Wednesday, March 23, 2011

ஏ.ஆர்.ரஹ்மான் :ஒரு கனவின் இசை! - பகுதி 3

.ஆர்.ரஹ்மான் வாழ்க்கை வரலாறு


ரோஜா மலர்ந்த நேரம்.



1992 ...ரஹ்மான் "பஞ்சதன்" என்கின்ற பெயரில் சொந்தமாக தன் வீட்டிலேயே ஒரு பிரமாதமான ரெகார்டிங் நிலையத்தை அமைத்திருந்தார்.ஆசியாவில் மிகச்சிறந்த ஒளிபதிவுக்கூடம் அது. லியோ காபி,ஆல்வின்,பூஸ்ட்,ப்ரீமியம் பிரஷர் குக்கர்,எம்.ஆர்.எப் டயர்ஸ்,தி ஹிந்து, ஏசியன் பெயிண்ட்ஸ் போன்ற கம்பெனி களுக்கு விளம்பர இசை அமைத்து ஹிட் ஆகி இருந்த காலம்.சாரதா திரிலோக் என்கின்ற விளம்பரப்பட தயாரிப்பாளர், ரஹ்மானின் இசையில் வெளியான லியோ காபி விளம்பரத்திற்காக விருது வாங்கி இருந்தார்.அப்போது மணிரத்னம் தான் அடுத்த படத்துக்காக ஒரு புதிய இசை அமைப்பாளரை தேடிக்கொண்டு இருந்தார்.அவருடைய உறவினரான சாரதா திரிலோக் ரஹ்மானை அவரிடம் அறிமுக படுத்தி வைத்தார்.தன்னுடைய பஞ்சதன் ஸ்டுடியோவில் வந்து சந்திக்குமாறு வரவேற்று விட்டு விடை பெற்றார் ரஹ்மான். பின்பு அந்த சந்திப்பை மறந்து விட்டார் ரஹ்மான்.



ஆறு மாதங்களுக்கு பிறகு ,திடீரென ஒரு நாள் பஞ்சதன் ஸ்டுடியோவுக்கு வருகை தந்தார் மணிரத்னம்.அப்படி ஒரு ஹை டெக் ஸ்டுடியோவை அவர் எதிபார்க்கவில்லை.அதன் தொழில் நுட்ப தரத்தை கண்டு வியந்தார்.ரஹ்மானின் விளம்பர ஜிங்கில்ஸை கேட்டவர் ,அந்த இசையின் மீது உடனடியாக காதல் கொண்டார்." என் அடுத்த படம் ரோஜாவுக்கு நீங்கள் தான் இசை அமைப்பாளர்." என்று அங்கேயே சொல்லி புக் செயதார். அதற்கு பிறகு நடந்தது எல்லாம் சரித்திரம்.

ரோஜா படத்திற்காக ரஹ்மான் பெற்ற சம்பளம் வெறும் 25000 ரூபாய்தான்.அதை அப்போது 3 மணி நேரங்களில் அவர் சம்பாதிப்பார்."பணம் ஒரு பொருட்டல்ல.எனக்கு மணி சாரிடம் வேலை பார்க்க வேண்டும் என்று தோன்றியது.அவர் என்னிடம் ஒரு நண்பராகவும் சகோதரராகவும் நடந்து கொண்டார் .திரை இசையில் பிறருடைய பாணி இல்லாத என் ஸ்டைல் இசையை அவர் மிக திறமையாக தேர்ந்து எடுத்து ரோஜாவில் பயன்படுத்தினார்.அது என்னையே நான் கண்டுகொள்ள உதவியது.திரை இசையின் பாடங்களை மணிரத்தினம் யுனிவெர்சிட்டி யில் தான் படித்தேன் ". என்றார் ரஹ்மான்.

ஹிட் கூட்டணி:



மணிரத்தினம் - ரஹ்மான் கூட்டணி எப்போதுமே சூப்பர் ஹிட் தான்.அதற்கு ஒரு உதாரணம் சொல்லலாம்.1998 - ம் வருடம் பொருளாதார தேக்க நிலை ஹிந்தி சினிமா இசை மார்க்கெட்டையும் பெரிதாக பாதித்திருந்தது.காசெட் விற்பனையில் பலத்த அடி.அப்போதுதான் வெளியானது."தில் சே " .ஒரே வாரத்தில் இரண்டு மில்லியன் கேசட்டுகள் அமோக விற்பனை.அடுத்த ஆறு மாதங்களில் ஆறு மில்லியன் கேசட்டுகள் சூப்பர் சேல்ஸ். இங்கிலாந்து இசை மார்க்கெட்டில் டாப் 10 பாடல்களில் இடம் பிடித்து சாதனை புரிந்தது "தில் சே ". ரஹ்மான் இசையின் உலக பயணம் அப்போது தான் ஆரம்பித்தது.இன்று வரை ரஹ்மானின் இசையில் விற்று இருப்பது 100 மில்லியன் சீடிகள் , 200 மில்லியன் கேசட்டுகள்.உலக அளவில் மிக அதிகமாக இசை பதிவுகளை விற்று இருக்கும் இசை அமைப்பாளர்களில் டாப் 25 வரிசையில் இடம் பிடித்திருக்கிறார் ரஹ்மான்.

தொடரும்...

No comments:

Post a Comment