ஏ.ஆர்.ரஹ்மான் : ஒரு கனவின் இசை! பகுதி - 10
அப்பா மூலமாக தான் திலீப் என்ற ரஹ்மானுக்கு மிகச் சிறுவதிலேயே இசையிலும் இசைபதிவு நுட்பத்திலும் தணியாத ஆர்வம் ஏற்பட்டது.வெட்டில் எப்போதும் இசையைக் கேட்டபடி வளர்ந்த திலீப்புக்கு ,திடீரென்று அப்பாவை நோய் தாக்கியதையும் கிட்ட தட்ட மூன்று ஆண்டுகள் அந்த நோயின் கடுமையான தாக்குதலால் அவர் துடிதடையும் நேரில் கண்ட போது அச்சமாக இருந்தது.சகோதரிகளும் மனம் நொந்தார்கள்.அர்கே போன்ற பிரச்சனை மீண்டும் மீண்டும் தன் குடும்பத்தை தாக்கினால் என்ன செய்வது ,எப்படி சமாளிப்பது என்கிற இனம் புரியாத பயம் அந்த இளம் பிஞ்சுகளை அப்போது ஆட்கொண்டோது.
அந்த மறக்க முடியாத நாட்களை நினைவு கூர்கிறார் ரஹ்மானின் தாய் கரீமா." புள்ளைங்க எல்லாம் ஸ்கூல் குப் போயிடு இருக்குதுங்க ,திடீர்னு அவங்க அப்பா படுத்த படுக்கை ஆகிவிட்டார்.எனக்கு உலகமே இருந்துடுச்சு.அவரை கவனிப்பேனா? பிள்ளைகளை கவனிப்பேனா? மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் அலைவேன் காரணமே புரியாம.ரொம்ப நாள் மருத்துவமனை ல இருதவரு ஒரு நாள் இறந்தே போய்ட்டாரு.நாங்க இடுஞ்சு போய்டோம்.எந்த நேரமும் ஹர்மொநியனும் கையுமா இருத்த ரஹ்மானுக்கு அப்பா இறந்ததுல ரொம்பவே பதிப்பு.ஸ்கூல் படிப்பை கூட அதல சரியாய் படிக்க முடியல.சின்னப் பிள்ளையை ஸ்டுடியோ வேளைக்கு அனுப்பியே ஆகணும்னு கட்டாயம்.ஆனா அதுக்கெல்லாம் ஒரு விடுவுக் காலம் வரும் ன்னு நான் மனசார நம்பினேன்."
நோயின் தீவிரம் கடுமையான காலகட்டத்தில் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் ஆர்.கே.சேகர் அனுமதிக்கப் பட்ட போது ,திலீப்பும் சகோதரிகளும் அடிக்கடி சென்று பார்ப்பார்கள். உடல்நலம் வாட்டிய போதும் குழந்தைகளிடம் அதை மறைத்துக்கொண்டு அப்பா புன்னகைப்பார்."நாளைப் படிக்கணும்.ஸ்கூலுக்கு லீவு போடக்கூடாது.அம்மா சொல்றபடி நடந்துக்கணும்." என்றெல்லாம் அறிவுரைகள் சொல்வார்.மகன் திலீபிடம் பேசும்போது மட்டும் அவருக்குத் தனியாக ஒரு பாசம் பொங்கி வரும்.அவனை அள்ளி அணைத்து உச்சிமுகர்வர்.அதற்கு ஒரு தனிப்பட்ட காரணமும் இருந்தது.
ரஹ்மானின் மூத்த சகூதரியான இசையமைப்பாளர் ரைஹானா சொல்கிறார்.. " கல்யாணமான புதுசுல எங்கப்பாகிட்ட யாரோ ஒருத்தர் ' உங்களுக்கு ஒரு மகன் பிறப்பான்.அவன் பெரிய புகழ் அடைவான்' ன்னு சொல்லி இருக்காரு.அப்பாவும் அதை எதிர்பார்த்து ரொம்ப ஆவலா கத்திருந்தார்.ஆனா ,முதல்ல நான் பிறந்தேன்.என்கிட்டே அவர் ரொம்ப பாசமா இருந்தாலும் ,அவர் மனசுக்குள்ள அந்தக் குறை இருந்துகிட்டே இருந்தது.அடுத்ததா திலீப் பிறந்ததும் ,அவரால சந்தோசத்தை தங்க முடியல.."
வாழ்வில் அற்புதங்கள் நிகழும்,அது கடவுள் மூலமாக நடக்கும் என்கிற நம்பிக்கை ரஹ்மானின் குடும்பத்தில் ஒவோருவரிடமும் இருக்கிறது.ஓய்வொரு கட்டத்திலும் யாரோ ஒருவர் வந்து,சில எதிர்கால செய்திகளை சொல்லி வாழ்த்திவிட்டு போனதாக சொல்கிறார்கள்.சேகர் இறந்துபோன அறை இருந்த இடத்தில இசை பதிவு கூடத்தை கட்ட சொல்லி ஆசீர்வாதம் செய்து விட்டு போனாராம் ஒரு இஸ்லாமிய குரு. அங்கே தான் பஞ்சதன் ஸ்டுடியோ கட்டப்பட்டது.ரோஜா அங்கே தான் மலர்ந்தது.
தொடரும்..
உங்கள் கருத்துக்களை பகிரவும் ... நன்றி...
No comments:
Post a Comment