Friday, May 13, 2011

Vehicle Series - 4 : Pocket Scooters

பாக்கெட் ஸ்கூட்டர் : Pocket Scooters



இந்த புது விதமான ஸ்கூட்டரை நாம் எங்கு வேண்டுமாலும் எடுத்து செல்லலாம்.போக்குவரத்துக்கு மிகவும் ஏற்றது.எடுத்து செல்லவதும் சுலபம்.



















Saturday, May 7, 2011

ஏ.ஆர்.ரஹ்மான் : ஒரு கனவின் இசை! பகுதி - 6

ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்க்கை வரலாறு.



History repeats itself:

அந்த காலங்களில் சேகர் கொடுக்கும் இசை 'நோட்'டுகளை காம்ப்ஹோ ஆர்கனிலும் , கிடரிலும் வாசிப்பவராகப் பணியாற்றி இருக்கிறார் இளையராஜா.பின்னலில் சேகரின் மகன் ரஹ்மான், இளையராஜாவின் கீ போர்டுJustify Full வாசிபவராகப் பணியாற்றியது ஒரு ஆங்கிலப் பழமொழியை நினைவுபடுத்துகிறது. "History Repeats itself".

தமிழக ஆரசுப் பணியில் மின்சாரத் துறையில் பணியாளராகத் தான் வாழ்வைத் துவக்கிய சேகர், ஒரு கட்டத்தில் இசைத் துறைக்கு மாறினார்.ஹார்மோனியக் கருவியில் இயல்பாகவே மிகுந்த திறமையுடன் இருத்த அவர், தட்சிணாமூர்த்தி இடம் கர்நாடக இசை கற்றுத் தேர்ந்தார்.கொஞ்சம் கொஞ்சமாக இசையின் பல்வேறு பரிணாமங்களையும் புரிந்து கொண்ட இசை கோப்பலரகவும், இசை நடத்துனராகவும் மாறினார்.

மலையாளப் பட இசை உலகில் திறமையான இசை அமைப்பாளர்கள் இருந்தனர்.அவர்களில் டியூன் போடுவதில் திறமை பெற்றிருந்த பலர், அதை ஒரு அமைப்பு ரீதியான இசைப்படிவமாக மாற்றக்கூடிய , சரியான இசை நோட் களை எழுதி வாதியக்கரர்களுக்கு கொடுக்க கூடிய திறன் இல்லாமல் இருந்தார்கள்.அவர்களுக்கு எல்லாம் ஒரு வரப்ரசாதமாக இருதார் சேகர்.



" 'பழசிராஜா' படத்தின் மூலம் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து மலையாளப்பட இசை உலகில் புயல் என புகுந்த ஆர். கே .சேகர், தான் அடுத்த பட வாய்ப்புக்காக எட்டு வருடம் காத்திருந்ததையும் , நடுவே பொருளாதார தேவைக்காக இப்படிப்பட்ட இசை நடத்துனர் வாய்ப்புகளை தட்ட முடியாமலும் இருந்ததைப் பற்றிய நிலையை என்ன வென்று சொல்வது.?" என்று பெருமூச்சு விடுகிறார் ஷாஜி.

ஓய்வு ஒழிச்சல் இல்லாத சேகரின் இசைப் பணி ராப்பகலாக நடந்தது. வீட்டை விடு வெளியே செல்லும் சேகர்,வேலை முடிந்து எப்போது வீடு திரும்புவர் என்று அவர் குடும்பத்திற்கே தெரியாது.அந்தப் ஓயாப்பனியும் அலைச்சலும் கடும் உழைப்பும் தான் ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகரை ஒரு கட்டத்தில் படுத்த படுக்கையில் தள்ளியது.


தொடரும்....
உங்கள் கருத்துகளை பகிக்ரவும் நன்றி.. :)

Thursday, May 5, 2011

குழாயிலே ஒரு குடும்பம் : A family in Pipe

குழாயிலே ஒரு குடும்பம் : A family in Pipe














Monday, May 2, 2011

உலக அழிவு - 5 : மதங்கள் என்ன சொல்கின்றன..??

உலக அழிவு - 5 : முஸ்லிம் மதத்தின் கருத்துக்கள்.



நாம் இந்த பதிவுகளில் உலக அழிவுக்கான காரணங்களை பற்றி பார்த்து வருகிறோம். உலக அழிவை பற்றி மதங்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.யாரையும் பயமுறுத்த அல்ல...

குர்ஆன் என்ன சொல்கிறது...?

உலக அழிவு என்பது முஸ்லிம் மதத்தை பொறுத்தவரை மறுமை நாள் ஆகும்.



மறுநாளின் நம்பிக்கை என்பது குர்ஆனில் முக்கியமான விடயங்களில் ஒன்றாகும் முஹம்மது நபிகளார் (ஸல்) சொல்கின்ற உலக முடிவு நாள் பற்றிய குறிப்புகளில்

  • பெற்ற தாயை கவனிக்க கடமைப்பட்ட ஆண் பிள்ளைகள் தாயை கவனிக்காமல்விட்டுவிடுவார்கள். அதனால் தாய் தனது மகளை சார்ந்து மகளின் தயவில்வாழும் நிலை ஏற்பட்டால்…(ஏற்பட்டிருக்கின்றது.)
  • வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளைமேய்த்துக்கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாகஆவது…(ஆகியிருக்கின்றார்கள்).
  • குடிசைகள் திடீர் திடீரென்று கோபுரமாக மாறினால்…(மாறியிருக்கின்றது)
  • உலகில் விபச்சாரமும் மதுவும் பெருகினால்…
  • தகுதியற்றவர்களிடம் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படுவதும் அவர்கள்நாணயமின்றி நடந்து கொள்வதும் …(நடக்கின்றது)
  • பாலைவனங்கள் சோலையானால்…(ஆம்)
  • காலம் சுருங்கிவிடும் (முஹமது நபிகளார் தான் வாழ்ந்த காலத்தை உதாரணமாகசொல்லும் போது அதாவது இன்றைக்கு 1432 வருடத்திற்கு முன்பு “(இன்றைய) ஒரு வருடம் (அன்று) ஒரு வாரம் போலாகிவிடும். இன்றைய ஒருநாள் அன்றுஒருமணிநேரம் போல ஆகிவிடும். ஒரு மணி என்பது ஒரு வினாடி போன்றுஆகும்..(நடக்கிறது)
  • கொலைகள் அதிகரிப்பதுவும்…(ஆம்)
  • நில அதிர்வுகளும் பூகம்பங்களும் அதிகரித்தால்…
  • மனிதர்கள் பள்ளிவாசல்களை காட்டி என்னுடையது பெரிதா உன்னுடையதுபெரிதா என்று சொல்லி பெருமையடிப்பது….(உண்மைதான்)
  • கடைகள் பெருகுவது….(பெருகி விட்டது)
  • பெண்களின் எண்ணிக்கை உலகத்தில் அதிகரித்தல்..
  • ஆடை அணிந்தும் நிர்வாணமாக தோற்றமளிக்கும் பெண்கள் உலகத்தில்தோன்றுவது…(உண்மைதானே)
  • பேச்சை தொழிலாக்கி பொருள் திரட்டுவது(அரசியல்வாதிகள் போன்றோர்) (திரட்டுகின்றார்கள்)
  • தற்கொலை அதிகரித்தல்..(அதிகரித்திருக்கின்றது)
  • தான் தான் இறைதூதர் என்றும் நபி என்றும் பொய் சொல்பவர்கள்அதிகரித்தல்….(மிக அதிகரித்து விட்டார்கள்)

முஹம்மது நபியவர்கள் உலகத்தின் முக்கியமான தீர்க்கதரசி. அவர் இந்த உலகத்தில் வாழ்ந்தவர். அவர் மரணித்து 1400 வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் அவரது தீர்க்க தரிசனங்கள் சத்தியமானவையாக இருக்கின்றன.

மேற்சொன்னவைகள் நடந்தால் உலக முடிவுநாள் வரும் என்று நபிகளார் சொன்னார்கள். ஆனால் உலக முடிவுநாள் என்பது திடீரென்று வந்துவிழும் ஒன்றல்ல. யாராலும் அறியமுடியாதவாறு அது மறைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் உலகத்தில் மரணமும் அழிவும் ஏதோ ஒருவகையில் எம்மை துரத்திக்கொண்டிருக்கின்றன.

அவர்கள் சொன்ன அனைத்தும் இப்போது நடந்து கொண்டு இருகின்றன... எப்போது என்ன நடக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது.உங்கள் கருத்துகளையும் கம்மேன்ட்சும் எதிர்பார்கிறேன்.உங்கள் சந்தேகம்களை என்னிடம் கேட்கலாம்.தங்கள் வருகைக்கு நன்றி... :)

Sunday, May 1, 2011

விசித்திர புறாக்கள் : Groomed Pigeons

விசித்திர புறாக்கள் : Groomed Pigeons



இங்கு நாம் காணும் புறாக்கள் அனைத்தும் அமெரிக்கா வில் நடந்த தேசிய புறாக்கள் பங்கேர்ப்பில் கலந்து கொண்டு வித்தியாசமான தோற்றத்திற்காக பரிசு வாங்கியவை. இதில் மொத்தம் 1371 பறவைகள் பல நாடுகளில் இருந்து வந்து கலந்துகொண்டன.