இந்த உலகக் கோப்பையில் ஸ்டைரிஸ் உள்ளார் ஆனால் அவ்வளவாக ஃபார்மில் இல்லை. ஓரம் உள்ளார் காயமடைந்த நிலையில் களமிறங்குகிறார். வெட்டோரியின் தலைமையில் தாக்கம் இல்லாமல் போய்விட்டது. மெக்மில்லன் இல்லை, பாண்ட் இல்லை. ஒட்டுமொத்தமாக இது வரை 62 உலகக் கோப்பை போட்டிகளில் 35-இல் வென்று 26-இல் தோல்வி தழுவியுள்ளது நியூஸீலாந்து.
2010/11 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற 27 ஒருநாள் போட்டிகளில் 8-இல் மட்டுமே வென்று 17 போட்டிகளில் தோல்வி தழுவியுள்ளது. இதில் கடைசியாக பாகிஸ்தானுடன் பெற்ற 2 வெற்றிகளும் அடங்கும். வங்கதேசத்தில் தொடரை முழுதும் இழந்தது, இந்தியாவுக்கு எதிராக தொடரை முழுதும் இழந்தது. இந்திய, வங்கதேசம், இலங்கையில் இந்த உலகக் கோப்பை போட்டிகள் நடப்பதை வைத்துப் பார்க்கும்போது இந்தத் தோல்விகள் நியூஸீலாந்து அணிக்கு இந்த உலகக் கோப்பையில் வாய்ப்புகள் ஏறக்குறைய இல்லை என்றே கூற வைக்கிறது.
ஆசியாவில் விளையாடிய 146 ஒரு நாள் போட்டிகளில் நியூசீலாந்து 43-இல் மட்டுமே வெற்றி பெற்று 96 போட்டிகளில் தோல்வி தழுவியுள்ளது. இந்தப்பகுதி ஆட்டக்களங்களில் இந்த அணி தர்ம அடி வாங்கியுள்ளதை இது எடுத்துரைக்கிறது.
டேனியல் வெட்டோரி தலைமையில் இதுவரை 76 போட்டிகளை விளையாடியுள்ள நியூசீலாந்து 37-இல் வென்று 31-இல் தோற்றுள்ளது.
இந்த முறை அந்த அணி இந்திய ஆட்டக்களங்களில் அதிரடி மன்னன் பிரெண்டன் மெக்கல்லம்மை துவக்கத்தில் களமிறக்கினால் ஏதாவது பிரேக் த்ரூ செய்ய வாய்ப்புள்ளது. ஏனெனில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆடிய இவரும், ராஸ் டெய்லரும் அணியின் இப்போதைய பலங்கள். வெட்டோரியின் சுழற்பந்து ஒரு பலம் அவ்வளவே.
No comments:
Post a Comment