ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்க்கை வரலாறு - 2
இன்னும் ஒரு சில வருடங்களில் எம்.எஸ்.வி, இளையராஜா போன்ற மாபெரும் இசை அமைப்பாளர்களுக்கு கீ - போர்டு பிளேயர்ராகவும், சில சமயங்களில் இசை கோப்பாளராகவும் பணியாற்றப்போகிறான்.அவனுடைய திறமை விக்கு விநாயக்ராம், குன்னக்குடி வைத்தியநாதன், ஜாகிர் ஹுசேன் போன்றவர்களுடன் சேர்த்துவைக்கப்போகிறது. அவர்களுடன் கச்சேரிகளில் பங்கேற்க உலகப் பயணம் செல்வான். அதன் பிறகு, 300-க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களுக்கு இசை அமைப்பான். 'பஞ்சதன்' என்கிற பெயரில் சொந்தமாக ஒரு ஹைடக் ரெகார்டிங் ஸ்டுடியோவைக் கட்டுவான்.அங்கே தான் இயக்குநர் மணிரத்னத்தைச் சந்திப்பான். 'ரோஜா' என்கிற படத்துக்கு இசையைமக்கும் வாய்ப்பு அவனுக்குத் தரப்படும். அந்த இசை அமைப்பு இந்தியத் திரை இசையின் ஸ்டைல்லை மாற்றி அமைக்கும். முதல் படத்திலேயே தேசிய விருது பெறுவான். சொந்த வாழ்க்கையில் நடந்த சில புதிரான நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, அப்போது அவன் பெயரும் மாற்றம் செய்யப்பட்டிருக்கும். திலீப் என்கிற இளைஞன் ஏ.ஆர்.ரஹ்மான் என்கிற இசைக் கனவானாக மாறுவார். 'ரோஜா'வில் ஆரம்பிக்கப் போகும் அந்த மகத்தான இசைக் கனவு ஆஸ்கர் விருதையும் கடந்து செல்லும்.
இத்தனையும் ஓர் அற்புதம் போல் கண் முன்னால் நடந்தன. ரஹ்மானின் அம்மா கரீமா பேகம் துக்கு அந்த வாழ்க்கை அனுபவங்கைளப் பற்றி நினைத்துப் பார்க்கும்போதே, உணர்ச்சிவசப்பட்டு மனம் நெகிழ்கிறது. ''என் மகன் சின்ன வயசுல இருந்தே ரொம்ப அடக்கம். எதுக்கும் உணர்ச்சிவசப்படாது.
அப்பாவோட ரெகார்டிங் தியேட்டருக்குப் போயி வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கும். வீட்டுல ஹார்மோனியத்தை அது (அப்படித்தான் மகனைச் செல்லமாக அழைக்கிறார்). பிரமாதமா வாசிக்கிறத அப்பா எல்லார்கிட்டையும் பெருமையா
சொல்லிட்டிருப்பாரு. ஒரு தடவை அேதாட அப்பா சுதர்ஸனம்
மாஸ்டர்கிட்ட கூட்டிப் ேபாயிருந் தாரு. அப்ப அதுக்கு நாலு வயசு.
''என்னடா... என்னவோ ஹார்மோனியத்துல பிரமாதமா வாசிப்பியமே ... வாசிச்சுக் காமி''ன்னு சுதர்ஸனம் மாஸ்டர் கேட்டிருக்கிறாரு . அது கொஞ்சமும் அலட்டிக்காம, ரொம்ப அற்புதமா வாசிச்சிருக்கு. அவரு மிரண்டுபோயிட்டாரு. நம்ப முடியாம ஹார்மோனியக் கட்டைகள் மேல ஒரு வேட்டி யப் போட்டு மூடி ''எங்கே, இப்ப வாசிச்சுக் காட்டு''ன்னு சொல்லியிருக்காரு. ஹார்மோனி யக் கட்டைகள் ஏதும் தெரியாத போதே , அப்ப வும் அதே மாதிரி வாசிச்சிருக்குது. எல்லாரும் அசந்துபோயிட்டாங்க.
அதோட அப்பா ரொம்ப ஆச்சர்யமா, அடிக்கடி என்கிட்டே 'இவன் பெரிய ஆளா வருவான் பாரு'ன்னு சொல்லிக்கிட்டே இருப்பாரு. அவரு அப்போ சொன்னது இப்பவும் என் மனசுல கேட்டுக் கிட்டே இருக்கு. இந்தப் புள்ளகிட்ட என்னவோ அற்புதமான திறமை இருக்குன்னு புரிஞ்சுக்கிட்டு, உடனே பியானோ கிளாஸ்ல சேர்த்துவிட்டோம். அப்ப ஆரம்பிச்சதுதான் எல்லாம். இப்ப ஆஸ்கர் அவார்டு வர வந்திருச்சு அது!'' அவர் குரலில் பெருமிதமும் பரவசமும் சேர்ந்து ஒலிக்கிறது.
இந்திய திரை உலகம் எத்தனையோ இசை மேதைகளை தந்திருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை .யாரும் யாருக்கும் குறைவில்லை.ஆனால் ரஹ்மானை என பல காரணங்களுகாக சொல்லலாம் .ஆஸ்கார் விருது அவருடைய பயணத்தில் தங்க நேர்ந்த ஒரு ஸ்டேஷன்.அதையும் தாண்டி அவர் பயணித்து கொண்டே இருக்கிறார். தன் முதல் படமான ரோஜா வில் "ரகே " என்னும் மேற்கத்திய துள்ளல் இசையை தமிழில் அறிமுகப்படுத்தியவர். அடுத்தடுத்து மேற்கத்திய க்லஸ்ஸிகல் இசை , ஹிந்துஸ்தானி,அரபி சுக்பி ,கவளி,ஜாஸ்,கர்நாடிக் ,கசல், ஹிப் ஹோப்,ராக், ஒபேரா ,ப்ளுஸ், ஆப்ரிக்கன் பீட்ஸ் என்று புதுபுது இசை வடிவங்களை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறார்.இவர் அளவுக்கு உலக இசை கலைனர்களுடன் இணைத்து பணியாற்றிய இந்திய இசை அமைப்பாளர்கள் யாரும் இல்லை. மைகேல் ஜாக்சன், வனசா மீ , டாமைக் மில்லர்,அகான் என்று இவர் கைகோர்த்தவர்கள் ஏராளம்.
பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஸ்ைபக் லீ ரஹ்மானின் 'ைசய ... ைசய...' பாடலை தன் படமான 'இன்ைசட் ேமன்'ல் பயன்படுத்திஇருக்கிறார். 'லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் ' ஆங்கிலப் படத்துக்கும், சீ னப் படமான 'வாரியர்ஸ் ஆஃப் ெஹவன் அண்ட் எர்த்' படத்துக்கும் ரஹ்மான் இசையைமத்திருக்கிறார்.
15 வருடத் திரை இசை வாழ்க்கையில் இவர் பெற்றுள்ள தேசிய விருதுகள் மூன்று,பத்மவிருது, 14 ஃபிலிம்ஃேபர் விருதுகள், 6 தமிழக அரசு விருதுகள், ேகால்டன் குேளாப், பாஃப்டா, கிட்டிக்ஸ் விருது... எல்லாவற்றுக்கும் மேல் சிகரம் போலஆஸ்கர்!
கடும் உழைப்பு, புதிய டெக்னாலஜியில், இசைப்பதிவுக் கருவிகளில் ஆர்வம், புதிய புதிய பாடகர்களை அறிமுகப்படுத்தியது போன்றவை ரஹ்மானின் பிரமாண்ட வெற்றிக்கான சில கார ணங்களாகச் சொல்லப்படுகின் றன. இந்தச் சிறப்புகள், எல்லாம் அவருைடய அப்பா ஆர்.கே .சேகரி டமும் அந்தக் காலத்திலேயே இருந்தது. என்பது ஆச்சர்யமான ஒற்றுமை ! ''என் அப்பாவின் மாபெரும் இசை ஞானத்தின் ஒரு சிறிய பகுதிதான்இறைவனின் அருளால் என்னிடம் வந்திருப் பதாக நான் நினைக்கிறேன் . அவரைப் பற்றி நினைத்தாலே என் நெஞ்சம் கண்ணீரால் நனைகிறது'' என்றார் ரஹ்மான் ஒரு முறை .
மலையாளப் பட இசை உலகில் சத்தமில்லாமல் மாபெரும் சாதனைகள் செய்தவர் இசை அமைப்பாளர் ஆர்.கே .சேகர். அவருைடய சரித்திரம் குடத்திலிட்ட விளக்காக இருக்கிறது''என்கிறார் பிரபல மலையாள எழுத்தாளரும், இசை விமர்சகரும், ரஹ்மானின் நண்பருமான ஷாஜி.
நெகிழவிக்கும் அந்தக் கதை ... அடுத்த பதிவில் ...
தொடரும் ...
சிறந்த ஒரு பதிவு நண்பரே..!
ReplyDeleteநன்றி நண்பரே ..
ReplyDelete