Thursday, June 6, 2013

இந்திய அணியின் வாய்ப்பு: சாம்பியன்ஸ் டிராபிஇந்திய அணியின் வாய்ப்பு: சாம்பியன்ஸ் டிராபி

ஒரு  வழியாக IPL கிரிக்கெட் முடித்து இன்று இந்திய அணி சாம்பியன் கோப்பையில் ஆடுகிறது.அது பற்றி ஒரு அலசல்.ஐபிஎல். சூதாட்ட விவகாரம், தோனியின் வணிக நலன்கள் குறித்த சர்ச்சை, ஸ்ரீனிவாசன் விவகாரம் என்று சர்ச்சைச் சுழலில் சிக்கித் தவிக்கும் இந்திய அணிக்கு சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் சற்றே கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

2011 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி இல்லை இது. ஆனாலும் மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் இந்தத் தொடரில் இந்தியா தன் புதுமுகங்களுடன் நிரூபிக்க வேண்டியுள்ளது. 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை அணிக்கான பரிசோதனை அணியே இது. ரெய்னா, ரோகித் சர்மா, விஜய், தவான், கார்த்திக் ஆகியோருக்கு இந்திய அணியில் நிரந்தர இடம்பெற அருமையான வாய்ப்பு.

நாளை பலமான தென் ஆப்பிரிக்க அணியை இந்தியா எதிர்கொள்கிறது. பயிற்சி ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக 330 ரன்களுக்கும் மேற்பட்ட இலக்கை கோலியும், தினேஷ் கார்த்திக்கும் ஒன்றுமில்லாமல் செய்தனர். அந்த போட்டியில் இந்திய பந்து வீச்சு மிகவும் பலவீனமகா இருந்தது.


ஆனால் நேற்று ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் உமேஷ் யாதவ் அதிவேகத்தில் வீச, இஷாந்தும் விக்கெட்டுகளைக் கைப்பற்ற இந்திய பந்து வீச்சு மீது புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.

இந்திய டாப் ஆர்டர் பேட்டிங்கில் அனுபவமின்மை சற்றே உள்ளது. ஷிகர் தவானை பொறுத்திருந்து பார்க்கவேண்டும். முரளி விஜய் எப்படி ஆடுவார் என்பதற்கான ஆதாரங்கள் இதுவரை இல்லை. ஆனால் தினேஷ் கார்த்திக், கோலி அபாரமாக ஆடி வருகின்றனர்.

மற்றபடி ரெய்னா தனது ஷாட் பிட்ச் பந்து குறித்த பயத்தை விட்டொழிக்கவேண்டும். நேற்றும் அவர் ஷாட் பிட்ச் பந்தை எதிர்பார்த்து சாதாரண நேர் பந்தில் பவுல்டு ஆனார். ரோகித் சர்மாவுக்கு எந்த பந்தை ஆடாமல் விடுவது என்பதில் சிக்கல் உள்ளது.

இந்த சாம்பையன்ஸ் டிராபியில் இந்தியா சவாலான தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடன் சேர்க்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா அன்று பாகிஸ்தானுக்கு எதிராக படு மோசமாக மண்ணைக் கவ்வியது.

 

பாகிஸ்தானின் பந்து வீச்சு புதிய பைர்மாணத்தில் அபாரமாக விளங்குகிறது.

இப்போதைய இங்கிலாந்து நிலைமைகள் ஸ்விங்கிற்கு பெருமளவு ஆதரவாக இருக்காது. ஏற்கனவே பிட்ச்கள் ரன்களை வழங்கும் பிட்சாக இருப்பதையே கண்டிருக்கிறோம். முதலில் பேட் செய்யும் அணி முதல் 20 ஓவர்களை ஜாக்கிரதையாக ஆட வேண்டியுள்ளது. துரத்தல் சுலபமாக உள்ளதை பயிற்சி ஆட்டங்களில் கண்டு வருகிறோம்.

எனவே டாஸ் ஒரு முக்கிய திருப்பமாக அமையும். சரியான அணிச் சேர்க்கைதான் தோனியின் கவலை. குறிப்பாக இர்பான் பத்தானை சேர்ப்பதா அல்லது ரவீந்திர ஜடேஜாவா என்பது பெரிய குழப்பம்தான்.

பந்து வீச்சில் எப்படியும் புவனேஷ், உமேக் யாதவ் இடம்பெற்றேயாகவேண்டும். இஷாந்தையும் ஒதுக்கி விட முடியாது. அஷ்வினுக்கு இங்கிலாந்து பிட்ச்களில் சுழல் வாய்ப்புகள் குறைவே. அவர் தனது பரிசோதனைப் பந்துகளை வீசி அது எடுபடாமல் போனால் அடி வாங்குவார்.

எனவே ஜடேஜாவை அஷ்வினுக்குப் பதிலாக அணியில் வைத்துக் கொண்டு இர்பானை அணியில் எடுப்பது நல்லது.

ஷிகார் தவான், ரோகித் சர்மா துவக்க, கோலி, கார்த்திக், ரெய்னா, தோனி, இர்பான் பத்தான், ரவீந்தர் ஜடேஜா, உமேஷ் யாதவ், புவனேஷ் குமார், அஷ்வின் அல்லது இஷாந்த் என்று அணிச் சேர்க்கை இருப்பது சிறந்தது.

சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியா 2000ஆம் ஆண்டு கென்யாவில் இறுதிவரை வந்து நியூசீ.யிடம் தோல்வி தழுவியது. பிறகு இலங்கையில் 2002ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை இலங்கையுடன் பகிர்ந்து கொண்டது. அதன் பிறகு இந்தியாவின் சாம்பியன்ஸ் டிராபி ஆட்டங்கள் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.


சேவாக், கம்பீர், சச்சின், ஜாகீர் கான், யுவ்ராஜ் என்று எந்தத் தலைகளும் இல்லாத புதிய அணி இந்திய அணி. தோனியின் திறமையை நம்பி களமிறங்குகிறது.

டேல் ஸ்டெய்ன் நாளை ஆடுவது சந்தேகமாகியுள்ளது. இந்தியாவுக்கு இது ஒரு பெரிய ரிலீஃப்.

மற்ற அணிகளில் பாகிஸ்தான், நியூசீலாந்து பலமாக உள்ளது.

எப்படியும் அரையிறுதி வரை இந்தியா நுழைய வாய்ப்பிருப்பதாகவே படுகிறது.

கோப்பையை வெல்ல இந்திய அணியை ஆதரிப்போம். பெஸ்ட் ஆஃப் லக் இந்தியா! 

No comments:

Post a Comment