Monday, May 2, 2011

உலக அழிவு - 5 : மதங்கள் என்ன சொல்கின்றன..??

உலக அழிவு - 5 : முஸ்லிம் மதத்தின் கருத்துக்கள்.



நாம் இந்த பதிவுகளில் உலக அழிவுக்கான காரணங்களை பற்றி பார்த்து வருகிறோம். உலக அழிவை பற்றி மதங்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.யாரையும் பயமுறுத்த அல்ல...

குர்ஆன் என்ன சொல்கிறது...?

உலக அழிவு என்பது முஸ்லிம் மதத்தை பொறுத்தவரை மறுமை நாள் ஆகும்.



மறுநாளின் நம்பிக்கை என்பது குர்ஆனில் முக்கியமான விடயங்களில் ஒன்றாகும் முஹம்மது நபிகளார் (ஸல்) சொல்கின்ற உலக முடிவு நாள் பற்றிய குறிப்புகளில்

  • பெற்ற தாயை கவனிக்க கடமைப்பட்ட ஆண் பிள்ளைகள் தாயை கவனிக்காமல்விட்டுவிடுவார்கள். அதனால் தாய் தனது மகளை சார்ந்து மகளின் தயவில்வாழும் நிலை ஏற்பட்டால்…(ஏற்பட்டிருக்கின்றது.)
  • வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளைமேய்த்துக்கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாகஆவது…(ஆகியிருக்கின்றார்கள்).
  • குடிசைகள் திடீர் திடீரென்று கோபுரமாக மாறினால்…(மாறியிருக்கின்றது)
  • உலகில் விபச்சாரமும் மதுவும் பெருகினால்
  • தகுதியற்றவர்களிடம் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படுவதும் அவர்கள்நாணயமின்றி நடந்து கொள்வதும் …(நடக்கின்றது)
  • பாலைவனங்கள் சோலையானால்…(ஆம்)
  • காலம் சுருங்கிவிடும் (முஹமது நபிகளார் தான் வாழ்ந்த காலத்தை உதாரணமாகசொல்லும் போது அதாவது இன்றைக்கு 1432 வருடத்திற்கு முன்பு “(இன்றைய) ஒரு வருடம் (அன்று) ஒரு வாரம் போலாகிவிடும். இன்றைய ஒருநாள் அன்றுஒருமணிநேரம் போல ஆகிவிடும். ஒரு மணி என்பது ஒரு வினாடி போன்றுஆகும்..(நடக்கிறது)
  • கொலைகள் அதிகரிப்பதுவும்…(ஆம்)
  • நில அதிர்வுகளும் பூகம்பங்களும் அதிகரித்தால்
  • மனிதர்கள் பள்ளிவாசல்களை காட்டி என்னுடையது பெரிதா உன்னுடையதுபெரிதா என்று சொல்லி பெருமையடிப்பது….(உண்மைதான்)
  • கடைகள் பெருகுவது….(பெருகி விட்டது)
  • பெண்களின் எண்ணிக்கை உலகத்தில் அதிகரித்தல்..
  • ஆடை அணிந்தும் நிர்வாணமாக தோற்றமளிக்கும் பெண்கள் உலகத்தில்தோன்றுவது…(உண்மைதானே)
  • பேச்சை தொழிலாக்கி பொருள் திரட்டுவது(அரசியல்வாதிகள் போன்றோர்) (திரட்டுகின்றார்கள்)
  • தற்கொலை அதிகரித்தல்..(அதிகரித்திருக்கின்றது)
  • தான் தான் இறைதூதர் என்றும் நபி என்றும் பொய் சொல்பவர்கள்அதிகரித்தல்….(மிக அதிகரித்து விட்டார்கள்)

முஹம்மது நபியவர்கள் உலகத்தின் முக்கியமான தீர்க்கதரசி. அவர் இந்த உலகத்தில் வாழ்ந்தவர். அவர் மரணித்து 1400 வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் அவரது தீர்க்க தரிசனங்கள் சத்தியமானவையாக இருக்கின்றன.

மேற்சொன்னவைகள் நடந்தால் உலக முடிவுநாள் வரும் என்று நபிகளார் சொன்னார்கள். ஆனால் உலக முடிவுநாள் என்பது திடீரென்று வந்துவிழும் ஒன்றல்ல. யாராலும் அறியமுடியாதவாறு அது மறைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் உலகத்தில் மரணமும் அழிவும் ஏதோ ஒருவகையில் எம்மை துரத்திக்கொண்டிருக்கின்றன.

அவர்கள் சொன்ன அனைத்தும் இப்போது நடந்து கொண்டு இருகின்றன... எப்போது என்ன நடக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது.உங்கள் கருத்துகளையும் கம்மேன்ட்சும் எதிர்பார்கிறேன்.உங்கள் சந்தேகம்களை என்னிடம் கேட்கலாம்.தங்கள் வருகைக்கு நன்றி... :)

5 comments:

  1. //குடிசைகள் திடீர் திடீரென்று கோபுரமாக மாறினால்…(மாறியிருக்கின்றது)//
    //பாலைவனங்கள் சோலையானால்…(ஆம்)//

    தோழரே இது இரண்டும் நல்ல விஷயங்கள் தானே?

    ReplyDelete
  2. so what do the other religions say??

    ReplyDelete
  3. கியாமத் நாளின் மாபெரும் பத்து அடையாளங்கள்

    மிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து விசயங்களை குறிப்பிட்டார்கள்

    • புகை மூட்டம்
    • தஜ்ஜால்
    • (அதிசய) பிராணி
    • சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது
    • ஈசா (அலை) இறங்கி வருவது
    • யஹ்சூஜ், மக்சூஜ்
    • கிழக்கே ஒரு பூகம்பம்
    • மேற்கே ஒரு பூகம்பம்
    • அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்
    • இறுதியாக ஏமனில் இருந்து புறப்படும் தீ பிழம்பு மக்களை விரட்டி சென்று ஒன்று சேர்த்தல்

    ReplyDelete
  4. புகை மூட்டம்


    இதில் முதலாவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட அடையாளத்திற்கு அதிகமான விளக்கம் எதையும் அவர்கள் கூறவில்லை. ஆயினும் திருமறை குர்ஆனில் 44 -வது அத்தியாயத்தில் ஓரளவு இது பற்றி குறிப்பிடப்படுகிறது....................

    வானம் தெளிவான புகையை கொண்டு வரும் நாளை எதிர் பார்ப்பீராக! அது மக்களை மூடிக்கொள்ளும். இதுவே துன்புர்த்தும் வேதனை. 'எங்கள் இறைவா! எங்களை விட்டும் வேதனையை நீக்குவாயாக! நாங்கள் நம்பிக்கை கொள்பவர்கள் (என்று கூறுவார்கள்) அறிவுரை அவர்களுக்கு எவ்வாறு (பயனளிக்கும்? ) அவர்களிடம் தெளிவான தூதர் வந்துள்ளார். பின்னர் அவரை அவர்கள் அலட்சியம் செய்தனர். 'பிறரால் கற்றுகொடுக்கப்பட்டவர்; பைத்தியக்காரர்' என்றும் கூறினர். வேதனையை சிறிது நேரம் நாம் நீக்குவோம் . நீங்கள் பழைய நிலைக்கு திரும்புவீர்கள். மிகக் கடுமையான பிடியாக நாம் பிடிக்கும் நாளில் தண்டிப்போம். திருக் குரான் : 44-10,44-16


    உங்கள் இறைவன் உங்களுக்கு மூன்று விஷயங்கள் பற்றி எச்சரிக்கிறான். அவற்றில் ஒன்று புகை மூட்டம். முஹ்மினை இப்புகை ஜலதோசம் பிடிப்பது போல் பிடிக்கும். காஃபிரை பிடிக்கும் பொது அவன் ஊத்தி போவான்.அவனது செவிப்புரை வழியாக புகை வெளிப்படும். இரண்டாவது (அதிசயப்) பிராணி, மூன்றாவது தஜ்ஜால் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: தப்ராணி)

    ReplyDelete
  5. தஜ்ஜால்:

    பத்து அடையாளங்களில் தஜ்ஜால் என்பவனது வருகை முக்கியமானதாகும்.

    நூஹ்(அலை) அவர்களுக்கு பின் வந்த எந்த நபியும் தஜ்ஜாலை பற்றி தமது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் விட்டதில்லை. நிச்சயமாக நானும் அவனைபற்றி உங்களுக்கு எச்சரிக்கிறேன். என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 3057, 3337, 6173, 7127 ,3338, 3440, 3441, 4403, 5902, 6173, 6999, ,7026, 7123, 7127, 7128, 7131, 7407, 7408, 3057)

    தஜ்ஜாலின் அடையாளங்கள்:

    பெரும் பொய்யனாகிய ஒற்றைக் கண்ணனைப் பற்றி எந்த நபியும் தமது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் விட்டதில்லை. நிச்சயமாக தஜ்ஜால் ஒரு கண் ஊனமுற்றவன். உங்கள் இறைவன் ஒரு கண் ஊனமுற்றவன் அல்லன். என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 7131)

    எழுத தெரிந்த, எழுத தெரியாத எல்லா முஹ்மின்களுக்கும் படிக்கும் விதமாக தஜ்ஜாலின் கண்களுக்கிடையே காஃபிர் என்று எழுத பட்டிருக்கும். என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம் 5223)

    தஜ்ஜால் வாழும் நாட்கள் :

    "தஜ்ஜால் இப்பூமியில் எவ்வளவு காலம் தங்கியிருப்பான்" என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாற்பது நாட்கள். ஒரு நாள் ஒரு வருடம் போன்றும், ஒரு நாள் ஒரு மாதம் போன்றும், ஒரு நாள் ஒரு வாரம் போன்றும். ஏனைய நாட்கள் சாதாரண நாட்களை போன்றும் இருக்கும் என்று விடையளித்தார்கள். (நூல்: முஸ்லிம் 5228)

    தஜ்ஜால் நுழைய முடியாத இடங்கள் :
    இந்த நாற்பது நாட்களில் உலகம் முழுவதும் சுற்றி வருவான் ஆயினும் சில இடங்களை அவனால் அடைய முடியாது என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்.

    அவன் நாற்பது நாட்கள் பூமியில் வாழ்வான். அனைத்து இடங்களையும் அவன் அடைவான். மஸ்ஜிதுல் ஹராம், மதீனாவின் மஸ்ஜித், தூர் மஸ்ஜித், பைத்துல் முகத்தஸ் ஆகிய நான்கு இடங்களை அவன் நெருங்க முடியாது என்பது நபிமொழி. (நூல் : அஹ்மத் 22571)

    தஜ்ஜால் வெளிப்படும் இடம்:

    தஜ்ஜால் சிரியாவுக்கும், இராக்குக்கும் இடையே வெளிப்பட்டு வலப்புறமும் இடப்புறமும் விரைந்து செல்வான். "அல்லாஹ்வின் அடியார்களே உறுதியாக நில்லுங்கள் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம் 5228)

    ReplyDelete