வூல்வரினாக ஹியூஜ் ஜக்மன் நடித்திருந்தார். இவரை பல திரைப்படங்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். உதாரணமாக வன் ஹெல்சிங் போன்ற திரைப்படங்கள்.
கனடாவில் திரைப்படம் ஆரம்பிக்கின்றது. தனது தந்தையை கொலை செய்தவனை கொலைசெய்துவிட்டு தப்பி ஒடுகின்றார் நம்ம லோகன். அவர்தான் பெரியவராகி பின்னாளில் வூல்வரின் ஆகின்றார். இவருடன் சேர்ந்து ஒடுகின்றார் அவரின் சகோதரன் (half brother). இந்த அரைவேக்காடுதான் பின்னாளில், வூல்வரினின் பரம எதிரியான சைபரூத்.
மரணம் ஏற்படாத வூல்ரினும் அவர் சகோதரனும் பல்வேறு அமெரிக்க யுத்தங்களில் பங்குபெறுகின்றனர். பின்னாளில் இவர்கள் ஒரு அதிகாரியினால் பயன்படுத்தப்படுகின்றார். வூல்வரின் எலும்புகளை உருக்கி அதற்குப் பதிலாக உலோகம் போன்ற பொருளை பொருத்தி வூல்வரினை பலமான ஒரு மனிதனாக மாற்றுகின்றனர். இந்தக் கதையை ஏற்கனவே முந்தய திரைப்படங்களில் பிட்டு பிட்டாக காட்டினார்கள். காமிக்ஸ் இரசிகர்கள் இந்தப் பாகத்தை X Weapon எனும் தொடரில் இரசிக்கலாம்.
திரைக்கதை சுமார், special effects அருமை. இந்த திரைப்படம் உங்களை ஏமாற்றாது, ஆனால் நல்ல திரைப்படம் என்று உறுதியளிக்கவும் முடியாது. நீங்கள் என்னைப்போன்ற X-MEN அல்லது Wolverine பைத்தியம் என்றால் கட்டாயமாக இந்த திரைப்படத்தைப் பார்க்கவும்.