Saturday, November 10, 2012

Need Education loan:? Its easy now :கல்வி கடன் வேண்டுமா? இப்பொழுது சுலபம்

கல்வி கடன் வேண்டுமா? இப்பொழுது சுலபம்.

ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்!
கல்விக் கடனுக்காக விண்ணப்பிக்க ஒரு மாணவன் வங்கியில் காத்திருக்கிறான். வங்கி மேலாளர் அழைத்துக் கேட்கிறார். 'உன் அப்பா ஒரு கூலித் தொழிலாளி. உங்களுக்கென்று ஒரு சொந்த வீடுகூட கிடையாது. எப்படி உன்னிடம் இருந்து நான் கடனை வசூலிப்பது?'' ''வசதி இருந்தா நாங்க எதுக்குசார் கடன் கேட்டுவர்றோம்?''- இது மாணவனின் பதில். கடைசிவரை மாணவர்களுக்குப் போராட்டம் மட்டுமே மிஞ்சுகிறது. இப்படிக் கல்விக் கடன் கேட்டு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காவே போராடிக்கொண்டு இருக்கிறது E.L.T.F (EDUCATION LOAN TASK FORCE) எனும் கல்விக் கடன் அலுவல்படை. வங்கியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஸ்ரீனிவாசன் என்பவர்தான் இந்த அமைப்பை நடத்திவருகிறார்.

அவரிடம் பேசினோம். '' கல்விக் கடன் வாங்குவதற்காக மாணவர்கள் எவ்வளவு கஷ்டப்படுறாங்கன்னு எனக்குத் தெரியும். அவங்களுக்கு ஏதாவது உதவி செய்யணும்னுதான் இந்த அமைப்பைத் தொடங்கினேன். கல்விக் கடனைப் பொறுத்தவரை இரண்டு திட்டங்கள்தான் நடைமுறையில் இருக்கின்றன. ஒன்று பொதுத் திட்டம். மற்றொன்று தனிப்பட்ட கடன் திட்டம்.

பொதுத் திட்டமானது மதிப்பெண் அடிப்படையில் சேரும் மாணவர்களுக்குப் பொருந்தும். மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேரும் மாணவர்களுக்குத் தனிப்பட்ட கடன் திட்டம். கல்விக் கடன் வாங்கும் எல்லோருமே பொதுவாகத் தெரிந்துகொள்ளவேண்டிய சில விஷயங்களைச் சொல்கிறேன். கல்விக் கடனுக்கான விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டுமென்றால், வங்கி மேலாளர்கள், அவர்களுடைய உயர் அதிகாரிகளின் அனுமதியின் பேரில்தான் நிராகரிக்க முடியும். நிராகரிப்பதற்கான காரணங்களையும் எழுத்து மூலம் மாணவர்களுக்கு உடனடியாகத் தெரியப்படுத்த வேண்டும். தகுந்த காரணம் இல்லாமல் நிராகரிக்கப்பட்டதாகக் கருதினால், மாணவர்கள் வங்கியின் தலைவரிடமே மேல் முறையீடு செய்யலாம்.

கல்விக் கடன் வாங்கும் மாணவர்கள் படிக்கும் காலத்தில் வட்டியைச் செலுத்தவேண்டியக் கட்டாயம் இல்லை. அது அவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது. தொழிற்கல்வி மற்றும் மேலாண்மைக் கல்வி படிக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு மத்திய அரசின் வட்டிக்கான மானியமும் உண்டு. இதற்கான விண்ணப்பத்தைக் கல்விக் கடனில் முதல் தவணை பெறும்போதே, வருமானச் சான்றிதழை இணைத்துக் கொடுத்துவிட வேண்டும். பெற்றோர்களின் எந்தவொரு தனிப்பட்ட கடனுக்கும் அவர்களுடைய பிள்ளைகளின் கல்விக் கடனுக்கும் சம்பந்தமில்லை.

ஒரே வீட்டில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கும் கல்விக் கடன் கொடுக்கச் சட்டத்தில் வழிவகை உண்டு. நான்கு லட்சம் வரையிலான கல்விக் கடனுக்குத் தனி நபர் ஜாமீன் மற்றும் சொத்து ஜாமீன் தேவையில்லை. பெற்றோர்கள் கையெழுத்துப் போட்டால் மட்டும் போதும். எங்களோட இணைய தளத்தில் கல்விக் கடன் சம்மந்தமான அனைத்துத் தகவல்களையும் கொடுத்திருக்கிறோம்.(www.eltf.in )

எங்கள் அமைப்பின் மூலமாக இதுவரைக்கும் 560 மாணவர்களுக்குக் கல்விக் கடன் வாங்கிக் கொடுத்து இருக்கிறோம். கல்விக் கடன் கிடைக்காம கஷ்டப்படும் மாணவர்கள் info@eltf.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மெயில் அனுப்பினால் போதும். நாங்களே தேடிவந்து உதவிகள் செய்து தருவோம்'' என்கிறார்.

கல்வி கற்க இனி என்ன கவலை?

சில வேலைகளால் என்னால் பதிவு போட முடியவில்லை.இனி தொடர்ச்சியாக முயற்சி செய்கிறேன்.எனக்கு அதரவு அளிக்கும் அவனிவரும் நன்றி... மீண்டும் தொடர்வதால் ஒரு உபயோகமான பதிவு... நன்றி...

Thursday, March 15, 2012

India's powerful Business womens

இந்தியாவின் சிறந்த பெண் தொழில் அதிபர்கள்.

முழுக்க முழுக்க ஆண்களினால் கையாளப்படும் இன்றைய வியாபார உலகில் நாம் இங்கு சில பெண்கள் மிகுந்த போராட்டம் , கஷ்டங்களுக்கு நடுவில் வியாபாரத்தில் இந்த உச்ச நிலையை அடைத்து உள்ளனர்.Name: Vinita Bali

Role: Managing Director
Company: Britannia Industries


Vinita has always made unconventional decisions. Rising prices of wheat, sugar and dairy products affect her as much as they do every housewife.

Name: Kiran Mazumdar Shaw
Role: Chairman and Managing Director
Company: Biocon IndiaKiran is India’s bio-tech queen. She says in a an interview to Forbes India that she learnt the importance of self-reliance and personal re-invention at an early age. From starting of with Rs 10,000 in a garage her company Biocon is today worth Rs. 1,511 crore.

Name: Mallika Srinivasan
Role: Chairman and CEO
Company: TAFEMallika believes in a no-frills working style. She has risen to become India's tractor woman making an indelible impression in a heavily male-dominated industry. TAFE's turnover, a mere Rs86 crore in 1985 - the year she joined - had risen to Rs5,800 crore by 2010/11

Name: Chanda Kochhar
Role: Managing Director and Chief Executive Officer
Company: ICICI Bank LimitedChanda began her career with ICICI as a Management Trainee in 1984 and has thereon successfully risen through the ranks by handling multidimensional assignments and heading all the major functions in the Bank at various points in time.

Name: Neelam Dhawan
Role: Managing Director
Company: Hewlett-Packard India


Neelam has been an icon for women in the IT industry. There were just a handful women in the industry way back in the early 80s when she began her career accidentally at HCL.

Name: Preetha Reddy
Role: Managing Director
Company: Apollo Hospitals


Preetha has been instrumental in the group's quality certification process (ISO 14001 and 9001). As a trailblazer, she ensured the JCI accreditation process in five of the group hospitals in Delhi, Chennai, Hyderabad, Ludhiana and Dhaka. Apollo Hospitals group is India's largest healthcare company.


Name: Shobhana Bhartia
Role: Chairperson and Editorial Director
Company: Hindustan Times MediaShobhana, a nominated member of the Rajya Sabha, also runs one of India's largest media houses. HT Media made revenues of Rs 1,815 crore in 2010/11.

Name: Ekta Kapoor
Role: Joint Managing Director and Creative Director
Company: Balaji TelefilmsEkta has created a niche for herself as the queen of the silver screen soaps. She rules almost every television network.


Tuesday, March 6, 2012

ஏ.ஆர்.ரஹ்மான் : ஒரு கனவின் இசை! பகுதி - 11

ஏ.ஆர்.ரஹ்மான் : ஒரு கனவின் இசை! பகுதி - 11ரஹ்மான ஒரு ப்ளூ பேபி யாகத்தான் பிறந்தார். குழந்தை பிழைக்குமா என்பதே பெரிய கேள்வியா இருந்தது. அப்பா ரொம்ப டென்ஷன் நா இருந்தார். எப்படியோ குழந்தை உயிர் பிழைத்தது. அப்பா முகத்துல பெரிய நிம்மதி. குழந்தை வளர வளர அதுகிட்ட பெரிய இசைத்திறமை இருந்தததை பார்த்தவர், மிகுந்த உற்சாகம் ஆனார். தம்பிக்கிட்ட எப்பவும் ஒரு ஸ்பெஷல் அக்கறை காட்டுவார். தன்னோடு ரெகார்டிங் ஸ்டுடியோ எல்லாம் கூட்டிட்டு போய் இசை உலகத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். ஆனா எந்த பாரபட்சமும் கட்டாமல் என்னையும் ரகுமானையும் ஒரே நேரத்தில் பியானோ, கிடார் வகுப்புகள் ல பைலட் எட்வின் , தன்ராஜ் மாஸ்டரிடம் சேர்த்துவிட்டார். நாங்க வாசிப்பதையும் பாடுவதையும் ரொம்ப ரசிச்சு கேட்பார். அப்பெல்லாம் பாட்டும் கூத்துமாஎங்க குடும்பமே ரொம்ப ஜாலியாக இருப்போம். எங்க எல்லாருக்குமே அப்பான்னாரொம்பப் பிடிக்கும். அவர் தந்தது தானே எல்லாமே.

"அற்புதமான வாழ்க்கை அப்பா திடீர்னு இறந்து போனதும் ஸ்தம்பித்து போய்ட்டோம்." என்று அந்த நினைவலைகளில் ஆள்கிறார் ரைஹனா.

அதற்கு பிறகு என்ன ஆனது.?
ஆர்.கே.சேகரின் சமகால மலையாள இசையமைப்பாளர் அர்ஜுனன் மாஸ்டர் இப்போது கேரளாவின் கோட்டயத்தில் தன 73 ஆம் வயதிலும் சுறுசுறுப்பாக திரைப்பட இசை வேளைகளில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார். குரல் லேசாக தடுமாறினாலும் பழைய நிகழ்வுகளை அவர் தன இதயத்திலேயே வைத்திருக்கிறார்.

உண்மையிலேயே ரஹ்மானுடைய அம்மாவை ஒரு தீர்க்க தரிசினு தான் சொல்லணும். சேகர் இறந்த பொது திலீப் ரொம்பச் சின்ன பையன். ஆனா, அப்பவே என்னைப் போன்ற மியூசிக் டைரக்டர் களை எல்லாம் சந்திச்சு, என் மகனுக்கு இசை வாய்ப்பு கொடுங்க. அவன் கிட்ட பெரிய திறமை இருக்குன்னு சொல்லுவாங்க. "எங்க சேகர் பையனாச்சே மா .. நீங்க இவ்வளவு தூரம் சொல்லனுமா..? உடனே திலீப் பை வரச் சொல்லுங்கமா நு நாங்களும் சொல்லுவோம். அற்புதமா கி போர்டு வாசிப்பான். மியூசிக் இன்ச்ற்றுமென்ட் ல வர ரிப்பேர் எல்லாம் திலீப் ரொம்ப ஈஸி யாச் சரிபண்ணிடுவான். அவனை கி போர்டு வாசிக்க வைகலாமேன்னு தோனுச்சு. ஆனா ரொம்ப சின்னப் பையனா இருக்கானேன்னு யோச்சிசோம். வாய்ப்பு கொடுத்த பொது பொளந்து கட்டினான். அப்ப தான் அவன் ஒரு மியூசிக் கல் மேதை என்பது எங்களுக்கு புரிஞ்சது. எங்களுக்கு முன்னாடியே அந்த உண்மை, அவன் அம்மாவுக்குப் புரிஞ்சதுதான் அற்புதமான விஷயம். அப்ப நாங்க திலீப் கொடுத்தது ரொம்பச் சொற்பமான சம்பளம். எதுவுமே சொல்லாம புன்னகையோடு அந்தத் தொகையை வாங்கிட்டுப் போகும் அந்தப் பையன். அந்த அமைதியும் மசியுரிட்டி தான் ரஹ்மான்னை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கு.


தொடரும்..
உங்கள்கருத்துக்களைபகிரவும் ... நன்றி...

Friday, February 24, 2012

Top 10 Recycled Dresses : சிறந்த மறுசுழற்சி ஆடைகள்.

சிறந்த மறுசுழற்சி ஆடைகள்.

நம்மால் தூக்கி ஏறிய பட்ட பொருட்களை கொண்டு சில பேஷன் பணியாளர்கள் இந்த ஆடைகளை வடிவைமைத்து உள்ளனர். இதோ இப்படி நமக்கு உதவாத பொருட்களை மறுசுழற்சி செய்து இப்படி உபயோகமாவும் பயன் படுத்தலாம்.

01. Money Dress02. Tin Foil Dress03. Newspaper Dress04. Condom Dress05. Trash Bag Dress06. Used Tea Bag Dress07. Little Golden Book Gown08. Vogue Magazine Dress09. Balloon Dress10. Capri Sun Dress


மனி டிரஸ் ல பணத்தை யாரு தூக்கி போடுறாங்க நு யாரும் கேக்ககூடாது.அது செல்லாத நோட்டுகள். :) உங்கள் கருத்துக்களை பகிரவும் .. நன்றி

Friday, February 17, 2012

காட்டு கருவேல மரத்தினால் உண்டாகும் அபாயம்

சமீபத்தில் எங்கோ படித்த விஷயம் உங்கள் பார்வைக்கு.....உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் (குளோபல் வார்மிங்) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும்' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.

மண்ணின் வில்லன்
அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. (பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை
வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே
! )
நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும், கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம்) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!?, இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.


இதன் கொடூரமான குணங்கள்:
இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது.பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி, தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது. இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!
இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது. இப்படி காற்றின் ஈரபதத்தையும், நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.
தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.

உடம்பு முழுதும் விஷம்
இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது, ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும், அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!
ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு எந்த செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை. காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், உயிரிவளி (Oxygen) மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது, ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது .

அறியாமை
நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.

கேரளாவின் விழிப்புணர்வு
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??!

என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??
ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.நல்ல மரம் ஆரோக்கியம்
வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம். சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?
இந்த மரங்களை நீங்கள் சிறிய செடியாக இருந்தால் கூட புடுங்கி எறியுங்கள் ! அது வளரும் வரை காத்திருக்க வேண்டாம்.நம் அடுத்த தலை முறை குழந்தைகளுக்கும் தெரியப்படுத்துங்கள்
இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

எப்படி அந்நியர்களை நாட்டை விட்டே விரட்டினோமோ ! அதே போல் நம் நீர் வளத்தை சுரண்டும் இந்த அந்நியனையும் விரட்டுவோம் ! !
வெட்டுவதோடு மட்டும் நில்லாமல்..நம் பாரம்பரிய பூ அரச மரம், புங்கை மரம் , வேப்பம் மரம் போன்ற வற்றை அந்த இடத்திலேயே நட்டு பராமரிப்போம்

இதை வெட்டுவதோடு நிறுத்திவிடாமல், வேரோடு புடுங்கி எறியுங்கள்..உங்கள் ஊர் பள்ளி ஆசிரியரை சந்தித்து இதை பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடம் உருவாக சொல்லுங்கள்.
இந்த மரத்தை வெட்டி .....! நம் மண்ணின் தங்கள் காப்போம்..!!

தங்கள் வருகைக்கு நன்றி...

Friday, February 10, 2012

வாழைப்பழம் இதுல இவ்ளோ இருக்குங்க...!

வாழைப்பழம்
நம்மில் பலர் விலையுயர்ந்த கனிவர்க்கங்களைப் பார்க்கும் விதத்தில், விலைகுறைந்த கனிவர்க்கங்களைப் பார்ப்பதில்லை. ஆனால் விலை குறைந்த பழவகைகளிலும் எல்லா சத்துக்களும் நிறைந்து கிடைக்கின்றன. அவ்வகையில் இந்த உலகத்தில் எல்லா பாகங்களிலும், எல்லா நேரங்களிலும் கிடைக்கும் ஒரே கனிவகை வாழைப்பழம் மட்டும்தான். வாழைப்பழம்தானே! என்று எண்ணிவிடாதீர்கள். அவற்றை சற்று அன்போடு, ஆர்வத்தோடு பாருங்கள். அதன் வடிவமைப்பு எவ்வளவு அழகாக இருக்கிறது. வாழைப்பழங்கள் பல நூறு வகைகள் இருந்தாலும் சாதாரணமாக கிடைக்கும் வாழைப்பழத்தின் நன்மையைப் பற்றி சற்று தெரிந்துக் கொள்வோம். இந்த கட்டுரையை படித்த பின்பு வாழைப்பழத்தை நீங்கள் பார்க்கும் விதம் முழுவதுமாக மாறியிருக்கும். இதற்கு பின்பு வாழைப்பழத்தை வாங்கி அதை நாளைக்குச் சாப்பிடலாம் என்று உங்கள் வீட்டு குளிர்சாதனப் பெட்டியில் சிறை வைக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது.

வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் (Natural Sugar) கொண்டுள்ளது. அதாவது சக்ரோஸ் (Sucrose), பிரக்டோஸ் (Fructose) மற்றும் குளுகோஸ் (Glucose) உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் (Fiber) கொண்டுள்ளது. இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 11/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை கொடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு நாசினியும் கூட. இதை நாம் உடலில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.மூளை வலிமை (Brain Power):
மிடில் செக்ஸ் (Middle Sex)ல் உள்ள டிவிக்கென்ஹாம் (Twickenham) கல்வி நிலையத்தில் இவ்வருடம் 200 மாணவர்களுக்கு காலை, இடைவெளி மற்றும் மதிய உணவில் வாழைப்பழத்தை உணவுடன் சேர்த்து கொடுத்து சோதனை செய்து பார்த்தபோது அவர்களது மூளைத்திறன் அதிகரித்ததோடு, பொட்டாசியம் நிறைந்த இந்த உணவு அதிகமான கல்வித்திறனை அளிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

மலச்சிக்கல் (Constipation):
ஒரு மனிதனுக்கு மலச்சிக்கல் வந்துவிட்டால் அவனது மனித குணமே மாறிவிடும். அதற்கு ஒரே வழி உங்கள் உணவில் தினமும் வாழைப்பழத்தைச் சேர்த்து சாப்பிடுங்கள். வாழைப்பழத்தில் அதிகமான பைபர் (Fiber) இருப்பதால் உங்கள் குடலை சுத்தமாக்கி மலம் இலகுவாக வெளியாவதற்கு வழிசெய்வதோடு மனத்தளர்ச்சியை சுத்தமாக போக்கிவிடுகிறது.

மந்தம் (Hangovers):
நம்மில் சிலர் சிறிது தூங்கிவிட்டு எழும்பிவிட்டால் கூட மந்தமாக இருப்பதாக அலுத்துக் கொள்வார்கள். உங்களுக்கு இதோ வாழைப்பழ மருந்து தயாராகவுள்ளது. வாழைப்பழத்துடன் தேனையும், பாலையும் சேர்த்து ஒரு குவளை மில்க் ஷேக் (Milk Shake) தயார் செய்து குடிக்கவும். வாழைப்பழம் தேனுடன் சேர்த்து வயிற்றை அமைதிப்படுத்தி இரத்தத்திலுள்ள இனிப்புச் சத்தை அதிகமாக்குகிறது. அத்துடன் இதில் பாலும் சேர்ப்பதால் பால், நீர் சத்தை சரியாக வைத்துக்கொள்கிறது. இந்த மூன்றும் சேர்ந்து மந்த நிலைக்கு டாட்டா காட்டிவிடுகிறது.

நெஞ்செரிப்பு (Heart Burn):
உங்களுக்கு நெஞ்செரிகிறதா? வாழைப்பழத்திற்கு இயற்கையாக அமில எதிர்ப்பு சக்தி இருப்பதால் வாழைப்பழத்தை தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வர நெஞ்செரிப்பு நோய் உங்களை விட்டு பறந்துவிடும்.

உடற்பருமன் (Over Weight):
ஆஸ்திரியா (Austria)வில் உள்ள மனோதத்துவ நிறுவனத்திலுள்ள (Institute of Psychology) ஆராய்ச்சியாளர்கள் 5000 நோயாளிகளை சோதனை செய்து பார்த்ததில் அதிகமான உயர்ந்த மனஅழுத்த வேலைகளில் உள்ளவர்கள் தான் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள். இந்த அழுத்தத்தின் காரணத்தால் அவர்களது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவு சீராக இல்லாத காரணத்தால் உடற்பருமன் ஏற்படுகிறது. அவர்களுக்கும் வாழைப்பழத்தை தினமும் உணவில் சேர்த்து அவர்களது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை ஒரு ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வந்து உடற்பருமன் குறைவதாக அந்த ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

குடற்புண் (Ulcers):
வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டால் குடலின் உட்பகுதி மென்மையாகி அதிகமான அமிலத்தன்மை ஏற்படுத்தாததினால் குடற்புண்ணை அழிப்பதுடன் குடற்புண் வராமல் காக்கிறது.

சீரான வெப்பநிலை (Temperature Control):
வாழைப்பழத்திற்கு குளிர்ந்த பழம் (Cooling Fruit) என்ற பெயரும் உண்டு. தாய்லாந்து நாட்டு மக்கள் அதிகமாக வாழைப்பழத்தை சாப்பிடுவதால் அவர்களது உடலின் தட்பவெப்ப நிலை சீராக உள்ளது.

காலநிலை மாற்றம் (Seasonal Affective Disorder):
வாழைப்பழம் சாப்பிடுவதால் காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய ஒரு வித மந்த நிலையை இல்லாமல் ஆக்குகிறது.

புகைப்பிடிப்பது (Smoking):
புகைப்பிடிப்பவர்கள் அந்த கொடுமையிலிருந்து விடிவு பெற வாழைப்பழத்தை சாப்பிடலாம். வாழைப்பழத்தில் B6. B12 அதிகமாக இருப்பதால் புகைப்பிடிப்பதால் ஏற்படும் Nicotine ஐ கொஞ்சம் கொஞ்சமாக குறைப்பதால் புகைப்பிடிப்பதிலிருந்து விடுபடலாம்.

மன அழுத்தம் (Stress):
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் அவை இதயத்துடிப்பை கட்டுக் கோப்புக்குள் வைத்துக் கொள்வதுடன் ஆக்ஸிஜைனை மூளைக்குச் செலுத்தி உடலின் தண்ணீரின் அளவை சமப்படுத்துகிறது. இதனால் மன அழுத்த நோய் நீங்கும்.

காலைத் தூக்கம் (Morning Sickness):
மூன்று நேர உணவு இடைவேளைக்குள்ளும் வாழைப்பழத்தை சாப்பிட்டால் உடம்பிலுள்ள இரத்தத்தில் உள்ள குளுகோஸ் (Blood Sugar) அளவு அதிகமாக்கப்பட்டு காலைத் தூக்க நோயிலிருந்து விடுபடலாம்.

நரம்பு நாளங்கள் (Nerve System):
இதில் B விட்டமீன்கள் அதிகமாக இருப்பதால் நரம்பு நாளங்கள் நன்றாக செயல்பட்டு நரம்புத் தளர்வை போக்குகிறது.

அழுத்தக் குறைவு (Depression):
‘Mind’ என்ற நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியின் முடிவாக ஒவ்வொரு உணவிற்குப் பின்பும் வாழைப்பழம் சாப்பிட்டால் அழுத்தக் குறைவு நோயை விரட்டலாம் என்று கூறுகிறது. ஏனெனில் மூளையிலிருந்து கசியக் கூடிய நீரை திட்டப்படி வெளியேற்றி மனிதனை மகிழ்ச்சியாக்குகிறது.

இரத்த சோகை (Anemia):
வாழைப்பழத்தில் அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் அதிக அளவு சிவப்பணுக்களை உண்டு பண்ணி இரத்தச் சோகை வராமல் தடுக்கிறது.

இரத்த அழுத்தம் (Blood Pressure):
குறைந்த அளவு உப்பும் அதிக அளவு பொட்டாசியமும் இருப்பதால் அதிக இரத்த அழுத்தத்தையும், வாதநோயையும் குறைக்க முடிமென்று அமெரிக்க அரசு உணவு நிறுவனம் கூறுவதோடு அதிக வாழை மரங்களை சாகுபடி செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

The new England Journal of Medicines ஆராய்ச்சிப்படி நமது தினசரி உணவில் வாழைப்பழத்தையும் சேர்த்துக் கொண்டால் Stroke கினால் ஏற்படக்கூடிய மரணத்தின் விகிதத்தை 40% குறைக்கலாம் என்கிறது. இவ்வளவு நன்மைகளை சுமந்து நிற்கும் வாழைப்பழத்தை பாதுகாக்கும். அந்த மஞ்சள் நிறத்தைக் கொண்டதால் தன்னால் இயன்ற உதவியை மனிதனுக்கு செய்ய மறக்கவில்லை. ”மறு” என்று சொல்லக்கூடிய கருப்பு வடு உடம்பில் ஏற்பட்டால் வாழைப்பழத் தோலை சிறு துண்டாக வெட்டி உள் தோல் அந்த வடுவின் மேலும் மஞ்சள் தோல் வெளியில் தெரியும் படி வைத்து அதன் மீது சிறிது மருத்துவ டேப் ஒட்டி வைத்தால் நாள்பட அந்த மறு மறைந்துவிடும்.

கொசுக்கடிக்கு மருந்து தேவையா?
வாழைப்பழத்தோலின் உட்பகுதியை கொசுக் கடித்த இடத்தில் வைத்து அழுத்தி தேய்த்தால் கொசுக் கடியால் ஏற்பட்ட வேதனையும் தீரும். வீக்கமும் வற்றிவிடும்.

வாழைப்பழத்தைச் சாப்பிட்டு விட்டு அதன் தோலை குப்பைத் தொட்டியில் எறிவதற்கு முன் அதன் உள்தோலைக் கொண்டு உங்கள் காலணி (Shoe) யை பாலிஷ் செய்து வெள்ளைத் துணியால் துடைத்துப் பாருங்கள். உங்கள் Shoe மினு மினுக்கும்.
எல்லா விட்டமின்களையும் ஒரு பழத்தின் மூலம் தந்து நமது உடல் நலம் பேண வழி வகுத்த வல்லமை படைத்த நம் இறைவனுக்கே எல்லாப் புகழும்.

தங்கள் கருத்துக்களை பகிரவும் ... நன்றி...:)

Saturday, February 4, 2012

உலகின் அதிசயம் - அங்கீகாரம் கிடைக்குமா?
உலகின் அதிசயம் என கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177 வருடங்கள் கட்டப்பட்டது , இந்த கட்டிடத்தை முதலில் கட்டும் போது, இதன் கீழ் உள்ள மண்ணை சோதிக்காமல் , ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அடிப்படை விசயங்களை கூட கடைப்பிடிக்காமல் கட்டிட அடித்தளத்தை மிகவும் மோசமாக கட்டினர் , இதனால் இந்த கட்டிடம் சாயத்தொடங்கியது, இரண்டாம் தளம் கட்டும் போது போர் மூண்டதால் இதன் கட்டுமானம்
சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் தொடங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள மண் இதற்கு ஒத்துழைத்தது ! இதனால்
மூன்றாவது தளத்தை அமைக்க முடிந்தது ! ஒரு கேவலமான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு கட்டிடம் உலக
அதிசயப்படியலில் இன்றும் உள்ளது ! (AUG 8TH 1173 - 1372)

நம் தஞ்சையில் உள்ள கட்டிடக்கலைக்கு பெயர் போன ராஜா ராஜா சோழனால் கட்டப்பட 216 அடி உலகையே மிரளச்செய்யும்
தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டது , இதன் கோபுரத்தில் உள்ள ஒரே ஒரு பாறை 80டன் ( 80,000 கிலோ ) எடை கொண்டது , உலகையே வியக்க வைக்கும் இந்த 1000
வருடங்களாக மேலாக கம்பீரமாக நிற்கும் கட்டிடம் இன்று வரை எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் எப்படி கட்டப்பட்டது என்று வியப்பை மட்டுமே பதிலாய் வைத்துள்ள இப்படிப்பட்ட கட்டிடம் உலக அதிசய பட்டியலில் இடம் பெறவில்லை!

சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை பற்றி மறந்து விடுகின்றோம் !

இந்த தகவலை நண்பர்களுடன் பகிருந்துகொளுங்கள்!
முகநூளில் பகிர்ந்த நண்பருக்கு நன்றி.. :)

பழங்களும் பயன்களும்
1. மலச்சிக்கலைப் போக்கும் *நறுவிலிப் பழம்*:

நறுவிலிப் பழத்தைத் தினசரியோ அல்லது மலச்சிக்கலின்போதோ சாப்பிட்டு வரமலச்சிக்கல் அற்றுப் போகும்.

2. தாகம் தணிக்கும் *ஆல்பகோடாப் பழம்*

காய்ச்சல் வந்தபின் நாக்கு உருசி மங்கி வறட்சியாகித் தாகம் அதிகரிக்கும்.
அப்போது, ஆல்பகோடாப் பழம் ஒன்று அல்லது இரண்டை வாயிலிட்டுச் சுவைக்கத் தாகம் தணியும். காய்ச்சல் விலகும்.

3. இளமை தரும் *தக்காளி*

இரத்தம், குடல் ஆகியவற்றைச் சுத்தம் செய்து இளமை தரும் தக்காளி,
மலச்சிக்கலையும் போக்கும்.

4. பேதியை நிறுத்தும் *எலுமிச்சம்பழம்*

எலுமிச்சம் பழச்சாறுடன் சர்க்கரை கலந்து 6 மணிக்கொருமுறை சாப்பிட்டு வர 2 நாளில் பேதி நின்றுவிடும்,

5. இன்பம் தரும் *இனிப்புக் கமலா*

இல்லற இன்பம் செழிக்க, 1 குவளை வெந்நீரில் இனிப்புக் கமலாப் பழத்தைப் போட்டுத் தேன் கலந்து சாப்பிட்டு வர தாதுபலமுண்டாகி, இல்லற இன்பம் செழிக்கும்.

6. விக்கலை நிறுத்தும் *கொய்யாப் பழம்*

கனிந்த கொய்யாப் பழம் சாப்பிட்டு வர விக்கல் வராது. இரைப்பை வலிமை பெறும்.

7. தலைக் கனம் குறைக்கும் *களாப் பழம்*

களாப் பழத்தை உணவுக்குப் பின் சாப்பிட்டு வர, தலையில் ஏறிய நீர் குறைந்து தலைக்கனம் குறையும்.

8. கருப்பைக்கு வலிமை தரும் *மாதுளை*

மாதுளை பழம் வாரம் 1 சாப்பிட்டு வர, கருப்பைக் குற்றம் வராது காக்கும்.
வயிற்றுக் கோளாறு வராது.

9. வாய்வுக்கும் *நாரத்தம் பழம்*

நாரத்தம் பழம் சிறிது சாப்பிட்டுவர வாய்வுக் கோளாறு நீங்கி வயிற்று உப்புசம் விலகும்.

10. கண்ணொளி தரும் *முந்திரிப் பழம்*

கொடி முந்திரிப் பழம் சாப்பிட்டு வர, கண் பார்வைத் துலங்கும்.

11. வெண்மேகம் தீர்க்கும் *கண்டங் கத்திரிப்பழம்*

கண்டங்கத்திரிப் பழம் 1 பிடி எடுத்து 2 குவளை நீரில் கொதிக்க வைத்துக் குழம்பு வைத்துக் குழம்புப் பதத்தில் தேங்காய் எண்ணை கலந்து பதத்தில் இறக்கி ஆறவைத்து வெண்புள்ளி மீது தேய்த்துவர அவை மறையும்.

12. காச நோய்க்குத் *தூதுளம் பழம்*

தூதுளம் பழத்தை அப்படியே 4 அல்லது 5 தினம் சாப்பிடக் காச நோய் தணியும். கபம் விலகும்.

13. கபால நரம்புகள் பலம் பெறப் *பலாப்பழம்*

பலாப்பழத்தைத் தேனுடன் கலந்து ஒன்றிரண்டு சாப்பிட்டு வர கபால நரம்புகள் வலிமை பெறும். அதிகம் சாப்பிட்டால் உடலில் சூடு உண்டாகும்.


14. பசியைத் 'துண்டும் *இலந்தைப் பழம்*

பகலுணவுக்குப் பின் இலந்தைப் பழம் சாப்பிட்டு வர, செரிமானம் தூண்டப்பெறும். அக்கினி மந்தம், கபக்கட்டு, பித்தம் விலகும்.

15. தாது விருத்தி தரும் *திராட்சை*

உலர்ந்த திராட்சைப் பழத்தைத் தேனில் ஊறவைத்துத் தினசரி பாலுடன் ஒரு ஸ்பூன் சாப்பிட்டுவர மலச்சிக்கல் விலகும். தாது விருத்தி பெறும்.


16. *பப்பாளிப் பழம்*

யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளிப்பழம் தினம் கால் பழம் சாப்பிட்டு வர, வீக்கம் கரையும், உடலுக்கும் வலிமை சேர்க்கும்.

17. *வாழைப்பழம்*

மூளையில் செயல்திறனை ஊக்குவிக்கும் வாழைப்பழம். செவ்வாழை, மலைவாழை மூளையின் ஆற்றலைப் பன்மடங்கு பெருக்கும்.

18. *வில்வப் பழம்*

பாலில் கலந்து சாப்பிட மலச்சிக்கல் விலகும். வயிற்றுப் புண் ஆறும். சிறுநீரகம் நன்கு செயல்படும்.

19. *அரசம் பழம்*

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, தரமான அணுக்களை உருவாக்குவதில் அரசம் பழம் முதலிடம் பெறுகிறது.

20. *சீமை அத்திப்பழம்*

மூட்டு வலியைப் போக்கி ஆரத்தச் சோகையை விலக்குவதில் சீமை அத்திப் பழம் சிறப்பாக உதவுகிறது. தினசரி 2 சீமை அத்திப்பழத்தைப் பாலில் போட்டுச் சாப்பிட மூட்டுவலி போகும். இரத்தச் சோகை விலகும்.

21. *பேரீச்சம் பழம்*

இல்லற சுகம் சோர்வின்றி இயங்கத் தினசரி 4 பேரிச்சம் பழத்தை இரவு பாலுடன் சாப்பிடுங்கள்.

22. *தர்பூசணிப் பழம்*

கோடைக்கால வெப்பத்தைத் தணிவித்து மூலநோய் வராமல் தடுக்கத் தர்பூசணிப் பழத்துடன் சிறிது தேன்கலந்து சாப்பிடலாம்.

23. *முலாம் பழம்*

மலச்சிக்கலை உடைத்து உடலுக்கு உரமளிப்பது முலாம்பழம். உடம்பு 'எடை' போட இதனை அடிக்கடி சாப்பிடலாம்.

24. *விளாம்பழம்*

பித்தம் அதிகமாகிச் சித்தம் தடுமாறுபவர்கள் காம விகாரத்தால் அவதிப்படுவர்கள். விளாம்பழத்தைக் காலை வெறும் வயிற்றில் சிறிது வெல்லம் கலந்து பிசைந்து சாப்பிட, பித்தம் தணியும். காம உணர்வு கட்டுப்படும்.

25. *அன்னாசிப் பழம்*

குடலில் பூச்சி சேருவதை வெளியேற்றிச் சிறு கட்டிகள் இருந்தால் அதனைக் கரைத்துச் சீரணத்தைத் தூண்டுகிறது அன்னாசிப் பழச்சாறு+தேன். மழைக்காலத்தில சாப்பிட்டுவர, தொண்டைக்கட்டு நீங்கும்.

உங்கள் கருத்துக்களை பகிரவும்...
நன்றி: இதயம் மற்றும் முக நூல் நண்பர்கள்..

Thursday, February 2, 2012

ulaga alivu - 6 :புவி வெப்பமாதல் - Global warming

புவி வெப்பமாதல் - Global warmingஉலக அழிவிற்கான பல்வேறு காரணங்களில் புவி வெப்பமாதல் ஒன்று. இதற்கு முழுக்க முழுக்க நாம் தான் காரணம்.நமது அஜாகிரத்தை தான் காரணம்.
புவி வெப்பமாதல் என்பது வெறும் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல, வளரும் நாடுகளின் எதிர்காலத்துடனும் பல லட்சம் கோடி ரூபாய்களுடனும் பின்னிப் பிணைந்திருக்கும் பிரச்சினை.

புவியின் சராசரி வெப்பத்தின் அளவு அதிகரித்து வருகிறது. நாம் வெளியிடும் கழிவு வாயுகளினால் வளி மண்டலத்திலுள்ள கரியமில வாயு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்களின் அடர்த்தி அதிகரிப்பதுதான் இதற்கான முக்கிய காரணம் என்பதே புவி வெப்பமாதல் கருதுகோளின் அடிப்படை ஆகையால், பசுமை இல்ல வாயுக்களின் அடர்த்தியைக் குறிப்பதான கரியமில வாயுவின் அடர்த்தியைக் குறைப்பதற்கான இலக்குகளை நிர்ணயிப்பதே இப்பிரச்சினைக்கான முடிவாகக் கருதப்படுகிறது.இவ்வாறு கற்று மாசுபடுவதால் நம் பூமி தன்னால் அதிக வெப்பமாகிறது. ஒ ஜோனில் ஓட்டை விழுகிறது என்று சொல்வதெல்லாம் இதனால் தான். நாம் வெளியிடும் நஞ்சு வாயுகளால் நம்மை பாதுகாக்கும் ஒ ஜோன் படலம் அடர்த்தியை இழந்து விடுகிறது.அதனால் சூரிய கைதிகளின் தாக்கம் நமது பூமியை அதிகமாக தாக்குகின்றது. இது பருவ நிலைகளில் மாற்றங்களை உண்டாக்கு கிறது. வெய்யில் காலங்களில் அதிக வெப்பமாகவும் குளிர் காலங்களில் அதிக குளிராகவும் இருப்பதை நாம் இப்போது உணரலாம்.இதற்கு புவி வெப்பம் அடைவதே காரணம்.

இவ்வாறான மாற்றங்கள் நமக்கு சதாரண மாக தெரிந்தாலும் பூமி மாபெரும் மற்றம் அடைகிறது. முழுக்க பனிமலைகளால் சூழப்பட்ட நமது உலகில் உள்ள பனிமலைகள் இரும்பை விட உறுதியானவை.ஆனால் அவை யாவும் இப்பொது தங்கள் பலத்தை இழந்து வருவதாக அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.இவ்வாறான பல லட்சம் அடி மலைகள் உருகும் போது கடல் நீரில் கடலை சர்துள்ள நிலங்களில் கடுமையான மாற்றங்கள் உண்டாகும் .இதை இங்கே படிப்பதை விட THE DAY AFTER TOMORROW என்ற ஆங்கில படத்தில் இதை பற்றி விரிவாக சொல்லி இருப்பார்கள்.அதை பார்த்தால் உங்களுக்கு எளிதாக புரியும்.புவி வெப்பமாதலை தடுக்க என்ன செய்யலாம்?
கரியமில வாயு அதிகரிப்புக்கு மிக முக்கியமான பெட்ரோலியப் பொருட்கள் பயன்பாட்டை வெகுவாகக் குறைப்பதும் அதிக மாசற்ற ‘செம்மையான இயந்திரவியல் கொள்கைக்கு மாறுவதும் புவி வெப்பத்தைத் தணிக்க முக்கிய தீர்வுகளாக முன்வைக்கப்படுகின்றன.

“செம்மையான இயந்திரவியல்’ என்பதை விரிவான பொருளில் சொல்வதென்றால், இப்போதுள்ள பழைய தொழிநுட்பத்தை அப்படியே கடாசிவிடுவது என்பதேயாகும். விறகு அடுப்புக்குப் பதில் சூரிய சக்தி அடுப்பு என்பதில் தொடங்கி ஹைட்ரஜனில் இயங்கும் மொபெட்டுகள், ஹைபிரிட்காரர்கள் வரை எல்லாமே புதியவையாகும்.

‘கார்பன் கிரெட்டிட்ஸ்’ வர்த்தகத்துக்கு வழி வகுக்கும். இன்றைய திகதியில் உலகிலுள்ள பெரும் தொழிற்சாலைகளை மட்டும் செம்மையான இயந்திரவியலின் கீழ் கொண்டுவர மட்டுமே ரூ. 16 இலட்சம் கோடி தேவைப்படும் என்று மதிப்பிடப்படுகிறது. அதாவது 2030ல் உலக மாசு அளவை 2007 அளவுக்குக் கொண்டுவர ரூ. 20 இலட்சம் கோடி தேவைப்படும் என்று மதிப்பிடுகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பகிரவும்.. நன்றி.. :)

NOTE: இது யாரையும் பீதி அடைய செய்யவோ இல்லை இந்த உலகம் அழிந்து விடும் என்று பயப்பட செய்யவோ அல்ல .நான் படித்த விசயங்களை உங்களோடு பகிர்கிறேன்.எதாவது தவறு இருத்தல் மன்னிக்கவும்...

யார் காரணம் என் இந்த நிலைக்கு..? :

யார் காரணம் என் இந்த நிலைக்கு..?யார் காரணம்
என் இந்த
நிலைக்கு..?

எந்த கவலையும் இல்லாமல்,
தன்,
காமக்கழிவை
என் தாய் மீது
புலம் பெயர்த்த
அந்த
யாரோ ஒரு ஆணா..?

விந்தில்
உயிர் ஜனிக்கும்
என்று தெரிந்தும்,
தன் வயிற்று பசியை
போக்கிக்கொள்ளும்
சாக்கில் தன்
காமபசியையும்
போக்கிக்கொண்ட
என் தாயா..?

நீங்கள் யாரும்
என்னைப்பற்றி
கவலைப்பட போவதில்லை..,!

எங்கோ இருக்கும்
தெய்வத்திற்கு,
உங்கள் வீட்டில்
உண்டியல் சேர்த்து,
பல நாட்கள்
வரிசையில் நின்று
தெய்வ தரிசனம்
பார்த்து,
உண்டியல்
காணிக்கை செலுத்தும்
நீங்கள்
தினமும்
சாலையோரம்
நான்,
பசித்து கிடப்பதை
பார்க்காமல்
போவது எப்படி..?

நான் என்ன செய்தேன்..?

நான் பிறப்பு வரம் கேட்கவில்லையே..?
வலுக்கட்டாயமாய்
எனக்கு பிறப்பு
கொடுத்தது யார்..?

அம்மா என்கிறார்கள்,
அப்பா என்கிறார்கள்,
குழந்தைகள்,
எனக்கு...?

அழுக்காய் இருப்பதால்
அருகில் அனுமதிக்காத
மக்களே..!
எத்தனை பேர்
என்னை
குளிப்பாட்ட நினைத்தீர்கள்..?

எனக்கு பரிதாபம்,
பார்க்கும் உங்களில்
எத்தனை பேர்
என்னை
படிக்க வைக்க எண்ணினீர்கள்..?

குப்பைகளாக
பார்க்க படுவதினால்
குப்பையே
தெய்வமாகி
போனது எனக்கு,

என் கேள்விகளுக்கு
எந்த
பகவான் பதில் கூறுவார்..?
எந்த
பகுத்தறிவாளி
பதில் கூறுவார்..?

என்னை
குப்பையாய்
பார்க்கும் மக்களே..!
என்னை வாழ
வைப்பவர்கள் நீங்கள்
நீங்கள் வாழவேண்டும்,

நீங்கள் குப்பை
போட்டால்தான்,
என் குப்பை
வயிறு நிறையும்...!

உணவு வேண்டாம்
காகிதங்களை
குப்பையில் போடுங்கள்..,
நானும்
"உழைத்து உண்ணவே விரும்புகிறேன்"...!

நான் வெளியே
அழுக்காய்
இருந்தாலும்
உள்ளே சுத்தமாய்
இருக்கிறேன்...!
" நீங்கள் "....!

நன்றி எனக்கு முகநூலில் அனுப்பிய நண்பருக்கு .

உங்கள் கருத்துக்களை பகிரவும் ... நன்றி...Tuesday, January 31, 2012

‌கி‌ரி‌க்கெ‌ட்: மூத்த வீரர்கள் என்ன செய்ய போகிறார்கள்.?

கி‌ரி‌க்கெ‌ட்: மூத்த வீரர்கள் என்ன செய்ய போகிறார்கள்.?ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக, பேப்பரில் பலம் வாய்ந்த இந்திய அணி பாதாளத் தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில் மூத்த வீரர்களான சச்சின், டிராவிட், லஷ்மண் போன்றோர் தங்களது ஆட்டத்தின் மீது உண்மையான சந்தேகம் கொண்டு விலகிக் கொண்டு இளைஞர்களுக்கு வழிவிடுவதை பரிசீலிக்கவேண்டும்.இவர்களைக் கொண்டு 8 டெஸ்ட் போட்டிகளைத் தொடர்ச்சியாக அயல்நாட்டு மண்ணில் மண்ணைக் கவ்வியது இந்திய அணி. இவர்கள் இல்லாமல் இன்னும் ஓரிரு தொடர்களை இழக்கட்டும்! பரவாயில்லை. குறைந்தது இந்த அளவுக்கு தேறும் இளம் வீரர்கள் யார் என்பதையாவது நாம் பார்த்து விடலாம்.

சீரியசாக சில விஷயங்களை யோசிப்பதை விடுத்து வீரர்கள் தங்கள் பழம்பெருமைகளைப் பேசி வருவதும், நாங்களும் இங்கே 2- 0 என்று ஜெயித்தோம் என்று பிதற்றி வருவதும் முன்னேற்றத்திற்கு வழி வகை செய்யாது.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் 'ஒன்றுமே நடந்து விடவில்லை" இதே வீரர்கள்தான் நம்மை பெருமைக்கு இட்டுச்சென்றனர் என்றெல்லாம் கொம்பு சீவி விடுவதும் உறுதியாக இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டை படுகுழியில் தள்ளும் முயற்சி.
சச்சின் 100, 100 என்று கனவு கண்டு இரண்டு மூன்று தொடர்களாக இந்திய அணியைச் சரியச் செய்துள்ளார். சேவாக் உடல் சமநிலை இல்லை. ஷாட் ஆடுவதற்கு முன்பும், பின்பும் அவரது பேலன்ஸ் சரியில்லை. ஹூக் , புல் ஷாட்களை ஆடாமல் நீண்ட நாட்களுக்கு ஓட்ட முடியாது, எனவே அவர் பின்னால் களமிறங்கவேண்டும், லஷ்மன் கிரீஸில் நின்ற படியே குப்பை கொட்டுகிறார். கம்பீரை அழைத்து ஒழுங்காக ஷாட் பிட்ச் பந்துகளை விளையாடும் வரை அணியில் இடமில்லை என்று கூறிவிடவேண்டும். தோனியை அழைத்து ஓய்வு பெற்ற மூத்த கேப்டன்கள் அவரது தவறுகளைச் சுட்டிக் காட்டவேண்டும். மேலும் கேப்டன் பேட்டிங் செய்வதும் அவசியம் என்பதையும் அவருக்கு அறிவுறுத்தவேண்டும்.
கோலி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்தார். ஆனால் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் இந்த தரத்திற்கு தான் தயார் என்பதை நிரூபித்துவிட்டார். அது போலத்தான் பிறரும், ஓரிரு டெஸ்ட் போட்டிகள் திணறல் இருக்கும் அதன் பிறகு அவர்கள் உருப்படியான வீரர்களாக மாறுவார்கள். அவர்களின் வழியை செங்கல் பெயர்ந்து விழுந்த குட்டிச் சுவர்களும், மகான் வீரர்களும் மறித்து வருவது நியாயமல்ல.

கிரிக்கெட் என்பது வெறும் பேட்டிங் மட்டுமல்ல. 40 வயது வரை ஒருவர் ரன் எடுக்கலாம் என்று வைத்துக் கொண்டாலும் ஃபீல்டிங் என்று ஒன்று இருந்து வருகிறதே! அதற்கு நியாயம் செய்யுமா வயது? லஷ்மண் அடிலெய்ட் டெஸ்ட் போட்டிகள் மட்டுமல்லாது தொடர் முழுதும் முக்கியத் தருணங்களில் கேட்ச்களைக் கோட்டை விட்டு இஷாந்த், அஷ்வின் வயிற்றெரிச்ச்லைப் பெற்றார். டிராவிடின் கேட்சிங் திறமையும் போய்விட்டது. சச்சின் பாதுகாப்பாக டீப் திசையில் பீல்ட் செய்து வருகிறார். எனவே இவர்கள் தீவிரமாக வேறு பாதையை பற்றி யோசிப்பது நல்லது.முதலில் இந்தத் தொடரில் என்ன நடந்தது என்பதைப் பற்றிய ஒரு நேர்மையான விசாரணையும், அந்த விசாரணையின் முடிவை வெளிப்படையாக அறிவிப்பதும் நேர்மையாக அதற்கான திருத்தங்களைக் கொண்டு வருவதுமே தீர்வாக இருக்க முடியும்.இதனை விடுத்து அடுத்த 2 ஆண்டுகளுக்கு அயல்நாட்டுத் தொடர் இல்லை அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப்போடுவதும், அடுத்த வெற்றி பெற்றால் ரசிகர்கள் இந்தத் தோல்விகளை மறந்து விடுவார்கள் என்ற மனோநிலையையும் நிர்வாகமும் வீரர்களும் கொண்டிருந்தால் அது இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு மூடுவிழாவாக அமையும் என்பதில் ஐயமில்லை.

உங்கள் கருத்துக்களை பகிரவும்... நன்றி.. :)

Thursday, January 19, 2012

நெருப்பால் அழிந்த உலகின் வயதான மரம்.

நெருப்பால் அழிந்த உலகின் வயதான மரம்.
நீங்கள் இங்கு காணும் மரம் உலகின் மிக வயதான மரங்களில் ஒன்று. ப்ளோரிடா வில் கிட்டதட்ட 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. உலகின் வயதான மரம் இது 125 அடி (38 m ) உயரம் கொண்ட "செனடோர்" (senator) என்ற பெயர் கொண்ட மரம் சமீபத்தில் தீக்கிரையானது. இந்த செயலை யார் செய்தது என்று தெரிய வில்லை.உங்கள் கருத்துகளை pakiravஉம்.. நன்றி.. :)