Thursday, March 31, 2011

அதிசய பூனை...


அதிசய பூனை - Mutant Cat.
நீங்கள் கீழே பார்க்கும் பூனை அதிசயமானது. ரெட்டை தலையுடன் பிறந்தது. பார்க்க பிரமிப்பாகவும் சற்று பயமாகவும் உள்ளது.

.


.


.


.


.


.


.உங்கள் வருகைக்கு நன்றி...

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்... :)

Tuesday, March 29, 2011

உலகக்கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் இதுவரை...

உலகக்கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் இதுவரை...

19
92:இந்தியா 5 உலக கோப்பைக்கு பிறகு முதன் முதலாக பாகிஸ்தானோடு 1992- உம் ஆண்டு மோதியது. மார்ச் 4 ,1992 இல் மொஹம்மத் அசாருதீன் டாஸ்வென்று பேட் செய்ய முடிவெடுத்தார். சச்சின் னின்அதிரடி அரைசதத்தால் இந்தியா 49 ஓவரில் எடுத்தது. அமீர் சொஹைல் லின் (62) ஆட்டம் பாகிஸ்தான் னை நம்பிக்கை ஏற்படுத்தியது. ஆனால் திடீரென அமீர் சொஹைல் அவுட் ஆகா பாகிஸ்தான் (105-2 to 183)சுருண்டது.

1996:
அதன் பிறகு காலிறுதியில் பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தானோடு மோதியது. சிந்து மற்றும் சச்சின் இணைத்து இந்தியா வுக்கு பெரிய துவக்கத்தை தந்தனர் (93). இறுதியில் ஜடேஜா வின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா என்ற 287-8 மாபெரும் இலக்கை வைத்தது. ஆனால் பாகிஸ்தானும் 10 ஓவரில் 84 அடித்து இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது. இருப்பினும் வெங்கடேஷ் பிரசாத் அபார மாக பந்து வீசி இந்தியா ரன்களில் 39 வெற்றி பெற உதவினார். இந்த மேட்ச் கீழே உள்ள சர்ச்சையால் பிரபலம் அடைத்தது. இந்த வெற்றி மூலம் இந்தியா அரை இறுதி சென்றது.
1999:
1999 நடந்த போட்டி அபோது நடந்த கார்கில் போரால் பெரிதாக எதிர்பார்க்க பட்டது. ஒவ்வொரு இந்தியனும் இந்தியா தோற்க கூடாது என்ன எண்ணினான். சடகோப்பன் ரமேஷ் மட்டும் சச்சின் nalla துவக்கத்தை தந்தாலும் இந்தியா விரைவில் விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. ராகுல் டிராவிட் - 61, அசாருதீன் - 59 எடுத்து இந்தியா ஒரு கௌரவமான ஸ்கோர் (227-6) எடுக்க உதவினர். ஆனால் இந்தியாவில் வேகபந்து வீச்சாளர்கள் பிரசாத் (5-27 ) , ஸ்ரீநாத் (3-37) பாகிஸ்தானை வெளியே அனுபினர்கள். இந்தியா 47 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


2003:


இந்த போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்றி பேட்டிங் எடுத்தது. சய்யத் அன்வர் மற்றும் உமர் நல துவக்கம் அளித்தனர். அன்வர் அதிரடி சதம் (103)அடித்து 273-7 என்ற சவாலான இலக்கை கொடுத்தது.பாகிஸ்தான் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை சச்சின் னின் (93 runs in 75 balls )அதிரடியான துவக்கம் மற்றும் ஆட்டத்தால் எளிதாக வெற்றி பெற்றது. சச்சின், ஷோஹிப் அக்தர் முதல் ஓவரில் 2 பௌண்டரி மற்றும் ஒரு சிச்சர் அடித்து ரசிகர்களை உற்சாக படுத்தினர். அக்தர் தான் பங்கிற்கு சச்சின் விக்கட்டை எடுத்து பலி தீர்த்தார். பின் யுவராஜ் சிங் மற்றும் டிராவிட் இந்தியாவை வெற்றி பெற வைத்தனர்.

2007:
இந்த ஆண்டு அணிகளும் முதல் சுற்றிலேயே வெளியேறின.எனவே மோதவில்லை.


2011:

இதுவரை இந்தியாவை பாகிஸ்தான் உலககோப்பை போட்டியில் வென்றது இல்லை. இந்த முறை மற்ற ஆண்டுகளை விட அதிக பலத்துடன் களம்இறங்குகிறது. சொந்த மண்ணில் விளையாடுவது இந்தியாவுக்கு பலம் மட்டும் பலவீனமும் ஆக்கலாம். அப்ரிடி தலைமையில் பாகிஸ்தான் சிறப்பாக விளையாடி வருகிறது. அவர்களும் இந்த போட்டியை வெல்ல ஆர்வமாக இருகிறார்கள்.இது வரை வெற்றி பெறாதது அவர்களுக்கு வெறியை கொடுக்கும்.ஆனால் இந்தியா அளவுக்கு அவர்கள் அணி பலமாக இல்லை. எப்போது என்ன வேண்டுமானாலும் நடக்கும். பேட்டிங் மெகா மோசமா உள்ளது.அதே சமயம் இந்தியா பௌலிங் மிக மோசம். இந்தியா முதலில் ஆடி 300 ரன் களுக்கு மேல் எடுத்தால் வெற்றி பெறலாம். இல்லை என்றால் பாகிஸ்தானை 260 ரன் களுக்குள் சுருட்ட வேண்டும். உலகக்கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் ஒரு முக்கியமான போட்டியில் விளையாடுவது இதவே முதல் முறை.இதற்கு முன் எல்லாம் வெறும் லீக் போட்டி மற்றும் கால் இறுதியில் தான் மொதயுள்ளது.எது எப்படியோ யார் இறுதி போட்டி செல்வார்கள் என்று நாளை தெரிந்துவிடும்.

உங்கள் கதுக்களை தெரிவிக்கவும்...

Monday, March 28, 2011

இலங்கை - நியூசிலாந்து : உலககோப்பை இறுதி போட்டிக்கு செல்வது யார்?

இலங்கை - நியூசிலாந்து :
உலககோப்பை இறுதி போட்டிக்கு செல்வது யார்?
நாளை கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் முதல் அரையிறுதியில் இலங்கை அணி, நியூஸீலாந்தை எதிர்கொள்கிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு நேர்ந்த கதியை இலங்கைக்கும் ஏற்படுத்துமா நியூஸீலாந்து என்பதே அனைவரது எதிர்பார்ப்புமாக இருந்து வருகிறது.

ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே தோன்றுகிறது. காரணம்
1. இலங்கை தன் சொந்த மண்ணில் விளையாடுகிறது.
2. லீக் சுற்றில் நியூஸீலாந்து இலங்கையிடம் தோல்விதழுவியுள்ளது.
3. இலங்கையின் துவக்க வீரர்கள் அபாயகரமாக ஆடி வருகிறார்கள்.
4. நியூஸீலாந்தின் பேட்டிங் வரிசை பலவீனமாக்வும் நம்பத்தகுந்த விதத்திலும் விளையாடவில்லை.
5. நியூஸீலாந்து அணியின் சுழற்பந்து வீச்சிற்கு எதிரான கடுமையான பலவீனம்.

இந்த 5 காரணங்களும் இலங்கைக்குச் சாதகமாக வெற்றி வாய்ப்பைத் திருப்பும் என்று எதிர்பார்க்கலாம்.

ஆனால் நியூஸீலாந்திடம் ஒரு எக்ஸ்-காரணி உண்டு. அதுதான் அந்த அணியின் ஃபீல்டிங். அன்று காலிறுதியில் ஜாக் காலிஸிற்கு ஜேகப் ஓரம் பிடித்த கேட்சும் டிவிலியர்ஸ் ரன் அவுட் செய்யப்பட்ட விதமும் தென் ஆப்பிரிக்காவை தோல்விக்கு இட்டுச் சென்றது. எனவே ஃபீல்டிங் மூலம் போட்டியை மாற்றும் திறன் நியூஸீ.யிடம் உள்ளது.

2007ஆம் ஆண்டும் இந்த இரண்டு அணிகளே அரையிறுதியில் மோதின. முதலில் இலங்கை பேட் செய்ய தரங்காவின் 73 ரன்களாலும், ஜெயவர்தனேயின் சதத்தினாலும் 5 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது.. நியூஸீலாந்து 208 ரன்களுக்குச் சுருண்டு சரணடைந்தது.

அது போன்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். தில்ஷானும், தரங்காவும் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 757 ரன்களை ஜோடி சேர்ந்து எடுத்துள்ளனர். சங்கக்காராவும் ஜெயவதனேயும் இது வரை 563 ரன்களையும் 2 சதங்களையும் சேர்ந்து எடுத்துள்ளனர். எனவே இந்த நால்வரையும் சொற்ப ரன்களுக்கு வீழ்த்தினால் நியூஸீலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். ஆனால் இதனைச் செய்யும் பந்து வீச்சு சேர்க்கை நியூஸீலாந்துக்கு உள்ளதா என்று தெரியவில்லை.நாளை நியூசீலாந்து வெற்றி பெற பிரெண்டன் மெக்கல்லம் அதிரடி சதம் எடுக்கவேண்டும், ராஸ் டெய்லர் 70- 80 ரன்களை எடுப்பதும் அவசியம். மொத்தத்தில் 300 ரன்களுக்கும் மேல் நியூஸீலாந்து குவித்து விட்டால் ஓரளவுக்கு இலங்கையை நெருக்கடிக்குட் படுத்தலாம்.

நியூஸீலாந்து இலக்கைத் துரத்தும் போது இலங்கையை 280 ரன்களுக்கு மட்டுப்படுத்தி பிறகு இலக்கைத் துரத்தும் போது பதட்டமடையாமல் ரன் விகிதம் பற்றி கவலையில்லாமல் 50-வது ஓவர் வரை ஆட்டத்தை இழுத்தாலே போதும் இலங்கைக்கு அழுத்தம் ஏற்படும். தில்ஷான் போன்றவர்கள் பந்து வீச்சை பிரிக்கவேண்டும், விக்கெட்டுகளைக் கொடுக்கக்கூடாது.

டேனியல் வெட்டோரியின் பந்து வீச்சு நாளைய நியூஸீலாந்து வெற்றிக்கு மிக அவசியம்.

நாளை கொழும்புவில் நடைபெறும் நியூஸீலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதி கிரிக்கெட் போட்டியில் இலங்கையின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.

அவருக்கு இரண்டு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரது உடல்நிலை குறித்து தீவிர பரிசீலனைக்குப் பிறகே முடிவெடுக்கப்படும் என்று இலங்கை கிரிக்கெட் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கேப்டன் குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார்.

இன்று வலையில் குறிப்பிடத்தகுந்த நேரம் பந்து வீசிய முரளிதரன் முழு உடல் தகுதியுடன் இருப்பதான அடையாளத்தில் வீசவில்லை.

முரளிதரன் விளையாட முடியாமல் போனால் அவரது இடத்தில் வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகரா விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்ப்டுகிறது.

நியூசீலாந்து அணி அதிர்ச்சியளிக்கக்கூடியதுதான் என்றாலும் ஒரு அணியாகப் பார்க்கும்போது இலங்கைக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.இருப்பினும் கிரிக்கெட் என்பது நிச்சயமின்மைகளின் ஆட்டம் என்பதால் பொறுத்திருந்து பார்ப்போம்.

Sunday, March 27, 2011

நான் பெரிய கொம்பன்... :Watusi Bull

பெரிய கொம்புடைய மாடு - Watusi Bull .
உலகிலேயே பெரிய கொம்புடைய மாடு. இதன் கொம்பு மட்டும் 92.25 செ.மீ நீளம் மற்றும் ஒவ்வொரு 100 கொம்பும் பவுண்ட் எடை. இதன் பெர்யர் லுர்ச். வாதுசி இனத்தை சேர்ந்தது. இதன் பொழுது போக்கே இதன் உரிமையாளரின் பண்ணையில் உள்ள மற்ற குதிரைகளை பாதுகாப்பதே... இப்படி ஒரு காவலன் இருக்கும் போது யாரு திருட வருவாங்க :)
Frankly I can’t imagine how hard it must be for this fella to keep his head up with these things. This is Lurch, Lurch was born in Missouri, USA and is currently known as the bull with the largest horn in the world, the proud bearer of the world’s largest horns. Lurch is a Watusi bull living in an Animal shelter, whose horns measure 92.25 cm and weigh more than 100 pounds each. He’s quite the attraction in his home state and he’s favorite pass-time is acting as bodyguard for a crippled horse that’s being harassed by fellow horses.உங்கள் கமெண்ட்ஸ் வரவேற்க படுகிறது.... நன்றி :)

Saturday, March 26, 2011

சாப்ட்வேர் தொழிலாளியின் வாழ்க்கை: கவிதை

சாப்ட்வேர் கவிதைகள்...


எனக்கு கவிதை எல்லாம் எழுத வராது. (நான் ஒன்னும் அவ்ளோ பெரிய அப்பாடாக்கர் இல்ல :) ).ஆனா படிக்கச் பிடிக்கும். எனக்கு இந்த கவிதைகளை என் நண்பன் அனுப்பி வைத்தான். யார் எழுதியது என்று தெரியவில்லை. எனக்கு பிடித்தால் உங்களோடு பகிர்கிறேன்.

உங்கள் கமெண்ட்ஸ் சுக்கு நன்றி...

இந்த கவிதையை எழுதியவருக்கும் நன்றி... :)Friday, March 25, 2011

பாம்பு : பாம்பு :பாம்பு - Snake Attack

பாம்பின் தாக்குதல் : Snake Attack

ஒரு ஆராய்ச்சியாளர் பாம்பை கொண்டு செல்லும் போது அது தப்பித்து அவரையே தாக்கியது.அந்த மயிர்கூச்செறியும் படங்கள் உங்களுக்காக...

உங்கள் கமெண்டுகள் வரவேற்க படுகின்றன.... நன்றி... :)

Thursday, March 24, 2011

உலக அழிவு - 4 : சூரியப் புயல்

சூரியப் புயல்ள் - Solar Storm

நாம் இந்த பதிவுகளில் உலக அழிவுக்கான காரணங்களை பற்றி பார்த்து வருகிறோம்.இன்று அதில் சூரிய புயல்களை பற்றி இங்கு காண்போம்.இது யாரையும் பயமுறுத்த அல்ல...சூரியனில் உள்ள வாயுக்கள் காரணமாக சூரியன் இடை விடாது எரிந்து கொண்டிருக்கிறது.
அதில் ஏற்படும் வெப்பமும், பூமியை எட்டுவதால் தான் பூமியில் வெப்பம் ஏற்படுகிறது. இதேபோல சூரியன் எரிவதால் ஏற்படும் வெளிச்சம் பூமியை எட்டி வெளிச்சத்தையும் தருகிறது.பூமியில் இருந்து சூரியன் நீண்டதூரம் இருப்பதால் சூரியனின் வெப்பம் மிக குறைந்த அளவு மட்டுமே பூமிக்கு வருகிறது. எனவேதான் பூமியில் உயிரினங்கள் வாழ முடிகின்றன.

பூமிக்கு வரும் சூரியனின் வெப்பம் கொஞ்சம் அதிகரித்தாலும் கூட அது பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும்.இந்நிலையில் ஆக.1ஆம் தேதி காலை சூரியனின் மேல்பகுதியில் அணுகுண்டு வெடிப்பது போல 2 தடவை மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளது.இதில் முதல் வெடிப்பு பூமி உருண்டையின் அளவை விட பெரிய அளவில் இருந்துள்ளது. அடுத்து சில நிமிடம் கழித்து 2-வது வெடிப்பு ஏற்பட்டது. அது முதல் வெடிப்பை விடகொஞ்சம் சிறியதாக இருந்தது.

இதை அமெரிக்க நாசா விஞ்ஞானிகள் நவீன டெலஸ்கோப் மூலம் படம் பிடித்து உள்ளனர். வெடிப்பு ஏற்பட்டபோது பயங்கர வெப்பம் கிளம்பி இருக்கிறது. அது பூமியை நோக்கி மணிக்கு 9 கோடியே 30 லட்சம் மைல் வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது.இதன் வெப்ப அளவு எந்த அளவுக்கு இருக்கும் என்று கணிக்க முடியவில்லை. சூரியன் வெப்பம் பூமியை நேரடியாக தாக்காமல் பூமிக்கு மேலே உள்ள வாயு மண்டலங்கள் தடுக்கின்றன. இதில் வடிகட்டப்பட்டுதான் வெப்பம் பூமிக்கு வருவது உண்டு.இப்போது வரும் பெரிய வெப்பத்தை வாயு மண்டலங்களால் தடுக்க முடியுமா? அல்லது நேரடியாக தாக்கி விடுமா? என்று தெரிய வில்லை. வாயு மண்டலங்கள் வெப்பத்தை தடுக்க முடியா விட்டால் அது பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். இல்லை என்றாலும் கூட வேறுவகை பாதிப்புகள் சில ஏற்பட வாய்ப்பு உள்ளன.

வெடிப்பால் ஏற்பட்ட சூரிய வெப்பத்தை சூரிய சுனாமி என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டு உள்ளனர்.பூமிக்கு மேல்பகுதியில் வாயு மண்டலத்தை தாண்டி ஏராளமான செயற்கை கோள்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை இந்த செயற்கை கோள்கள் செய்து வருகின்றன. சூரியனில் இருந்து வரும் அதிகவெப்பம் செயற்கை கோள்களை தாக்க வாய்ப்பு உள்ளது. இதனால் செயற்கை கோள்கள் செயலிழந்து விடும் அபாயமும் உள்ளது. செயற்கை கோள்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் செயலிழந்தால் அது உலகம் முழுவதையும் ஸ்தம்பிக்க செய்துவிடும்.சில ஆண்டுகளுக்கு முன்பு தேசிய மின் கிரிட் அதிகளவு வெப்பம் அடைந்தது; விமானங்களின் எலக்ட்ரானிக் கருவிகள் பழுதடைந்தன; செயற்கைக்கோள்கள், கப்பலில் உள்ள கருவிகள் செயல்படாமல் நின்றன. இதற்கு காரணம், சூரியன் தனது ஆழ்ந்த உறக்கத்தை கலைத்து விழித்துக் கொண்டதால் அதிகபட்ச மின்காந்த சக்தியை வெளிப்படுத்தியது தான். புயலாக வெளிப்பட்ட அந்த மின்காந்த சக்தி பூமியை தாக்கியது. சூரியன் அதிகபட்ச சக்தியை வெளிப்படுத்தியதால் தான் பூமியில் பல்வேறு விளைவுகள் ஏற்பட்டன என்று விண்வெளி ஆய்வு விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இதேபோன்று, சூரியனில் ஏற்படும் மின்காந்த புயலின் தாக்கம் வரும் 2013ல் அதிகமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. "மின்காந்த சூப்பர் புயல் ஒன்று பூமியை தாக்க உள்ளது. இதனால் தொடர்ச்சியாக பேரழிவு ஏற்பட்டு பூமி பாதிக்கும் நிலை ஏற்படும். எனவே, அவசர சேவைகள் மற்றும் தேசிய பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என்று மின்காந்த சூப்பர் புயல் குறித்து நாசா புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது. "சூரியனின் மின்காந்த புயல் வரப்போகிறது என்று தெரியும். ஆனால், அதன் விளைவுகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பது தெரியாது.

இதனால் செயற்கைக்கோள்கள், கப்பல்கள், விமானங்கள் வங்கிகள், கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் கருவிகள், தொலைத்தொடர்பு கருவிகள் பாதிக்கப்பட்டு பெரிய பிரச்னை ஏற்படும். "பெரிய நகரங்களில் மின் பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பை சரிசெய்வது கடினமானதாகவும், நீண்ட நாட்களும் ஆகும். சூரிய ஒளியில் மாற்றம் ஏற்படுவதால் மின்காந்த புயல், மின்னல் தாக்குவது போல் பூமியை தாக்கும்' என்று நாசாவின் ஹீலியோ பிசிக்ஸ் பிரிவு டைரக்டர் விஞ்ஞானி டாக்டர் ரிச்சர்ட் பிஷ்ஷர் கூறுகிறார். "விண்வெளி வானிலை' என்ற தலைப்பில் வாஷிங்டனில் சமீபத்தில் ஒரு மாநாடு நடந்தது.இதில் நாசா விஞ்ஞானிகள், கொள்கை வகுப்பாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் சூரிய மின்காந்த புயல் குறித்து எச்சரிக்கை செய்யப்பட்டது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட விஞ்ஞானிகள் டாக்டர் பிஷ் ஷரின் எச்சரிக்கையை ஏற்றுக் கொண்டனர். டாக்டர் பிஷ்ஷர் (69) சூரிய மின்காந்த புயல் குறித்து கடந்த 20 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 22 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனில் மின் காந்த சக்தி அதிகமாக வெளிப்படுகிறது. சூரியனில் 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை மின்காந்த புயல் ஏற்படுகிறது. இது புள்ளிகள் அல்லது சுடரொளி போல் காணப்படுகிறது.

அப்போது, சூரியனின் வெப்பம் மிக அதிகபட்சமாக, 10 ஆயிரம் டிகிரி பாரன்ஹீட் (5,500 டிகிரி செல்சியஸ்) வெப்பம் அடையும். மனிதனின் வாழ்நாளில் இதுபோல், மூன்று, நான்கு முறை சூரியனில் புயல் ஏற்படுவதை அறியலாம். வரும் 2013ம் ஆண்டில் இரண்டு நிகழ்வுகளும் ஒன்று சேர்ந்து வர உள்ளதால் சூரியனில் இருந்து அதிகளவில் கதிரியக்கம் வெளிப்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் வட ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தில் உள்ள மின்சக்தி நிலையங்கள் எளிதாக பாதிக்கப்பட்டு பல மாதங்கள் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதியடையும் சூழ்நிலை ஏற்படலாம். எந்த அளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும், பாதிப்பு எப்படி இருக்கும் என்று தெரியாததால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை இப்போதே கூற முடியாது. இவ்வாறு ரிச்சர்ட் பிஷ்ஷர் எச்சரித்துள்ளார்.

மீண்டும் அடுத்த பதிவில் வேறொரு காரணத்தை பற்றி ஆய்வு செய்வோம்.

உங்கள் கருத்துக்களை கமெண்ட் டில் சொல்லுங்கள் --- நன்றி...

thanks to http://eoazis.blogspot.com for informations

Wednesday, March 23, 2011

ஏ.ஆர்.ரஹ்மான் :ஒரு கனவின் இசை! - பகுதி 3

.ஆர்.ரஹ்மான் வாழ்க்கை வரலாறு


ரோஜா மலர்ந்த நேரம்.1992 ...ரஹ்மான் "பஞ்சதன்" என்கின்ற பெயரில் சொந்தமாக தன் வீட்டிலேயே ஒரு பிரமாதமான ரெகார்டிங் நிலையத்தை அமைத்திருந்தார்.ஆசியாவில் மிகச்சிறந்த ஒளிபதிவுக்கூடம் அது. லியோ காபி,ஆல்வின்,பூஸ்ட்,ப்ரீமியம் பிரஷர் குக்கர்,எம்.ஆர்.எப் டயர்ஸ்,தி ஹிந்து, ஏசியன் பெயிண்ட்ஸ் போன்ற கம்பெனி களுக்கு விளம்பர இசை அமைத்து ஹிட் ஆகி இருந்த காலம்.சாரதா திரிலோக் என்கின்ற விளம்பரப்பட தயாரிப்பாளர், ரஹ்மானின் இசையில் வெளியான லியோ காபி விளம்பரத்திற்காக விருது வாங்கி இருந்தார்.அப்போது மணிரத்னம் தான் அடுத்த படத்துக்காக ஒரு புதிய இசை அமைப்பாளரை தேடிக்கொண்டு இருந்தார்.அவருடைய உறவினரான சாரதா திரிலோக் ரஹ்மானை அவரிடம் அறிமுக படுத்தி வைத்தார்.தன்னுடைய பஞ்சதன் ஸ்டுடியோவில் வந்து சந்திக்குமாறு வரவேற்று விட்டு விடை பெற்றார் ரஹ்மான். பின்பு அந்த சந்திப்பை மறந்து விட்டார் ரஹ்மான்.ஆறு மாதங்களுக்கு பிறகு ,திடீரென ஒரு நாள் பஞ்சதன் ஸ்டுடியோவுக்கு வருகை தந்தார் மணிரத்னம்.அப்படி ஒரு ஹை டெக் ஸ்டுடியோவை அவர் எதிபார்க்கவில்லை.அதன் தொழில் நுட்ப தரத்தை கண்டு வியந்தார்.ரஹ்மானின் விளம்பர ஜிங்கில்ஸை கேட்டவர் ,அந்த இசையின் மீது உடனடியாக காதல் கொண்டார்." என் அடுத்த படம் ரோஜாவுக்கு நீங்கள் தான் இசை அமைப்பாளர்." என்று அங்கேயே சொல்லி புக் செயதார். அதற்கு பிறகு நடந்தது எல்லாம் சரித்திரம்.

ரோஜா படத்திற்காக ரஹ்மான் பெற்ற சம்பளம் வெறும் 25000 ரூபாய்தான்.அதை அப்போது 3 மணி நேரங்களில் அவர் சம்பாதிப்பார்."பணம் ஒரு பொருட்டல்ல.எனக்கு மணி சாரிடம் வேலை பார்க்க வேண்டும் என்று தோன்றியது.அவர் என்னிடம் ஒரு நண்பராகவும் சகோதரராகவும் நடந்து கொண்டார் .திரை இசையில் பிறருடைய பாணி இல்லாத என் ஸ்டைல் இசையை அவர் மிக திறமையாக தேர்ந்து எடுத்து ரோஜாவில் பயன்படுத்தினார்.அது என்னையே நான் கண்டுகொள்ள உதவியது.திரை இசையின் பாடங்களை மணிரத்தினம் யுனிவெர்சிட்டி யில் தான் படித்தேன் ". என்றார் ரஹ்மான்.

ஹிட் கூட்டணி:மணிரத்தினம் - ரஹ்மான் கூட்டணி எப்போதுமே சூப்பர் ஹிட் தான்.அதற்கு ஒரு உதாரணம் சொல்லலாம்.1998 - ம் வருடம் பொருளாதார தேக்க நிலை ஹிந்தி சினிமா இசை மார்க்கெட்டையும் பெரிதாக பாதித்திருந்தது.காசெட் விற்பனையில் பலத்த அடி.அப்போதுதான் வெளியானது."தில் சே " .ஒரே வாரத்தில் இரண்டு மில்லியன் கேசட்டுகள் அமோக விற்பனை.அடுத்த ஆறு மாதங்களில் ஆறு மில்லியன் கேசட்டுகள் சூப்பர் சேல்ஸ். இங்கிலாந்து இசை மார்க்கெட்டில் டாப் 10 பாடல்களில் இடம் பிடித்து சாதனை புரிந்தது "தில் சே ". ரஹ்மான் இசையின் உலக பயணம் அப்போது தான் ஆரம்பித்தது.இன்று வரை ரஹ்மானின் இசையில் விற்று இருப்பது 100 மில்லியன் சீடிகள் , 200 மில்லியன் கேசட்டுகள்.உலக அளவில் மிக அதிகமாக இசை பதிவுகளை விற்று இருக்கும் இசை அமைப்பாளர்களில் டாப் 25 வரிசையில் இடம் பிடித்திருக்கிறார் ரஹ்மான்.

தொடரும்...

Tuesday, March 22, 2011

ஊருக்குள் கப்பல் : ஜப்பான் சுனாமி பதிப்புகள்

ஊருக்குள் கப்பல் : ஜப்பான் சுனாமி பதிப்புகள்