்ள முடியும் என்று நம்பும் டோரி அதனுடன் திமிங்கல பாஷையில் பேசுவதாக சொல்லி சிட்னி செல்வது எப்படி என்று கேட்கிறது.

அந்தத் திமிங்கலம் டோரியையும், நீமோவின் தந்தையையும் விழுங்கி விடுகிறது. நீமோவின் தந்தை டோரியை கடிந்து கொண்டு உனக்கு திமிங்கல பாஷை எல்லாம் தெரியாது என்று திட்டிக் கொண்டிருக்கும் சமயம் அந்தத் திமிங்கலம் அவர்களை சிட்னியில் இறக்கி விடுகிறது.

இது போல டோரியின் பல காட்சிகள் கள்ளம் கபடமற்ற வாழ்க்கையைப் பற்றி ஏங்க வைத்து விடுகிறது.



கடைசியாக இந்தப் படத்தை எடுத்த பிக்ஸர் நிறுவனம் பற்றி சொல்லவில்லை என்றால் இந்தப் பதிவு நிறைவு பெறாது.

Toy story, Bugs life, Monstors Inc, Incredibles, Cars இதுதான் இந்த நிறுவனம் தயாரித்துள்ள படங்கள் இவைகளைப் பார்த்திருந்தால் நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியமே இல்லை.

இதுவரை ஒரு படம் கூட பிளாப் ஆகாமல் சூப்பர் ஹிட் படங்களை மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கும் நிறுவனம். உங்களுக்கு கார்ட்டூன் பிடிக்கும் என்றால் மேலே உள்ள எல்லாப் படங்களையும் கட்டாயாம் பார்த்தே ஆக வேண்டும்.

டிஸ்னி நிறுவனம் பிக்ஸாரின் ஷேர்களை ரெக்கார்ட் விலையில் வாங்கி உள்ளது. இது பிக்ஸாரை எந்த விதத்திலும் பாதிக்காமல் அதே தரத்துடன் படங்கள் வர வேண்டும் என்பது என் போன்ற சினிமா ரசிகனின் ஆசை.குடும்பத்துடன் இணைத்து குழந்தையாய் ரசிக எற்ற படம்.

இது ஒரு மறுபதிவு நன்றி : http://rasithathu.blogspot.com