1975 முதல் 2007ஆம் ஆண்டு வரை உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்றுள்ள இலங்கை 57 போட்டிகளில் 25-இல் வென்று 30-இல் தோற்றுள்ளது. இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தன் சொந்த மண்ணிலேயே அதிக போட்டிகளை விளையாடுவதால் இலங்கை அணிக்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமக உள்ளது. அந்த ஆட்டக்களங்களில் அவர்கள் ராஜாதான்.
ஆனால் பொதுவாக ஒருநாள் கிரிக்கெட்டில் முன்னிலை அணிகளுக்கு எதிராக வெற்றிகளை விட தோல்விகளே அதிகம். மொத்தம் 690 ஒரு நாள் சர்வதேச பொட்டிகளில் 290-இல் வென்று 300-இல் தோல்வி தழுவியுள்ளது இலங்கை. 290வெற்றிகளில் 174 போட்டிகளை இலங்கையில் ஆடியுள்ள அந்த அணி 109 வெற்றிகளைப் பெற்றுள்ளது. எனவே இலங்கையில் அந்த அணியை வீழ்த்துவது கடினம்.
சமீபத்தில் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரக ஆஸ்ட்ரேலிய மண்ணில் முதன் முதலாக ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது இந்த இலங்கை அணி. 2010/11 ஆம் ஆண்டுகளில் 25 ஒருநாள் போட்டிகளில் 17 போட்டிகளில் வெற்றி பெற்று பலமாகத் திகழ்கிறது.
சங்கக்காரா தலைமையில் 2009ஆம் ஆண்டு முதல் 36 ஒருநாள் போட்டிகளில் 21 போட்டிகளில் வென்று 12 போட்டிகளில் மட்டுமே தோல்வி தழுவியுள்ளது.
சொந்த நாடு என்ற வகையில் பெரும் அபாயமான அணி இலங்கை அணிதான். இந்த அணியில் துவக்கத்தில் தில்ஷான் களமிறங்குவது ஒரு சேவாகின் பலத்தை அந்த அணிக்குக் கொடுத்துள்ளது. ஆனால் மற்ற முனையில் தரங்காவெல்லாம் நம்ப முடியாது.
ஆனால் மிடில் ஆர்டரில் சங்கக்காரா பலமாக உள்ளார். ஜெயவர்தனே சோபிக்காமல் போனால் மிடில் ஆர்டர் சற்றே பலவீனமாகப் போய்விடும், ஆனால் பின் களத்தில் அஞ்சேலோ மேத்யூஸ், கபுகேதரா, பெரெரா போன்ற ஆல்ரவுண்டர்கள் கைக் கொடுப்பார்கள். இதனால் அந்த அனி சமரவீராவை அல்லது சமர சில்வாவை நடுக்களத்தில் பயன்படுத்தும் வாய்ப்புக் குறைவு. சமரவீரா அல்லது சம்ர சில்வா என்று ஒருவரைத்தான் பயன்படுத்த முடியும்.
இலங்கை மிடில் ஆர்டரை வீழ்த்தினால் எதிரணி வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.
பந்து வீச்சில் முத்தையா முரளிதரன் தனது கடைசி சர்வதேச போட்டிகள் இத்துடன் முடிவடைகின்றது என்று கூறியுள்ளார் எனவே இலங்கை அணி முரளிதரன் ஓய்வுக்கு ஒரு நல்ல பரிசை அளிக்க விரும்பும். இவர் தவிர, அஜந்தா மெண்டிஸ், மலிங்கா, பெரெரா, பெர்ணாண்டோ ஆகியோர் அவர்கள் மண்ணில் சிறப்பாக வீசக்கூடியவர்கள். காலிறுதியில் இந்த அணி ஒரு பெரிய அச்சுறுத்தல் என்பதில் ஐயமில்லை. சங்கக்காராவும் இந்த உலகக் கோப்பையை வெல்வதில் தீவிர முனைப்பு காட்டி வருகிறார்.
எனவே இலங்கையை இந்த உலகக் கோப்பையில் அவர்கள் மண்ணில் வீழ்த்தும் அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை பெறும் என்று கூட நாம் கூறிவிட முடியும். அந்த அளவுக்கு இந்த ஆட்டக்களங்களில் அது பலமான அணியாகும். எனவே இலங்கை இந்த முறை சாம்பியனாவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
No comments:
Post a Comment