ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்க்கை வரலாறு.
சேகரின் 31- இம் வயதில் தான் திருப்பதியில் திருமணம் நடந்தது.கஸ்தூரியை
மனைவியாக்கி கொண்டவருக்கு காஞ்சனா ,திலீப்,பாலா,ரேகா என்று அடுத்து அடுத்துக் குழந்தைகள்.அப்போது மலையாளப் பட உலகில் பல புதுமைகளைப் புகுத்தி வந்தார் சேகர்.பாலமுரளி கிருஷ்ணா வையும் ,
எஸ் .பி.பலசுப்ரமணித்தையும் அங்கே அறிமுகப் படுத்தியவர் அவர் தான்.
கே.ஜே.யேசுதாசின் பிரமாண்டமான கோட்டையை ஊடுருவுவது மலையாளத்தில் அப்போது யாராலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத காலகட்டம்.1972 - இல் வெளியான "மிஸ் மேரி " படத்தில் சேகர் இசைஅமைத்த பி.சுசிலாவின் "நீயென்றே வெளிச்சம் " பாடல் இன்றைக்கும் கிறிஸ்துவ மேரி மாதா பக்திப் பாடல்களில் ஒன்றாகக் கேரளத்தில் பாடப்படுகிறது.
ரஹ்மானிடம் இப்போது நாம் காணும் புதிய டெக்னாலஜீ யில் உள்ள ஆர்வம் அப்போதே ஆர்.கே .சேகரிடம் வெளிபட்டிருகிறது.அவர் அடிக்கடி சிங்கப்பூர் சென்று இசைக் கருவிகள் புதிதாக என்னென்ன வந்திருகின்றன ,இசைப் பதிவு டெக்னாலஜீ யில் என்னென்ன மாற்றங்கள் வந்திருகின்றன என்றெல்லாம் அவதானித்த படி இருதிருக்கிறார்.ஒரு சில குரல்களையே மீண்டும் மீண்டும் கேட்டு அலுத்துப்போய் இருத்த நமக்குப் பல புதிய புதிய குரல்களை அறிமுகப் படுத்தி இசை கேட்கும் அனுபவத்தையே மாற்றிக் காட்டியவர் ரஹ்மான்.அதற்கு முன்னோடியாக இருந்திருக்கிறார் அவருடைய தந்தை ஆர்.கே.சேகர்.
அன்றைய காலகட்டத்தில் சினிமாவுக்குப் பாடுவது என்பது சாதரணமான விஷயம் அல்ல.ரெகார்டிங் தியேட்டர் எல்லாம் இரும்புக் கோட்டைகள்.யாரும் அதனை சீக்கிரத்தில் உள்ளே புக முடியாது.ஆர்.கே.சேகர் அந்தக் கோட்டையில் கதவுகளைப் புதிய பாடகர்களுகுத் திறந்துவிட்டார்.பிரும்மானந்தன் ,சதானந்தன் ,சுதா வர்மா ,கோபால கிருஷ்ணன், சோமன் ,போன்குந்தம் ரவி,ஜெயலக்ஷ்மி ,கஸ்தூரி சங்கர்,மனோகரன்,அம்பிலி,ஜெயஸ்ரீ போன்று எந்தனையோ பாடகர்களை அறிமுகம் செய்தார் சேகர்.அந்த "லெகஸி", அவர் மகன் ரஹ்மான் வழியே தொடர்கிறது.
ஆர்.கே.சேகர் மலையாளத்தில் 110 பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். யேசுதாஸ் ,ஜெயச்சந்திரன் ,பி.சுசீலா,வாணி ஜெயராம் போன்ற பாடகர்கள் அவருடைய இசையில் எண்ணற்ற பிரமாதமான பாடல்களைப் பாடியிருகிறார்கள்.இன்றைக்கும் சேகரின் இசை கேரளத்தில் வற்றாத ஜீவா ஊற்றாகத் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
No comments:
Post a Comment