Wednesday, May 18, 2011

யார் இந்த டன்கன் பிளெட்சர்? : who is this Duncan Fletcher

யார் இந்த டன்கன் பிளெட்சர்? : who is this Duncan Fletcher



கேரி கர்ஸ்டன் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக சாதித்து விலகிய பிறகு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இங்கிலாந்து அணிக்கு 8 ஆண்டுகள் பயிற்சியாளராகப் பணியாற்றிய டன்கன் பிளெட்சர் என்ற முன்னாள் ஜிம்பாப்வே வீரரை பயிற்சியாளராக அறிவித்தது.

ஒப்பந்த காலம் முடிந்து விலகிய கேரி கர்ஸ்டன்தான் டன்கன் பிளெட்சரை பரிந்துரை செய்துள்ளார். கர்ஸ்டனின் பரிந்துரையின் பேரிலேயே பிளெட்சர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே தெரிவித்துள்ளார்.

katanth kaalaththil pilechtar:



1999ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக பிளெட்சர் பொறுப்பேற்றபோது இங்கிலாந்து அணி மிகவும் மோசமான நிலையில் இருந்தது. ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட் என்று அனைத்திலும் தோல்வி மயம்.

அப்போதுதான் நாசர் ஹுசைன், மைக்கேல் வான் ஆகியோரது தலைமையில் புதிய தன்னம்பிக்கையை இங்கிலாந்து அணி பிளெட்சரின் பயிற்சியில் பெறுகிறது. இவரது பயிற்சிக் காலத்தில்தான் இங்கிலாந்து அணி பாகிஸ்தான், இலங்கையில் டெஸ்ட் தொடர்களை வென்றது. துணைக்கண்டத்தில் இங்கிலாந்து நிகழ்த்திய அதிகபட்ச இந்த சாதனை பிளெட்சர் காலத்தில்தான் நடந்தது. அதன் பிறகு இங்கிலாந்து 20 ஆண்டுகளுக்கு பிறகு 2005ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரை வெல்வதில் பிளெச்டரின் பங்கு பற்றி நாசர் ஹுசைனும், கேப்டன் மைக்கேல் வானும் மிகச் சிறப்பாகவே புகழ்ந்து பேசியுள்ளனர்.

இதனாலெல்லாம் இந்திய கிரிக்கெட் அணிக்கு இவர் சிறந்த பயிற்சியாளராக மிளிர்வார் என்று முன் கூட்டியே நாம் அறுதியிடவில்லை. கேரி கர்ஸ்டனும் முன் அனுபவம் இல்லாமல்தான் வந்தார். முன்னதாக ஜான் ரைட்டும் அனுபவம் இல்லாமல்தான் வந்தார். ஏன் கிரெக் சாப்பலுக்கே ஒரு சர்வதேச கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த அனுபவம் அதுவரை இருந்ததில்லை என்பதே நாம் கவனிக்கத்தக்கது.

கேரி கர்ஸ்டன் போன்றே, டன்கன் பிளெட்சரும், "நான் உங்களுக்கு எப்படி உதவட்டும்? என்ற அணுகுமுறையை உடையவர் என்று கூறப்படுகிறது.. மாறாக கிரெக் சாப்பலின் 'நீ இப்படித்தான் செய்தாகவேண்டும்' என்ற அணுகுமுறையே இந்திய அணியை வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றுள்ளது.

எனவே நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment