Wednesday, May 25, 2011

ஏ.ஆர்.ரஹ்மான் : ஒரு கனவின் இசை! பகுதி - 7

ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்க்கை வரலாறு.
ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே .சேகர் இடைவிடாமல் பணி புரிந்த காலத்தில் உணவைப் பற்றியோ ,ஓய்வைப் பற்றியோ கவலைப்பட்டதே இல்லை.டீயும் ஒரு சில பிஸ்கட்டுகளையும் மட்டுமே சாப்பிட்டு வீட்டு ரெகார்டிங் அறையே கதி எனக் கிடந்தார்.சில சமயம் ,நள்ளிரவு வேலையில் அவருக்கு கடும் வயிற்று வலி ஏற்படும்.வலி போருக்க முடியாமல் தலையனையை வயிற்றிற்கு கொடுத்து குறுகிப் படுத்துக் கிடப்பார்.உயிரைக் கொள்ளும் அந்த வலி கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியதும் மெல்ல கண் அயர்வார்.இமை மூடி ஓரிரு மணி நேரமே ஆகி இருக்கும் ...அதற்குள் விடிய ஆரம்பித்து விடும்.காலை எழு மணிக்கே இசை பணியாளர்கள் காதிருப்பார்களே என்கிற அலாரம் அடித்ததும்,தூக்கம் கலைத்து எழுந்து ஒளிபதிவுக் கூடத்துக்கு ஓடுவர்.வயிற்று வலியைப் பற்றி மருத்துவரிடம் ஆலோசிக்கக் கூட நேரம் இல்லை.அந்த வலியைப் பற்றி அவர் யாரிடமும் சொல்வதுவும் இல்லை.


இதில் மற்றொரு சோகம் என்னவென்றால் ... மகத்தான இசை அமைப்பாளரான அவர், தனக்கான பட வாய்ப்புகள் இன்றி ,பிற இசை அமைப்பாளர்களுக்கே வேலை செய்தது தான். பழசிராஜா படத்தில் , அருமையான 10 பாடல்களைக் கொடுத்தார் சேகர்.அதில் ஏ.எம்.ராஜாவும் ,எஸ்.ஜானகியும் பாடிய "சிரகற்று வீனொரு கொச்சுத் தும்பி ...", பி.சுசீலா படிய பிரபல தாலாட்டுப் பாடலான "முத்தே வாவாவூ " போன்ற பாடல்கள் இண்டைக்கும் கேட்பதற்கு சுகமாக இருக்கும்."சாயிபே .. சாயிபே ..அஸ்ஸலாமு அலைக்கும்" என்கிற பட்டு அங்கே ஒரு trendsetter .அதற்கு அடுத்து அவர் இசைஅமைப்பில் பல வருடங்களுக்குப் பிறகு வெளிவந்த "ஆயிஷா " படத்தில் பி.பி. ஸ்ரீநிவாஸ் பாடிய 'யாத்ராகரா போவுக போவுக ... ' பாட்டு பி.பி.ஸ்ரீனிவாசின் மிகச்சிறந்த பாடல்களில் ஒன்று.ஆனாலும் ஒரு மனிதனால் எவ்வளவு நாட்கள் தான் இசை அமைக்கும் வைப்பு கிடைக்காமல் பொருளாதார ரீதியாக சமாளிக்க முடியும்? நாட்கள் செல்ல செல்ல ,ஆர்.கே.சேகரின் நோய் தான் கொடூர கரங்களால் அவரிச் சுற்றி வளைத்தது.நடமாட முடியாதபடி படுக்கையில் விழுந்தார்.சிறுவனாக இருத்த திலீப் அப்போது மருத்துவமனைக்குத் தினமும் சென்று அப்பாவை பார்த்த நினைவுகள் ,அவரது மனதில் நீங்காத சித்திரங்களாக பதிந்திருகின்றன.அப்பா மருத்துவ மனையில் படுத்திருக்கிறார்.சுற்றிலும் நிற்கும் அவருடைய உதவியாளர்கள்,அவர் சொல்லும் இசை நோட்டுகளைக் குறிபெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.சில சினிமா இயக்குனர்கள் வந்து ,"இந்த நிலைமையில் இப்படிச் சொல்லக் கஷ்டமா இருக்கு.ஆனா ,நீங்க எழுந்து வந்தால் தான் எங்க பட மியூசிக் எல்லாம் கம்பலீட் ஆகும் ." என்று சங்கடத்துடன் சொல்கிறார்கள்.நோயின் தீவிரத்துக்கு நடுவிலும் டுன் கலைக் கேட்டு அதற்கான அரங்கேமென்ட் நோட்டுகளை எழுதிக் கொடுக்கிறார் சேகர்.பிரபல திரைப்படப் பாடலாசிரியர் ஸ்ரீகுமாரன் தம்பி வந்து சேகரின் கைகளைப் பற்றிக்கொண்டு சீக்கிரமே குணமாகீடுவீங்க , நாம சேர்ந்து சீக்கிரமே மறுபடியும் மியூசிக் செய்யலாம்" என்கிறார்.இருவரும் இணைந்து பல படங்களில் சிறந்த பாடல்களைக் கொடுத்தவர்கள்.ஒரு வறண்ட புன்னகையை அவருக்கு பரிசாக அளிக்கிறார் சேகர்.தான் நோயைப் பற்றிய தீவிரம் அவருக்கு அப்போது தெரிந்தே இருந்தது. சிறுவன் திலீப் இந்தக் காட்சிகளை எல்லாம் ஒரு வித பிரம்மிப்புடன் குழப்பமாக பார்க்கிறான்.ஒரு தேனீயைப் போல சுறுசுறுப்பாக சுழன்று வேலை பார்த்த அப்பாவுக்குத் தீடிரென்று என்ன ஆனது என்று புரியவில்லை.அப்பா ஒரு சிறந்த இசை அமைப்பாளர் என்பது மட்டும் தான் தெரியும்.வீட்டில் அப்பா சேகரித்து வைத்திருந்த இசைதத் தட்டுகள்,இசைக் கருவிகளும் தான் திலீப்பின் விருப்பமான உலகம்.விரைவில் அப்பாவுக்கு உடம்பு சரியாகிவிடும் , முன்பு போல அவர் உற்சாகமாக இசைப் பணிகளுக்குத் திரும்புவார் என்று திலீப் நம்பினான்.ஆனால் ,அந்த நம்பிக்கை நனவாகவில்லை .அப்பாவின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகியது.

தொடரும் ...

No comments:

Post a Comment