Friday, April 1, 2011

உலககோப்பை :பேட்டிங் vs பௌலிங்

உலகக்கோப்பை இறுதி போட்டி: இந்தியா - இலங்கை.
ரசிகர்கள் கடந்த 40- 45 தினங்களாக எதிர்பார்த்த உலகக் கோப்பை கிர்க்கெட்டின் இறுதிப் போட்டி நாளை மும்பையில் நடைபெறுகிறது.2007 இந்தியா கேவலமாக வெளியே வந்தற்கு இந்தமுறை இறுதி வரை சென்றுள்ளது.எனவே இந்தியா இபோட்டியை வெல்ல முழு பலத்துடன் மோதும்.இலங்கை சென்ற உலக கோப்பையில் இறுதி வரை சென்று ஆஸ்திரேலியா விடம் தோல்வி அடைந்ததால் இந்த முறை கண்டிப்பாக வெற்றி பெற நினைக்கும்.இலங்கை அணி முரளிதரனுக்காக வெற்றி பெற முனைப்பு காட்டி வருகையில், இந்திய வீரர்களோ சச்சின் டெண்டுல்கருக்காக கோப்பையை வெல்வதில் உறுதி பூண்டுள்ளனர்.


பேட்டிங் vs பௌலிங் : சச்சின் vs முரளி
இது ஒரு பேட்டிங் சாதனையாளர் மற்றும் ஒரு பௌலிங் சாதனையாளர்
இடையே நடக்கும் போர் என்றே சொல்லலாம்.அனைத்து வகை கிரிக்கெட் ஆட்டத்திலும் அதிகபட்ச ரன்களை எடுத்து 100வது சதத்தை எடுத்து கிரிக்கெட் ஆட்டத்தின் பேட்டிங் முடிசூடா மன்னனாகத் திகழப்போகும் சச்சின் டெண்டுல்கருக்கும், சுழற்பந்து வீச்சு வரலாற்றில் மிகச்சிறந்த ஸ்பின்ன்ரும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி இன்னொருவர் இனி இவரைத் தாண்டிச் செல்ல முடியாது என்ற நிலையை எட்டியவருமான முத்தையா முரளிதரனுக்கும் நாளை கடைசி உலகக் கோப்பை என்பதால் உணர்வுபூர்வமான காட்சிகள் மைதானத்தை அலங்கரிக்கும்.

மிக முக்கியமானது கடைசி முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் முரளிதரன், அவர் காலத்து சிறந்த பேட்ஸ்மென்களில் ஒருவரான சச்சினுக்கு பந்து வீசுவார். இந்தச் சவாலில் கடைசி வெற்றி யாருக்கு என்பதிலும் ரசிகர்கள் ஆர்வம் குவிந்துள்ளது.நாளை மும்பை ஆட்டக்களம் மந்தமாகவும், சுழற்பந்துகள் மெதுவே திரும்பும் ஆட்டக்களமாகவும் இருக்கும் என்று ஆட்டக்கள தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். இருப்பினும் முதலில் பேட் செய்யும் அணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் என்று தெரிகிறது. ஏனெனில் துவக்கத்தில் பேட்டிற்கு பந்துகள் சற்றே வாகாக வரும் என்று எதிர்பார்க்கலாம்.

மேலும் எந்த அணியும் துரத்தலில் அவ்வளவு சௌகரியமாக விளையாடியதாகத் தெரியவில்லை. இலங்கையும் அன்று நியூசீலாந்துக்கு எதிராக திணறித்தான் காலிறுதியில் வென்றது. இந்திய அணியின் பேட்டிங்கும் துரத்தலில் சற்று சந்தேகமான அணிதான். இதனால் டாஸ் வெல்வதில் கடவுளை வேண்டும் காட்சிகளை நாளைக் காணலாம்.

அணிகளைப் பொறுத்தவரை பேட்டிங்கில் இலங்கை துவக்க வீரர்கள் அபாரமாக உள்ளனர். தில்ஷான், தரங்கா அபாயகரமான வீரர்கள். யுவ்ராஜ் சிங்கிற்கு போட்டியாக தொடர் நாயகன் விருதுக்கு அருகில் நிற்பவர் திலக ரத்னே தில்ஷான். சங்கக்காரா மிகவும் அருமையான பேட்ஸ்மென். ஆனால் அவருக்குப் பிறகு ஆட்ட வரிசை சரியாக ஜொலிக்கவில்லை. ஏனெனில் பேட்டிங் வாய்ப்புகளே கிடைக்கவில்லை. இதனால் சற்று திணறல் ஏற்பட்டுள்ளது. மேலும் நாளை மேத்யூஸ் இல்லாதது இலங்கை அணிக்கு பின்னடைவுதான்.

பந்து வீச்சில் மலிங்கா, இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் எப்படியும் சேர்க்கப்படுவார். அது பெர்னாண்டோவாக இருக்கலாம் அல்லது சமிந்தா வாஸாக இருக்கலாம். அல்லது சுழற்பந்து ஆல்ரவுண்டரான ரந்தீவைக் கூட இறக்கலாம். மலிங்காவின் யார்க்கர்களுக்கு இந்திய வீரர்கள் தயாராக இருப்பது அவசியம், அவர் அதைத்தவிர வேறு பந்துகளை வீசுவதில்லை என்பதும் அவருடைய பலவீனமாகும்.

அன்று உமர் குல்லுக்கு விழுந்தது போல் நாளை சேவாகும், சச்சினும் மலிங்காவை நன்றாக 'கவனித்தால்' இலங்கை மீண்டும் முரளிதரனை நம்பவேண்டியிருக்கும். அவரும் இந்தியாவுக்கு எதிராக சமீப காலங்களில் சிறப்பாக வீசவில்லை. வேண்டுமானால் இளம் வீரர்களான கம்பீர், விரட் கோலி, ரெய்னாவுக்கு அவர் அச்சுறுத்தலாக இருக்க வாய்ப்புள்ளது. யுவ்ராஜ் சிங்கும் முரளியை இது வரை சரியாக விளையாடியதில்லை.
அஜந்தா மெண்டிஸை நாளை அணியில் எடுப்பது இலங்கைக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். ஒரு தொடருக்குப் பிறகே இந்திய பேட்ஸ்மென்கள் மெண்டிசை புரட்டி எடுத்து விட்டனர். எனவே இன்னொரு வேகப்பந்து வீச்சாளரில் இலங்கைக்குப் பிரச்சனை உள்ளது. சேவாகிற்கு அந்தப் புதிய பந்து வீச்சாளரைப் பிடித்துப் போய்விட்டால் அவ்வளவுதான் .

ஓரளவுக்கு இந்தியாவுடன் ஆல்-ரவுண்ட் திறமை காட்டியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் திசரா பெரேராவுக்கு வாய்ப்பு கொடுப்பார்கள் என்று தெரிகிறது.

கீப்பர் vs கீப்பர்:
இந்திய அணியில் மகேந்திர சிங் தோனி ஆக்ரோஷமாக பேட்டிங் விளையாட வேண்டும். அவருக்க்கு தனது மட்டையை சுழற்ற இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை. இறங்கும்போதெல்லாம் அவர் அழுத்தமான் சூழலில் களமிறங்க நேரிட்டது.இந்த முறையாவது தெரியமாக விளையட வேண்டும். சங்ககாரா வும் திறமையான கேப்டன் தான்.தோனி யை போல பயப்படாமல் தனியாகவே தான் அணியை வெற்றிக்கு அழைத்து செல்லும் திறமை அவரிடம் உள்ளது.

இரு அணித் தலைவர்களுமே மிகவும் சாதுரியமான, கிரிக்கெட் மூளை நிரம்பிய கேப்டன்கள் என்பதில் ஐயமில்லை.

நாளையும் ஒரு விறுவிறுப்பான போட்டியைக் காணலாம். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பது என்னவெனில் சச்சின் டெண்டுல்கரின் 100-வது சதத்துடன் உலகக்கோப்பையையும் அவருக்கு இந்தியா பரிசாக அளிக்குமா என்பதுதான். இந்த நோக்கத்தில்தான் ரசிகர்கள் கவனம் இருக்கும், குறைந்தது 100-வது சதம் இல்லாவிட்டாலும் கோப்பையை வென்று கபில்தேவுக்குப் பிறகு தோனி கோப்பையை வென்றேயாகவேண்டும் என்ற மனோ நிலையில் இந்திய ரசிகர்கள் நாளை போட்டியை பார்ப்பார்கள் என்பது உறுதி.

ஜெயிக்கப்போவது சச்சினுக்கான உத்வேகமா? முரளிதரனுக்கான உத்வேகமா என்பதை அறிய நாளை இரவு வரை காத்திருப்போம்!

ஆனால் இன்னொரு நபருக்காகவும் இந்த இந்திய அணி உலகக் கோப்பையை வெல்வது அவசியம். அவர்தான் பயிற்சியாளர் கேரி கர்ஸ்டன். இந்த உலகக் கோப்பையுடன் அவர் இந்தியப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகுகிறார்.

இந்திய அணி இன்று இந்த நிலையை எட்டியதற்கும், டெஸ்ட் தரநிலையில் முதலாம் இடத்தைப் பெற்று அதனை தக்கவைத்ததற்கும் கேரி கர்ஸ்டன் ஒரு முக்கியமான காரணி என்பதை நாம் மறக்கலாகாது.

இரு அணிகளுக்கும் போட்டியை வெல்ல வாழ்த்துக்கள் :)

நான் தோனியை பற்றி தவறாக விமர்சனம் செய்வதாக நினைத்தால் உங்கள் கருத்துகளை பகிரவும்.நன்றி...

No comments:

Post a Comment