Saturday, April 23, 2011

ஏ.ஆர்.ரஹ்மான் : ஒரு கனவின் இசை! பகுதி - 5

.ஆர்.ரஹ்மான் வாழ்க்கை வரலாறு.


ஆர்
.கே.சேகர்...மலையாளப்பட இசை உலகில் முற்றிலும் புதிய சிந்தனைகளுடன் ஆரவாரம் இல்லாமல் நுழைந்த தமிழர்.ஆனால் அவரை மனதார வரவேற்க ரசிகர்களை தவிர யாரும் இல்லை.ஏனென்றால் ஒரு மரபு ரீதியான கேரளா இசைக்கு மட்டுமே பழக்கப்பட்டு இருந்த மலையாளப்பட இசை உலகம் ,அந்த இசை பாணியை பிடிவாதமாக விரும்பியது.வேறொரு இசையின் புதியன புகுதலில் யாரும் ஆர்வம் இல்லாமல் இருந்த சூழல்.

சலில் சௌதிரி போன்ற ஒரு சில இசை அமைப்பாளர்களே அங்கே தங்கள் தனித்திறமையால் சில மட்ட்ரங்களை ஏற்படுத்தி இருதர்கள்.இசையில் பல புதுமைகள் செய்திட வேண்டும் என்று விரும்பிய ஆர்.கே.சேகருக்கு, அப்போது அங்கே இரத்தின கம்பளம் கிடைக்காததில் ஆச்சரியம் ஏதும் இல்லை.மாபெரும் கலைஞர்கள் பலரை இந்த சமூகம் தான் அறியாமையால் கண்டுகொள்ளாமல் கை விட்டிருப்பது சரித்திரம்.அதைப்பற்றி சேகர் கவலைப் பட்டதே இல்லை.படத்துக்கு இசை அமைக்கும் வைப்பு தனக்கு வருகிறதா இல்லையா என்பது எல்லாம் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல.இசை வேலைகளில் எப்போதும் ஈடுபட்டுக் கொண்டே இருக்கவேண்டும் என்பது மட்டுமே அவருடைய ஒரே குறிக்கோள்.ஓய்வு ஒழிச்சல் இன்றி உழைத்து, சரியான உணவு உட்கொள்ளும் பழக்கமும் இல்லாமல், ஒரு வோர்கஹளிக் காக பணியாற்றிய விளைவை தான் மிக இளம் வயதிலேயே அவர் கொடுக்க வேண்டி இருந்தது.

இந்தியத் திரை இசையின் முதல் ஒளிப்பதிவான , 1902 -இல் வேயல்யான கோவ்கார் ஜான் முதல் கொண்டு லேட்டஸ்ட் டாக வெளியான ரஹ்மானின் டெல்லி 6 வரை ஏகப்பட்ட இசைத் தொகுப்புகளை தனிப்பட்ட ரசனைக்க ஒரு பொக்கிஷம் போல பாதுகாத்து வந்திருக்கும் இசை விமர்சகர் எழுத்தாளர் ஷாஜி.

இவர், ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகர் இசை அமைத்த பல பாடல்களின் தொகுப்பை செதேக்களில் பதுவு செய்து ரஹ்மானிடம் கொடுத்திருக்கிறார்.ரஹ்மானிடமே அந்த பாடல்கள் இல்லை.தன்னிடம் கைவசம் இல்லாத தன் தந்தையின் அப்போர்வமான பாடல்களைக் கேட்கும் ஒரு மகனின் பரவச மனநிலையை நீங்கள் யுகிதுக்கொல்ள்ளலாம்.கேரளாவில் மெல்லிசை குழுக்களில் அன்று முதல் இன்று வரை மேடைகளில் தவறாமல் பாடி வரும் ஒரு பாடல் , 'பழசிராஜா ' படத்தில் ஆர்.கே.சேகரின் இசை அமைப்பில் உருவான ஏசுதாஸ் பாடிய "சொட்ட முதல் சுடல வாறே " என்று வரும் பாட்டு.கடந்த 40 வருடங்களாக எவர்க்ரீன் புகழுடன் இருக்கும் அந்த பாடல் ஏசுதாஸ் சின் ஆரம்ப மலையாளப் பாடல்களில் ஒன்று.ஆர்.கே.சேகர் மொத்தம் 22 மலையாளப் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார்.அதில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் இன்றளவும் கேரளா மக்கள் மனதில் பசுமையாக நிலைத்து இருக்கின்றன.

தனிப்பட்ட முறையில் மிகச்சிறந்த கம்போசராக இருந்தாலும் ,அன்றைய காலகட்டத்தில் இசை கோப்பாலராகவும் ,இசை நடத்துனராகவும் பணிபுரிய அவரைப் போன்ற மிகத் திறமையானவர்கள் தேவைப்பட்டார்கள்.எனவே இசைப் பனியின் மீது தணியாத பித்துக் கொண்ட சேகர், அந்தப் பொறுப்புகளை எல்லாம் உவகையுடன் ஏற்று கொண்டார்." என்கிறார் ஷாஜி.

தொடரும்...

1 comment: