Monday, March 28, 2011

இலங்கை - நியூசிலாந்து : உலககோப்பை இறுதி போட்டிக்கு செல்வது யார்?

இலங்கை - நியூசிலாந்து :
உலககோப்பை இறுதி போட்டிக்கு செல்வது யார்?




நாளை கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் முதல் அரையிறுதியில் இலங்கை அணி, நியூஸீலாந்தை எதிர்கொள்கிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு நேர்ந்த கதியை இலங்கைக்கும் ஏற்படுத்துமா நியூஸீலாந்து என்பதே அனைவரது எதிர்பார்ப்புமாக இருந்து வருகிறது.

ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே தோன்றுகிறது. காரணம்
1. இலங்கை தன் சொந்த மண்ணில் விளையாடுகிறது.
2. லீக் சுற்றில் நியூஸீலாந்து இலங்கையிடம் தோல்விதழுவியுள்ளது.
3. இலங்கையின் துவக்க வீரர்கள் அபாயகரமாக ஆடி வருகிறார்கள்.
4. நியூஸீலாந்தின் பேட்டிங் வரிசை பலவீனமாக்வும் நம்பத்தகுந்த விதத்திலும் விளையாடவில்லை.
5. நியூஸீலாந்து அணியின் சுழற்பந்து வீச்சிற்கு எதிரான கடுமையான பலவீனம்.

இந்த 5 காரணங்களும் இலங்கைக்குச் சாதகமாக வெற்றி வாய்ப்பைத் திருப்பும் என்று எதிர்பார்க்கலாம்.

ஆனால் நியூஸீலாந்திடம் ஒரு எக்ஸ்-காரணி உண்டு. அதுதான் அந்த அணியின் ஃபீல்டிங். அன்று காலிறுதியில் ஜாக் காலிஸிற்கு ஜேகப் ஓரம் பிடித்த கேட்சும் டிவிலியர்ஸ் ரன் அவுட் செய்யப்பட்ட விதமும் தென் ஆப்பிரிக்காவை தோல்விக்கு இட்டுச் சென்றது. எனவே ஃபீல்டிங் மூலம் போட்டியை மாற்றும் திறன் நியூஸீ.யிடம் உள்ளது.

2007ஆம் ஆண்டும் இந்த இரண்டு அணிகளே அரையிறுதியில் மோதின. முதலில் இலங்கை பேட் செய்ய தரங்காவின் 73 ரன்களாலும், ஜெயவர்தனேயின் சதத்தினாலும் 5 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது.. நியூஸீலாந்து 208 ரன்களுக்குச் சுருண்டு சரணடைந்தது.

அது போன்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். தில்ஷானும், தரங்காவும் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 757 ரன்களை ஜோடி சேர்ந்து எடுத்துள்ளனர். சங்கக்காராவும் ஜெயவதனேயும் இது வரை 563 ரன்களையும் 2 சதங்களையும் சேர்ந்து எடுத்துள்ளனர். எனவே இந்த நால்வரையும் சொற்ப ரன்களுக்கு வீழ்த்தினால் நியூஸீலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். ஆனால் இதனைச் செய்யும் பந்து வீச்சு சேர்க்கை நியூஸீலாந்துக்கு உள்ளதா என்று தெரியவில்லை.



நாளை நியூசீலாந்து வெற்றி பெற பிரெண்டன் மெக்கல்லம் அதிரடி சதம் எடுக்கவேண்டும், ராஸ் டெய்லர் 70- 80 ரன்களை எடுப்பதும் அவசியம். மொத்தத்தில் 300 ரன்களுக்கும் மேல் நியூஸீலாந்து குவித்து விட்டால் ஓரளவுக்கு இலங்கையை நெருக்கடிக்குட் படுத்தலாம்.

நியூஸீலாந்து இலக்கைத் துரத்தும் போது இலங்கையை 280 ரன்களுக்கு மட்டுப்படுத்தி பிறகு இலக்கைத் துரத்தும் போது பதட்டமடையாமல் ரன் விகிதம் பற்றி கவலையில்லாமல் 50-வது ஓவர் வரை ஆட்டத்தை இழுத்தாலே போதும் இலங்கைக்கு அழுத்தம் ஏற்படும். தில்ஷான் போன்றவர்கள் பந்து வீச்சை பிரிக்கவேண்டும், விக்கெட்டுகளைக் கொடுக்கக்கூடாது.

டேனியல் வெட்டோரியின் பந்து வீச்சு நாளைய நியூஸீலாந்து வெற்றிக்கு மிக அவசியம்.

நாளை கொழும்புவில் நடைபெறும் நியூஸீலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதி கிரிக்கெட் போட்டியில் இலங்கையின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.

அவருக்கு இரண்டு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரது உடல்நிலை குறித்து தீவிர பரிசீலனைக்குப் பிறகே முடிவெடுக்கப்படும் என்று இலங்கை கிரிக்கெட் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கேப்டன் குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார்.

இன்று வலையில் குறிப்பிடத்தகுந்த நேரம் பந்து வீசிய முரளிதரன் முழு உடல் தகுதியுடன் இருப்பதான அடையாளத்தில் வீசவில்லை.

முரளிதரன் விளையாட முடியாமல் போனால் அவரது இடத்தில் வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகரா விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்ப்டுகிறது.

நியூசீலாந்து அணி அதிர்ச்சியளிக்கக்கூடியதுதான் என்றாலும் ஒரு அணியாகப் பார்க்கும்போது இலங்கைக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.இருப்பினும் கிரிக்கெட் என்பது நிச்சயமின்மைகளின் ஆட்டம் என்பதால் பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment