Saturday, February 19, 2011

உலகக்கோப்பை 2011: மற்ற நாடுகள் (World Cup 2011- Other Teams.

உலகக்கோப்பை 2011:அயர்லாந்து



2007ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி அதிர்ச்சியளித்த அயர்லாந்து அணி இந்த முறை கோப்பையை வெல்வோம் என்று கூறும் அளவுக்கு தன்னம்பிக்கையுடன் திகழ்வதாக ஜெஃப் மார்ஷ் தெரிவித்துள்ளார்.

டிரவர் ஜான்ஸ்டன், கெவின் ஓ'பிரையன், பாய்ட் ரான்கின் ஆகிய முன்னணி மித, ஸ்விங் ரக பந்துவீச்சாளர்களையும் ராபர்ட் வான் டெர்மெர்வ் என்ற ஓரளவுக்கு நல்ல சுழற்பந்து வீச்சாளரக்ளையும் இந்த அணி கொண்டுள்ளது. விக்கெட் கீப்பர் நியால் ஓ'பிரையன் அபாயகரமான பேட்ஸ்மென் என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டிங்கில் இவர் தவிர, கேப்டன் போர்ட்டர்ஃபீல்ட், அல்கெஸ் கியூசக், எட் ஜாய்ஸ் (இவர் இங்கிலாந்து அணிக்கும் விளையாடியவர்), ஜார்ஜ் டாக்ரெல், ஆந்த்ரே போத்தா போன்ற ஆல்ரவுண்டர்களையும் இந்த அணி கொண்டுள்ளது.

2006ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை 58 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 28-இல் வென்று 24-இல் தோல்வி தழுவியுள்ளது. இதில் கனடா, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து கென்யா ஆகிய அணிகளுக்கு எதிராக அதிக வெற்றிகள் பெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. தற்போதைய கேப்டன் போர்ட்டர்ஃபீல்ட் தலைமையில் 21 போட்டிகளில் 13-இல் வெற்றி பெற்றுள்ளது அயர்லாந்து.

உலகக்கோப்பை 2011:கனடா



கனடா அணி இதே நிலையில் உள்ள மற்ற அணிகளை விட பலவீனமாகவே உள்ளது என்பது அதன் இதுவரையிலான வெற்றி தோல்விகளை வைத்து நாம் கூறிவிடமுடியும். மொத்தம் 60 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் இதுவரை 16-இல் மட்டுமே வென்று 43-ஐ தோற்றுள்ளது. அதனால் இந்த அணிபற்றி நாம் ஒரு குறைவான மதிப்பீடே வைத்திருந்தாலும்.ஒரு சில தனிநபர்கள் இந்த அணியில் வெற்றியை தனிப்பட்ட முறையில் தீர்மானிக்கக் கூடியவர்களே.

இந்த அணியில் தமிழ்நாட்டு அணிக்கு விளையாடிய பாலாஜி ராவ் என்ற லெக் ஸ்பின்னர் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று பயிற்சி ஆட்டத்தில் இவர் முன்னணி இங்கிலாந்து வீரர்களை தன் திறமையால் கட்டுப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ஆட்டக்களங்கள் பற்றி நன்றாகவே அறிந்தவர். எனவே அபாயகரமான லெக்-ஸ்பின்னர் இவர். குர்ரம் சொஹான் என்ற மீடியம் வேகப்பந்து வீச்சாளரும் நம்பிக்கை அளிக்கும் விதமாக வீசி வருகிறார்.

பேட்டிங்கில் 2003ஆம் ஆண்டு சில பல வெடிகளைக் கொளுத்தி போட்ட ஜான் டேவிசன் இப்போதும் உள்ளார். ஆனால் வயது 40 ஆகிவிட்டது. இவர் ஒரு டைனமைட். 2003-இல் மேற்கிந்திய அணிக்கு எதிராக இவர் அடித்த அதிரடி சதமும், பாண்ட் உள்ளிட்ட பந்து வீச்சாளர்கள் இருந்த நியூஸீ அணிக்கு எதிராக அதிரடி 75ரன்களும் எடுத்து அச்சுறுத்தியதை யாரும் எளிதில் மறக்க முடியாது. உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இவர் அடித்துள்ள 307 ரன்களில் 35 பவுண்டரிகளும் 13 சிக்சர்களும் அடங்கும். 218 ரன்களை பவுண்டரிகளும் சிக்சர்களுமாகவே அடித்து நொறுக்கியுள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக 32 வயதான ரிஸ்வான் சீமா உள்ளார். இவர் யூசுப் பத்தான், ரசாக், அஃப்ரீடி ரக வன்கொடுமை ஹிட்டர். துவக்கத்தில் களமிறங்குவார் அல்லது 5 அல்லது 6ஆம் நிலையில் களமிறங்குவார். இவர் விக்கெட்டை வீழ்த்தி விடுவது நல்லது. ஏனெனில் நிற்க வைத்து கட்டுப்படுத்துவது கடினம். இவருக்கு சிக்சர் அடிக்கும் மிஷின் என்ற பெயரும் உண்டு.

இவர் எடுத்துள்ள 523 ஒரு தினப் போட்டி ரன்களில் 67 பவுண்டரிகளையும் 24 சிக்சர்களையும் அடித்துள்ளார் என்றால் நாம் பார்த்துக் கொள்ளலாம். 412 ரன்களை அவர் பவுண்டரிகளிலும் சிக்சர்களிலுமே அடித்துள்ளார். இவர் தவிர குனசேகரா, கேப்டன் பாகாய் ஆகியோரும் நல்ல பேட்ஸ்மென்கள். ரிஸ்வான் சீமா வலது கை மிதவேகப்பந்தும் வீசக்கூடியவர். எனவே இவர் ஒரு அதிரடி ஆல்ரவுண்டர் எனலாம். இவர் நேற்று இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் 28/5 என்ற நிலையில் களமிறங்கி 71 பந்துகளில் 10 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 93 ரன்கள் எடுத்து புகுந்து விளையாடி அச்சுறுத்தினார்.

எனவே கனடா அணியை நாம் எளிதில் எடைபோட முடியாது. அதுவும் பாகிஸ்தான் போன்ற அணிகளுக்கு கனடா எப்போதும் அபாயகரமான அணியே.

உலகக்கோப்பை 2011:கென்யா



பேட்டிங்கில் பலம் இருக்கும் அளவுக்கு இந்த அணியிடம் பந்துவீச்சு பலம் இல்லை. எனினும் 2003ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் இலங்கை அணிக்கு கொடுத்த அதிர்ச்சியை எளிதில் மறந்து விடமுடியாது. 1996ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் மேற்கிந்திய அணியை வீழ்த்தியதையும் மறக்க முடியாது. ஒருமுறை தெனாப்பிரிக்காவில் இந்தியாவையும் வீழ்த்திய அணி கென்யா. செரென் வாட்டர்ஸ் என்ற 20 வயது துவக்க வீரர் உத்தி ரீதியாக ஒரு சிறந்த வீரர். பயிற்சிப் போட்டியில் ஹாலந்துக்கு எதிராக சதம் எடுத்தார்.

ராகேப் படேல் என்ற பின்கள அதிரடி வீரரும் உள்ளார். டிகோலோவுக்கு 41 வயதாகி விட்டது. இருந்தாலும் இவரது பந்து வீச்சில் இன்னமும் விக்கெட்டுகள் சரிந்தே வருகின்றன. காலின்ஸ் ஒபூயா, தன்மய் மிஷ்ரா ஆகிய பேட்டிங் திறமைகளும் உள்ளன. பழைய ஆல் -ரவுண்டர் தாமஸ் ஒடோயோவும் உள்ளார். நல்ல திறமையான அணிதான், எதிரணியினர் கவனமின்றி 240 ரன்களே எடுக்கிறார்கள் என்றால் கென்யா நிச்ச்யம் அந்த இலக்கை எளிதில் துரத்தும் அது எந்த அணிக்கு எதிராக இருந்தாலும் சரி.

உலகக்கோப்பை ௨௦௧௧:ஹாலந்து



உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் 12 போட்டிகளில் 5-இல் வெற்றி பெற்றுள்ளது அவ்வளவு மோசமானதாக இல்லை. அதே போல் 57 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 23-இல் வெற்றி பெற்றிருப்பதும் வளரும் அணிக்கன அறிகுறியைக் காண்பிப்பதாக உள்ளது. இந்த அணியிலும் சில தனிப்பட்ட வீரர்கள் சிறப்பு வாய்ந்தவர்கள். ரயான் டென் டஸ்சதே என்பவர் இதில் முக்கியமானவர் இவர் ஒரு ஆல்-ரவுண்டர். கனடா அணியை நெதர்லாந்து அணி 6 முறை சந்தித்து 6 முறையும் வெற்றி கண்டுள்ளது. டென் டஸ்சதே 27 ஒருநாள் போட்டிகளில் 1234 ரன்களை 3 சதம், 8 அரைசதங்களுடன் எடுத்துள்ளார். சராசரி 68.55. ஒரு நல்ல பந்து வீச்சாளரும் கூட.

துவக்கத்தில் களமிறங்கும் கெர்வீசீ, ஷ்வார்சின்ஸ்கி அபாயகரமான துவக்க வீரர்கள். பின்களத்தில் பர்மன், முதாசர் புகாரி ஆகியோரும் பேட்டிங்கில் கைகொடுப்பர். பயிற்சி ஆட்டத்தில் அன்று கென்யாவை வீழ்த்தியதிலிருந்து இந்த அணியின் சவால் தன்மை தெரியவந்தது.

இந்த 4 டெஸ்ட் விளையாடாத அணிகள் தவிர நிச்ச்யம் அதிர்ச்சியளிக்கக்கூடும் என்று பலரும் கருதும் அணி ஜிம்பாப்வே, வங்கதேசம்ஆகியவையாகும்.

பிரவு ஏ-யில் முன்னணி அணிகளில் நியூஸீலாந்தும், சில வேளைகளில்பாகிஸ்தானும் இந்த அணிகளிடம் தோற்க வாய்ப்பிருக்கிறது.

பிரிவு பி-யில் மேற்கிந்திய அணி இருக்கும் நிலையில் வங்கதேசம்,அயர்லாந்து அணிகள் அந்த அணிக்கு அபாயகரமானதே அயர்லாந்து அணிமேற்கிந்திய அணியையும், வஙகதேசத்தையும், -ஹாலந்தையும் வீழ்த்திவிடமுடிய்ம் எனில் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பு உள்ளது. அதேபோல் வங்கதேசம் ஹாலந்து, அயர்லாந்து அணிகளை வீழ்த்தி மேற்கிந்தியஅணியை வீழ்த்தினால் காலிறுதிச்சுற்றுக்கு வாய்ப்புள்ளது.

பிரிவு ஏ-யில் ஜிம்பாப்வே அணி கன்டா, கென்யா அணிகளை வீழ்த்திபாகிஸ்தானையும் போராடி வீழ்த்தினால் காலிறுதி வாய்ப்பு உள்ளது.

மொத்தத்தில் வங்கதேசம், அயர்லாந்து, ஹாலந்து, ஜிம்பாப்வே, கனடா,கென்யா ஆகிய அணிகளில் எந்த அணி தங்கள் பிரிவில் உள்ள ஒரு முக்கியஅணிக்கு அதிர்ச்சியளித்தாலும் காலிறுதியில் நுழைய வாய்ப்பிருக்கிறது.

உண்மையில் பலவீனமான அணிகளாக நாம் கருதவேண்டியது நியூஸீலாந்தும்,மேற்கிந்தியத் தீவுகளும்தான் ஏனெனில் காலிறுதிக்குத் தகுதி பெறாமல்போகும் அணிகளின் பட்டியலில் இந்த அணிகள் உள்ளன.

அதனால் இந்த உலகக் கோப்பையை . முதன்மை 8 அணிகள்தான்வரவேண்டும் என்ற விதமாகத் தயாரித்திருப்பதாகக் ஐ.சி.சி. கூறியதற்குஉண்மையில் இந்த அணிகள்தான். தங்கள் ஆட்டம் மூலம் ஐ.சி.சி.யின்திட்டத்தில் கரியைப்பூசவேண்டும்.

No comments:

Post a Comment