ஏ.ஆர்.ரஹ்மான் : ஒரு கனவின் இசை! பகுதி - 9
ஆர்.கே.சேகர் கடைசியாக இசை அமைத்த படம் 1976 -இல் வெளியான "சொட்டாநிகர அம்மா ". அதில் இடம்பெற்ற "மனசு மனசின்றே காதில்" என்கிற பாட்டு இன்றைக்கும் கேரளாவில் "நீங்கள் கேட்டவை " யாக ஒலிக்கும் அற்புதமான பாட்டு.அந்தப் படம் வெளியான அதே நாளில் தான் இந்த உலகைவிட்டு மறைந்தார் ரஹ்மானின் தந்தை சேகர்.அப்போது அவருடைய வயது 42. தீலிப்புகோ வயது 9.
சேகருக்கு யாரோ சூனியம் வைத்தால் தான் இறந்தார் என்கிற வதந்தி அப்போது இசை உலகில் எழுந்து அடங்கியது.சரியாக கவனிக்கப்படாத அல்சர் தான் அவர் உயிரைப் பறித்தது என்கிறார்கள்.அவரை நன்கு அறிந்த சிலர்!
ஏ.ஆர்.ரஹ்மானின் வீட்டில் இன்றைக்கு இந்தியாவின் புகழ் பெற்ற இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அவருடைய நேரத்திற்காக காத்திருகிறார்கள்.எத்தனைப் பணம் கேட்டாலும் கொட்டிக் கொடுக்க தயாரிப்பாளர்கள் ரெடி!இது இன்றைய நிலைமை.ஆனாலும் சரியான வாய்புகள் கிடைத்து ஒரு நட்சத்திரமாக மின்ன முடியாமல் போன இசைமேதை யான தான் அப்பாவைப் பற்றிய பழைய நினைவுகள் ரஹ்மானை அலைகளிதபடியே தான் இருக்கின்றன.
"எனக்கு வாழ்க்கையில் முதன்முதலாக அறிமுகமான இசையே அப்பாவின் இசைதான் .அப்பாவின் விரல்களை பிடித்துகொண்டு நானும் ரெகார்டிங் செல்வேன்.பெரிய பெர்ய இசை அமைப்பாளர்களும் , இயக்குனர்களும் என் அப்பாவிடம் மரியாதையாக நடந்து கொள்வதைப் பார்பேன்.அப்பாவை நினைத்தால் பெருமையாக இருக்கும்.பிற்காலத்தில் நானும் ஒரு இசை கோப்பளராக பணி புரிந்த போதுதான் அவருடைய பணியின் உன்னதம் எனக்குப் புரிந்தது.
ஒரே சமயத்தில் அவர் பல படங்களுக்கு வேலை செய்வர். ஒரு படத்தில் அவர் இசை அமைப்பாளராக இருப்பர்.அதே நேரம் மற்ற படங்களுக்கு கண்டக்டர் ராக வேலை செய்வர்.ஓய்வு இல்லாத கடும் உழைப்பால் தான் அவர் இறந்தார் என்று எண்ணுகிறேன்.அவரால் உதவி பெற்ற எத்தனையோ பேர் இன்றைக்கும் என்னிடம் வந்து நன்றி சொல்லும் போது என்னால் கண்ணீரை அடக்க முடிய வில்லை அவர் எனக்கு ஒரு முன் உதாரணமாக வாழ்ந்து இருக்கிறார். என்கிறார் ரஹ்மான் நெகிழ்ச்சியோடு.
தன் ஹீரோவான தந்தை ஆர்.கே .சேகரின் அதிர்ச்சியான மரணமும் ,அதைத் தொடர்ந்து அவர் வாழ்வில் நிகழ்ந்த எதிபாராத சம்பவங்களும் தான் திலீப்பை அல்லா ரக்கா ரஹ்மானாக மாற்றியது.!
தொடரும்..
உங்கள் கருத்துக்களை பகிரவும்... நன்றி..:)
No comments:
Post a Comment