Sunday, August 14, 2011

தொடங்கியது வன யுத்தம்... 'வீரப்பன்' மனைவியாக விஜயலட்சுமி!

தொடங்கியது வன யுத்தம்... 'வீரப்பன்' மனைவியாக விஜயலட்சுமி!




ஒருவழியாக சந்தனக் காட்டு வீரப்பன் வாழ்க்கையை படமாக்கும் வேலையை தொடங்கிவிட்டார் குப்பி புகழ் ஏஎம்ஆர் ரமேஷ்.

காட்டையும் நாட்டையும் கலக்கி வந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு படமாக்கும் முயற்சியில் நான்கைந்து இயக்குநர்கள் இறங்கியிருந்தனர். பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மா கூட, வீரப்பன் மனைவி முத்துலட்சுமி துணையுடன் இந்தப் படத்தை உருவாக்கும் முயற்சியில் இருந்தார்.

இப்போது, ஏஎம்ஆர் ரமேஷ் அதற்கான படப்பிடிப்பையே ஆரம்பித்துவிட்டார்.

படத்துக்கு வன யுத்தம் என பெயர் வைத்துள்ளனர். வீரப்பன் வேடத்தில் நடிப்பவர் கிஷோர். பொல்லாதவன் உள்ளிட்ட எக்கச்சக்க படங்களில் ஹீரோக்களை முந்திக் கொண்டு நல்ல பெயரை தட்டிச் சென்றவர்.

தமிழ் மற்றும் கன்னடத்தில் தயாராகும் இந்தப் படத்தில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியாக நடிப்பவர் விஜயலட்சுமி. சீமானை மிரட்டிப் பார்க்கும் விஜயலட்சுமி அல்ல.... இவர் சென்னை 28 புகழ் விஜயலட்சுமி!

அதிரடிப் படை தலைவர் விஜயகுமார் வேடத்தில் அர்ஜூனும், எஸ்பி செந்தாமரைக் கண்ணன் வேடத்தில் ரவி காலேவும் நடிக்கிறார்கள். கன்னட நடிகர் ராஜ்குமார், அவர் மனைவி பர்வதம்மா பாத்திரங்களில் முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.

இந்தப் படம் குறித்து ஏஎம்ஆர் ரமேஷ் கூறுகையில் , "வீரப்பன் குறித்து ஏகப்பட்ட ஆராய்ச்சி செய்து இந்தப் படத்தை உள்ளது உள்ளபடி எடுக்கப் போகிறேன். வீரப்பனின் கோபி நத்தம், ஒகேனக்கல் பகுதிகளில்தான் முழுப் படமும் எடுக்கப்படும்," என்றார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

வீரப்பன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து தமிழில் இதற்கு முன் வந்த படம் கேப்டன் பிரபாகரன். இந்தப் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வீரப்பன் கதை. இதற்கு இளையராஜா மகன் யுவன் இசை!

வன யுத்தம்... வெளியாகவிருக்கும் வீரப்ப ரகசியங்கள்:



வன யுத்தம் என்ற பெயரில் சந்தன கடத்தல் வீரப்பன் கதையை, இயக்குனர் ஏ.எம்.ஆர். ரமேஷ், படமாக எடுக்கிறார்.

இந்தப் படத்தில் வீரப்பனைப் பற்றிய பல வெளியில் தெரியாத உண்மைகள் ஆதாரங்களுடன் வைக்கப்படும் என்று தெரிகிறது.

குறிப்பாக கன்னட ராஜ்குமார் கடத்தல், அதில் கைமாறிய தொகை, யார் யார் எவ்வளவு கொள்ளையடித்தனர் போன்றவை குறித்த விவரங்களை காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளாராம் இயக்குநர்.

இந்தப் படம் கன்னடத்தில் அட்டகாசா என தயாராகிறது. வீரப்பனாக கிஷோரும், காவல்துறை அதிகாரியாக அர்ஜுனும், ராஜ்குமார் வேடத்தில் நடிகர் விவேக் ஓபராயின் தந்தை சுரேஷ் ஓபராயும் நடிக்கிறார்கள்.

நன்றி : kathir.M

No comments:

Post a Comment