Thursday, February 2, 2012

ulaga alivu - 6 :புவி வெப்பமாதல் - Global warming

புவி வெப்பமாதல் - Global warmingஉலக அழிவிற்கான பல்வேறு காரணங்களில் புவி வெப்பமாதல் ஒன்று. இதற்கு முழுக்க முழுக்க நாம் தான் காரணம்.நமது அஜாகிரத்தை தான் காரணம்.
புவி வெப்பமாதல் என்பது வெறும் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல, வளரும் நாடுகளின் எதிர்காலத்துடனும் பல லட்சம் கோடி ரூபாய்களுடனும் பின்னிப் பிணைந்திருக்கும் பிரச்சினை.

புவியின் சராசரி வெப்பத்தின் அளவு அதிகரித்து வருகிறது. நாம் வெளியிடும் கழிவு வாயுகளினால் வளி மண்டலத்திலுள்ள கரியமில வாயு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்களின் அடர்த்தி அதிகரிப்பதுதான் இதற்கான முக்கிய காரணம் என்பதே புவி வெப்பமாதல் கருதுகோளின் அடிப்படை ஆகையால், பசுமை இல்ல வாயுக்களின் அடர்த்தியைக் குறிப்பதான கரியமில வாயுவின் அடர்த்தியைக் குறைப்பதற்கான இலக்குகளை நிர்ணயிப்பதே இப்பிரச்சினைக்கான முடிவாகக் கருதப்படுகிறது.இவ்வாறு கற்று மாசுபடுவதால் நம் பூமி தன்னால் அதிக வெப்பமாகிறது. ஒ ஜோனில் ஓட்டை விழுகிறது என்று சொல்வதெல்லாம் இதனால் தான். நாம் வெளியிடும் நஞ்சு வாயுகளால் நம்மை பாதுகாக்கும் ஒ ஜோன் படலம் அடர்த்தியை இழந்து விடுகிறது.அதனால் சூரிய கைதிகளின் தாக்கம் நமது பூமியை அதிகமாக தாக்குகின்றது. இது பருவ நிலைகளில் மாற்றங்களை உண்டாக்கு கிறது. வெய்யில் காலங்களில் அதிக வெப்பமாகவும் குளிர் காலங்களில் அதிக குளிராகவும் இருப்பதை நாம் இப்போது உணரலாம்.இதற்கு புவி வெப்பம் அடைவதே காரணம்.

இவ்வாறான மாற்றங்கள் நமக்கு சதாரண மாக தெரிந்தாலும் பூமி மாபெரும் மற்றம் அடைகிறது. முழுக்க பனிமலைகளால் சூழப்பட்ட நமது உலகில் உள்ள பனிமலைகள் இரும்பை விட உறுதியானவை.ஆனால் அவை யாவும் இப்பொது தங்கள் பலத்தை இழந்து வருவதாக அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.இவ்வாறான பல லட்சம் அடி மலைகள் உருகும் போது கடல் நீரில் கடலை சர்துள்ள நிலங்களில் கடுமையான மாற்றங்கள் உண்டாகும் .இதை இங்கே படிப்பதை விட THE DAY AFTER TOMORROW என்ற ஆங்கில படத்தில் இதை பற்றி விரிவாக சொல்லி இருப்பார்கள்.அதை பார்த்தால் உங்களுக்கு எளிதாக புரியும்.புவி வெப்பமாதலை தடுக்க என்ன செய்யலாம்?
கரியமில வாயு அதிகரிப்புக்கு மிக முக்கியமான பெட்ரோலியப் பொருட்கள் பயன்பாட்டை வெகுவாகக் குறைப்பதும் அதிக மாசற்ற ‘செம்மையான இயந்திரவியல் கொள்கைக்கு மாறுவதும் புவி வெப்பத்தைத் தணிக்க முக்கிய தீர்வுகளாக முன்வைக்கப்படுகின்றன.

“செம்மையான இயந்திரவியல்’ என்பதை விரிவான பொருளில் சொல்வதென்றால், இப்போதுள்ள பழைய தொழிநுட்பத்தை அப்படியே கடாசிவிடுவது என்பதேயாகும். விறகு அடுப்புக்குப் பதில் சூரிய சக்தி அடுப்பு என்பதில் தொடங்கி ஹைட்ரஜனில் இயங்கும் மொபெட்டுகள், ஹைபிரிட்காரர்கள் வரை எல்லாமே புதியவையாகும்.

‘கார்பன் கிரெட்டிட்ஸ்’ வர்த்தகத்துக்கு வழி வகுக்கும். இன்றைய திகதியில் உலகிலுள்ள பெரும் தொழிற்சாலைகளை மட்டும் செம்மையான இயந்திரவியலின் கீழ் கொண்டுவர மட்டுமே ரூ. 16 இலட்சம் கோடி தேவைப்படும் என்று மதிப்பிடப்படுகிறது. அதாவது 2030ல் உலக மாசு அளவை 2007 அளவுக்குக் கொண்டுவர ரூ. 20 இலட்சம் கோடி தேவைப்படும் என்று மதிப்பிடுகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பகிரவும்.. நன்றி.. :)

NOTE: இது யாரையும் பீதி அடைய செய்யவோ இல்லை இந்த உலகம் அழிந்து விடும் என்று பயப்பட செய்யவோ அல்ல .நான் படித்த விசயங்களை உங்களோடு பகிர்கிறேன்.எதாவது தவறு இருத்தல் மன்னிக்கவும்...

No comments:

Post a Comment