Wednesday, February 23, 2011

kung Fu Panda :குங்பூ பண்டா விமர்சனம்

குங்பூ பண்டா : விமர்சனம்நான் அதிகமாக பிசேர் ரின் கார்ட்டூன் படங்கள் தான் பார்ப்பேன்.ஆனால் சும்மா விளையாட்டாய் பார்க்க ஆரம்பித்து இந்த படம் என்னை மிகவும் கவர்ந்தது.

குங்பூவை ஏதாவது ஒரு மிருகத்துடன் பொருத்தி பார்க்க விரும்பினால், நீங்கள் எந்த மிருகத்தை தெரிவு செய்வீர்கள்? – நிச்சயமாக தின்று தின்று வண்டி வைத்த ஒரு பன்டா கரடியை அல்ல, சரிதானே? இந்த காட்டூன் படத்தில் அதைத்தான் தெரிவு செய்திருக்கிறார்கள் – விளைவு? கதைக்கமுதலே சிரிக்க வைக்கிற ஒரு கதாபாத்திரம். அதற்காக கதைவசனமே இல்லை என்றோ, அது சிரிப்பை வரவளைக்கவில்லை என்பதோஇல்லை. படம் 1 1/2 மணி நேரமும் வயிறு குலுங்க வைக்கிறது.டிரிம்வொர்க்ஸ் ஸ்டுடியோவிலிருந்து 2008-ல் வெளிவந்த படம்தான் “குங்பூ பாண்டா”. அமைதி பள்ளத்தாக்கு (Valley of Peace) என்ற கிராமத்தில் தனது தந்தையுடன் நுாடுல்ஸ் கடையில் வேலை செய்து கொண்டிருக்கும் கொழுகொழு பாண்டா போ-விற்கு மிகப் பெரிய குங்பூ மாஸ்டர் ஆகவேண்டுமென்ற கனவு. டை லங் என்ற ஒரு மோசமான குங்பூ மாணவனால் வரவிருக்கும் ஆபத்திலிருந்து காப்பதற்காக பிரபல குங்பூ பள்ளி ஆசான்கள் அந்த வருடம் அந்த பள்ளத்தாக்கின் குங்பூ சாம்பியனை தேர்ந்தெடுக்கும் போட்டி நடத்துகின்றார்கள்.

அங்கே நுாடுல்ஸ் விற்க போகின்ற போ-வே சாம்பியன் என தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவருக்கு குங்பூ கலையை கற்றுக் கொடுக்க அந்த மடாலாய சின்ன மாஸ்டரும் அவரின் சீடர்கள் (பாம்பு, குரங்கு,புலி, மேன்டிஸ்) போன்றவர்கள் படும் பாடு உங்களை கண்டிப்பாக விலாநோக சிரிக்க வைக்கும். போ-வும் டை லங் என்கிற பனிச் சிறுத்தையும் மோதும் கடைசி யுத்தமும் பிரமிக்க தக்க வகையில் படமாக்க பட்டிருக்கும்.படத்தின் சிறப்பம்சம் உரையாடல் எனலாம். எல்லோருக்கும் பெரிய மாஸ்டரான ஒகுவே ( ஆமை) போ-விடம் ஒரு மரத்தின் கீழ் பேசும் உரையாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
Yesterday is history,
tomorrow is a mystery,
but today is a gift.
That is why it is called the Present

இந்த படங்கள் ஏன் தமிழ்நாடு முழுவதும் டப் செய்து திரையிட படவில்லை என தெரியவில்லை. தயவு செய்து குழந்தைகள் மட்டுமே பார்க்கும் படம் என நினைத்து விடாதீர்கள். உங்கள் மனதை மிகவும் லேசாக ஆக்கும் மிகச் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று.

ரொம்ப எளிமையான கதை, அதை வழக்கமான சைனீஸ் டைப் திரைக்கதை. ஆனால் அதை படமாக்கிய விதம் கலக்கியிருக்காங்க. நகைச்சுவையை அங்க அங்க தூவாம , படம் முழுக்க, கடைசி நொடி வரை சிரிச்சிகிட்டே இருக்க வைக்கும் அளவுக்கு இருக்கு. அசத்தலான பின்னணி இசை, டைமிங் டயலாக், நுணுக்கமான அசைவுகளை துல்லியமாய் காமிக்கும் அனிமேஷன். சொல்லிகிட்டே போலாம், போய் பாருங்க.முக்கியமாக இந்த பண்டா கரடியை பார்த்தாலே நமக்கு சிரிப்பு வரும் .எல்லாத்தையும் விட இன்னும் ஆச்சர்யப்பட வைத்த விஷயம், இந்த 1:30 மணி நேர படத்துக்கு பின்னால இருந்த மனிதர்கள், எத்தனை பேர், எத்தனை வித விதமான வேலைகள்... டைட்டில் போடுறாங்க போடுறாங்க போட்டுட்டே இருக்காங்க. Hollywood பிரபலங்கள் (Angelina Jolie,jackie chan,Jack Black etc) அனைவருமே இந்த கார்ட்டுன் கதாபாத்திரங்களுக்காக குரல் கொடுத்திருக்கிறார்கள்.

கண்டிப்பாக குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் பார்த்து சிரிக்க வேண்டிய படம்.


இந்த வருடத்தில் குங்பூ பண்டா - 2 ரிலீஸ் ஆகிறது.அதன் ட்ரைலர் இங்கே.

1 comment:

 1. அன்புடையீர்,
  தங்கள் பதிவிற்கு தொடர்பில்லாத மறுமொழி என்று தயவு செய்து இதை நீக்கிவிடாதீர்கள்.

  யாவரும் அவசியம் பார்க்க வேண்டிய விடியோக்கள் அடங்கியது. சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

  ===>இந்துக்களே! விழிமின்! எழுமின்! 7. காம சூத்திரம். தேவதாசி. நிர்வாண சாமியார்கள். பிணந்திண்ணி சாமியார்கள். புனித கங்கையில் காலைக்கூட நனைக்க மனம் வரவில்லை. <===

  ..

  ReplyDelete