Sunday, April 10, 2011

ஏ.ஆர்.ரஹ்மான் : ஒரு கனவின் இசை! பகுதி - 4

.ஆர்.ரஹ்மான் வாழ்க்கை வரலாறு.




ஏ .ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே .சேகர், மலையாள பட இசையுலகில் எத்தனையோ அற்புதமான காலத்தை வெல்ல கூடிய பாடல்களை தந்திருக்கிறார் .இப்போது கம்ப்யூட்டர் ரில் இதை எழுதிக்கொண்டு இருக்கும் போது கூட அதில் அவருடைய 1976 உம் பாடலான "சோபான சங்கீத ராத்திரி " இனிமையாக ஒலித்து கொண்டுதான் இருக்கிறது.சேகரின் பாடல்களை கேட்பவர்களுக்கு ,தந்தைக்கும் மகனுக்கும் இடையே தொடர்து வந்திருக்கும் சங்கிலிப் பிணைப்பு போன்ற நுண்ணியமான இசைதொடர்பை புரிந்து கொள்ள முடியும்.

முந்திய சோவியத் ரஷ்யாவில் ஒரு இளம் வயலும் மேதை இருந்தான் .எட்டு வயதிலேயே மேடைக்கச்சேரி செய்யும் அளவுக்கு புகழ் பெற்று இருந்தான்.அவனுடைய அப்பா ஒரு கால்பந்தாட்ட காரர்.அம்மா, வரலாற்று ஆசிரியர்.இப்படி இருக்கையில் ,இந்த சிறுவனிடம் எப்படி வந்தது இந்த வயலின் இசை மேதைமை என்று ஆராய்ந்தார்கள் . பரம்பரை விவரங்களை தேடியதில் அவனுடைய தாத்தாவுக்கு தாத்தா ஒரு வயலினிஸ்ட் என்பது தெரிய வந்தது.ரஹ்மான் என்னும் இசை மேதை யின் வேர்களை இது போல வேறெங்கும் தேடவேண்டியதில்லை.அது, அவருடைய அப்பா விடமே நிறைத்திருந்தது.

ஆர்.கே.சேகர் பற்றி பார்பதற்கு முன்னால் ஒரு சின்ன பிளாஷ்பாக் ...



அது 1964- ம் ஆண்டு.
வீட்டின் சுவரில் கதா காலட்சேபம் செய்யும் ஒரு பெரியவரின் பழைய புகைப்படம் மாட்டப்பட்டு இருக்கிறது. அதில் " கீழானூர் ராஜகோபால் பாகவதர் " என்று மங்கிய எழுத்துக்கள்.அதன் கீழ் பாயில் அமர்ந்து ,மெய்மறந்து ஒரு டோனை ஹர்மொநியத்தில் வாசித்துக்கொண்டு இருக்கிறார் ஆர்.கே.சேகர்.ஆர்.கே.சேகர் என்பதன் விரிவாக்கம் ராஜகோபால குலசேகர் என்பதே. புகைபடத்தில் காணும் கீழானூர் ராஜகோபால் பாகவதர், அவருடைய தந்தை.அதாவது ரஹ்மானின் தாத்தா.அந்தக் காலங்களில் மயிலாப்பூரில் கோவில்களில் ஹரிகதை பாகவதம் சொல்லியவர்.

சேகர் தன ஹார்மோநியத்தில் அப்போது மலையாளத்தில் அவருடைய இசைஅமைப்பில் வெளியாகி ஹிட் ஆனா "பழசிராஜா " (இப்பொது ரீ - மேக்கில் வந்த படம் ) படத்தின் சூப்பர் ஹிட் பாடலான "சொட்ட முதல் சுடல வாறே." என்கிற படலை வசித்துக் கொண்டிருக்கிறார். அடுத்த சில வருடங்களில் ரஹ்மானை பெற்றெடுக்க போகும் அவர்டைய மனைவி கஸ்தூரி (இப்போது கரீமா ), அவர் வாசிப்பதை ஆனந்தத்துடன் கேட்டுக்கொண்டு இருக்கிறார். அவர் கண்கள் சந்தோஷத்தில் கலங்கு கின்றன.அதை காணும் சேகர், தன பாட்டை நிறுத்திவிட்டு "கஸ்தூரி ஏன் அழுற ?என்னாச்சு?" என்கிறார்.

கஸ்தூரி கண்களை துடைத்துக் கொண்டு "இதுக்காக தானேங்க இதனை நாள் கஷ்டப்பட்டோம்.இப்போ உங்க பாட்டு தான் கேரளாவுல படி தொட்டி எல்லாம் கேளுதுன்னு சொல்றாங்க.." என்கிறார் ."

சேகர் ஒரு வறண்ட புன்னகையுடன் பதில் சொல்கிறார்."ரொம்ப சந்தோஷ படாத மா! பாட்டெல்லாம் பெரிய ஹிட் தான்.ஆனா,அடுத்த படத்துக்கு ஒப்பந்தம் பண்ணதன் யாரும் ஆள் வரல ".

அவர் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே ராமநாதன் என்பவர் வீட்டினுள் நுழைகிறார்.சேகரிடம் கை குளிக்கிவிட்டு ,"உங்க பழசி ராஜா பாட்டெல்லாம் சூப்பர் ஹிட் சார்! அடுத்த 'ஆயிசா ' ன்னு ஒரு படம் பண்றோம் .நீங்க தான் மியூசிக் போடணும் .அட்வான்ஸ் கொடுக்க வந்தேன்..'" .என்று ஒரு தொகையை அவரிடம் கொடுக்க வருகிறார்.வீடெங்கும் இறைத்து கிடக்கும் இசைப்பதிவு இயந்திரங்களை ,இசை கருவிகளை அவர் ஆச்சரியமாக பார்க்கிறார்.



எல்லாமே இறக்கு மதி எஃஉஇப்மெந்த்ஸ (equipments) போல இருக்கே சார்.! உங்கள மாத்ரி யாரு இப்பெல்லாம் புதுமை செய்யறாங்க? எல்லாம் பழைய தேஞ்ச போன ரெக்கார்டு களைதான் தேய்க்கரங்க. பழசி ராஜாவுல பாட்டு மட்டும்மல்ல . அந்தப் பாட்டுக்களை நீங்க ஒலிபதிவு பண்ணி இருக்கற துல்லியம் பாருங்க ..யாரும் கிட்ட நெருங்க முடியாது.சவுண்டே ரொம்ப வித்தியாசமா இருக்கு .." என்று பாராட்டிப் பேசும் ராமநாதன் தான் குரலைக் சற்று தாழ்த்தி.."சேகர் சார், பால்டிக்க்ஸ் பேசறேன்னு தப்ப நினைக்க கூடாது."

என்னடா , தமிழ் நாட்டுல இருந்து ஒருத்தன் வந்து மியூசிக் ல என்னென்னமோ புதுமை பண்றானே ன்னு இங்க சில ஜாம்பவான்கள் பொருமிகிட்டு இருக்காங்க. தமிழ் ஆளுங்க னாலே இவங்களுக்கு கொஞ்சம் அலர்ஜி ! எதுக்கும் ஜாக்கரதைய இருந்துக்கோங்க." என்கிறார்.

அதில் சற்றும் கலவரப்படாத சேகர், "வளர வேண்டியவங்க வளருவாங்க ராமநாதன் சார்.யாரும் யாரையும் எதுவும் செய்ய முடியாது.அவங்க அவங்களுக்கு போக வேண்டிய அரிசில அவங்க பேரு எழுதி இருக்கும்! ", என்று சொல்லிக் கை கூப்பி விடை அளிக்கிறார்.

தொடரும் ...
உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்... நன்றி.

2 comments:

  1. புதிய செய்திகள் பல தெரிந்து கொண்டேன். சேகர் மலையாளி என்று முன்பு படித்ததாக ஞாபகம். ஆனால் கஸ்தூரி தமிழ் பெண்.

    ReplyDelete
  2. சேகர் அகமுடைய முதலியார் சாதி
    கஸ்தூரி வன்னிய ரெட்டியார்.
    பூர்வீகம் சென்னை அருகே உள்ள கீழ் ஆனூர்.

    ReplyDelete