Showing posts with label குப்பை. Show all posts
Showing posts with label குப்பை. Show all posts

Thursday, February 2, 2012

யார் காரணம் என் இந்த நிலைக்கு..? :

யார் காரணம் என் இந்த நிலைக்கு..?



யார் காரணம்
என் இந்த
நிலைக்கு..?

எந்த கவலையும் இல்லாமல்,
தன்,
காமக்கழிவை
என் தாய் மீது
புலம் பெயர்த்த
அந்த
யாரோ ஒரு ஆணா..?

விந்தில்
உயிர் ஜனிக்கும்
என்று தெரிந்தும்,
தன் வயிற்று பசியை
போக்கிக்கொள்ளும்
சாக்கில் தன்
காமபசியையும்
போக்கிக்கொண்ட
என் தாயா..?

நீங்கள் யாரும்
என்னைப்பற்றி
கவலைப்பட போவதில்லை..,!

எங்கோ இருக்கும்
தெய்வத்திற்கு,
உங்கள் வீட்டில்
உண்டியல் சேர்த்து,
பல நாட்கள்
வரிசையில் நின்று
தெய்வ தரிசனம்
பார்த்து,
உண்டியல்
காணிக்கை செலுத்தும்
நீங்கள்
தினமும்
சாலையோரம்
நான்,
பசித்து கிடப்பதை
பார்க்காமல்
போவது எப்படி..?

நான் என்ன செய்தேன்..?

நான் பிறப்பு வரம் கேட்கவில்லையே..?
வலுக்கட்டாயமாய்
எனக்கு பிறப்பு
கொடுத்தது யார்..?

அம்மா என்கிறார்கள்,
அப்பா என்கிறார்கள்,
குழந்தைகள்,
எனக்கு...?

அழுக்காய் இருப்பதால்
அருகில் அனுமதிக்காத
மக்களே..!
எத்தனை பேர்
என்னை
குளிப்பாட்ட நினைத்தீர்கள்..?

எனக்கு பரிதாபம்,
பார்க்கும் உங்களில்
எத்தனை பேர்
என்னை
படிக்க வைக்க எண்ணினீர்கள்..?

குப்பைகளாக
பார்க்க படுவதினால்
குப்பையே
தெய்வமாகி
போனது எனக்கு,

என் கேள்விகளுக்கு
எந்த
பகவான் பதில் கூறுவார்..?
எந்த
பகுத்தறிவாளி
பதில் கூறுவார்..?

என்னை
குப்பையாய்
பார்க்கும் மக்களே..!
என்னை வாழ
வைப்பவர்கள் நீங்கள்
நீங்கள் வாழவேண்டும்,

நீங்கள் குப்பை
போட்டால்தான்,
என் குப்பை
வயிறு நிறையும்...!

உணவு வேண்டாம்
காகிதங்களை
குப்பையில் போடுங்கள்..,
நானும்
"உழைத்து உண்ணவே விரும்புகிறேன்"...!

நான் வெளியே
அழுக்காய்
இருந்தாலும்
உள்ளே சுத்தமாய்
இருக்கிறேன்...!
" நீங்கள் "....!

நன்றி எனக்கு முகநூலில் அனுப்பிய நண்பருக்கு .

உங்கள் கருத்துக்களை பகிரவும் ... நன்றி...



Thursday, April 14, 2011

குப்பையில் ஒரு ஹோட்டல் - Garbage Hotel

குப்பையில் ஒரு ஹோட்டல் - Garbage Hotel



டைரக்டர் ஷங்கர் குப்பையை வச்சு ஒரு பாடல் எடுத்தாரு. பாய்ஸ் படத்துல...
இங்க குப்பைய வச்சு ஒரு ஹோட்டல் கட்டி இருக்காங்க.பிரபலமான கட்டிடங்களுக்கு புகழ் பெற்ற ரோம் ல இதை உருவாக்கி இருகாங்க.



இதுல கிட்டத்தட்ட 12 டன் குப்பைய பயன் படுத்தி 5 ரூம் கொண்ட ஹோட்டல் ல கட்டி இருக்காங்க.இதுல பழைய டயரு , பழைய துணி , சாவி வளையம், பிளாஸ்டிக் பை , வலை .. இதை வச்சு உருவாக்கி இருகாங்க.இதுல மொத்தம் ரூம். பாத்ரூம் போக கூட வசதி இருக்கு.ஆனா குளிக்க முடியாது :)






இதில் உள்ள குப்பைகள் அனைத்தையும் ஒரு கடற்கரை ஓரத்தில் கிடைத்த பொருட்களை வைத்து செய்திருக்கிறார்கள். இது ஒரு தற்காலிகமான ஹோட்டல் மட்டுமே.ஒரு விழிப்புணர்வு வேண்டும் என்பதற்கு தான். மேலும் பல ஊர்களில் இது போல செய்து குப்பை போடாமல் தடுக்கவே...









நம்ப ஊர்ல இது எல்லாம் பண்ண முடியாது. ஏன்னா நம்ப வீடு இதை விட கொடுமைய இருக்கும்...:) உங்கள் கருத்துக்களை சொல்லவும் ... நன்றி :)

Tuesday, March 1, 2011

Amazing Talent - திறமைகள் பலவிதம்.

இந்த பெண்ணின் திறமையை பாருங்கள் . இவர் குப்பையில் இருந்து kuthirai uruvakkukirar.