Saturday, March 19, 2011

கிரிக்கெட்: தான் தவறை திருத்துமா இந்தியா ?

கிரிக்கெட்: தான் தவறை திருத்துமா இந்தியாசென்னை சேப்பாக்கத்தில் நாளை இந்தியா, மேற்கிந்திய தீவுகளைச் சந்திக்கிறது. நாளைய வெற்றி/தோல்வி இந்தியாவின் காலிறுதியை எதுவும் செய்யாது. மேலும் இதுவரை கோப்பையை வெல்லும் அணி என்ற பெயருக்கேற்ப இந்திய அணி விளையாடவில்லை. நாளை அந்த ஆதிக்க வழிக்குத் திரும்புமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

பந்து வீச்சு, ஃபீல்டிங் இந்திய அணியின் கவலையாக இருக்கும் வேளையில் பேட்டிங்கும் திடீர் சரிவுக்கு ஆளாகும் நிலைமை அயர்லாந்து, ஹாலந்து, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிராக நிகழ்ந்தது. நாளை அது திருத்திக் கொள்ளப்படும் என்று நம்பலாம்.

சச்சின் டெண்டுல்கர் நாளை சதம் எடுத்தால் சர்வதேஸ கிர்க்கெட்டில் 100 சதங்களை எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார். ஆனால் பாவம் சச்சின் சதம் எடுக்கும் ஆட்டம் நம் இந்தியா அணி தோற்றுவிடுகிறது.அணியில் யூசுப் பத்தானுக்குப் பதில் ரெய்னாவும், நெஹ்ராவுக்குப் பதில் அஷ்வினும் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது.சமீபத்தில் தோனிக்கும் ஸ்ரீகாந்துக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக செய்திகள் கிளம்பின. அதனை பி.சி.சி.ஐ. மறுத்துள்ளது. சாவ்லாவை அணியில் எடுத்து அஷ்வினை புறக்கணிக்கும் போக்கு ஏன் என்ற விவகாரம் தொடர்பாக தோனிக்கும், ஸ்ரீகாந்துக்கும் கருத்து வெறுபாடு ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

மேற்கிந்திய அணியைப் பொறுத்தவரை எதுவும் கூறுவதற்கில்லை. அன்று இங்கிலாந்துடன் 222/6 என்ற நிலையில் வெற்றி பெற 21 ரன்கள் இருக்கும்போது 4 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோற்றுள்ளது.துவக்கத்தில் கிறிஸ் கெய்ல் இருக்கிறார். இந்தியப் பந்து வீச்சைப் பார்க்கும்போது நாளை கிறிஸ் கெய்ல் ஒரு கை பார்க்கத்துவங்கினால், அது இந்தியாவுக்குப் பெரிய தலைவலியாகப் போய் முடியும். டேரன் பிராவோ ஒரு திறமையான வீரர். பின் களத்தில் பயங்கர அதிரடி மன்னன் கெய்ரன் போலார்ட், இவர்கள் அனைவரும் இந்திய ஆடுகளங்களில் ஐ .பி.எல் விளையாடி பழக்கம் உள்ளது.மேலும் ரஸல் என்ற ஆல்ரவுண்டர், நடுவில் சர்வாண் கேப்டன் சம்மி போன்றவர்கள் உள்ள போது பேட்டிங் திறமை உள்ளது. ஆனால் எப்போது என்ன நடக்கும் என்று தெரியாது. நாளை நிச்சயம் ஒரு ஸ்பின் களமாகவே இது இருக்கும்.

ஆனாலும் அபாயகரமான அணி அது. கேமர் ரோச் இதுவரை சிறப்பாக வீசி வருகிறார். இடது கை சுழற்பந்து வீச்சாளர் சுலைமான் பென் நன்றாக வீசுகிறார். புது முக சுழற்பந்து வீச்சாளர் பிஷூ நாளை இருப்பாரா என்று சந்தேகமே. ஏனெனில் இந்திய அணி சுழற்பந்து வீச்சை திறம்பட சமாளிக்கும் என்று மேற்கிந்திய அணிக்கு நன்றாகவே தெரியும்.இதுவரை பலவீனமான அணிகளை ஆதிக்கத்துடன் வென்றுள்ள மேற்கிந்திய அணி தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகியவற்றுடன் தோல்விகளைத் தழுவியுள்ளது.

இந்திய அணியும் பலமான அணியான இங்கிலாந்திடம் டை செய்து, தென் ஆப்பிரிக்காவுடன் தோல்வி தழுவியுள்ளது. எனவே நாளை ஒரு பரபரப்பான போட்டி காத்திருக்கிறது என்று கூறலாம்.இந்தியா நாளைய போட்டியில் தனது தவறுகளை திருத்த வேண்டும் . இல்லை என்றால் நாக் அவுட் விளையாட்டில் எந்த புது முயற்சியும் எடுக்க முடியாது.டோனி பொறுப்புடன் அணியை தேர்வு செய்ய வேண்டும்.மீதும் சாவ்லா அல்லது நெஹ்ரா வை ஒதுக்கி அஸ்வின் நிற்கு வாய்பளிக்க வேண்டும்.
இந்தியா வென்றால் கால் இறுதியில் ஆஸ்திரேலியா வோடு மோதும். தோற்றால் ஸ்ரீலங்கா விடம் மோதும். எனவே எதிர் அணியை மனதில் வைத்து அணியை தேர்வு செய்ய வேண்டும்.
இந்தியா வென்றால் சந்தோசமே..

2 comments:

  1. :) paavam avaru podhum gummunadhu..

    ReplyDelete
  2. நீங்க சொல்றது சரிதான் .ஆனா கோடி பேர் எதிர்பார்ப்புக்கு தகுந்த மாத்ரி விளையாட வேண்டாமா?

    ReplyDelete