Saturday, February 26, 2011

உலககோப்பை : இந்தியா பலம் - பலவீனம் .

இந்தியா - இங்கிலாந்து




நாளை
பெங்களூருவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் பி-பிரிவு ஆட்டத்தில் பலமான இந்திய அணி தன் பலத்தை நிரூபிக்க ஒரு வாய்ப்பாக இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இங்கிலாந்து அணிக்கும் ஹாலந்துக்கு எதிரான ஆட்டத்திற்குப் பிறகு கடும் நெருக்கடியும் அழுத்தங்களும் ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணியை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா 3 முறை வென்று 3 முறை தோற்றுள்ளது. எனவே இரு அணிகளுக்கும் அந்த விதத்தில் பிரச்சனை இல்லை.இங்கிலாந்து அணி நெதர்லாந்த் எதிரான ஆட்டத்தில் பந்து வீச்சில் பிராட், ஆண்டர்சன் அன்று 20 ஓவர்களில் 137 ரன்களை விட்டுக் கொடுத்தனர். அது போன்று நாளை வீசினால் இந்தியா மீண்டும் மிகப்பெரிய ஸ்கோரை எட்டும்.



இந்திய அணியைப்பொறுத்தவரை இப்போது பிரச்சனை அணிச்சேர்க்கை மற்றும் பௌலிங் தான் .இந்திய அணி கபில்தேவுக்குப் பிறகு பெரிய அளவில் திறமையான வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்கவில்லை. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு, குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பலவீனமாகவே உள்ளது.

தற்போதைய அணியில் ஜாகீர் கான் மட்டுமே சீரான முறையில் வீசி நம்பிக்கை அளித்து வருகிறார். முனாஃப் படேலின் திசை மற்றும் அளவு சீராக இருந்ததற்குக் காரணம் அவர் அதிகம் வேகம் காட்டாமல் நேராக வீசுவதுதான். ஆனாலும் 370 ரன்கள் அல்லது 350 ரன்கள் அடிக்கும் போது அவர் பாதுகாப்பான வீச்சாளராக இருக்கலாம்.



நாளையே இந்தியா 250 ரன்கள்தான் எடுக்க முடிகிறது என்றபோது முனாஃப் படேல், ஆஷிஷ் நெஹ்ரா, ஸ்ரீசாந்த் கூட்டணி பயன்படாது என்பது தற்போது தெரிகிறது.

நெஹ்ரா சரியாக வீசவில்லை என்று கேப்டன் உணர்ந்தால் உடனடியாக அவரை விட வேகம் அதிகம் வீசி, சாதுரியத்தையும் பயன்படுத்தும் ஆர்.பி.சிங் போன்றவர்களை அழைத்திருக்கவேண்டும், அல்லது குறைந்தது இஷாந்த் ஷர்மாவையாவது தயார் படுத்தியிருக்கவேண்டும்.இது இந்திய அணி தேர்வாளர்கள் செய்த தவறு. குறைந்தது இர்பான் பதனை யாவது தயார் செய்திருக்க வேண்டும். தைரியமாக இன்னொரு பௌலாரை இணைக்கலாம்.



இப்போது ஸ்ரீசாந்தை அடுத்த போட்டியில் உட்கார வைத்துவிட்டு நெஹ்ராவை அணியில் எடுப்பது என்பது வலது கை ஸ்ரீசாந்திற்குப் பதில் இடது கை ஸ்ரீசாந்தை எடுப்பது போல்தான். எப்போது பிரவீண் குமார் விளையாட முடியவில்லை என்று தெரிந்ததோ அப்போதே மாற்று வீச்சாளர்களை அணியில் தேர்வு செய்யப்போவது பற்றி தெளிவான முடிவுகளை வைத்திருக்கவேண்டும்.

எனவே ஸ்ரீசாந்த் மேம்பாடு அடைகிறாரா என்பதை வலையில் உறுதி செய்தபிறகே அவரை அணியில் தேர்வு செய்ய வேண்டும், இல்லையெனில் பியூஷ் சாவ்லா, அல்லது அஷ்வினை அணியில் தேர்வு செய்வது பாதுகாப்பானது.இந்திய ஆட்டக்களங்களில் துவக்கத்திலேயே சுழற்பந்து வீச்சை ஒருமுனையில் வைத்துக் கொள்ளலாம். அது எதிரணியினரின் எதிர்பார்ப்பை நிலைகுலையச் செய்யும்.



ஜாகீர், முனாஃப் படேலுக்கு ஒரு ஆட்டம் மிகவும் சாதாரணமாக அமைந்து விட்டால் அது காலிறுதியாக இருக்குமானால் இந்திய அணிக்கு ஆபத்து உள்ளது.
இப்போது பிரச்சனையென்னவெனில் இந்திய பேட்டிங் தோல்வி அடையும்போது 4 பந்து வீச்சாளர்களை வைத்திருந்தால் அது தோல்வியில் கொண்டு போய் விடும் அபாயம் இருக்கிறது.

எனவே தோனிக்கு மிகப்பெரிய கஷ்டம் என்னவெனில் ஸ்ரீசாந்த், நெஹ்ரா கட்டாயம் ஃபார்முக்கு வர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இல்லையெனில் பேட்ஸ்மெனில் ஒருவரை தியாகம் செய்யவேண்டி வரும் அப்போது யூசுப் பத்தானின் இடம் பற்போகும், இதனால் இந்திய அணிக்கு பின் களத்தில் உள்ள ஒரு பெரிய அதிரடி வாய்ப்பு பற்போகும்.

ஒரு போட்டியில் மோசமாக வீசினார் ஸ்ரீசாந்த் என்பதற்காக அவரை அணியிலிருந்து நீக்கவேண்டிய அவசியமில்லை. நாளை இங்கிலாந்து அணியில் ஸ்ட்ராஸ், பீட்டர்சன் துவக்கத்தில் களமிறங்குவதால் இவரது ஆக்ரோஷம் பயன்தரலாம்.தோனிக்குப் தற்போது சாவ்லாவை அணியில் சேர்த்து 5 பந்து வீச்சாளருடன் இறங்குவதா அல்லது போன போட்டியில் வைத்திருந்த அதே அணியை இதிலும் களமிறக்கலாமா என்ற பிரச்சனை இருக்கிறது.



யுவ்ராஜ் சிங், யூசுப் பத்தான் வங்கதேச அணிக்கு எதிராக 370 ரன்கள் இருந்ததால் நன்றாக வீசியது போல் தெரிந்தது. ரன்கள் குறைவாக இருக்கும்போது உண்மையான ஒரு பந்து வீச்சாளரின் உதவியே தேவைப்படும். தோனி எப்படி யோசிக்கிறார் என்று தெரியவில்லை. ஸ்ரீசாந்தை நீக்கி விட்டு பியூஷ் சாவ்லாவை அணியில் எடுத்தால், துவக்கத்தில் ஜாகீருடன் ஹர்பஜன் சிங்கை பந்து வீச அழைத்து தோனி இங்கிலாந்துக்கு அதிர்ச்சியளிக்கலாம்.

பெங்களூர் ஆட்டக்களம் நிச்சயம் பேட்டிங்கிற்கு சாதகமான விளாசல் களமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். பயிற்சி போட்டியில் எடுத்தது போல் ஸ்பின் எடுத்தால் இந்தியாவுக்குச் சாதகம். இங்கிலாந்து அணியில் ஸ்வான் மட்டுமே ஒரு அச்சுறுத்தும் பந்து வீச்சாளர்.



நெருக்கடியும், அழுத்தமும் இங்கிலாந்து பக்கம் உள்ளது, எனவே அதனை இந்தியா தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம். இந்தியா வெற்றி பெற்றால் அனைவருக்கும் மகிழ்ச்சி.

No comments:

Post a Comment