Sunday, March 13, 2011

டோனி :சிறந்த கேப்டன் ? பயந்த கேப்டன்?

டோனி : சிறந்த கேப்டன் ? பயந்த கேப்டன்?

நேற்று நடந்த இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா போட்டி இந்தியா தோல்வி அடைந்ததற்கு டோனியின் அனுபவமில்லாத தலைமையே காரணம்.இந்த போக்கு இந்தியா கோப்பையை வெல்லுமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.நேற்றைய தோல்விக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தோனி, பேட்ஸ்மென்கள் சிலர் ரசிகர்களுக்காக விளையாடுகின்றனர். அது கூடாது, நாட்டுக்காக விளையாடவேண்டும் என்று கோபாவேசம் காட்டியுள்ளார். இப்படி பேசும் அவர் முதலில் ஒழுங்காக ஆடி இருக்க வேண்டும்.

267/1 என்ற நிலையிலிருந்து 29 ரன்களுக்கு கடைசி 9 விக்கெட்டுகளை இழந்ததைப் பற்றி தோனி இவ்வாறு கூறியுள்ளார்.

"மிகப்பெரிய ஷாட்களை அடிக்க வேண்டும் என்று நீங்கள் ஆடினாலே நாட்டிற்காக விளையாடுகிறோம் என்ற உணர்வு போய்விடும். 20 ரன்களை கூடுதலாக அடிக்க வேண்டும் என்ற முயற்சியில் 40 ரன்கள் குறைவாக அடிப்பதில் போய் முடிந்தது. சிலர் காலரியில் உள்ள ரசிகர்களுக்காக விளையாடினார், நாட்டை மறந்து விட்டனர்.

சில வேளைகளில் கண்ணில் தெரியம் பந்தை எல்லாம் வெளியே அடிக்கவேண்டும் என்ற உந்துதல் இருக்கும், ஆனால் 50 ஓவர்களை விளையாடுவது முக்கியம், அப்படி விளையாடியிருந்தால் 325 - 330 ரன்கள் எடுத்திருக்க முடியும். நான் பேட்டிங் ஆர்டரை மாற்றினேன் அது இன்று வேலை செய்யவில்லை.

யூசுப் பத்தான் 2 அல்லது 3 ஓவர்கள் தாக்குப் பிடித்திருந்தால் அவர் பெரிய இன்னிங்ஸை விளையாடக்கூடியவர்தான்.ஆஷிஷ் நெஹ்ரா கடைசி ஓவர்களை அதிகம் வீசியுள்ளார். பெரும்பாலும் பவர் பிளேயில் வீசுவார், நேற்று அது பலனளிக்கவில்லை." இவ்வாறு கூறினார் தோனி.முதலில் முழு உடல் தகுதி இல்லாத நெஹ்ரா வை டீம் மில எடுத்தே தப்பு.இதில் வியாக்யானம் வேறு .நெஹ்ரா இப்போது நல்லா பார்மில் இல்லை.அவரிடம் ஆட்டத்தை நிர்ணயிக்கும் ஓவர் ரை கொடுத்தது தப்பு.

நேற்று மடமட வென விக்கெட் கள் சரியும் போது எல்லா batsman அவுட் ஆனா பிறகு டோனி அவர் strike பண்ணாமல் பௌலர் களை ஆடவிட்டார்.styen னுக்கு இது ரொம்ப சுலபமகிட்டது.

ஸ்ட்யீன் ஓடி வருவைதை பாத்தாலே நேஹ்ராவுகும் படேல் லும் பாது அவுட் ஆகி விட்டார்கள்.ஓவர் நிற்க வேண்டும் என்று சொல்லும் டோனி அவர் strike செய்து களத்தில் நின்றிருக்க வேண்டும்.அதை விட்டு மற்றவர்கள் ஆடவில்லை என்று சொல்லகூடாது.

தென் ஆப்ரிக்கா அணி பாஸ்ட் பௌலிங் இல் பெயர் பெற்றது.ஆஸ்திரேலியா வை விட சிறந்து விளங்கும் அணி. மோர்கல் ,ஸ்ட்யீன் போன்ற பௌவ்லேர் களால் பயிற்சி எடுத்த அவர்களுக்கு நெஹ்ரா போன்ற தகுதி இல்லாத பௌவ்லேர் ஒரு பிரச்னை இல்லை. ஹர்பஜன் னை நம்பி இருக்கலாம். அவர்கள் அடிக்கும் போது கேட்ச் ட்ரை செய்திருக்கலாம்.பவர் பிளே இலாத போது அவர்கள் இறங்கி ஆடவும் தூக்கி ஆடவும் பயதிருப்பர்கள்.முதலில் அவசர பட்டு அங்கு யூசுப் பதான் னை இறக்கியது.சென்ற ஆட்டத்தில் அவரை ஒன் டவன் இறக்கி அவர் சரியாக ஆட வில்லை. எனவே யுவராஜ் ஐ இறக்கி இருக்கவேண்டும்.

மேலும் மத்த அணி களுடன் ஒப்பிடும் போது நமது இந்தியா பில்டிங் கில் மெகா மோசம்.எதோ லீக் ஆட்டம் என்பதால் தெரியவில்லை.ஆனால் இது நாக் அவுட் முறை யில் இந்தியா மெகா மோசமாக தோல்வி அடையும்.உலக தரம் வாய்ந்த பட்டிங் வரிசை என்று சொன்னாலும் அது எப்போது வேண்டுமாலும் சொதப்பும்.டோனி யின் வியுகம் சரி இல்லை. மற்ற அணி வீரர்களை போல் அவர்களை விக்கெட் எடுக்காமல் சுலபமாக ரன் எடுக்க விடுகிறார்.இதனால் அவர்கள் சுலபமாக நின்று ஆடுகிறார்கள்.அவர்களாக அவுட் ஆனால் தான் ஆச்சு .நாம் விக்கெட் துக்கு முயற்சி செய்வது இல்லை. இது பெரிய தவறு.சாவ்லா விற்கு இவ்வளவு முறை வாய்பளிக்க தேவை இல்லை. அஷ்வின் னை முயற்சிக்கலாம்.
அவருக்கு லீக் இல் வாய்ப்பளிக்காமல் இருப்பது கவலை அளிக்கிறது. நேராக அவரை நாக் அவுட் ஆடவிட்டால் அது ஆபத்தாக கூட அமையும்.அவர் அனுபமிள்ளதவர். டோனி விரைவில் தனது தவறுகளை திருத்த வேண்டும். இல்லை என்றால் மற்றவர்கள் விளையாடுவதை நாம் வேடிக்கை தான் பார்க்க வேண்டும்.

தொடரும் ...


உங்கள் கருத்துக்களை சொல்லவும் .

No comments:

Post a Comment