Monday, June 28, 2010

SAW movie 1 to 6 part - 3 விமர்சனம்மார்க் ஹாஃப்மேன் & டேனியல் ரிக் (Rigg)-கின், [பெண்] பார்ட்னர் ஆலிஸன் கெல்லி-யை, மார்க் ஹாஃப்மேனும், அமேண்டாவும் கடத்தி, ஒரு ஆஸிட் குடுவைக்குள் சாவியை போட்டு அதை எடுத்து தன் பூட்டைத் திறந்தால் தப்பிப்பது, இல்லையெனில் உடம்பின் சதைகள் பிய்ந்து போவது போல ஒரு ட்ராப்பை உருவாக்கியிருப்பார்கள். பூட்டைத் திறந்தாலும், அதிலிருந்து தப்ப முடியாதவாறு, அமேண்டா அதை உருவாக்கியிருப்பாள். ஆலிஸன் பூட்டைத் திறந்தும், அவளின் உடல் பிய்த்தெறியப் படுகிறது.ஆஃபீஸர் ரிக் (Rigg), எதிலும் கொஞ்சம் அவசரக் குடுக்கை. ஜிக்ஸாவின் விளையாட்டுக்கள் எங்கிருந்து எப்படித் தாக்கும் என்று தெரியாவிட்டாலும்... சில சமயம் எந்த பாதுகாப்பும் இல்லாமல்... சில கதவுகளை திறந்து கொண்டு உள்ளே போய்விடுவார். தன்னால் முடிந்த வரைக்கும்... அத்தனை உயிர்களையும் காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பவர்.

முதல் பாகத்தில் இறந்த ராப்பிச்சை, ச்சைனீஸ், ஆறு மாதங்களாக காணாமல் போன எரிக் மேத்திவ்ஸ், இப்பொழுது ஆலிஸன் என ஒவ்வொருவராக.. அவரைச் சுற்றியிருப்பவர்கள் இறக்க.., யாரையும் காப்பாற்ற முடியாத வருத்தத்தில் இருக்கும் போது, அவருக்கான டெஸ்ட் ஆரம்பிக்கிறது.

உருகிக் கொண்டிருக்கும் ஒரு பெரிய ஐஸ் பாரில், இத்தனை நாட்களாக காணாமல் போன எரிக் மேத்தீவ்ஸ் ஒரு புறமும், மார்க் ஹாஃப்மேன் இன்னொரு புறமும் கட்டி வைக்கப் பட்டுள்ளனர். Saw II -ல் நடக்கும் கேமில் அமேண்டா பங்கெடுப்பது போல, இந்த டெஸ்டில் மார்க் ஹாஃப்மேன்.

இந்த டெஸ்டின் பகடைக் காய்கள்..... 01. ஒரு பிம்ப் 02. பெண்களை கட்டி வைத்து போர்னோ எடுக்கும் ஒருவன் 03. தன் மனைவி, குழந்தையை துன்புறுத்தும் ஒருவன் (கீழிருக்கும் படத்தில்) 04. அதை தட்டிக் கேட்காத மனைவி 04. இவர்களுக்காகவும், ஜிக்ஸாவின் மனைவி ஜில் டக்-கிறாகவும் வாதாடும் ஒரு வக்கீல் ஆர்ட் பேங்க் (இவருடைய வாய்தான் தைக்கப் பட்டிருக்கும். இன்னொரு கண்ணிமை தைக்கப் பட்ட ஒருவனோடு சண்டையிட்டு அவனை கொல்வார்).

இந்த வக்கீல் மட்டும், எரிக் மேத்திவ்ஸ் & மார்க் கட்டிப் போடப் பட்டிருக்கும் இடத்திற்கு வருகிறார். அவரின் டெஸ்ட், 90 நிமிடம் கழிந்தால் மட்டும்...., மார்க்கையும், எரிக்கையும் விடுதலை செய்யலாம். இல்லையெனில் அவரின் பின் கழுத்து ஓட்டை போடப் படும். 90 நிமிடத்திற்குள் கதவு திறக்கப் பட்டால், எரிக்கின் தலை சுக்கு நூறாகும்.

ரிக்கிற்கு மொத்தம் 90 நிமிடம் கொடுக்கப் படுகிறது. அதற்குள்.. எரிக் மேத்திவ்ஸை காப்பாற்ற வேண்டும். நடுவில் முடிந்தால் இவர்களை காப்பாற்றப் பார் என்பது மாதிரியான ஒரு கட்டளை.

ஆனால் டெஸ்டின் முக்கிய நோக்கம்... இவர்களை காப்பாற்றுவது அல்ல. வேடிக்கை பார்ப்பதும் அல்ல. இவர்கள் அனைவரும்... தங்களைத் தாங்களே துன்புறுத்திக் கொள்ள வேண்டும். அவர்களின் முடிவு அவர்கள் கையில். ஆனால் ரிக்.. எல்லோரையும் காப்பாற்ற முயன்றும் முடியாமல் (அந்த போர்னோ பார்ட்டியை தவிர்த்து) வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் சூழ்நிலை.

இதே நேரம்... இன்னும் இரண்டு FBI அதிகாரிகள் கேஸினுள் வருகிறார்கள். ஸ்டார்ம் & பெரஸ். ஜிக்ஸாவிற்கு இவர்கள் மீதும் குறி. ஒரு கட்டத்தில் பெரஸ் படுகாயமடைய, ஸ்டார்ம் மட்டும்... ரிக்கை பின் தொடர்ந்து கொண்டேயிருக்கிறார்.

இப்பொழுது இருவரும் (ரிக் & ஸ்ட்ராம்) ஒரே கட்டிடத்திற்குள்!! ஸ்ட்ராம் வேறு எதுவோ சத்தம் கேட்டு இன்னொரு அறை பக்கமாக செல்ல...., அந்த சத்தம் போட்டது.... போனப் பதிவில், தன் மகனின் மரணத்துக்காக பழி வாங்கத் துடித்த ஜெஃப்.

அந்த நேரத்தில் ஜெஃப், அமேண்டாவையும், ஜானையும் கொன்றிருக்க, ஜானின் இதயத் துடிப்பு நின்றதால் டாக்டர் லின்னும் மரணமடைய, சரியா உள்ளே வரும் ஸ்ட்ராமை, ஜெஃப் சுட முயற்ச்சிக்கும் போது, ஸ்ட்ராம் ஜெஃபை கொல்கிறார்.

கட்டிடத்தின் இன்னொரு பகுதியில்... எந்த யோசனையும் இன்றி... கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வரப் பார்க்கும் ரிக்-கை எரிக் மேத்திவ்ஸ் சுட (90 நிமிடத்திற்குள் கதவு திறந்தால், இவர் தலை காலி), அப்படியும் உள்ளே வரும் ரிக், வக்கீலை சுட....,

எரிக்கின் தலை காலி + வக்கீலும் மீண்டும் ரிக்-கால் சுடப் படுகிறார். அதற்குப் பின்தான், டெஸ்டின் உண்மையான நோக்கம் புரிகிறது (இவரின் டெஸ்ட் சும்மாயிருப்பது. விளையாடுவது அல்ல). மார்க் ஹாஃப்மேன் மட்டும்... ரிக்-கை அங்கேயே விட்டுவிட்டு....

கட்டிடத்தின் இன்னொரு பகுதிக்குப் போய்..., FBI ஏஜெண்ட் ஸ்ட்ராம் இருக்கும் கதவை தாழிட்டுவிட்டு சென்று விடுகிறார். (இத்தோடு Saw IV ஓவர்). அங்கிருந்து ஏஜெண்ட் ஸ்ட்ராம்மின் கேம் ஆரம்பிக்கிறது.

அந்த அறையில் உள்ள ஒரு ரகசிய கதவின் மூலமாக இன்னொரு பகுதிக்குச் செல்லும் போது, மார்க் ஹாஃப்மேனால் (?) தாக்கப்பட்டு, தண்ணீர் நிரம்பும் ஒரு கண்ணாடிக் பெட்டிக்குள் மாட்ட வைக்கப் படுகிறார்.

ஆனாலும்.. தன் தொண்டையையில் ஓட்டை போட்டு தப்பிக்க, மார்க் ஹாஃப்மேனுக்கு இப்பொழுது, இவரால்/இதனால் பிரச்சனை!! ஆனாலும்... ஜிக்ஸா இறப்பதற்கு முன், தன்னிடம் கடைசியாக கொடுத்த ஒரு லிஸ்டில் உள்ள சிலரை கடத்துகிறார்.

அதிலுள்ள எல்லோரும்... ஒரு கட்டிடம் எரிக்கப் பட்டு, அதனால்.. எட்டு பேர் பலியான ஒரு சம்பவத்தில் தொடர்புடையவர்கள். பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பவர்கள்.

இவர்களுக்கான டெஸ்டின் முக்கிய குறிக்கோள், இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து.. அத்தனை ட்ராப்பையும் உடைக்க வேண்டும். ஆனால்.. ஒவ்வொரு ட்ராப்பிலும், ஒவ்வொருவராக கொல்லப் பட, கடைசியா இரண்டு பேர் மட்டும் உயிர் பிழைக்கின்றனர் (இதை இன்னும் சொல்லலை. ஒரு யூகம்).

இந்த டெஸ்ட் நடக்கும் போது....., மார்க் ஹாஃப்மேன் மீது சந்தேகம் கொள்ளும் ஏஜண்ட் ஸ்ட்ராம்... மார்க்கின் பழைய ரெக்கார்டுகளை சோதிக்கும் போது, மார்க்கின் சகோதரி மரணம், அதற்கான பழிவாங்கல் கொலை (முதல் பதிவு) எல்லாம் தெரிய வருகிறது.

ஆனால் இதே சமயம்.. அவருக்கே தெரியாமல்... அவர்தான் குற்றவாளி என்பது போல, ஸ்ட்ராமின் உயர் அதிகாரி நம்ப வைக்கப் படுகிறார். அதற்கு போலி சாட்சியாக, ஸ்ட்ராமின் செல்ஃபோன் பயன்படுகிறது.

மார்க்கைத் தேடி ஸ்ட்ராம் அந்த கட்டிடத்திற்கு வரும்போது... ஸ்ட்ராம் கொல்லப் பட, மார்க் வெளியே வருகிறார். ஆனால் ஜிக்ஸா அவரையும் விட்டு வைப்பதாக இல்லை.

(Contiue 3)

thanks to HOllywood bala

No comments:

Post a Comment