Showing posts with label music. Show all posts
Showing posts with label music. Show all posts

Friday, March 4, 2011

ஏ.ஆர்.ரஹ்மான் :ஒரு கனவின் இசை! - பகுதி 1

.ஆர்.ரஹ்மான் வாழ்க்கை வரலாறு


1978...

அந்த 11 வயதுச் சிறுவன் கோடம்பாக்கத்தில் ஒரு ரெகார்டிங் ஸ்டுடியோவின்

வாசலில் தயங்கியபடி உள்ளே செல்கிறான் . அவனுக்காகப் பல

வாத்தியக்காரர்கள் காத்திருக்கிறார்கள். ''வாப்பா திலீப் ... உனக்காகத்தான்

காத்துட்டு இருக்கோம் . நீ கொண்டு வந்த சிந்தைசஸர்ல

என்னேவா பிரச்சனை . என்னன்னு பாரேன் '' என்கிறார் அர்ஜுனன் மாஸ்டர்.

சிறுவன் திlப் அந்தக் கருவியின் பாகங்கைளத் தொழில்நுட்ப நேர்த்தியுடன்

அழகாகப் பிரிக்கிறான் . எதையோ சரி செய்து ஒன்று சேர்க்கிறான் .

சில நிமிடங்களில் அது மீ ண்டும் நன்றாக வேலை செய்ய ஆரம்பிக்கிறது.

அர்ஜுனன் மாஸ்டர் அவனை அன்புடன் அணைத்துக்கொள்கிறார் ...

''கில்லாடிடா நீ!'' திலீப்பின் கண்கள் கலங்கியிருக்க, அவரும் மனம்

கலங்குகிறார். ''என்ன திலீப் , அப்பா ஞாபகம் வந்திடுச்சா..?'' என்பவர்,

பெருமூச்சுவிடுகிறார் . ''என்ன செய்யறது ... விதின்னுதான் ெசால்லணும்.

சாகிற வயசா மனுஷனுக்கு? இப்பவும் உன் அப்பா இங்க இருக்கிற

மாதிரித்தான் தோணுது திலீப் '' என்பவர், சிறுவனின் கைகளில்

சில ரூபாய் நோட்டுக்களை கொடுக்கிறார் . யூனிவோகேஸ் , கிலாவியோலின்

போன்ற மின் இசைக் கருவிகளை வாடகைக்கு விட்டதற்காகக்

கொடுக்கப்படும் சிறிய தொகை அது. திலீப் பணத்தில் தன் சகோதரர்களுக்காக

சாக்கலேட்டும் பிஸ்கட்டுகளும் வாங்கிகொண்டு வீட்டுக்கு வருகிறான்.

அம்மாவிடம் மிச்சப் பணத்தை கொடுக்கிறான் . அவனை பார்க்க பார்க்க,

அம்மாவின் மனம் நெகிழ்கிறது . 'சின்னப் பையன் மேல் குடும்பப் பாரம்

விழுந்து விட்டதே ! படிக்க வேண்டிய பையனை இப்படி ரெகார்டிங்

ஸ்டுடியோவிற்கு அனுப்புகிறோமே' என்கிற வருத்தம். ஆனால், சிறுவன்

திலீப்பின் கண்களில் மின்னிய விவரிக்க இயலாத

ஒளியைக் கண்டபோது, அவன் சரியான பாதையில் தான் செல்கிறான் என்று

அந்தத் தாயின் மனதுக்குப் புரிந்தது .



திலீப் பொதுவாக வீட்டில் யாருடனும் கலகலப்பாக்க

பேச மாட்டான் .வீடெங்கும் இறைத்து கிடக்கும் இசைக் கருவிகளும்,

இசைப்பதிவு இயந்திரங்களும்தான் அவனுக்குப் பிடித்த உலகம்.

தன் அறைக்குக் சென்று அவற்றை வாசிப்பதிலும் பிரித்துப் போட்டு மீ ண்டும்

ஒன்று சேர்ப்பதும்தான் . அவனுடைய விருப்பமான ஓரே விளையாட்டு .

மற்றபடி நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவது , சினிமா, அரட்டை

போன்ற வேறு பொழுதுபோக்குகள் ..? ம்ஹூம்... எதுவும் இல்லை .

திலீப் அறைக்குச்சென்று ஹார்ேமானியத்தில் ஒரு பாட்ைட வாசிக்க

ஆரம்பிக்கிறான். அது அவனுைடய அப்பா இசையமைத்த ''ெபத்லேஹமில்

ராவில்...'' என்கிற பிரபல மலையாளப் படப் பாட்டின் மெட்டு . அவன்

வாசிப்பதை கேற்கும் அம்மா, தன் கணவரே நேரில் வந்ததை போல்

மெய்மறந்து போகிறார் .

அந்த மெட்டில் அவன் சில மாற்றங்களை செய்து மிக இனிைமயாக

வாசிப்பைதக் கேட்கும் போது அந்தத் தாய்க்குச் சிலிர்க்கிறது. ஓடி வந்து தன்

மகனை நெஞ்சார அணைத்துக்கொள்கிறார் . அவர் கண்களில் கண்ணீர் வழிகிறது.

''நீ வாசிப்பதை கேக்கும்போது சந்தோஷமா இருக்குப்பா... ஆனா, கொஞ்சம்

பயமாவும் இருக்கு.''



''பயமா... ஏம்மா?''

''உங்கப்பா ரொம்ப திறமைசாலிபா. எவ்வளவோ உயரத்துக்குப் போயிருக்க

வேண்டியவரு. இந்த உலகம்தான் அவரை கடைசி வரை புரிஞ்சுக்கவே இல்ல .

இவ்வளவு சின்ன வயசுல உனக்கு இருக்கிற திறமை எனக்குத் தெரியுது . ஆனா,

உலகம் புரிஞ்சுக்குமனு பயமா இருக்கு'' என்கிறார் வாழ்கையின் பல

பிரச்சனைகளை போராட்டத்துடன் கடந்து வந்த அந்தப் பாசமிகு அம்மா.

உலகம் அந்தச் சிறுவனை புரிந்துகொண்டது... இருகரம் நீட்டி அந்த இளம் இசை

மேதை யை வரவேற்க காத்திருந்தது. அவனுக்கான பிரகாசமான எதிர்கால

வெற்றி பாதை ஏற்கனவே அைமக்கப்பட்டுவிட்டது. நான்கு வயதிலேயே

பெற்றோர்களால் பியாேனா வகுப்புகளுக்கு அனுப்பப்பட்ட சிறுவன் திலீப்,

விரைவில் பள்ளிப் படிப்பை விடப் போகிறான் . தனராஜ் மாஸ்டர் ரிடம் இசை

கற்று, லண்டன் ட்ரினிட்டி இசைக் கல்லூரி யில் ஸ்காலர்ஷிப் பெற்று ,

மேற்கத்திய கிளாசிக்கல் இசை யில் பட்டம் பெறப்போகிறான் . ரூட்ஸ், ெநமிஸிஸ் அவின்யூ,

மாஜிக் போன்ற சென்னை ஆங்கில இசைக் குழுக்களில் பங்கேற்கும் வாய்ப்பு

அவனுக்குக் கிடைக்கப் போகிறது.


தொடரும் ...