Saturday, May 7, 2011

ஏ.ஆர்.ரஹ்மான் : ஒரு கனவின் இசை! பகுதி - 6

ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்க்கை வரலாறு.



History repeats itself:

அந்த காலங்களில் சேகர் கொடுக்கும் இசை 'நோட்'டுகளை காம்ப்ஹோ ஆர்கனிலும் , கிடரிலும் வாசிப்பவராகப் பணியாற்றி இருக்கிறார் இளையராஜா.பின்னலில் சேகரின் மகன் ரஹ்மான், இளையராஜாவின் கீ போர்டுJustify Full வாசிபவராகப் பணியாற்றியது ஒரு ஆங்கிலப் பழமொழியை நினைவுபடுத்துகிறது. "History Repeats itself".

தமிழக ஆரசுப் பணியில் மின்சாரத் துறையில் பணியாளராகத் தான் வாழ்வைத் துவக்கிய சேகர், ஒரு கட்டத்தில் இசைத் துறைக்கு மாறினார்.ஹார்மோனியக் கருவியில் இயல்பாகவே மிகுந்த திறமையுடன் இருத்த அவர், தட்சிணாமூர்த்தி இடம் கர்நாடக இசை கற்றுத் தேர்ந்தார்.கொஞ்சம் கொஞ்சமாக இசையின் பல்வேறு பரிணாமங்களையும் புரிந்து கொண்ட இசை கோப்பலரகவும், இசை நடத்துனராகவும் மாறினார்.

மலையாளப் பட இசை உலகில் திறமையான இசை அமைப்பாளர்கள் இருந்தனர்.அவர்களில் டியூன் போடுவதில் திறமை பெற்றிருந்த பலர், அதை ஒரு அமைப்பு ரீதியான இசைப்படிவமாக மாற்றக்கூடிய , சரியான இசை நோட் களை எழுதி வாதியக்கரர்களுக்கு கொடுக்க கூடிய திறன் இல்லாமல் இருந்தார்கள்.அவர்களுக்கு எல்லாம் ஒரு வரப்ரசாதமாக இருதார் சேகர்.



" 'பழசிராஜா' படத்தின் மூலம் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து மலையாளப்பட இசை உலகில் புயல் என புகுந்த ஆர். கே .சேகர், தான் அடுத்த பட வாய்ப்புக்காக எட்டு வருடம் காத்திருந்ததையும் , நடுவே பொருளாதார தேவைக்காக இப்படிப்பட்ட இசை நடத்துனர் வாய்ப்புகளை தட்ட முடியாமலும் இருந்ததைப் பற்றிய நிலையை என்ன வென்று சொல்வது.?" என்று பெருமூச்சு விடுகிறார் ஷாஜி.

ஓய்வு ஒழிச்சல் இல்லாத சேகரின் இசைப் பணி ராப்பகலாக நடந்தது. வீட்டை விடு வெளியே செல்லும் சேகர்,வேலை முடிந்து எப்போது வீடு திரும்புவர் என்று அவர் குடும்பத்திற்கே தெரியாது.அந்தப் ஓயாப்பனியும் அலைச்சலும் கடும் உழைப்பும் தான் ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகரை ஒரு கட்டத்தில் படுத்த படுக்கையில் தள்ளியது.


தொடரும்....
உங்கள் கருத்துகளை பகிக்ரவும் நன்றி.. :)

1 comment:

  1. Nice article
    ar rahman articles mattum konjam seekram podunga and we expect more informations about ar rahman

    ReplyDelete