Thursday, March 24, 2011

உலக அழிவு - 4 : சூரியப் புயல்

சூரியப் புயல்ள் - Solar Storm

நாம் இந்த பதிவுகளில் உலக அழிவுக்கான காரணங்களை பற்றி பார்த்து வருகிறோம்.இன்று அதில் சூரிய புயல்களை பற்றி இங்கு காண்போம்.இது யாரையும் பயமுறுத்த அல்ல...



சூரியனில் உள்ள வாயுக்கள் காரணமாக சூரியன் இடை விடாது எரிந்து கொண்டிருக்கிறது.
அதில் ஏற்படும் வெப்பமும், பூமியை எட்டுவதால் தான் பூமியில் வெப்பம் ஏற்படுகிறது. இதேபோல சூரியன் எரிவதால் ஏற்படும் வெளிச்சம் பூமியை எட்டி வெளிச்சத்தையும் தருகிறது.பூமியில் இருந்து சூரியன் நீண்டதூரம் இருப்பதால் சூரியனின் வெப்பம் மிக குறைந்த அளவு மட்டுமே பூமிக்கு வருகிறது. எனவேதான் பூமியில் உயிரினங்கள் வாழ முடிகின்றன.

பூமிக்கு வரும் சூரியனின் வெப்பம் கொஞ்சம் அதிகரித்தாலும் கூட அது பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும்.இந்நிலையில் ஆக.1ஆம் தேதி காலை சூரியனின் மேல்பகுதியில் அணுகுண்டு வெடிப்பது போல 2 தடவை மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளது.இதில் முதல் வெடிப்பு பூமி உருண்டையின் அளவை விட பெரிய அளவில் இருந்துள்ளது. அடுத்து சில நிமிடம் கழித்து 2-வது வெடிப்பு ஏற்பட்டது. அது முதல் வெடிப்பை விடகொஞ்சம் சிறியதாக இருந்தது.

இதை அமெரிக்க நாசா விஞ்ஞானிகள் நவீன டெலஸ்கோப் மூலம் படம் பிடித்து உள்ளனர். வெடிப்பு ஏற்பட்டபோது பயங்கர வெப்பம் கிளம்பி இருக்கிறது. அது பூமியை நோக்கி மணிக்கு 9 கோடியே 30 லட்சம் மைல் வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது.இதன் வெப்ப அளவு எந்த அளவுக்கு இருக்கும் என்று கணிக்க முடியவில்லை. சூரியன் வெப்பம் பூமியை நேரடியாக தாக்காமல் பூமிக்கு மேலே உள்ள வாயு மண்டலங்கள் தடுக்கின்றன. இதில் வடிகட்டப்பட்டுதான் வெப்பம் பூமிக்கு வருவது உண்டு.



இப்போது வரும் பெரிய வெப்பத்தை வாயு மண்டலங்களால் தடுக்க முடியுமா? அல்லது நேரடியாக தாக்கி விடுமா? என்று தெரிய வில்லை. வாயு மண்டலங்கள் வெப்பத்தை தடுக்க முடியா விட்டால் அது பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். இல்லை என்றாலும் கூட வேறுவகை பாதிப்புகள் சில ஏற்பட வாய்ப்பு உள்ளன.

வெடிப்பால் ஏற்பட்ட சூரிய வெப்பத்தை சூரிய சுனாமி என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டு உள்ளனர்.பூமிக்கு மேல்பகுதியில் வாயு மண்டலத்தை தாண்டி ஏராளமான செயற்கை கோள்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை இந்த செயற்கை கோள்கள் செய்து வருகின்றன. சூரியனில் இருந்து வரும் அதிகவெப்பம் செயற்கை கோள்களை தாக்க வாய்ப்பு உள்ளது. இதனால் செயற்கை கோள்கள் செயலிழந்து விடும் அபாயமும் உள்ளது. செயற்கை கோள்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் செயலிழந்தால் அது உலகம் முழுவதையும் ஸ்தம்பிக்க செய்துவிடும்.



சில ஆண்டுகளுக்கு முன்பு தேசிய மின் கிரிட் அதிகளவு வெப்பம் அடைந்தது; விமானங்களின் எலக்ட்ரானிக் கருவிகள் பழுதடைந்தன; செயற்கைக்கோள்கள், கப்பலில் உள்ள கருவிகள் செயல்படாமல் நின்றன. இதற்கு காரணம், சூரியன் தனது ஆழ்ந்த உறக்கத்தை கலைத்து விழித்துக் கொண்டதால் அதிகபட்ச மின்காந்த சக்தியை வெளிப்படுத்தியது தான். புயலாக வெளிப்பட்ட அந்த மின்காந்த சக்தி பூமியை தாக்கியது. சூரியன் அதிகபட்ச சக்தியை வெளிப்படுத்தியதால் தான் பூமியில் பல்வேறு விளைவுகள் ஏற்பட்டன என்று விண்வெளி ஆய்வு விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இதேபோன்று, சூரியனில் ஏற்படும் மின்காந்த புயலின் தாக்கம் வரும் 2013ல் அதிகமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. "மின்காந்த சூப்பர் புயல் ஒன்று பூமியை தாக்க உள்ளது. இதனால் தொடர்ச்சியாக பேரழிவு ஏற்பட்டு பூமி பாதிக்கும் நிலை ஏற்படும். எனவே, அவசர சேவைகள் மற்றும் தேசிய பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என்று மின்காந்த சூப்பர் புயல் குறித்து நாசா புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது. "சூரியனின் மின்காந்த புயல் வரப்போகிறது என்று தெரியும். ஆனால், அதன் விளைவுகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பது தெரியாது.

இதனால் செயற்கைக்கோள்கள், கப்பல்கள், விமானங்கள் வங்கிகள், கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் கருவிகள், தொலைத்தொடர்பு கருவிகள் பாதிக்கப்பட்டு பெரிய பிரச்னை ஏற்படும். "பெரிய நகரங்களில் மின் பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பை சரிசெய்வது கடினமானதாகவும், நீண்ட நாட்களும் ஆகும். சூரிய ஒளியில் மாற்றம் ஏற்படுவதால் மின்காந்த புயல், மின்னல் தாக்குவது போல் பூமியை தாக்கும்' என்று நாசாவின் ஹீலியோ பிசிக்ஸ் பிரிவு டைரக்டர் விஞ்ஞானி டாக்டர் ரிச்சர்ட் பிஷ்ஷர் கூறுகிறார். "விண்வெளி வானிலை' என்ற தலைப்பில் வாஷிங்டனில் சமீபத்தில் ஒரு மாநாடு நடந்தது.



இதில் நாசா விஞ்ஞானிகள், கொள்கை வகுப்பாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் சூரிய மின்காந்த புயல் குறித்து எச்சரிக்கை செய்யப்பட்டது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட விஞ்ஞானிகள் டாக்டர் பிஷ் ஷரின் எச்சரிக்கையை ஏற்றுக் கொண்டனர். டாக்டர் பிஷ்ஷர் (69) சூரிய மின்காந்த புயல் குறித்து கடந்த 20 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 22 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனில் மின் காந்த சக்தி அதிகமாக வெளிப்படுகிறது. சூரியனில் 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை மின்காந்த புயல் ஏற்படுகிறது. இது புள்ளிகள் அல்லது சுடரொளி போல் காணப்படுகிறது.

அப்போது, சூரியனின் வெப்பம் மிக அதிகபட்சமாக, 10 ஆயிரம் டிகிரி பாரன்ஹீட் (5,500 டிகிரி செல்சியஸ்) வெப்பம் அடையும். மனிதனின் வாழ்நாளில் இதுபோல், மூன்று, நான்கு முறை சூரியனில் புயல் ஏற்படுவதை அறியலாம். வரும் 2013ம் ஆண்டில் இரண்டு நிகழ்வுகளும் ஒன்று சேர்ந்து வர உள்ளதால் சூரியனில் இருந்து அதிகளவில் கதிரியக்கம் வெளிப்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் வட ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தில் உள்ள மின்சக்தி நிலையங்கள் எளிதாக பாதிக்கப்பட்டு பல மாதங்கள் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதியடையும் சூழ்நிலை ஏற்படலாம். எந்த அளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும், பாதிப்பு எப்படி இருக்கும் என்று தெரியாததால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை இப்போதே கூற முடியாது. இவ்வாறு ரிச்சர்ட் பிஷ்ஷர் எச்சரித்துள்ளார்.

மீண்டும் அடுத்த பதிவில் வேறொரு காரணத்தை பற்றி ஆய்வு செய்வோம்.

உங்கள் கருத்துக்களை கமெண்ட் டில் சொல்லுங்கள் --- நன்றி...

thanks to http://eoazis.blogspot.com for informations

5 comments:

  1. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சிறந்த பதிவு. இது போன்ற அறிவியல் செய்திகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  3. மிகவும் அருமை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. உங்கள் அதரவுக்கு நன்றி. உலக அழிவு பற்றிய மற்ற (post) பகுதிகளையும் படித்து உன்ங்கள் கருத்துக்களை பகிரவும்.

    ReplyDelete
  5. இப்படி ஒரு நல்ல பதிவை தந்ததிற்க்கு நன்றி.

    ReplyDelete