Showing posts with label உலகக்கோப்பை. Show all posts
Showing posts with label உலகக்கோப்பை. Show all posts

Friday, April 8, 2011

இந்தியா உலகக்கோப்பை:மேட்ச் பிக்ஸ் செய்யப்பட்டதா ?

இந்தியா உலகக்கோப்பை:மேட்ச் பிக்ஸ் செய்யப்பட்டதா ? is India's worldcup a FIXED MATCH..?

28 ஆண்டுகளுக்கு பின் இந்தியா உலக கோப்பையை வென்றுள்ளது.டோனி தலைமையில் இந்தியா பல சாதனைகளை செய்துள்ளது.இதோ இன்று ஐ . பி . எல் தொடங்குகிறது. இந்தியா உலகக்கோப்பை வென்றது எனக்கும் மகிழ்ச்சி .ஆனால் எனக்கு இந்தியா வென்றது முதல் இது ஒரு மேட்ச் பிக்சிங் இருக்குமோ என்ன சந்தேகம்.இந்தியா விளையாடியதை பார்க்கும் போது அது முளுதிர்மையுடன் விளையாடியதை தெரியவில்லை.ஏன் என்ன்றால் இந்தியா ஒரு 100% அணி கிடையாது என்பது என் கருத்து.


இந்தியா அணி கேப்டன் டோனி யும் கேப்டன் என்று சொல்ல முடியாது.லக்கி கேப்டன் என்று வேண்டுமானால் சொல்லலாம்.அது அவர் பேச்சில் இருந்தே தெரிகிறது. அரை இறுதியில் அஸ்வின் பதிலாக நெஹ்ரா வை எடுத்து பின் அதற்கு விளக்கம் வேறு கொடுத்தார்.தான் தவறான முடிவு எடுத்ததாகவும் ஆனால் நெஹ்ரா நன்றாக தான் பந்து வீசினர் என்று சொன்னார். இதே தவறை தான் இறுதி போட்டியிலும் செயதார்.ஸ்ரீசாந்த் ,பங்களாதேஷ் சுடன் ஆடும் போதே அவர் லைக்கு இல்லாதவர் என்று முடிவானது.அப்படி இருத்தும் கோப்பையை முடிவு செய்யும் போட்டியில் அவரை எடுத்தார்.அஸ்வின் இரண்டு போட்டியில் நன்றாக வீசியும் அவரை தவிர்த்து ஸ்ரீசாந்த் தை எடுத்தது ஏன் என்று தெரியவில்லை.ஒரு வேளை ஸ்ரீசாந்த் அந்த போட்டியில் நன்றாக பந்து வீசி இருந்தாலும் பரவா இல்லை.இது எனக்கு சந்தேகம் வந்தது.


இந்தியா வென்றது மேட்ச் பிக்சிங் என்று நான் சொல்ல காரணங்கள்:


1) கேவலமான இலங்கை அணியின் பில்டிங். இவளவு மோசமாக நான் இலங்கை அணி பில்டிங் செய்து பார்த்தது கிடையாது.அதுவும் உலகக்கோப்பை போன்ற ஒரு முக்கியமான மேட்ச் சில் ... (என்னை திட்ட நினைபவர்கள் சென்ற உலகக்கோப்பை இறுதியில் ஆஸ்திரேலியா வுடன் இலங்கை அணியின் பில்டிங் கை பார்க்கவும்.)


2) முரளிதரன் இவ்வளவு மோசமாக பந்து வீசி நான் பார்த்தது இல்லை. அதுவும் அவருடைய கடைசி போட்டியில்.சச்சின் விளையாடி இருந்தால் பரவா இல்லை.கம்பீர் ,க்ஹோலி யை அவுட் செய்ய இவரால் முடியாதா?


3) கம்பீர் ரின் ரன் அவுட் மிஸ்ஸனது.கம்பீர் ரை சுலபமாக அவுட் ஆக்கும் வைப்பை சங்ககாரா அசால்ட் தக விடுவார்.அவருடைய அனுபவத்திற்கு இது பெரிய தவறு.அதுவும் உலகக்கோப்பை யில் இப்படி விடுவது என்னால் நண்பா முடியவில்லை.


4) டோனி கண்டிப்பாக ஒரு திறமையான கேப்டன் கிடையாது.அதிஷ்ட கேப்டன் மட்டுமே.அதுவும் இந்த போட்டியில் அது அதிஸ்டமா இல்ல பணமா என்று தெரியவில்லை.எனக்கு அவர் 2007 உலகக்கோப்பை வென்ற போது ரொம்பவும் பிடித்தது.ஆனால் இப்போது இல்லை.


5) டோனி இறுதி போட்டியில் விளையாண்டது என்னால் நம்ப முடிய வில்லை.அவர் அந்த அளவு பார்ம் மில் இல்லை.இப்போது எல்லாம் விக்கெட் விட கூடாது என்று ஆடும் அவர் அன்று மட்டும் யாரும் விக்கெட் எடுக்க மாட்டார்கள் என்பது போல் ஆடினார்.


6) ஆட்ட நாயகன் விருது டோனி கு கொடுத்தது.ஒரு வேளை இது ஒரு நியாயமான மேட்ச் என்றல் எல்லோருக்கும் தெரியும் வெற்றியை தந்தது கம்பீர் என்று... ஆனால் டோனி க்கு கொடுத்தது.எதோ பிளான் பணியது போல இருந்தது.


7) டோனி பேசும் போது "ஒரு வேளை தோற்று இருந்தால் என்னிடம் பல கேள்வி கேட்டிருப்பார்கள் .. ஏன் அஸ்வின் இல்லை ஸ்ரீசாந்த் என்று?ஏன் யுவராஜ் இல்லை நீ பேட் செய்ய வந்தாய் என்று.. அதற்காக தான் அடி வென்றோம் "என்று. அப்படி என்றால் யாரை போட்டு விளையாண்டலும் வெற்றி பெறுவோம் என்று அவருக்கு முன்னாடியே தெரியுமோ ?


இன்னொரு முக்கியமான காரணம் : ஐ.பி.எல்.


ஐ சி எல் லை தடை செய்த கிரிக்கெட் வாரியம் ஐ.பி.எல். கு அனுமதி அளித்தது ஏன்..? இந்தியா அப்போது தான் 20-20 உலகக்கோப்பை வென்றது.எனவே ஐ.பி.எல். நடத்தினால் அதை வைத்து மிகுந்த லாபம் பார்க்கலாம் என்று. அது தான் நடந்தது.முதல் ஐ.பி.எல். மாபெரும் வெற்றி.ஆனால் அடுத்த இரண்டும் மோசம் ஆனது.இரண்டாவது இந்தியாவில் நடத்த முடியாமல் தென் ஆப்பிரிக்காவில் நடத்தினர். மூன்றாவது இந்தியாவில் நடந்தாலும் சுவாரஸ்யமானதாக இல்லை. ஏன் ???



காரணம் இந்தியா வின் 20-20 உலகக்கோப்பை போட்டியில் படு தோல்வி."ஆமா இவங்க ஐ.பி.எல். ல காசு கொடுத்தா ஆடரங்க ஆனா நாட்டுக்காக ஆட மாட்டாங்க" என்று எல்லோரும் சொல்ல ஆரம்பித்தார்கள். டோனி தலைமையில் சாம்பியன் கோப்பை வென்றும் நாம் உலகக்கோப்பையில் கேவலமா தோற்றோம். இந்த ஐ.பி.எல். மேலும் இரண்டு அணியை சேர்ந்துள்ளது. இந்த புதிய அணி இரண்டும் 1500 கோடி ரூபாய்க்கு மேல் வாங்கி உள்ளனர்.


ஒரு வேளை இந்தியா உலகக்கோப்பையில் தோல்வி அடைந்து இருந்தால் கண்டிப்பாக இந்த ஐ.பி.எல். மாபெரும் தோல்வி அடைத்து இருக்கும். இதை யாராலும் மறுக்க முடியாது. அது மட்டும் இல்லாமல் ஐ.பி.எல். இருக்கும் போது மேட்ச் பிக்சிங் இன்னும் சுலபமாக இருக்கிறது.


நான் இங்கு சொன்னது என் கருத்தக்கள் மட்டுமே.இது யாரையும் புண்படுத்த அல்ல... நீங்கள் கிரிக்கெட் வெறியர் ராய் இல்லாமல் ஒரு சாதாரண ரசிகனை இருந்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை என்னோடு பகிரவும்.. உங்கள் கமெண்ட்ஸ் பொருத்து நான் அடுத்த பதிவில் இன்னும் நிறைய சொல்கிறேன்... நன்றி.

Friday, April 1, 2011

உலககோப்பை :பேட்டிங் vs பௌலிங்

உலகக்கோப்பை இறுதி போட்டி: இந்தியா - இலங்கை.




ரசிகர்கள் கடந்த 40- 45 தினங்களாக எதிர்பார்த்த உலகக் கோப்பை கிர்க்கெட்டின் இறுதிப் போட்டி நாளை மும்பையில் நடைபெறுகிறது.2007 இந்தியா கேவலமாக வெளியே வந்தற்கு இந்தமுறை இறுதி வரை சென்றுள்ளது.எனவே இந்தியா இபோட்டியை வெல்ல முழு பலத்துடன் மோதும்.இலங்கை சென்ற உலக கோப்பையில் இறுதி வரை சென்று ஆஸ்திரேலியா விடம் தோல்வி அடைந்ததால் இந்த முறை கண்டிப்பாக வெற்றி பெற நினைக்கும்.இலங்கை அணி முரளிதரனுக்காக வெற்றி பெற முனைப்பு காட்டி வருகையில், இந்திய வீரர்களோ சச்சின் டெண்டுல்கருக்காக கோப்பையை வெல்வதில் உறுதி பூண்டுள்ளனர்.


பேட்டிங் vs பௌலிங் : சச்சின் vs முரளி
இது ஒரு பேட்டிங் சாதனையாளர் மற்றும் ஒரு பௌலிங் சாதனையாளர்
இடையே நடக்கும் போர் என்றே சொல்லலாம்.அனைத்து வகை கிரிக்கெட் ஆட்டத்திலும் அதிகபட்ச ரன்களை எடுத்து 100வது சதத்தை எடுத்து கிரிக்கெட் ஆட்டத்தின் பேட்டிங் முடிசூடா மன்னனாகத் திகழப்போகும் சச்சின் டெண்டுல்கருக்கும், சுழற்பந்து வீச்சு வரலாற்றில் மிகச்சிறந்த ஸ்பின்ன்ரும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி இன்னொருவர் இனி இவரைத் தாண்டிச் செல்ல முடியாது என்ற நிலையை எட்டியவருமான முத்தையா முரளிதரனுக்கும் நாளை கடைசி உலகக் கோப்பை என்பதால் உணர்வுபூர்வமான காட்சிகள் மைதானத்தை அலங்கரிக்கும்.

மிக முக்கியமானது கடைசி முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் முரளிதரன், அவர் காலத்து சிறந்த பேட்ஸ்மென்களில் ஒருவரான சச்சினுக்கு பந்து வீசுவார். இந்தச் சவாலில் கடைசி வெற்றி யாருக்கு என்பதிலும் ரசிகர்கள் ஆர்வம் குவிந்துள்ளது.



நாளை மும்பை ஆட்டக்களம் மந்தமாகவும், சுழற்பந்துகள் மெதுவே திரும்பும் ஆட்டக்களமாகவும் இருக்கும் என்று ஆட்டக்கள தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். இருப்பினும் முதலில் பேட் செய்யும் அணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் என்று தெரிகிறது. ஏனெனில் துவக்கத்தில் பேட்டிற்கு பந்துகள் சற்றே வாகாக வரும் என்று எதிர்பார்க்கலாம்.

மேலும் எந்த அணியும் துரத்தலில் அவ்வளவு சௌகரியமாக விளையாடியதாகத் தெரியவில்லை. இலங்கையும் அன்று நியூசீலாந்துக்கு எதிராக திணறித்தான் காலிறுதியில் வென்றது. இந்திய அணியின் பேட்டிங்கும் துரத்தலில் சற்று சந்தேகமான அணிதான். இதனால் டாஸ் வெல்வதில் கடவுளை வேண்டும் காட்சிகளை நாளைக் காணலாம்.

அணிகளைப் பொறுத்தவரை பேட்டிங்கில் இலங்கை துவக்க வீரர்கள் அபாரமாக உள்ளனர். தில்ஷான், தரங்கா அபாயகரமான வீரர்கள். யுவ்ராஜ் சிங்கிற்கு போட்டியாக தொடர் நாயகன் விருதுக்கு அருகில் நிற்பவர் திலக ரத்னே தில்ஷான். சங்கக்காரா மிகவும் அருமையான பேட்ஸ்மென். ஆனால் அவருக்குப் பிறகு ஆட்ட வரிசை சரியாக ஜொலிக்கவில்லை. ஏனெனில் பேட்டிங் வாய்ப்புகளே கிடைக்கவில்லை. இதனால் சற்று திணறல் ஏற்பட்டுள்ளது. மேலும் நாளை மேத்யூஸ் இல்லாதது இலங்கை அணிக்கு பின்னடைவுதான்.

பந்து வீச்சில் மலிங்கா, இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் எப்படியும் சேர்க்கப்படுவார். அது பெர்னாண்டோவாக இருக்கலாம் அல்லது சமிந்தா வாஸாக இருக்கலாம். அல்லது சுழற்பந்து ஆல்ரவுண்டரான ரந்தீவைக் கூட இறக்கலாம். மலிங்காவின் யார்க்கர்களுக்கு இந்திய வீரர்கள் தயாராக இருப்பது அவசியம், அவர் அதைத்தவிர வேறு பந்துகளை வீசுவதில்லை என்பதும் அவருடைய பலவீனமாகும்.

அன்று உமர் குல்லுக்கு விழுந்தது போல் நாளை சேவாகும், சச்சினும் மலிங்காவை நன்றாக 'கவனித்தால்' இலங்கை மீண்டும் முரளிதரனை நம்பவேண்டியிருக்கும். அவரும் இந்தியாவுக்கு எதிராக சமீப காலங்களில் சிறப்பாக வீசவில்லை. வேண்டுமானால் இளம் வீரர்களான கம்பீர், விரட் கோலி, ரெய்னாவுக்கு அவர் அச்சுறுத்தலாக இருக்க வாய்ப்புள்ளது. யுவ்ராஜ் சிங்கும் முரளியை இது வரை சரியாக விளையாடியதில்லை.




அஜந்தா மெண்டிஸை நாளை அணியில் எடுப்பது இலங்கைக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். ஒரு தொடருக்குப் பிறகே இந்திய பேட்ஸ்மென்கள் மெண்டிசை புரட்டி எடுத்து விட்டனர். எனவே இன்னொரு வேகப்பந்து வீச்சாளரில் இலங்கைக்குப் பிரச்சனை உள்ளது. சேவாகிற்கு அந்தப் புதிய பந்து வீச்சாளரைப் பிடித்துப் போய்விட்டால் அவ்வளவுதான் .

ஓரளவுக்கு இந்தியாவுடன் ஆல்-ரவுண்ட் திறமை காட்டியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் திசரா பெரேராவுக்கு வாய்ப்பு கொடுப்பார்கள் என்று தெரிகிறது.

கீப்பர் vs கீப்பர்:
இந்திய அணியில் மகேந்திர சிங் தோனி ஆக்ரோஷமாக பேட்டிங் விளையாட வேண்டும். அவருக்க்கு தனது மட்டையை சுழற்ற இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை. இறங்கும்போதெல்லாம் அவர் அழுத்தமான் சூழலில் களமிறங்க நேரிட்டது.இந்த முறையாவது தெரியமாக விளையட வேண்டும். சங்ககாரா வும் திறமையான கேப்டன் தான்.தோனி யை போல பயப்படாமல் தனியாகவே தான் அணியை வெற்றிக்கு அழைத்து செல்லும் திறமை அவரிடம் உள்ளது.

இரு அணித் தலைவர்களுமே மிகவும் சாதுரியமான, கிரிக்கெட் மூளை நிரம்பிய கேப்டன்கள் என்பதில் ஐயமில்லை.

நாளையும் ஒரு விறுவிறுப்பான போட்டியைக் காணலாம். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பது என்னவெனில் சச்சின் டெண்டுல்கரின் 100-வது சதத்துடன் உலகக்கோப்பையையும் அவருக்கு இந்தியா பரிசாக அளிக்குமா என்பதுதான். இந்த நோக்கத்தில்தான் ரசிகர்கள் கவனம் இருக்கும், குறைந்தது 100-வது சதம் இல்லாவிட்டாலும் கோப்பையை வென்று கபில்தேவுக்குப் பிறகு தோனி கோப்பையை வென்றேயாகவேண்டும் என்ற மனோ நிலையில் இந்திய ரசிகர்கள் நாளை போட்டியை பார்ப்பார்கள் என்பது உறுதி.

ஜெயிக்கப்போவது சச்சினுக்கான உத்வேகமா? முரளிதரனுக்கான உத்வேகமா என்பதை அறிய நாளை இரவு வரை காத்திருப்போம்!

ஆனால் இன்னொரு நபருக்காகவும் இந்த இந்திய அணி உலகக் கோப்பையை வெல்வது அவசியம். அவர்தான் பயிற்சியாளர் கேரி கர்ஸ்டன். இந்த உலகக் கோப்பையுடன் அவர் இந்தியப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகுகிறார்.

இந்திய அணி இன்று இந்த நிலையை எட்டியதற்கும், டெஸ்ட் தரநிலையில் முதலாம் இடத்தைப் பெற்று அதனை தக்கவைத்ததற்கும் கேரி கர்ஸ்டன் ஒரு முக்கியமான காரணி என்பதை நாம் மறக்கலாகாது.

இரு அணிகளுக்கும் போட்டியை வெல்ல வாழ்த்துக்கள் :)

நான் தோனியை பற்றி தவறாக விமர்சனம் செய்வதாக நினைத்தால் உங்கள் கருத்துகளை பகிரவும்.நன்றி...

Tuesday, March 29, 2011

உலகக்கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் இதுவரை...

உலகக்கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் இதுவரை...

19
92:



இந்தியா 5 உலக கோப்பைக்கு பிறகு முதன் முதலாக பாகிஸ்தானோடு 1992- உம் ஆண்டு மோதியது. மார்ச் 4 ,1992 இல் மொஹம்மத் அசாருதீன் டாஸ்வென்று பேட் செய்ய முடிவெடுத்தார். சச்சின் னின்அதிரடி அரைசதத்தால் இந்தியா 49 ஓவரில் எடுத்தது. அமீர் சொஹைல் லின் (62) ஆட்டம் பாகிஸ்தான் னை நம்பிக்கை ஏற்படுத்தியது. ஆனால் திடீரென அமீர் சொஹைல் அவுட் ஆகா பாகிஸ்தான் (105-2 to 183)சுருண்டது.

1996:
அதன் பிறகு காலிறுதியில் பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தானோடு மோதியது. சிந்து மற்றும் சச்சின் இணைத்து இந்தியா வுக்கு பெரிய துவக்கத்தை தந்தனர் (93). இறுதியில் ஜடேஜா வின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா என்ற 287-8 மாபெரும் இலக்கை வைத்தது. ஆனால் பாகிஸ்தானும் 10 ஓவரில் 84 அடித்து இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது. இருப்பினும் வெங்கடேஷ் பிரசாத் அபார மாக பந்து வீசி இந்தியா ரன்களில் 39 வெற்றி பெற உதவினார். இந்த மேட்ச் கீழே உள்ள சர்ச்சையால் பிரபலம் அடைத்தது. இந்த வெற்றி மூலம் இந்தியா அரை இறுதி சென்றது.




1999:
1999 நடந்த போட்டி அபோது நடந்த கார்கில் போரால் பெரிதாக எதிர்பார்க்க பட்டது. ஒவ்வொரு இந்தியனும் இந்தியா தோற்க கூடாது என்ன எண்ணினான். சடகோப்பன் ரமேஷ் மட்டும் சச்சின் nalla துவக்கத்தை தந்தாலும் இந்தியா விரைவில் விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. ராகுல் டிராவிட் - 61, அசாருதீன் - 59 எடுத்து இந்தியா ஒரு கௌரவமான ஸ்கோர் (227-6) எடுக்க உதவினர். ஆனால் இந்தியாவில் வேகபந்து வீச்சாளர்கள் பிரசாத் (5-27 ) , ஸ்ரீநாத் (3-37) பாகிஸ்தானை வெளியே அனுபினர்கள். இந்தியா 47 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


2003:


இந்த போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்றி பேட்டிங் எடுத்தது. சய்யத் அன்வர் மற்றும் உமர் நல துவக்கம் அளித்தனர். அன்வர் அதிரடி சதம் (103)அடித்து 273-7 என்ற சவாலான இலக்கை கொடுத்தது.பாகிஸ்தான் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை சச்சின் னின் (93 runs in 75 balls )அதிரடியான துவக்கம் மற்றும் ஆட்டத்தால் எளிதாக வெற்றி பெற்றது. சச்சின், ஷோஹிப் அக்தர் முதல் ஓவரில் 2 பௌண்டரி மற்றும் ஒரு சிச்சர் அடித்து ரசிகர்களை உற்சாக படுத்தினர். அக்தர் தான் பங்கிற்கு சச்சின் விக்கட்டை எடுத்து பலி தீர்த்தார். பின் யுவராஜ் சிங் மற்றும் டிராவிட் இந்தியாவை வெற்றி பெற வைத்தனர்.

2007:
இந்த ஆண்டு அணிகளும் முதல் சுற்றிலேயே வெளியேறின.எனவே மோதவில்லை.


2011:





இதுவரை இந்தியாவை பாகிஸ்தான் உலககோப்பை போட்டியில் வென்றது இல்லை. இந்த முறை மற்ற ஆண்டுகளை விட அதிக பலத்துடன் களம்இறங்குகிறது. சொந்த மண்ணில் விளையாடுவது இந்தியாவுக்கு பலம் மட்டும் பலவீனமும் ஆக்கலாம். அப்ரிடி தலைமையில் பாகிஸ்தான் சிறப்பாக விளையாடி வருகிறது. அவர்களும் இந்த போட்டியை வெல்ல ஆர்வமாக இருகிறார்கள்.இது வரை வெற்றி பெறாதது அவர்களுக்கு வெறியை கொடுக்கும்.ஆனால் இந்தியா அளவுக்கு அவர்கள் அணி பலமாக இல்லை. எப்போது என்ன வேண்டுமானாலும் நடக்கும். பேட்டிங் மெகா மோசமா உள்ளது.அதே சமயம் இந்தியா பௌலிங் மிக மோசம். இந்தியா முதலில் ஆடி 300 ரன் களுக்கு மேல் எடுத்தால் வெற்றி பெறலாம். இல்லை என்றால் பாகிஸ்தானை 260 ரன் களுக்குள் சுருட்ட வேண்டும். உலகக்கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் ஒரு முக்கியமான போட்டியில் விளையாடுவது இதவே முதல் முறை.இதற்கு முன் எல்லாம் வெறும் லீக் போட்டி மற்றும் கால் இறுதியில் தான் மொதயுள்ளது.எது எப்படியோ யார் இறுதி போட்டி செல்வார்கள் என்று நாளை தெரிந்துவிடும்.

உங்கள் கதுக்களை தெரிவிக்கவும்...

Monday, March 28, 2011

இலங்கை - நியூசிலாந்து : உலககோப்பை இறுதி போட்டிக்கு செல்வது யார்?

இலங்கை - நியூசிலாந்து :
உலககோப்பை இறுதி போட்டிக்கு செல்வது யார்?




நாளை கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் முதல் அரையிறுதியில் இலங்கை அணி, நியூஸீலாந்தை எதிர்கொள்கிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு நேர்ந்த கதியை இலங்கைக்கும் ஏற்படுத்துமா நியூஸீலாந்து என்பதே அனைவரது எதிர்பார்ப்புமாக இருந்து வருகிறது.

ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே தோன்றுகிறது. காரணம்
1. இலங்கை தன் சொந்த மண்ணில் விளையாடுகிறது.
2. லீக் சுற்றில் நியூஸீலாந்து இலங்கையிடம் தோல்விதழுவியுள்ளது.
3. இலங்கையின் துவக்க வீரர்கள் அபாயகரமாக ஆடி வருகிறார்கள்.
4. நியூஸீலாந்தின் பேட்டிங் வரிசை பலவீனமாக்வும் நம்பத்தகுந்த விதத்திலும் விளையாடவில்லை.
5. நியூஸீலாந்து அணியின் சுழற்பந்து வீச்சிற்கு எதிரான கடுமையான பலவீனம்.

இந்த 5 காரணங்களும் இலங்கைக்குச் சாதகமாக வெற்றி வாய்ப்பைத் திருப்பும் என்று எதிர்பார்க்கலாம்.

ஆனால் நியூஸீலாந்திடம் ஒரு எக்ஸ்-காரணி உண்டு. அதுதான் அந்த அணியின் ஃபீல்டிங். அன்று காலிறுதியில் ஜாக் காலிஸிற்கு ஜேகப் ஓரம் பிடித்த கேட்சும் டிவிலியர்ஸ் ரன் அவுட் செய்யப்பட்ட விதமும் தென் ஆப்பிரிக்காவை தோல்விக்கு இட்டுச் சென்றது. எனவே ஃபீல்டிங் மூலம் போட்டியை மாற்றும் திறன் நியூஸீ.யிடம் உள்ளது.

2007ஆம் ஆண்டும் இந்த இரண்டு அணிகளே அரையிறுதியில் மோதின. முதலில் இலங்கை பேட் செய்ய தரங்காவின் 73 ரன்களாலும், ஜெயவர்தனேயின் சதத்தினாலும் 5 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது.. நியூஸீலாந்து 208 ரன்களுக்குச் சுருண்டு சரணடைந்தது.

அது போன்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். தில்ஷானும், தரங்காவும் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 757 ரன்களை ஜோடி சேர்ந்து எடுத்துள்ளனர். சங்கக்காராவும் ஜெயவதனேயும் இது வரை 563 ரன்களையும் 2 சதங்களையும் சேர்ந்து எடுத்துள்ளனர். எனவே இந்த நால்வரையும் சொற்ப ரன்களுக்கு வீழ்த்தினால் நியூஸீலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். ஆனால் இதனைச் செய்யும் பந்து வீச்சு சேர்க்கை நியூஸீலாந்துக்கு உள்ளதா என்று தெரியவில்லை.



நாளை நியூசீலாந்து வெற்றி பெற பிரெண்டன் மெக்கல்லம் அதிரடி சதம் எடுக்கவேண்டும், ராஸ் டெய்லர் 70- 80 ரன்களை எடுப்பதும் அவசியம். மொத்தத்தில் 300 ரன்களுக்கும் மேல் நியூஸீலாந்து குவித்து விட்டால் ஓரளவுக்கு இலங்கையை நெருக்கடிக்குட் படுத்தலாம்.

நியூஸீலாந்து இலக்கைத் துரத்தும் போது இலங்கையை 280 ரன்களுக்கு மட்டுப்படுத்தி பிறகு இலக்கைத் துரத்தும் போது பதட்டமடையாமல் ரன் விகிதம் பற்றி கவலையில்லாமல் 50-வது ஓவர் வரை ஆட்டத்தை இழுத்தாலே போதும் இலங்கைக்கு அழுத்தம் ஏற்படும். தில்ஷான் போன்றவர்கள் பந்து வீச்சை பிரிக்கவேண்டும், விக்கெட்டுகளைக் கொடுக்கக்கூடாது.

டேனியல் வெட்டோரியின் பந்து வீச்சு நாளைய நியூஸீலாந்து வெற்றிக்கு மிக அவசியம்.

நாளை கொழும்புவில் நடைபெறும் நியூஸீலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதி கிரிக்கெட் போட்டியில் இலங்கையின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.

அவருக்கு இரண்டு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரது உடல்நிலை குறித்து தீவிர பரிசீலனைக்குப் பிறகே முடிவெடுக்கப்படும் என்று இலங்கை கிரிக்கெட் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கேப்டன் குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார்.

இன்று வலையில் குறிப்பிடத்தகுந்த நேரம் பந்து வீசிய முரளிதரன் முழு உடல் தகுதியுடன் இருப்பதான அடையாளத்தில் வீசவில்லை.

முரளிதரன் விளையாட முடியாமல் போனால் அவரது இடத்தில் வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகரா விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்ப்டுகிறது.

நியூசீலாந்து அணி அதிர்ச்சியளிக்கக்கூடியதுதான் என்றாலும் ஒரு அணியாகப் பார்க்கும்போது இலங்கைக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.இருப்பினும் கிரிக்கெட் என்பது நிச்சயமின்மைகளின் ஆட்டம் என்பதால் பொறுத்திருந்து பார்ப்போம்.

Saturday, March 19, 2011

கிரிக்கெட்: தான் தவறை திருத்துமா இந்தியா ?

கிரிக்கெட்: தான் தவறை திருத்துமா இந்தியா



சென்னை சேப்பாக்கத்தில் நாளை இந்தியா, மேற்கிந்திய தீவுகளைச் சந்திக்கிறது. நாளைய வெற்றி/தோல்வி இந்தியாவின் காலிறுதியை எதுவும் செய்யாது. மேலும் இதுவரை கோப்பையை வெல்லும் அணி என்ற பெயருக்கேற்ப இந்திய அணி விளையாடவில்லை. நாளை அந்த ஆதிக்க வழிக்குத் திரும்புமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

பந்து வீச்சு, ஃபீல்டிங் இந்திய அணியின் கவலையாக இருக்கும் வேளையில் பேட்டிங்கும் திடீர் சரிவுக்கு ஆளாகும் நிலைமை அயர்லாந்து, ஹாலந்து, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிராக நிகழ்ந்தது. நாளை அது திருத்திக் கொள்ளப்படும் என்று நம்பலாம்.

சச்சின் டெண்டுல்கர் நாளை சதம் எடுத்தால் சர்வதேஸ கிர்க்கெட்டில் 100 சதங்களை எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார். ஆனால் பாவம் சச்சின் சதம் எடுக்கும் ஆட்டம் நம் இந்தியா அணி தோற்றுவிடுகிறது.அணியில் யூசுப் பத்தானுக்குப் பதில் ரெய்னாவும், நெஹ்ராவுக்குப் பதில் அஷ்வினும் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது.



சமீபத்தில் தோனிக்கும் ஸ்ரீகாந்துக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக செய்திகள் கிளம்பின. அதனை பி.சி.சி.ஐ. மறுத்துள்ளது. சாவ்லாவை அணியில் எடுத்து அஷ்வினை புறக்கணிக்கும் போக்கு ஏன் என்ற விவகாரம் தொடர்பாக தோனிக்கும், ஸ்ரீகாந்துக்கும் கருத்து வெறுபாடு ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

மேற்கிந்திய அணியைப் பொறுத்தவரை எதுவும் கூறுவதற்கில்லை. அன்று இங்கிலாந்துடன் 222/6 என்ற நிலையில் வெற்றி பெற 21 ரன்கள் இருக்கும்போது 4 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோற்றுள்ளது.



துவக்கத்தில் கிறிஸ் கெய்ல் இருக்கிறார். இந்தியப் பந்து வீச்சைப் பார்க்கும்போது நாளை கிறிஸ் கெய்ல் ஒரு கை பார்க்கத்துவங்கினால், அது இந்தியாவுக்குப் பெரிய தலைவலியாகப் போய் முடியும். டேரன் பிராவோ ஒரு திறமையான வீரர். பின் களத்தில் பயங்கர அதிரடி மன்னன் கெய்ரன் போலார்ட், இவர்கள் அனைவரும் இந்திய ஆடுகளங்களில் ஐ .பி.எல் விளையாடி பழக்கம் உள்ளது.மேலும் ரஸல் என்ற ஆல்ரவுண்டர், நடுவில் சர்வாண் கேப்டன் சம்மி போன்றவர்கள் உள்ள போது பேட்டிங் திறமை உள்ளது. ஆனால் எப்போது என்ன நடக்கும் என்று தெரியாது. நாளை நிச்சயம் ஒரு ஸ்பின் களமாகவே இது இருக்கும்.

ஆனாலும் அபாயகரமான அணி அது. கேமர் ரோச் இதுவரை சிறப்பாக வீசி வருகிறார். இடது கை சுழற்பந்து வீச்சாளர் சுலைமான் பென் நன்றாக வீசுகிறார். புது முக சுழற்பந்து வீச்சாளர் பிஷூ நாளை இருப்பாரா என்று சந்தேகமே. ஏனெனில் இந்திய அணி சுழற்பந்து வீச்சை திறம்பட சமாளிக்கும் என்று மேற்கிந்திய அணிக்கு நன்றாகவே தெரியும்.



இதுவரை பலவீனமான அணிகளை ஆதிக்கத்துடன் வென்றுள்ள மேற்கிந்திய அணி தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகியவற்றுடன் தோல்விகளைத் தழுவியுள்ளது.

இந்திய அணியும் பலமான அணியான இங்கிலாந்திடம் டை செய்து, தென் ஆப்பிரிக்காவுடன் தோல்வி தழுவியுள்ளது. எனவே நாளை ஒரு பரபரப்பான போட்டி காத்திருக்கிறது என்று கூறலாம்.



இந்தியா நாளைய போட்டியில் தனது தவறுகளை திருத்த வேண்டும் . இல்லை என்றால் நாக் அவுட் விளையாட்டில் எந்த புது முயற்சியும் எடுக்க முடியாது.டோனி பொறுப்புடன் அணியை தேர்வு செய்ய வேண்டும்.மீதும் சாவ்லா அல்லது நெஹ்ரா வை ஒதுக்கி அஸ்வின் நிற்கு வாய்பளிக்க வேண்டும்.
இந்தியா வென்றால் கால் இறுதியில் ஆஸ்திரேலியா வோடு மோதும். தோற்றால் ஸ்ரீலங்கா விடம் மோதும். எனவே எதிர் அணியை மனதில் வைத்து அணியை தேர்வு செய்ய வேண்டும்.
இந்தியா வென்றால் சந்தோசமே..

Saturday, February 26, 2011

உலககோப்பை : இந்தியா பலம் - பலவீனம் .

இந்தியா - இங்கிலாந்து




நாளை
பெங்களூருவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் பி-பிரிவு ஆட்டத்தில் பலமான இந்திய அணி தன் பலத்தை நிரூபிக்க ஒரு வாய்ப்பாக இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இங்கிலாந்து அணிக்கும் ஹாலந்துக்கு எதிரான ஆட்டத்திற்குப் பிறகு கடும் நெருக்கடியும் அழுத்தங்களும் ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணியை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா 3 முறை வென்று 3 முறை தோற்றுள்ளது. எனவே இரு அணிகளுக்கும் அந்த விதத்தில் பிரச்சனை இல்லை.இங்கிலாந்து அணி நெதர்லாந்த் எதிரான ஆட்டத்தில் பந்து வீச்சில் பிராட், ஆண்டர்சன் அன்று 20 ஓவர்களில் 137 ரன்களை விட்டுக் கொடுத்தனர். அது போன்று நாளை வீசினால் இந்தியா மீண்டும் மிகப்பெரிய ஸ்கோரை எட்டும்.



இந்திய அணியைப்பொறுத்தவரை இப்போது பிரச்சனை அணிச்சேர்க்கை மற்றும் பௌலிங் தான் .இந்திய அணி கபில்தேவுக்குப் பிறகு பெரிய அளவில் திறமையான வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்கவில்லை. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு, குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பலவீனமாகவே உள்ளது.

தற்போதைய அணியில் ஜாகீர் கான் மட்டுமே சீரான முறையில் வீசி நம்பிக்கை அளித்து வருகிறார். முனாஃப் படேலின் திசை மற்றும் அளவு சீராக இருந்ததற்குக் காரணம் அவர் அதிகம் வேகம் காட்டாமல் நேராக வீசுவதுதான். ஆனாலும் 370 ரன்கள் அல்லது 350 ரன்கள் அடிக்கும் போது அவர் பாதுகாப்பான வீச்சாளராக இருக்கலாம்.



நாளையே இந்தியா 250 ரன்கள்தான் எடுக்க முடிகிறது என்றபோது முனாஃப் படேல், ஆஷிஷ் நெஹ்ரா, ஸ்ரீசாந்த் கூட்டணி பயன்படாது என்பது தற்போது தெரிகிறது.

நெஹ்ரா சரியாக வீசவில்லை என்று கேப்டன் உணர்ந்தால் உடனடியாக அவரை விட வேகம் அதிகம் வீசி, சாதுரியத்தையும் பயன்படுத்தும் ஆர்.பி.சிங் போன்றவர்களை அழைத்திருக்கவேண்டும், அல்லது குறைந்தது இஷாந்த் ஷர்மாவையாவது தயார் படுத்தியிருக்கவேண்டும்.இது இந்திய அணி தேர்வாளர்கள் செய்த தவறு. குறைந்தது இர்பான் பதனை யாவது தயார் செய்திருக்க வேண்டும். தைரியமாக இன்னொரு பௌலாரை இணைக்கலாம்.



இப்போது ஸ்ரீசாந்தை அடுத்த போட்டியில் உட்கார வைத்துவிட்டு நெஹ்ராவை அணியில் எடுப்பது என்பது வலது கை ஸ்ரீசாந்திற்குப் பதில் இடது கை ஸ்ரீசாந்தை எடுப்பது போல்தான். எப்போது பிரவீண் குமார் விளையாட முடியவில்லை என்று தெரிந்ததோ அப்போதே மாற்று வீச்சாளர்களை அணியில் தேர்வு செய்யப்போவது பற்றி தெளிவான முடிவுகளை வைத்திருக்கவேண்டும்.

எனவே ஸ்ரீசாந்த் மேம்பாடு அடைகிறாரா என்பதை வலையில் உறுதி செய்தபிறகே அவரை அணியில் தேர்வு செய்ய வேண்டும், இல்லையெனில் பியூஷ் சாவ்லா, அல்லது அஷ்வினை அணியில் தேர்வு செய்வது பாதுகாப்பானது.இந்திய ஆட்டக்களங்களில் துவக்கத்திலேயே சுழற்பந்து வீச்சை ஒருமுனையில் வைத்துக் கொள்ளலாம். அது எதிரணியினரின் எதிர்பார்ப்பை நிலைகுலையச் செய்யும்.



ஜாகீர், முனாஃப் படேலுக்கு ஒரு ஆட்டம் மிகவும் சாதாரணமாக அமைந்து விட்டால் அது காலிறுதியாக இருக்குமானால் இந்திய அணிக்கு ஆபத்து உள்ளது.
இப்போது பிரச்சனையென்னவெனில் இந்திய பேட்டிங் தோல்வி அடையும்போது 4 பந்து வீச்சாளர்களை வைத்திருந்தால் அது தோல்வியில் கொண்டு போய் விடும் அபாயம் இருக்கிறது.

எனவே தோனிக்கு மிகப்பெரிய கஷ்டம் என்னவெனில் ஸ்ரீசாந்த், நெஹ்ரா கட்டாயம் ஃபார்முக்கு வர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இல்லையெனில் பேட்ஸ்மெனில் ஒருவரை தியாகம் செய்யவேண்டி வரும் அப்போது யூசுப் பத்தானின் இடம் பற்போகும், இதனால் இந்திய அணிக்கு பின் களத்தில் உள்ள ஒரு பெரிய அதிரடி வாய்ப்பு பற்போகும்.

ஒரு போட்டியில் மோசமாக வீசினார் ஸ்ரீசாந்த் என்பதற்காக அவரை அணியிலிருந்து நீக்கவேண்டிய அவசியமில்லை. நாளை இங்கிலாந்து அணியில் ஸ்ட்ராஸ், பீட்டர்சன் துவக்கத்தில் களமிறங்குவதால் இவரது ஆக்ரோஷம் பயன்தரலாம்.தோனிக்குப் தற்போது சாவ்லாவை அணியில் சேர்த்து 5 பந்து வீச்சாளருடன் இறங்குவதா அல்லது போன போட்டியில் வைத்திருந்த அதே அணியை இதிலும் களமிறக்கலாமா என்ற பிரச்சனை இருக்கிறது.



யுவ்ராஜ் சிங், யூசுப் பத்தான் வங்கதேச அணிக்கு எதிராக 370 ரன்கள் இருந்ததால் நன்றாக வீசியது போல் தெரிந்தது. ரன்கள் குறைவாக இருக்கும்போது உண்மையான ஒரு பந்து வீச்சாளரின் உதவியே தேவைப்படும். தோனி எப்படி யோசிக்கிறார் என்று தெரியவில்லை. ஸ்ரீசாந்தை நீக்கி விட்டு பியூஷ் சாவ்லாவை அணியில் எடுத்தால், துவக்கத்தில் ஜாகீருடன் ஹர்பஜன் சிங்கை பந்து வீச அழைத்து தோனி இங்கிலாந்துக்கு அதிர்ச்சியளிக்கலாம்.

பெங்களூர் ஆட்டக்களம் நிச்சயம் பேட்டிங்கிற்கு சாதகமான விளாசல் களமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். பயிற்சி போட்டியில் எடுத்தது போல் ஸ்பின் எடுத்தால் இந்தியாவுக்குச் சாதகம். இங்கிலாந்து அணியில் ஸ்வான் மட்டுமே ஒரு அச்சுறுத்தும் பந்து வீச்சாளர்.



நெருக்கடியும், அழுத்தமும் இங்கிலாந்து பக்கம் உள்ளது, எனவே அதனை இந்தியா தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம். இந்தியா வெற்றி பெற்றால் அனைவருக்கும் மகிழ்ச்சி.

Saturday, February 19, 2011

உலகக்கோப்பை 2011:ஸ்ரீலங்கா (World Cup 2011- Team Srilanka)


2011 உலகக் கோப்பை :ஸ்ரீலங்கா


1975 முதல் 2007ஆம் ஆண்டு வரை உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்றுள்ள இலங்கை 57 போட்டிகளில் 25-இல் வென்று 30-இல் தோற்றுள்ளது. இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தன் சொந்த மண்ணிலேயே அதிக போட்டிகளை விளையாடுவதால் இலங்கை அணிக்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமக உள்ளது. அந்த ஆட்டக்களங்களில் அவர்கள் ராஜாதான்.

ஆனால் பொதுவாக ஒருநாள் கிரிக்கெட்டில் முன்னிலை அணிகளுக்கு எதிராக வெற்றிகளை விட தோல்விகளே அதிகம். மொத்தம் 690 ஒரு நாள் சர்வதேச பொட்டிகளில் 290-இல் வென்று 300-இல் தோல்வி தழுவியுள்ளது இலங்கை. 290வெற்றிகளில் 174 போட்டிகளை இலங்கையில் ஆடியுள்ள அந்த அணி 109 வெற்றிகளைப் பெற்றுள்ளது. எனவே இலங்கையில் அந்த அணியை வீழ்த்துவது கடினம்.

சமீபத்தில் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரக ஆஸ்ட்ரேலிய மண்ணில் முதன் முதலாக ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது இந்த இலங்கை அணி. 2010/11 ஆம் ஆண்டுகளில் 25 ஒருநாள் போட்டிகளில் 17 போட்டிகளில் வெற்றி பெற்று பலமாகத் திகழ்கிறது.
சங்கக்காரா தலைமையில் 2009ஆம் ஆண்டு முதல் 36 ஒருநாள் போட்டிகளில் 21 போட்டிகளில் வென்று 12 போட்டிகளில் மட்டுமே தோல்வி தழுவியுள்ளது.
சொந்த நாடு என்ற வகையில் பெரும் அபாயமான அணி இலங்கை அணிதான். இந்த அணியில் துவக்கத்தில் தில்ஷான் களமிறங்குவது ஒரு சேவாகின் பலத்தை அந்த அணிக்குக் கொடுத்துள்ளது. ஆனால் மற்ற முனையில் தரங்காவெல்லாம் நம்ப முடியாது.


ஆனால் மிடில் ஆர்டரில் சங்கக்காரா பலமாக உள்ளார். ஜெயவர்தனே சோபிக்காமல் போனால் மிடில் ஆர்டர் சற்றே பலவீனமாகப் போய்விடும், ஆனால் பின் களத்தில் அஞ்சேலோ மேத்யூஸ், கபுகேதரா, பெரெரா போன்ற ஆல்ரவுண்டர்கள் கைக் கொடுப்பார்கள். இதனால் அந்த அனி சமரவீராவை அல்லது சமர சில்வாவை நடுக்களத்தில் பயன்படுத்தும் வாய்ப்புக் குறைவு. சமரவீரா அல்லது சம்ர சில்வா என்று ஒருவரைத்தான் பயன்படுத்த முடியும்.
இலங்கை மிடில் ஆர்டரை வீழ்த்தினால் எதிரணி வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.



பந்து வீச்சில் முத்தையா முரளிதரன் தனது கடைசி சர்வதேச போட்டிகள் இத்துடன் முடிவடைகின்றது என்று கூறியுள்ளார் எனவே இலங்கை அணி முரளிதரன் ஓய்வுக்கு ஒரு நல்ல பரிசை அளிக்க விரும்பும். இவர் தவிர, அஜந்தா மெண்டிஸ், மலிங்கா, பெரெரா, பெர்ணாண்டோ ஆகியோர் அவர்கள் மண்ணில் சிறப்பாக வீசக்கூடியவர்கள். காலிறுதியில் இந்த அணி ஒரு பெரிய அச்சுறுத்தல் என்பதில் ஐயமில்லை. சங்கக்காராவும் இந்த உலகக் கோப்பையை வெல்வதில் தீவிர முனைப்பு காட்டி வருகிறார்.

எனவே இலங்கையை இந்த உலகக் கோப்பையில் அவர்கள் மண்ணில் வீழ்த்தும் அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை பெறும் என்று கூட நாம் கூறிவிட முடியும். அந்த அளவுக்கு இந்த ஆட்டக்களங்களில் அது பலமான அணியாகும். எனவே இலங்கை இந்த முறை சாம்பியனாவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

உலகக்கோப்பை 2011:இந்தியா (World Cup team INDIA)

2011 உலகக் கோப்பையில் இந்தியா:




இந்த முறை தோனி தனது அணிச்சேர்க்கையை கவனமாகக் கையாள்வதில் உள்ளது வெற்றி தோல்விகள். சச்சின், சேவாக், கம்பீர், யுவ்ராஜ், தோனி, யூசுப் பத்தான், ரெய்னா,ஹர்பஜன், ஜாகீர், ஸ்ரீசாந்த் முனாஃப் படேல் என்று இருந்தால் பலமாக இருக்கும். யுவ்ராஜ் சிங் ஒரு போட்டியில் சொதப்பினாலும் உடனே தூக்கி விட்டு விராட் கோலியை அணியில் சேர்க்கவேண்டும். எந்த முடிவெடுத்தாலும் தைரியமாக விரைவாக தோனி
எடுக்கவேண்டும்.

ரெய்னா சரியாக விளையாடா‌விட்டாலும் இவர் இந்த முடிவை எடுக்கவேண்டும்.முதலிலிருந்து அனைத்துப் போட்டிகளையும் வெல்லும் தயாரிப்புடனும், மனோதிடத்துடனும் களமிறங்கவேண்டும், முதல் சுற்றில் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றால்தான் காலிறுதியில் உடனடியாக தோற்று வெளியேறும் நிலை ஏற்படாது.
எதிரணியினருக்கு கிலி பிடித்துக் கொள்ளும்.



நெஹ்ராவை அணியில் எடுப்பதை ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்யவேண்டும் ஏனெனில் நெருக்கமான அதிக ஸ்கோர் போட்டிகளில் இவர் நமக்கு தோல்வியைப் பெற்றுதந்து விடுவார் என்ற ரீதியில்தான் உள்ளது இவரது பந்து வீச்சு.தோனியைப் பொறுத்தவரை உள்ள மிகப்பெரியக் குற்றச்சாட்டு என்னவெனில் நடு ஓவர்களில் எதிரணி பேட்ஸ்மென்கள் செட்டில் ஆகும்போது அவர்களை வீழ்த்த எந்த வித முயற்சியும் மேற்கொள்ளாமல் மரத்தை வைத்தவன் தண்ணி ஊற்றுவான் என்பது போல் இருக்கிறார்.அந்தப் போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும். யுவ்ராஜ் சிங், உள்ளிட்ட பகுதி நேர பந்து வீச்சாளர்களை அதிகம் பயன்படுத்த முனையக்கூடாது. ஜாகீர், ஸ்ரீசாந்த், முனாஃப், ஹர்பஜன் என்று பந்து வீச்சு வரிசை இருந்தால், இன்னும் ஓரிரு பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தலாம் அதுவும் அனுபவமான சேவாக், போன்றவர்களுக்கு 5 ஓவர்களையோ, புது வீரரான விக்கெட் எடுக்கும் யூசுப் பத்தானுக்கோ கொடுக்கலாம்.

காரணமில்லாமல் யுவ்ராஜ், யூசுப், ரெய்னா, சேவாக், சச்சின் என்று அனைவரையும் பயன்படுத்தி ரன்களை வாரி வழங்கும் நிலைக்குச் செல்லக்கூடாது. எதிரணியினர், அது எந்த அணியாக இருந்தாலும் 300 ரன்களை எட்டிவிடாமல் கட்டுப்படுத்துவது அவசியமாகும் ஏனெனில் எல்லாப்போட்டிகளிலும் 300 ரன்களை நாம் வெற்றிகர்மாகத் துரத்துவது இயலாது.டாஸ் வென்றால் 300 ரன்களுக்கும் மேல் குவிப்பதுதான் பாதுகாப்பானது. இந்த பலமான பேட்டிங் வரிசையில் சேவாக், சச்சின் துவக்கம் அபாரமாக அமைந்தால் 350 ரன்களும் சாத்தியம்தான்.



யூசுப் பத்தானைக் கண்டு எதிரணியினருக்கு ஒரு புதிய நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தோனி சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இந்த பேட்டிங் வரிசையில் சேவாக், சச்சின், யுவ்ராஜ், ரெய்னா, தோனி, யூசுப் ஆகியோரது அதிரடியைக் கண்டு நிச்சயம் மற்ற அணிகள் அஞ்சித்தான் ஆகவேண்டும். வேறு வழியில்லை. எதிரணியினர்தான்
நெருக்கடியில் உள்ளனர். இதனை நன்றாக நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். வங்கதேசம், அயர்லாந்து, ஹாலந்து என்று பலவீனமான அணியாக இருந்தாலும் முழு பலம் கொண்ட அணியையஏ களமிறக்கவேண்டும். அதில் தவறுகள் செய்ய வாய்ப்பேயில்லை.

உலகக் கோப்பை போட்டிகள், தோல்வியடைய முடியாது என்ற பயத்தில் பரிசோதனை முயற்சிகளைக் கைவிட்டு விடக்கூடாது. நெருக்கடி தருணங்களில் வழக்கத்திற்கு மாறான உத்திகளைக் கையாள்வதில் தோனி தயக்கம் காட்டக்கூடாது. பேட்டிங்கில் தோனி தனது பழைய அதிரடி முறையைக் கையாள்வது உசிதம், கிரெக் சாப்பலின் ஒரேயொரு உத்தி அருமையான ஒன்றாகும், துவக்கவ் வீரர்களுக்கு அடுத்த
டவுனில் யார் இறங்குவார்கள் என்பதை மற்றி கொண்டேயிருந்தால் நிச்சயம். எதிரணியினரின் திட்டங்களை அது பாழாக்கும்.

இந்த உலகக் கோப்பையில் யு.டி.ஆர்.எஸ். முறை உண்டு. எனவே
எல்.பி.டபிள்யூ.முடிவுகளும் 3-வது நடுவரிடம் முறையீடு செய்ய வாய்ப்புள்ளதால் இந்திய பேட்ஸ்மென்கள் எச்சரிக்கையுடன் விளையாடுவது நல்லது. பேட்டிங் பவர் பிளேயை எப்போது எடுப்பது என்பதிலும், எதிரணியினரின் பேட்டிங் பவர் பிளேயின் போது எந்த பந்து வீச்சாளர்களை வீச அழைக்கவேண்டும் என்பதிலும் தீவிரத் தயாரிப்புகளும் முன் கூட்டிய திட்டமிடுதலும் மிக முக்கியமானது.



இந்த பேட்டிங் பவர் பிளே என்ற புதிய முறை இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பெரிய திருப்பங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம். இதுவரை தோனி இந்த பவர் பிளே விஷயங்களில் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார்.சச்சின் டெண்டுல்கர் நிச்சயம் இந்த உலகக் கோப்பையை வெல்வதில் அதிக முனைப்பு காட்டுவார் இந்த அழுத்தம் அவரது பேட்டிங்கில் தாக்கம் செலுத்தாமல் அவர்தான் காத்துக் கொள்ளவேண்டும்.

சேவாகின் அதிரடித் துவக்கம், ரெய்னா, தோனி, யூசுப்பின் இறுதி வேட்டு, ஜாகீர் கான், ஹர்பஜன் ஆகியோரது பந்து வீச்சு, தோனியின் தலைமை உத்திகள், மைதானத்தில் எடுக்கும் உடனடி புத்திசாலி முடிவுகள், சச்சின் டெண்டுல்கரின் பலம் இவையெல்லாம் இந்திய அணிக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்புகளை இந்த உலகக் கோப்பையில் வழங்கியுள்ளது.

இருப்பினும் காலிறுதியிலிருந்து நாக்-அவுட் முறை என்பதால் காலிறுதியிலிருந்து ஒவ்வொரு போட்டியும் தங்களது போக்கையும், நிறத்தையும் எடுத்துக் கொள்ள்ம் என்பதால் எதையும் கணிப்பது கடினம்.

அரையிறுதி வரை இந்தியா வந்து விட்டால் கோப்பையை வெல்ல வாய்ப்பிருப்பதாகவே நாம் கருதலாம்.கனவு நனவாகுமா? பிப்ரவரி 19ஆம் தேதி முதல் நாம் கனவு காணத்தொடங்குவோம். முடிவு எப்படியிருந்தாலும் ரசிகர்கள் அதனை கிரிக்கெட் ஆட்டத்தின்அடிப்படையில் புரிந்த கொண்டு வினையாற்றுவதே இந்திய கிரிக்கெட்டிற்குச்சிறந்தது.